Sunday, March 25, 2018

பிரிவோம் ,

ஒன்று படவும் செய்வோம் !!!

நேற்று எப்போதையும் வீட அதிகமான நண்பர்கள் தொடர்பு கொண்டனர் . பதிவுகளும் வந்தன .ஏன் இப்படி எழுதுகிறாய் ? என்பது அவர்கள் கேள்வியாக இருந்தது. உன்னை brand பண்ணி விடுவார்கள் என்றும் எச் சரித்தனர் . 

தமிழக சட்டமனறத்தில் எதிர்க்கட்சி  தலைவர் அவர். மூன்று ரோஜா மாலையை கொண்டு வந்தார்கள். ஒன்றை பெரியார் கழுத்தில் . போடப்பட்டது . மற்ற இரண்டும் மணப்பெண்,மணமகன் ஆகியவர்களுக்கு.மாலைமாற்றியதும் திருமணசடங்கு முடிந்தது.மணமகன் பெயர் பி,ராமமூர்த்தி  ! 

அவரையே "பஞ்சா ப கேச அய்யர் மகன் தானே " என்று மறைந்த முரசொலி மாறன் வசை பாடினர். நான் கிடக்கிறேன் துரும்பு.

"நான் பஞ்சாபகேச அய்யர் மகன் தான் என்ற உண்மையைத்தான் சொல்கிறார்கள் விடுங்கள் "என்றார் பி.ஆர்.

சனாதன குடும்பத்தில் தான் பிறந்தேன் பூணுல் போட்டார்கள். கிராமத்தில் என் தாத்தா வயலுக்கு போய் பார்த்து வருவார்கள். நேரமாகிவிட்டால் நான் குளித்து திருநீறு பூசி,சாலிகிராமம், பளிங்கு குட்டி பிள்ளையார்  என்று அபிஷேகம் செய்து, அஷ்டோத்திரம் சொல்லி 9வயதில் பூஜை  செய்து மகா நெவித்யாம் செய்து சாப்பிடுவோம்.

என் பதினைந்து வயதில் பிரசிடென்சி கல்லூரி பேராசிரியர் (ஒய்வு) அவர்களிடம் பகவத் கீதை பயின்றேன். சின்மயா மிஷன் மூலம் உபநிஷத்துக்களை படித்தேன்.  ஏன் ? ஒருகட்டத்தில் சாந்திபனி கல்லூரியில் படித்து சன்யாசம் வாங்க விரும்பியவன் தான். 

மறைந்த மேதை எம்.ஆர் .வெங்கடராமன் கூறுவார் . "you must unlearn what you have lernt  if you want to learn Marxism " என்பார்.

மார்க்சிஸ்ட் கடசி அகில இந்திய கடசி . பார்ப்பன மார்க்சிசம், அம்பேத்காரைட் மார்க்சிசம் என்ற விவாதம் தமிழகத்தில் நடக்கிறது . கேரளாவில் இல்லை .ஆந்திராவில் இல்லை. மராட்டியத்தில்,பிஹாரில், மே .வங்கத்தில் இல்லை .

மராட்டியத்தில் ஒரு சொலவடை உண்டு. "மராட்டிய "மகர்" காந்திக்கு உயிர் கொடுத்தான். மராட்டிய பாப்பான் உயர் எடுத்தான் என்பார்கள் .

அண்ணல் அம்பேத்கார் கொஞ்ச்ம வெளிச்சம்  கிடைக்கும் வகையில் தேர்தல் இட ஒதுக்கீடு என்று வந்த பொது காந்தியார் அதனை எதிர்த்தார்>. சாகும் வரை உண்ணாவிரதம் அறிவித்தார் . காந்தியாரின் உயிர் ஊசலாடியது .இந்தியா புராவிலும் பதட்டம் ஏற்பட்டது. காந்தியாரை காப்பாற்ற ஒருவரால் மட்டுமே முடியும் அவர் அண்ணல் அம்பேத்கார் தான் என்ற நிலை ஏற்பட்டது . கடுமை யான நிர்ப்பந்தம் . அம்பேத்கார் சமரசம் செய்து கண்டார். காந்தி உயிர் பிழைத்தார் .

சமரசம் ஏற்படவில்லை என்றால் ? கால தூர  வர்த்தமானத்தின் பின்னணியில் பார்த்தால் இந்திய அரசியல் வானத்தன் நிறம் மாறியிருக்கலாம் . அம்பேத்காரை இதற்காக விமரிசிப்பவர்கள் உண்டு.

தீண்டாமையை ஒவ்வொரு நொடியும்  அம்பேத்கார்அனுபவித்தவர்>. நீர்முழ்கி கப்பலில்  கடலின் மேற்பரப்பில் நடப்பது "பெரிஸ்க்கோப் " மூலம் தெரிந்து கொள்வார்கள். தீண்டாமையின் கொடூரத்தை நான் பெற்றது PERISCOPIC knowledge தான் !

அதிலிருந்து தன மக்களை விடுவிக்க வேண்டும் என்றால் சாதி கொடுமை நீக்கப்பட்ட வேண்டும். அன்றய பார்ப்பனியம் ஒழிக்கப்பட வேண்டும் என்று விரும்பினார் . அந்த முயற்சியை அவருக்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியது> அத்துணை பெரும் ஒன்று கூடி  எதிர்த்தனர்>இந்த கூட்டத்தில் இடது சாரிகள் அம்பேத்கார் பக்கம் நிர்க்க வில்லை  . 

தன மக்களுக்கு ஏதும் செய்யமுடியாமல் போனது .கடைசி முயற்சியாக புத்தமதம் என்றார் . இன்று இது சரியா என்று விவாதிக்க வேண்டியது உள்ளது . கிறிஸ்துவனான தலித் இட ஒதுக்கீடு கேட்கிறான் .இஸ்லாமிய தலித் இட ஒதுக்கீடு கேட்கிறான்> லடக்கணக்கான புத்திஸ்ட் தலித்துகள் மராட்டிய மாநிலத்தில் படும் பாட்டை தினமும் பார்த்துக் கொண்டுதான் இருக்க வேண்டியதாக உள்ளது.

பெரியார் மக்களுக்கு செய்தது மகத்தானது .!

அவரை வீட பரந்த தளத்தில் அம்பேத்கார் செயல் பட்டார்.!!

இவை இரண்டின் போதாமையை நிறைவு செய்ய மார்க்சிசாம் ஒன்றே வழி !!

COM . NEETHI RAJAN  LET US AGREE TO DISAGREE !!! 


0 comments: