Tuesday, January 19, 2016




"நிழலாக இருந்தவன் 

நட்சத்திரமாக ஆசைப்பட்டான் ...."





அந்த சிறுவன் இரவு நட்சத்திரங்களைப் பார்த்து ஆச்சரியப்பட்டான். அது பற்றி  கேள்விகளைக் கேட்டு தாயாரை தொந்திரவு செய்தான்.
அவர் அவனை ஒரு வாசகசாலைக்கு அனுப்பி வைத்தார்.அப்போது அவனுக்கு வயது ஐந்து.
அங்கு "நட்சத்திரம்போல் தெரிவது நட்சத்திரமல்ல. அதுவும் ஒரு சூரியன்.வெகு தொலவிலிருப்பதால்  அப்படி தெரிகிறது "என்றார்கள்..

அன்று அவனுடைய தேடல் ஆரம்பித்தது. ஆகாயத்தை, அண்டத்தை, பற்றி தேட ஆரம்பித்தான். 

அவன்தான் (carl sagan ), கார்ல் சாகன் என்ற வானியல் விஞ்ஞானி.

அமெரிக்க  ஆராய்ச்சி நிறுவனம் அவன அணைத்துக் கொண்டது. நிலவிற்கு  மனிதனை அனுப்பிய  குழுவின் பின்புலமாக இருர்ந்தவன் அவன் .

அண்டத்தில்   எங்கேயாவது புத்தியுள்ளவர்கள் இருந்தால் அவர்கள்  தெரிந்து கொள்ளட்டுமே என்று அவற்றின் புரிதலுக்காக ஓர் மொழியை உருவாக்கி  அனுப்பினான் .

வானியல்,அண்டத்தின் விஸ்வ ரூபம் என்று சதாசர்வகாலமும் அதனை பற்றியே ஆராய்ச்சியில் ஈடுபட்டான் 

இது பற்றி பக்கம் பக்கமாக எழுதிதள்ளீனான்.

அமெரிக்காவின் கார்னல் பல்கலைக்கழகம் அவனுக்காக தனி ஆராய்ச்சிக்கூடத்தை அமைத்துக் கொடுத்தது.

1996ம் ஆண்டு கார்ல் சாகன் மறைந்தான்.

அந்த கார்ல்சாகனின் ஆராய்ச்சியை தொடர ஹைதிராபாத் வந்தவன் தான் ஐயா ரோகித் வேமுலா !

கார்ல் சாகன் போல எழுதப்போகிறேன் என்று வந்தான் தானே ஐயா அவன் !

அவன் சார்ந்த அம்பேத்கர் மாணவர் இயக்க கொடியால்   அவன் கழுத்தை நெரிக்க அனுமதித்தவர் யார் ?

நட்சத்திரமாக  மாற  நினைத்தவனை நிழலாக மாற்றியவர்கள் யார் ?









0 comments: