Thursday, December 24, 2015

1983 உலக கோப்பையை கொண்டுவந்தவர்களில் 

ஒருவர் 

கீர்த்தி ஆசாத்...!!!





1983ம் ஆண்டு இந்திய உலகக்கோப்பையை கைப்பற்றியது. அந்த வீரர்கள் குழுவில் இடம் பெற்றவர் கீர்த்தி ஆசாத்.

உலகக் கோப்பைக்கான அரை இறுதி ஆட்டத்தில் இந்தியா -இங்கிலாந்தை வென்றது. அந்த போட்டியில் ஆசாத் இன் ஆட்டம் வெகுவாக புகழப்பட்டது. 
குறிப்பாக முரட்டு ஆட்டக்காரரான "போதம் " இவருடைய பந்து வீச்சில் வீழந்தார். அதன் காரணமாக இந்தியா இறுதி ஆட்டத்திற்கு நுழைய முடிந்தது.

ஆசாத் தின் தந்தை பகவத் ஜா ஆசாத்.
பழம் பெரும்காங்கிரஸ் காரர்".வெள்ளையனே வெளியேரு" போராட்டத்தில் கலந்து கொண்டவர்போராட்டக்காரர்களை எதிர்த்து  போலிஸ் துப்பாக்கியால் சுட்டது  ஆசத்தின் காலகளில்குண்டூ பாய்ந்தது.

காங்கிரஸ் கட்சியின் முதலமைச்சராக பீஹாரில் ஓராண்டு இருந்தார். உட்கட்சி பூசலினால் பதவி விலகினார்.

காங்கிரசின் அழிச்சாட்டியம் தாங்காமல் பின்னாளில் பா.ஜ.கவில் சேர்ந்தார்.அவரால் அவர்களோடு இணந்து பணிசெய்யமுடியவில்லை  உடல் நலமும் இடம் கொடுக்கவில்லை.செயல்படாமலிருந்தார்.

கீர்த்தி ஆசாத் வெளிபடையாக பேசும் குணம் கொண்டவர்.  டெல்லி கிரிகெட் கிளப்பில் இருந்தார். விளையாட்டு வீரர்களை பொறுக்கும்குழுவில் பணியாற்றினார்.

பொறுக்குக்  குழுவில் நடக்கும் பாரபட்சமான தேர்வை எதிர்த்தார்.

விளையாட்டு மைதானத்தை நவீனப்படுத்த 29 கோடி அனுமதித்தார்கள்.அப்போது ஜெட்லி தலைவராக இருந்தார்.

எந்தவிதமான டெண்டர் இல்லாமல் சகட்டுமேனிக்கு காண்ட்ராக்டர்கள் நியமிக்கப்பட்டனர். இப்பொது 130 கோடி செலவில் நிற்கிறது. ஊழல் செய்தவர் களை  தலைவர் பாதுகாத்தார் என்பது குற்றச்சாட்டு.

ஊழலை ஒழிக்க வந்த பா.ஜ.க ஊழல் குற்றச்சாட்டு சொன்ன கீர்த்தி ஆசாத் அவர்களை கட்சியிலிருந்து நீக்கி உள்ளது..

அமிர்த சரஸில் நின்று தோற்றுப்போன ஜெட்லியை அமைசராக்கியதும்,அதுவும் நிதிமைசராக்கியதும் கட்சியின் மூத்தவர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

அருண்  ஜேட்லியின் நிலைமை சரி  இல்லை என்றுதான் தோன்றுகிறது .













1 comments:

மோகன்ஜி said...

அரசியல் படுத்தும் பாடு!