அண்ணல் அம்பேத்கரும் ,
அரசியல் அமைப்பு வரைவு குழுவும்...!!!
உலகின் மிகசிறந்த அரசியல் அமைப்பு சட்டங்களில் ஒன்று இந்திய அரசியல் அமைப்பு சட்டமாகும் .இதனை வரைவு செய்தகுழுவின் தலைவராக பணி செய்த அண்ணல் அம்பேத்கார் அவர்களின் பொறுமையும்,திறமையும் நிகரற்ற ஒன்றாகும்.
இந்த குழுவில் கோவிந்த் வல்லப பந்த், கே.எம்.முன்ஷி, அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர், என்,கோபால சாமி அய்யங்கார், மி ட்டர்,கைதான், சத்தத்தின் , என்று பலர் இருந்தனர் .
லட்சுமி காந்தன் கொலை வழக்கில் சிக்கிய என்.எஸ்.கிருஷ்ணன், எம்,கே .தியாகராஜ பாகவதர் ஆகிய இருவரையும் வாதாடி விடுவித்தவர் வக்கீல் முன்ஷி.
ஆந்திரா,கர்நாடகா,கேரளா தமிழகத்தை கொண்ட மதராஸ் மாகாணத்தின் அட்வகே ட் ஜெனரலாக இருந்தவர் அல்லாடி!
ஜம்மு காஷ்மீர் ராஜ்யத்தின் பிரதமராக இருந்தவர் கோபாலசாமி..தென்னிந்திய ரயில்வே ,பெங்கால் நாக்பூர் ரயில்வே, எம்,எஸ் என் ரயிலே என்ற கம்பேனிகளை தேசஉடமையாக்கி இரவோடு இரவாக உலகத்தின் பிரும்மாண்டமான இந்தியன் ரயில்வேயை உருவாக்கியவர் கோபால் சாமி.
இந்தியாவின் மிகசிறந்த வக்கீல் மீட்டர் . தொழில் முதலாளி கைதான் குடும்பத்தை சேர்ந்த பிரபல வக்கீல் கைதான் .
முஸ்லீம் லீக் தலைவரும் அசாம்மாநில பிரதமருமாகஇருந்தவர் சத்தத்தின்.
இந்த கமிட்டிக்கு ஆலோசகராக இருந்தவர் பி.என்.நர்சிங் ராவ் பின்னாளில் உலக நீதி மன்றத்தின் தலைவராக வந்தவர்.. இவ்வளவு மேன்மக்கள் இருந்தும் இந்த கமிட்டியையா பற்றி விமர்சனங்கள் எழாமல் இல்லை.
அடிப்படையில் இது பிரிட்டிஷ் அரசால் நியமிக்கப்பட்ட ஒன்று. முற்றிலும் இந்துக்களை அதிகமாக கொண்ட ஒன்று. முதலாளி மார்களை சார்ந்து நிற்பவர்களை கொண்ட து. தேர்ந்தெடுக்கப்பட்ட குழு அல்ல. தொழிலாளர்கள் சார்பில் எவரும் இல்லை . அது மட்டுமல்ல. கமிட்டி முடிவுக்கு வர கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் ஆயிற்று.
பொதுவாக கமிட்டி அல்லது கமிஷன் பற்றி குறிப்பிடும் பொது,அதன் தலைவர் பெயரில் குறிப்பிடுவது மரபு. அதற்காக மற்ற உறுப்பினர் கட்டமண்ணாகவும்,குட்டிசுவராகவும் இருந்தார்கள் என்று சொல் வதற்கில்லை.
இந்திய அரசியல் அமைப்பு சட்டம் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட முறை திருத்தம் செய்யப்பட ஒன்றாகும்.
0 comments:
Post a Comment