Saturday, January 02, 2016

அந்த இளம் விஞ்ஞானிகளை 

சந்திக்க முடியவில்லை !

சேவை செய்ய முடிந்தது !!!


பேராசிரியர் தோழர் மோகனா சோமசுந்தரம் அவர்கள் குறுஞ்செய்தி அனுப்பி இருந்தார்கள் மதுரை யிலிருந்து செல்லும் டெராடூன் எக்  மூலம்   நாங்கள் சண்டிகர் செல்கிறோம் "என்று குறிப்பிட்டிருந்தார்கள்.
சண்டிகரில் இளம் விஞ்ஞானிகள் மாநாடு. அதில் கலந்து கொள்ள பள்ளிக் குழந்தைகளுடன் புறப்பட்டு விட்டார்.

நாகபுரி ரயில் நிலையத்தில் சந்திக்க வாய்ப்பு உள்ளது.

காலை 8மணிக்கு அவரிடமிருந்து.தொலை பேசி வந்தது" .நாங்கள்போபால்தாண்டியாகிவிட்டது.நாகபுரி எப்போது வரும்"  என்று கேட்டார்."மேடம் ! இந்தியாவின் புவி  இயலை மாத்த முடியாது. நாகபுரி கடந்து  போபால்,டெல்லி என்று செல்லவேண்டும் "" என்று சமாதானப்படுத்தினேன்.

திரும்பி வரும்போது தகலவல் தாருங்கள்.சந்திக்க முடிமா என்று பார்க்கிறேன் என்றுகூறினேன்.

24-12-15 அன்று முத்துமிணாட்சிஅவர்களுக்கு கண்புரை அறுவை சிகிச்சை நடந்தது2-1-16 அன்று review காலை 10 மணி என்று மருத்துவர் கூறி  இருந்தார்.

மோகனா அம்மையார் அந்த இளம் விஞ்ஞானிகளை அழைத்துக்கொண்டு 2-1-16 அன்று காலை நாகபுரி வழியாக மதுரை திரும்புகிறார்.
 குழந்தைகளுக்கு கால உணவும், மதிய உணவும் ஏற்பாடு செய்ய முடியுமா என்றார்.

"எத்தன பேர்?" என்றுகேட்டேன்..

"நாற்பது பேர்" என்றார்.

சென்னை,நாமக்கல், என்று அவரோடு வந்த ஆசிரியர்களுக்கும் சேர்த்து ஏற்பாடு செய்ய வேண்டியதாயிற்று.
ஒருபக்கம் துணைவியாரின் கண் பரிசோதன.அதோடுகடுமையான குளிர். முதுமை,அதன் காரணமாக இயலாமை.

உணவை ரயிலடியில் கொண்டு சேர்ப்பதற்கு உணவு விடுதி  அம்மையார் பொறுபேற்றுக் கொண்டார்.

மோகனா அம்மையார் உணவு சிறப்பாக இருந்ததாக விடுதி பொறுபாளருக்கு தொலைபெசியில்கூறியதாக அவரே சொன்னார்.

மகிழ்ச்சியாக இருந்தது.
ஆனால் அந்த இளம் விஞ்ஞானிகளை சந்திக்க முடியாமல் போய்விட்டது.

அவர்களுக்கு உணவு அளித்து சேவை செய்யமுடிந்ததே  .!

குழந்தைகளே !  சாலைகளில் நீங்கள் சந்திக்கும் "தாத்தா " போலத்தான் நான் இருப்பேன்.
எந்த தாத்தாவையும் நானாக பாவியுங்கள் !!! 

அந்த சின்னஞ்சிறுசுகளுக்கு என் அன்பு முத்தங்கள் ...!!!


0 comments: