Friday, March 02, 2018






"ஜனசங்க " தலைவர் 

மரணத்தை விசாரிக்க 

மறுப்பது ஏன் ?







1947ம் ஆண்டு சுதந்திர வெளிச்சம் படர ஆரம்பித்து விட்டது .அதுவரை காங்கிரஸ் கடசிக்குள் இருந்துவந்த பத்தாம்பசலி இந்துத்வா காரர்களும், வலது  சாரிகளும் வெளிவந்து பகிரங்கமாக செயல்பட விரும்பினார் .அவர்கள் தலைமை பீடமான ஆர்.எஸ்.எஸ்  சரியான சந்தர்ப்பத்திற்காக காத்திருந்தது.

நேரு அமைச்சரவையில் இருந்த சியாம் பிரசாத்   முகர்ஜி வெளியேறினார். வலது சாரிகள் அவரை பிடித்துக் கொண்டனர் "ஜனசங் "என்ற கடசியாக்க   முயற்சி உருவானது முகர்ஜிக்கு உதவியாக ஆர்.எஸ் எஸ் அமைப்பு தன்னுடைய விசு வாசமிக்க ஆட்களை அனுப்பியது.

அவர்கள்  ,நானாஜி தேஷ்முக்,தீனத்தயாள்  உபாத்யாயா , வாஜிபாய் ,எல்.கே அத்வானி ஆகியோர் ஆவர் .பிஹார்<உப்பி,ராஜஸ்தான்,ம.பி ஆகிய பசு வட்டத்தில் செயல்பட ஆரம்பித்தனர்.

சிறிது காலத்திலேயே முகர்ஜி மறைந்தார். அவருக்கு பதிலாக கடசி தலைவராக யார்வருவது என்பதில் இழுபறி   நடந்து வந்தது. நானாஜி சிறந்தநிர்வாகி.உபாத்யாயாஎல்லாராலும்நேசிக்கப்படுபவர்வாஜ்பாய சுயகாரிய புலி ! 

இறுதியில் உபாத்யாயா வந்தார் . கடசிக்குள் பால்றாஜ் மோதக் என்பவர்  மட்டும் உபாத்யாயாவின் தீவிர ஆத ரவாளராக இருந்தார்கடுமையாக சுற்றுப்பயணம் செய்து உபாத்யாயா கடசியை  வளர்க்க ஆரம்பித்தார்.

1968ம் ஆண்டு .பிபர்வரி மாதம் 11ம் தேதி உபி  மாநிலத்தில் உள்ள மொகல்சராய் ரயில் நிலையத்தில் உபாத்யயா வரவிருக்கிறார்ஆதரவாளர்கள் காத்திருக்கின்றனர். ரயில் வந்தது ஆனால் உபாத்யாயா வரவில்லை . தேட  ஆரம்பித்தார்கள். முகல்  சிராய் ரயில் நிலையத்திலிருந்து சிலாகிமி  மீட்டர் துரத்தி ரயில் பாதையில்   சடலம்  கிடப்பதாக தகவல் வந்தது. கையில் ஒரு ஐந்து ற்பாயா நோ ட்டுடன் உபாத்யாயாவின் சடலம்  தான் அது .

யார் செய்த கொலை இது நாடெங்கம் பரபரப்பு. மத்தியில் ஆளும் காங்கிரஸ்தான் என்று  குற்றம் சாத்தினர் . விசாரணை நடந்தது> ரயில் திருட்டில் சம்மந்தப்பப்பட்டுள்ள இருவர் கைதாகினர்.  எதிர்த்த உபாத்யாயாவை கீழே தள்ளிவிட்டு தப்பியதாக குற்றம் சாட்டப்பட்டு அவர்கள் தண்டிக்கப்பட்டனர்.மேல் முறையீட்டில் அவர்களும் விடுதலை செய்யப்பட்டனர்.

ஜனசங்  கடசி விடுவதாயில்லை பாலராஜ் கடுமையாக போராடினார் கடசிதலமை மந்தமாக இருபகாக கூறினார் நிசசயமாக தலைமை  விரு ம்பினால் கொலைகாரனை கண்டுபிடிக்க முடியுமென்றார். 

ஜனசங்  கலைக்கப்பட்டு ஜனதா கடசியாக மாறியது. பால்றாஜ் மாற மறுத்தார் . ஜனசங் கடசியாக செயல்பட ஆரம்பித்தார் .மொரார்ஜி மூலம் உபாத்யாயா மரணத்திற்கு  விசாரணை நடத்த கமிஷன் போடப்பட்டது. வாஜபாயும் , அத்வானியும் அமைச்சரவையில் இருந்தும் விசாரணை நீர்த்துப்போனது .

மீண்டும்    வாஜ்பாயாய் பிரதமரானார். உள்துறை அமைசராக பிரமோத் மகாஜன் இருந்தார் .13நாளில் அமைசச்சரவை  கவிழ்ந்தது  .

ஐந்து ஆண்டுகாலம்  கழித்து வாஜ்பாயாய் வந்தார் ,உபாத்யாயா படம் திறக்கப்பட்டது. விசாரணை இல்லை இப்ப ப.ஜ.க ஆடசிதான்  நடக்கிறது. இப்போதும் உஆத்யாயா மரணம் பற்றி விசாரிக்காமல் இருப்பது  ஏன் ?


காந்திஅடிகள்   பற்றி விசாரணை கேட்கிறாங்க. போபர்ஸ் பற்றி விசாரிக்க .துடிக்கிறார்கள்  . 


உபாத்யாயா மரணம் பற்றி விசாரிக்காமல் இருப்பது ஏன்?


0 comments: