Saturday, December 19, 2015

"இந்தியாவின் கேடுகளில் ஒன்று 

சுப்பிரமணியம் சாமி ---"

---ராம் ஜெத்மலானி 



"இந்தியாவிற்கு எத்தனயோ துரதிர்ஷடம் வந்துள்ளது> அதில் முக்கியமானது சுப்பிரமணியம் சாமி " என்று ராம் ஜெத்மலானி குறிப்பிட்டுள்ளார்.(20-4-98-indianEx )



சாமி யார் காலிலும் விழுவார் .
அவர் காலில் விழாத நபர்கள் அரசியலில் இல்லை.அதேபோல் காலை  வாராத நபர்களும் இல்லை .என்றும் குறிப்பிட்டுள்ளார்.

"அப்போது R .வெங்கடராமன் குடியரசுத் தலைவராக இருந்தார். உயர் நீதிமன்ற நீதிபதிகளை  அவர்தான் நியமிக்க வேண்டும் .அவருடைய பார்வைக்கு பலபெயுர்கள் வந்திருந்தான்.அதில் ரேச்சொனா சுப்பிரமணியம் சாமி பெயரும் இருந்தது. அவர் வக்கீலாக 10வருடம் 8மாதம் செயல்பட்டு கொண்டிருக்கிறார்.வருட வருமானம் 200000 என்றி இருந்தது.

உயர் நிதி மன்ற நிதிபதி  ஆக வேண்டுமானால் குறைந்தது 10 ஆண்டுகளாவது வக்கீல் பணிசெய்திருக்க வேண்டும். இவர் 10 ஆண்டுகால முடித்து எட்டு மாதம் தான் ஆகிறது.இவரை விட சீனியர்கள் இருக்கிறார்கள்.அதனால் அந்த சிபாரிசை திருப்பி பிரதமருக்கு வெங்கடராமன் அனுப்பி  விட்டார்\.

சுப்பிர மணியம் சாமி வெங்கடராமனின்மகள் மிது வழக்கு தொடர்ந்தார். தந்தை பெயரில் அறக்கட்டளை ஆரம்பித்து அதற்காக வசூல் செய்கிறார் என்பது வழக்கு.

வாஜ்பாயின் அரசை கவிழக்க சோனியா  காந்தியை லக்ஷ்மி மாதா என்று புகழ்ந்தவர் தான் இந்த சாமி.இப்போது" தாடகை","விஷக்கன்னி" என்று வர்ணிக்கிறார்.

வாஜ்பாயை நாக்கில் நரம்பில்லாமல் ஏசியவர்தான் . முரார்ஜியிடம், வாஜ்பாய் ஒழுக்கமிலாதவர் என்று சொன்னவர்.

குமுதம் பத்திரிகையில் சாமி தொடர்  கட்டுரை எழுதிவந்தார்.அதில் 

"சின தூதரகத்தில் சுதந்திர தின கொண்டாட்டம் நடந்தது> அதில் வாஜ்பாய் கலந்து கொண்டார்> குடித்து கும்மாள மிட்டார்  நிற்க உட்கார முடியாமல் தவித்தார் நானும் போயிருந்த்தால்    எனக்கு மிகவும் சங்கடமாகப் போயிற்று. நான் இதனை பிரதமர் மொரார்ஜி தேசாயிடம்கூறினேன் உடனடியாக அவர் வஜ்பாயியை  அழைத்து என் முன்னாலெயெ அவர கண்டித்தார் வா ஜ்பாய் வாய் மூடி நின்றார்.என்று எழுதி இருந்தார்>

சோனியா,ஜெயலலிதா,மாயாவதி,ஆகியோரை இந்தியாவின் முப்பெருந்தேவியர் "லட்சுமி,சரஸ்வதி ,துர்க்கை என்று வர்ணித்தவர் தான் இந்த சாமீ...

வாஜ்பாய் அரசை கலைக்க ஜெயலலிதா, சோனியா ,சாமிகலந்துகொண்ட 
 "தேநீர் விருந்து " புகழ் பெற்ற ஒன்றாகும் .

சோனியாவை குஷிப்படுத்த போபர்ஸ் ஊழலை தடம் புரளச் செய்தவரும் சாமிதான்..




0 comments: