முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை முதலில்
"ஆரம்பித்தவர்கள் முஸ்லிம்கள் "
இந்தியாவில் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை ஆரம்பித்தவர்கள் முஸ்லிம்கள்.
பிரிட்டிஷ்ஏகாதிபத்தியஎதிர்ப்புதான்முக்கியகுறிக்கொளாகஇருந்தது.உழுபவனுக்கு நிலம், என்று வளர்ந்து சோசலிசம் தான் தீர்வு என்ற இடத்திற்கு வந்தார்கள்.
இந்த கொள்கைகளை சித்தரிக்கும் சிறுகதைகளை எழுதினார்கள்.கதைகளை உருது மொழியில் எழுதியவர்கள் இவர்கள்.
உத்திர பிரதேசத்தைச் சேர்ந்த அகமது அலி,சஜத்ஜாகீர் ,முகம்மது உட்ஜாபர் ஆகிய மூவரும் தாங்கள் எழுதிய கதைகளை ஒரு தொகுப்பாக வெளியிட்டார்கள். 1932ம் ஆண்டு வெளிவந்த அந்த தொகுப்பின் பெயர் "எரியும் தணல் ",(ஆங்கரே ) என்பதாகும். அப்போது ஆண்ட பிரிட்டிஷ் அரசு அந்த நூலை தடைசெய்து உத்திரவு போட்டது.இது 1932 ம் ஆண்டு நடந்தது .
அஞ்சுமன் தாரிக் பசந்த் முசனாப்ஃஇன் -டி-ஹிந்த் என்ற அமைப்பை இவர்கள் உருவாக்கிணார்கள்.
அகில இந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்கம் என்ற இந்த அமைப்பில் ஹமீத அ க்தர்,ப்ஃஐஸ் அகமத் ப்ஃஐஸ் , அகமத் நசீம், சதத் ஹாசன் மாண்டோ, இஸ்மத் சுக்தார் போன்ற புகழ் பெற்ற எழுத்தாளர்கள் செயல்பட்டனர்.
11947 ம் ஆண்டு பிரிவினைக்குப் பிறகு அகில பாகிஸ்தான் முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கத்தை பாகிஸ்தானில் உள்ள உருது எழுத்தாளர்கள் ஆரம்பித்தார்கள்.-
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க உறுப்பினர்களே !
எத்துணை அழகான பாரம்பரியம் உங்களுடையது>!!!
0 comments:
Post a Comment