Friday, March 23, 2018






ஐம்பது ஆண்டுகளாவது ,

இருக்கும் ...!!!




அப்போது நன் ஹைதிராபாத்தில் இருந்தேன் . ஹிறேன் முகர்ஜி, புபேஷ் குப்தா , ஏகே,கோபாலன்  ,நாத்பாய்,துவைவேதி, கே.ஆர்,கணேஷ் என்று நாடாளுமன்றமு இடது சாரிகள் கலக்கிக் கொண்டிருந்த காலம். 

இதில் தமிழகத்து எம்.பி களும் உண்டு.இந்திய சீன  எல்லைத்தாவா முக்கிய  பிரசசி னையாக  எழுந்தது . கம்யூனிஸ்ட் கடசிக்குள் தத்துவார்த்த விவாதம் நடந்து கொண்டிருந்த நேரம்.  

மத்திய அரசு ஊழியர்கள் ரயில்வே தொழிலாளர்கள் போராட்டம் வெடித்து கொண்டிருந்தது. நாடாளுமன்ற மேலவையில் மக்களவையில் மேலே குறிப்பிட்ட உறுப்பினர்கள் நேரு அரசை கடுமையாக விமரிசித்து கொண்டிருந்தனர்> எனக்கு இவர்களை எல்லாமே வீட அந்த தமிழகத்து எம்.பி பேசுவது நிரம்ப பிடிக்கும். சட்ட நிபுணர். மேலை நாடு சென்று படித்தவர்> வசதியான குடும்பம்>அப்பழுக்கற்ற நேர்மையாளர். தன வசதி வாய்ப்பை எல்லாம் தூக்கி எறிந்துவிட்டு ஏழை எளிய மக்கள் நலன் காக்க கம்யூனிஸ்ட் கடசிக்கு வந்தார் .

நான்  மாற்றலாகி வந்ததும்  அவரோடு நேரடி தொடர்பு ஏற்பட்டது  .மிகவும் எளிமையான வாழ்க்கை என்னை வசீகரித்தது. அவர் காலடியிலேயே கிடந்தேன்.

கிட்டத்தட்ட கம்யூனிஸ்ட் இயக்கம் மிகப்பெரும் பிளவை சந்தித்து கொண்டிருந்தது.

முத்த தோழர்கள் அவரை வந்து சந்திப்பார்கள் எப்படியாவது தாய் கடசி பிளவு படாமல் காக்க வேண்டும் என்று அழுதுகொண்டே வேண்டுவார்கள்.

"அப்படி  எல்லாம் ஒன்னும் ஆகாது தோழர் !"என்பார் 1அவர்கள் முகம் மலரும் .

"பிறகு என்னத்துக்கு தோழர் வலது கம்யூனிஸ்ட்,இடது கம்யூனிஸ்டா  னு பிரிக்கானுவ ? "

"ஒண்ணுமில்லயா !இரண்டு தலைவர்கள் சண்டை. சரிபண்ணிரலாம்! "

"என்னதான் சண்டை தோழர் ? "

"மனசுக்குள்ள வச்சுக்கிடும் !  மராட்டிய பாப்பானுக்கும் கேரளபாப்பானுக்கும் உள்ள சண்டைதான் ! "

நான் அன்றிலிருந்து அவரோடு இருந் தொடர்பை நிறுத்திக் கொண்டேன் .



0 comments: