Thursday, March 08, 2018


"நடிப்பும் -

அரசியலும் ...!!! "

ஜி .வரலட்சுமி என்ற நடிகை இருந்தார் .என்.டி .ராமராவ்,எம்,ஜி,ஆர், சிவாஜி ஆகியோரோடு போட்டி போட்டுக் கொண்டு நடித்தவர். 

கல்யாணம் பண்ணிப்பார்,குலேபகாவலி,ஹரிசந்திரா என்று பலப்படங்களில் நடித்து புகழ் பெற்றவர். குலேபகாவலி படத்தில் "மயக்கும் மாலை பொழுதே "என்றார் பாடல்  காட்ச்சியில் அற்புதமாக நடித்திருப்பார் .சிறந்த பாடகியும் கூட !

தெலுங்கானாவில் விவசாயிகள் ஆயுதம் தாங்கிய புரட்ச்சியை நடத்திய பொது அவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டவர். விவசாயிகளின் புரட்ச்சியின் நோக்கத்தை கிராமம் கிராமமாக சென்று தெலுங்கானா முழுவதும் பிரசாரம்  செய்தவர் .திரைப்படத்தில் நடித்துக்கொண்டே ஆந்திர கிராமிய வடிவமான "புர்ர கதா " வடிவத்தில் ஊர்தோறும் சென்று நடித்து ஆதரவு திரட்டியவர். (அரசுக்கு தெரியாமல் ).

பால்றாஜ் சஹானி என்ற இந்திநடிகர் பாகிஸ்தானில் பிறந்தவர். தத்துவ படிப்பில் முதுநிலை பட்டம் பெற்றார் லண்டன் சென்று அங்கு ஒலி பரப்பு துறையில் நல்ல சம்பளத்தில் பணியாற்றினார்; இந்தியய சுதந்திரத்திற்காக போராட விரும்பி இந்தியா வந்தார்கம்யூனிஸ்ட்கட்ச்சியில் சேர்ந்து பணியாற்றினார் அகில் இந்திய வாலிபர் சங்கத்தை கட்டி உருவாக்கி அதன் முதல் தலைவராக இருந்தார் இந்து திரைப்படங்களில் நடித்தார். மிகசிறந்த நடிகராக விருதுகளையும் பெற்றார் காங்கிரஸ் அரசு அவரை சிறையி அடைத்தது. மன்னிப்பு எழுதி கம்யூனிஸ்ஸ்ட்டுகடசியை கைவிட்டால் விடுதலை செய்கிறேன் என்றது அரசு. தயாரிப்பாளர்கள் நிர்ப்பந்தித்தனர் ,முடியாது என்று கூறி விட்டார் .தயாரிப்பாளர்கள் அரசிடம் வேண்டுகோள் விடுத்தனர் அவர்களை நட்ட மட்யைக்கூடாது என்று கருதிய அரசாங்கம், அவர் நடிக்க  சம்மதம் தெரிவித்தது .காலையில்போலீஸ் காவலில் படப்பிடிப்பு நடக்கும் இடம் செல்வார் மாலையில் படப்பிடிப்பு முடிந்ததும் "மேக்கப் "   பை கலைத்து விட்டு போலிஸ்காவலில் சிறைக்கு வர கொட்டடியில் பூட்டப்படுவார்.

பிஷமஷஹானி பால்றாஜ் அவர்களின் தம்பி. பஞ்சாப்சி பல்கலையில் ஆங்கில பேராசிரியர் .கம்யுனிஸ்டும் கூட !  இந்துத்வா,ஆர்.எஸ் .எஸ் இயக்கங்கள் பிரிவினையின் பொது மதவெறியை கிளப்பிவிட்டதை சித்தரிக்கும் "தமஸ்" என்ற நாவலை எழுதி விருது  பெற்றவர் அதனை  கோவிந்த் நிகிலானி  படமாக்கிய பொது அதில் நடித்தார்.மதவெறியின் கோரமுகத்தை சித்தரிக்கும் "mr & mrs IYER " என்றபடத்தில்நடித்தவர் .

மேற்கு வங்கத்தை சேர்ந்தவர் உத்பல் தத்.! சித்தார்த்த சங்கர் ரே யின் அரை ப்சிபாசிச  ஆட்ச்சியை கடுமையாக எதிர்த்தவர்.கடசி உறுப்பினர் .ரே அவரை 18 மாதங்கள் சிறையில் அடைத்தார்> வெளியே வந்ததும் ரே யின் ஆடிசியை விமரிசித்து, "துர்சொன்ன நகரே " கல்லோல் "  மாரீச மான் : என்று நாடகங்களை போட்டார் .மம்தா,தாஸ்முன்ஷி,சுப்ரதா போன்ற குண்டர்கள் பார்வையாளர்களை வரவிடாமல் தடுத்தபோது நாடகங்களை நடத்திக்காட்டிய தீரர் ! சத்யஜித் ரே, சென் ஆகியோர் படங்களில் நடித்து விருதுகளை பெற்றவர்.

இவர்களை எல்லாம் எனக்கு நிரம்ப பிடிக்கும்.

தமிழகத்திலும் ராதாரவி,வாகை சந்திரசேகர், சரத் குமார், ரஜனி,கமல் என்று உள்ளார்கள்.

நல்ல நடிகர்கள்.

நடிக்க மட்டுமே தேர்ந்தவர்கள் !!!


0 comments: