Monday, January 04, 2016

(இது விமரிசனமல்ல )




"காலத்தின்  குரல் "







" நீ  வாழும் காலம் பற்றிய புரிதல்   உனக்கு இல்லை என்றால் நான் எழுதிய சிறுகதைகளை படி .அவை  அசிங்கமாகவும் அருவருப்பாகவும் இருந்தால் நீ  அப்படிப்பட்ட காலத்தில்வாழ்கிறாய் என்றுபுரிந்து கொள் " 

சதத் ஹாசன் மாண்டோ , என்ற எழுத்தாளன், அகில இந்திய எழுத்தாளர் அமைப்பினை உருவாக்கிய வர்களில் ஒருவன் .அவனுடைய குரல் தான் இது .

உண்மையில் இந்திய எழுத்தாளர் சங்கம் ஆரம்பிப்பதற்கான வித்து 1935ம் ஆண்டு லண்டனில்  போடப்பட்டது.

அதனைப்பொட்டவர் டாக்டர் .முல்க்ராஜ் ஆனந்த் அவர்கள்.  

தொழிற் புரட்சிக்கு பிறகு மூலதனத்திற்கு ஏற்பட்ட பின்னடைவு என்பது 30ம் ஆண்டுகளில் ஏற்பட்ட பொருளாதார மந்தம்.

அதனை  சமாளீக்க ஐரோப்பாவில் குறிப்பாக ஜெர்மனியில் ஹிட்லர் தலைமையில் தொழிலாளர்கள் மீது அந்த சுமையை ஏற்றி மூலதன வாழ்க்கை முறையை காக்க முயற்சிகள் நடந்தன.அதற்கு உறுதுணையாக "பாசிசம் " உருவானது.

மனிதாபிமானிகளும்,எழுத்தாளர்களும்,கலைஞர்களும் இதனை எதிர்க்க வந்தார்கள்.

இந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்கம் லண்டனில் உருவானது.

பின்னர் ஓராண்டுக்குப்பிறகு லக்னௌவில் 1936ம் ஆண்டு ஏப்பிரல் மாதம் 11ம்தேதி முற்போக்கு எழுத்தாளர் சங்கம் உதயமானது.

முன்ஷி பிரேம் சந்த் தலைமையில்,உருவான அந்த சங்கத்தில்,முல்க்ராஜ் ஆனந்த், தாகூர், சையத், என்று அன்றய எழுத்தாளர்கள் உறுப்பினர் ஆனார்கள்.இந்த லக்னௌ மாநாட்டில்  அ ந்த "புத்தி ராட்சதன் " இ,எம்,.எஸ்நம்பூதிரி பாடும் உண்டு 
--------------------------------------------------------------------------------------------------------------------------


ஒரு  நாள் தீக்கதிர் அலுவலகத்திலிருக்கும் போது அந்த சமூக போராளி எ.பாலசுப்பிரமணியம் அவர்கள் என்னை அழைத்தார்கள். மிகவும்சோர்வாக இருந்ததால் "டேய் ! சாமா! எதாவது குடிக்க கோடு "என்றார்.அவர்  டீ ,காபி ஆகியவற்றைஅதிகம் விரும்பமாட்டார். கீழே ஜோசப் கடை க்க சென்று பால் வாங்கிவந்தேன்.."கிரஷாம் இல்லையா ?" என்றார்.
". ஏன் தோழார் நான்வாங்கி வரக்குடாதா?"
.சூடாககுடித்தார். படுக்கைபோன்ற  நாற்காலியில் சாய்ந்துகொண்டார்.கண்ணை முடிக்கொண்டார்.
"சாமா ! நாம இருக்கர கட்சி கம்யூனிஸ்த கட்சி  மட்டும் இல்லைடா கண்ணா !  மாமேதை லெனின் மெம்பரா இருந் கட்சி.மாசேதுங்கும்.ஸ்டாலினும் இருந்தகட்சி..சே குவேரா இருந்தகட்சி அடுத்த சந்ததிக்கு இத பத்திரமா கொடுக்கணும் டா " .

ஏற்கனவேசிவப்பானஅந்தமுகம்செக்கச்சிவப்பாகஜொலித்தது .கொஞ்சம் அமைதி யானார் . மொதுவாக கதவை சாத்திவிட்டு வெளியேவந்தேன்.தூங்கட்டும் .

-------------------------------------------------------------------------------------------------------------------------


தமிழ்  நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் தன்னுடைய நாற்பதாம் ஆண்டு நிறைவு விழாவை கொண்டாட இருக்கிறது.

அதனுடைய பாரம்பரியம் மிகவும் நீண்டது.
1936ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 11 ம் தேதி லக்னௌவில் ஆரம்பமாகிறது.
2016ம் ஆண்டு ஏப்ரல்மாதம் அதன் 80 ஆண்டு விழா வருகிறது.

2036ம் ஆன்டு பல் விழுந்த தமிழ் செல்வனும், வழுக்கை விழுந்த சு.வெங்கடேசனும் அதன் நூற்றாண்டுவிழாவை கொண்டாடுவார்கள் .நீங்கள்  அதை கண்டு களிப்பிர்கள் !!!








0 comments: