நாடக ஆசான் தோழர் ராமாநுஜம்
மறைந்தார் .......!!!
1978-79ம் ஆண்டு மதுரையில் மாநிலம் தழுவிய நாடக பயிற்சி முகாம் நடந்தது. "நாடகமல்லாதவற்றை நாடகம் என்று நம்பி ஏமாந்து கொண்டிருக்கிறோம் " என்று வெங்கட் சுவாமிநாதன் கூறுவார்..
"அது என்னய்யா நவீன நாடகம் .நம்ம ஆளுகளூக்கும் தெளிவு படுத்தணூமே " என்றார் கேமுத்தையா அவர்கள்.. "யாராவது இருக்காங்களா ?"
"காந்தி கிராமத்துல ராமானுஜம் இருக்கார் ? " நான்.
"யாரு? வக்கீல் தோழர் வானமாமலை மருமகன் ம்பாங்களே அந்த பையனா ?
ஆமாம் தோழர் ?
"கூப்பிடுங்க ! என்ன தான் நு தெரிஞசுகிடுவோம் " கே.எம் அவர்கள் முடித்தார்.
ராமானுஜம் அவர்களும்,எஸ்.பி ஸ்ரீநிவாசன் அவர்களும் பயிற்சி அளிக்க வந்தனர்.
composition ,theatre ,,presinium, Stanislavski , moscow thetre , form ,symbolic theatre real theatre போன்றவார்தைகள்அப்பொழுதுதான்நமதுஉறுப்பினர்களகேள்விப்பட்டார்கள்.
பட்டறைக்கு வந்த ராமானுஜம் பின்பு ஒருநாள் என்னிடம் கூறினார் " "காஸ் யபன் ! ஒவ்வொரு மாவட்டத்திலும் குழுக்களை உருவாக்கி ,நாடகத்தை ஒரு இயக்கமாக கொண்டு செல்கிறீரகள் . அதில் எனக்கும் பங்கு உண்டு என்று நினைக்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது" என்றார்.
நாடகத்துறையில் எழுத்தாளர் சங்கத்தின் ஆளுமையை விகசிக்கச்செய்தவர்களில் ராமானுஜம் அவர்களின் பங்கு மகத்தானது.
எராளமான நாடகங்களை உருவாக்கி இருந்தாலும் அவர் இயக்கிய "புறஞ்சேரி " நாடகம் மிகவும் முக்கியமானது.
சிலப்பதிகாரத்தின் ஒரு சிறுபகுதியை கோவலனும்-கண்ணகியும் மதுரை வரும் பகுதியை மட்டும் எடுத்துக்கொண்டு உருவாக்கினார். வைகை யின் வடகரையில் உள்ள சேரியில் வந்து தாங்கும் காட்சி மட்டுமே நாடகம். "சேரிப் புறம்" என்பதை மாற்றி "புறஞ்செரி" என்றி தலைப்பு வைத்தார்.
இந்த நாடகத்தில், டாக்ட ர் மு.ராமசாமி, ஜெயந்தன், காஸ்யபன், டாக்டர் குருவம்மாள் ஆகியொர் நடிக்க எர்ணாகுளத்தில் அகில இந்திய நாடக விழாவில் மேடை ஏறியது.
அவசர நிலைக்காலத்தில் உருவாகிய இந்த நடகத்தில்நிகழ்காலத்தை சுட்டிக்காட்டினார் ராமானுஜம்.
பொதுவாக நாடகம் முடிந்ததும் கட்டியங்காரன் மங்கள வாழ்த்துப் பாடி அரங்கத்தின் திரையை மூடுவான்.
"அவசர நிலையால் அல்லொளகப்பட்டுக்கூண்டிருக்கும் இப்போது என்னால் மங்கள வாழ்த்து பாடமுடியாது. திரையும் மூடாது என்று நிலைமை மாறுகிறதோ அன்று திரையை மூடுகிறேன்" என்று கட்டியன்காரனாக நடித்த ஜெயந்தன் அறிவிக்க நாடகம் முடியும்.
தோழர் ராமானுஜம் காந்தி கிரமத்தை சுற்றி இருக்கும்முற்போக்கு செய்ல்பாட்டாளர்களோடு மிகுந்த ஈடுபாடோடு இருந்தார்.
மாணவர் இயக்கத்தின் மாநில செயலாளராக இருந்த தோழர் ராமலிங்கம் அவர்களோடு மிகவும் நெருக்கமாக பணியாற்றியவர்.
தமிழ் நாடகத் துறை ராமானுஜம் அவர்களூக்கு கடமைபட்டிருக்கிறது.
அவருக்கு அஞ்சலி !!!
0 comments:
Post a Comment