பனாரஸ் இந்து பலகலை கழகம்
"அன்றும் இன்றும் ......"
அந்த பேராசிரியர் ........!!!
இந்திய சுதந்திர வேள்வியில் மாணவர்கள் குதித்திருந்த நேரம் ! பனாரஸ் இந்து பலகலைகழகம்.இந்த மாணவர்களின் யாகசாலையாக இருந்தது !
சைமன் கமிஷனுக்கு எதிராக கங்கை ஆற்றினுள் நீந்திச் சென்று பி.ராமமூர்த்தி சகமாணவர்களொடு கறுப்புக் கோடி கட்டிய பல்கலையும் அது தான் !
அங்குதான் அவர் பெராசிரியராக இருந்தார் !
பிரிட்டிஷ் போலிஸ் மோப்பம் பிடித்துவிட்டது ! பல்கலை வளாகத்தைச் சுற்றி வளைத்து மாணவர்களை பிடிக்க விரும்பியது ! துணை வேந்தராக இருந்தவர் தான் அந்த பேராசிரியர் ! பல்கலை வளாகத்திற்குள் போலீசார் வரக்கூடாது என்று கூறிவிட்டார் !
சுதந்திர வேட்கையில் திளைத்திருந்த மாணவர்களை பிரிட்டிஷாரிடம் ஒப்படைக்க மாட்டென் என்று அறிவித்து விட்டார் !
அவரை மிறி போலிஸ் நுழைந்தால் ...?
மாணவர்கள் துணைவேந்தரை சந்தித்தார்கள் ! நிலைமையை அவரும் பரிசீலித்தார் !
"நீங்கள்வளாகத்தில் இருக்கும் வரை உங்களுக்கு நான் பாதுகாப்பு ! என்னையும் மீறி போலிஸ் நுழைந்தால் .... கவலைபடாதீர்கள் ! இரவோடு இரவாக கிராமப்புறங்களுக்கு ஓடிவிடுங்கள் ! அந்த கிராமத்து மக்கள் உங்களை போலீசிடமிருந்து காப்பாற்றுவார்கள் !" என்றார் அந்த துணைவேந்தர் !
மறுநாள் போலீஸ் நுழந்த பொது அவர்கள் தேடிவந்த மாணவர்கள் அங்கு இல்லை !
அந்த துணைவேந்தர் தான் பேராசிரியர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் !
இந்தியாவின் தூதுவராக மாஸ்கோ சென்று ஸ்டாலினை சந்தித்த ஒரே இந்தியர் !!!
1 comments:
அருமையான பேராசிரியர்...
நல்ல பகிர்வு ஐயா...
Post a Comment