skip to main |
skip to sidebar
கிராமிய பாடல்களும் .
"சூப்பர் சிங்கர் " நிகழ்ச்சியும் ...!!!
கர்நாடக மாநிலத்தின் வடபகுதியில் இருக்கிறது தார்வார் நகரம். இங்குள்ள பல்கலைக்கழகம் கிராமிய கலை வடிவங்கள் பற்றி ஆராய்சசி நடத்துகிறது. தோழர் சிவ சங்கர பிள்ளை அவர்களுக்கு fellowship கொடுத்து ஆராய சொன்னார்கள் .தமிழகத்தில் தோழர் கு.சி.பா அவர்களையும் ஆராய்சசி செய்ய சொன்னார்கள் .நெல்லையைச சேர்ந்த வானமாமலை அவர்களும் கிராமியப்பாடல்கள் பற்றி ஆராய்ந்துள்ளார்.
நமது தோழர் எஸ். .ஏ . பெருமாள் அவர்கள் பல கிராமிய கலைஞர்களை மேடை ஏற்றியுள்ளார்.மறைந்த தலைப்பக்கட்டு கோட்டைசாமி அதில் முக்கியமானவர். திருமூர்த்தி அவர்களின் "முக்கா முழம் " பாட்டை அவர் பிரபலப்படுத்தியவர் அவர். " அக்கா குருவி " பாட்டை மேடை ஏற்றியவர் எஸ்.ஏ.பி.
"பத்து தலை ராவணனை " மற்றும் "எங்களைதெரியலையா " என்ற பாடலை எழுதிய பறிணாமன் போன்றோரும் அற்புதமான பாடல்களை எழுதியவர்.
இவர்கள் அத்துணை பெரும் இடது சாரிகள்.
சூப்பர் சிங்கரில் புதுக்கோட்டையை சேர்ந்த செந்தில் என்பவர் பாடினர். சந்தையில் பள ப்பள வென்று காய்கறியை விற்பார்கள்.சூத்த கத்தரிக்காய்<வெம்பிய மாங்காய் ஆகியவற்றை கூறுபோட்டு தனியாக விற்பார்கள். பாடகர்கள்,அனுராதா, உன்னி கிருஷ்ணன் ,சீனுவாசன், போன்ற மார்கெட் போன வர்களை நடுவர்களாக போடுவார்கள். இவர்களுக்கு தனியாகவும்தெரியாது,சொன்னாலும் கேட்கமாட்டார்கள் .எதோ உலகமகா வித்வான்கள் போல இவர்கள் போட்டியாளர்களை விமரிசிப்பதை "தேவுடு "கேட்டுக் கொண்டு இருப்பதை தவிர வேறு வழி இல்லை.
செந்தில் "அம்மா உன் சேலை " என்ற பாடலை பாடினர். இதைக்கேட்ட நடுவர்கள் தங்கள் மேதாவித்தனத்தை "முக கமலம் " மூலம் காட்டினார்கள்.
இந்தப்பாடல் யாருடையது,இசை அமைத்தவர் யார் என்ற கேள்வியை கேட்ஜ்கவில்லை> அந்த பையன் செந்திலும் சொல்லவில்லை.
கவிஞர் ஏகாதசி எழுதிய பாடல் அது .கரிசல் கருணாநிதி மெட்டமைத்து த.மு.எ .ச மேடையில் அரங்கேற்றிய பாடலாகும் அது.
வர்க்க மயம் வணிகமயமாகும் போது இப்படி குழப்பங்கள் வரத்தான் செய்யும் !!
0 comments:
Post a Comment