Sunday, January 31, 2016

தன்னந்தனியாக நின்று 

ஆட்சியை பிடித்ததாக 



"தி.மு.க.வுக்கு வரலாறு இல்லை "





தமிழகத்தில் முதல் தேர்தல் 1952ம் ஆன்டு நடந்தது. இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு நடந்த முதல்தேர்தல்  அது .
மொத்தமுள்ள 375 இடங்களில் காங்கிரஸ் 152 இடங்களில் வென்றது . கம்யூனிஸ்ட்கட்சி ,பிரகாசம் காருவின் கட்சி ,மற்றுமுள்ள கட்சிகளோடு சேர்ந்து கிட்டத்தட்ட. பெரும்பான்மையை நெருங்கும்நிலையில் ராஜாஜியின் தலையிட்டால் ஆள்பிடித்து காங்கிரஸ் கட்சியும் கூட்டணி ஆட்சியை அமைத்தது.
இந்த தேர்தலில் தி.மு.க போட்டி இடவில்லை .
அடுத்து 1957ம் ஆண்டு தேர்தலில் திமுகபோட்டியிட்டு 13 இடங்களில்வென்றது .

1962ம் ஆண்டு தேர்தலில் திமுக 50 இடங்களைப் பிடித்தது.

1967ம் ஆண்டு திமுக மார்க்சிஸ்ட்,முஸ்ளீம்லீக்,சுதந்திராகட்சி உட்பட ஏழு கட்சிகளோடு கூட்டூச் சேர்ந்து 133 இடங்களைப் பெற்றது மொத்தம் 234 இடங்களாதலால்  தி.மு.க ஆட்சி அமைத்தது. கூட்டணி கட்சிகளான 
 ,சுதந்திரா,முஸ்ளீம்கட்சிகளின் இடைஞ்சல்களை தவிர்க்க கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் பி.ராமமுர்த்தி தி.மு.க.அண்ணாதுரை தலைமையில் ஆட்சி அமைக்கும்.நாங்கள் வெளியிலிருந்து ஆதரவு அளிப்போம் என்று அறிவித்தார் இந்த அறிவிப்பை திமுக வரவேற்றது..

அதன் பிறகு 1971ம் ஆண்டு காங்கிரஸ், மற்றும் சிலகட்சிகளொடு சேர்ந்து போட்டியிட்டு  ஆட்சி அமைத்தது 

அதன் பின்னர் 1989ம் ஆண்டு தான் ஆட்சியை பிடிக்கமுடிந்தது. ஜனதா மார்க்சிஸ்ட  ,கம்யுனிஸ்ட் கட்சியோடு கூட்டு  சேர்ந்து தான் ஆட்சியைப் பிடித்தது .
1996ல்,அதன்பிறகு 2006ல் திமுக ஆட்சிக்கு வந்தது ஆனலும்பலவேறு கட்சிகளின் தயவில் தான் ஆட்சியை பிடிக்கமுடிந்தது.

தமிழகத்தில் திமுக பலமான கட்சிகளில் ஒன்று என்பதை மறுப்பதற்கில்லை..

ஆனால்  அந்த பலம் தன்னந்தனியாக நின்று ஆட்சியைப்பிடிக்கும் அளவுக்கு இல்லை என்பது தாம் திமு.கவின் வரலாறு சொல்லும் சோகம்.




0 comments: