Wednesday, March 07, 2018"மார்க்சியத்திற்கு "

மரணமில்லை !!!
அவசரநிலை முடிந்து நடந்த தேர்தலில் ஜனதா கடசி ஆடசி பீடமேறியது . ஜனதா  இருந்தாலும்,காங்கிரஸாக இருந்தாலும் அவர்கள் எஜமானர்களான மூலதனம்  சொல்வதைத்தான் கேட்கமுடியும் . கம்யூனிஸ்டுகளை பயன்படுத்திக் கொள்ளலாம் ஆனால் அவர்கள் அதிகாரத்தின் அருகில் கூ ட வரக்கூடாது என்பது இருவருக்கும் கொடுக்கப்பட்ட பொதுவான அறிவுரை என்றார் பெயரில் உத்திரவு.

ஜனதா ஆடசி வந்தபிறகு சட்டமன்ற தேர்தலில் இந்த சில்லுண்டி ஜனதா தலைவர்கள் படுத்த்யபாடு ஒரு நாவலே எழுதலாம். தமிழகத்தில் அப்போது ஜனதாவின் செல்வாக்கு மிகுந்த தலைவராய் இருந்தவர் குமாரி அனந்தன். அவர் ஆடிய ஆட்டம் --- பாவம் முதியவர் எம்.ஆர்.வெங்கடராமன் அவர்களை கேட்டால்   தெரியும். தொகுதி உடன்பாடு காண பேசசுவார்த்தைக்கு ஆபிசுக்கு வா என்பார் " அங்கு போனால் வீட்டுக்கு வா என்பார் இறுதியில் விடுதியில் இருப்பதாக தொலைபேசியில் கூறுவார்.

77 நாடாளுமன்றத்தேர்தலில் இ.காங்கிரசோடு அதிமுக சேர்ந்தது. தி.மு.க குற்றுயிரும் குலையுயிருமாக இருந்தது பலர் கட்ச்சியை காட்டிக் கொடுத்துவிட்டு சிறையிலிருந்து தப்பினர். அரசியல் கடசிகள்  திமுகவை தொழுநோயாளியாக கருதி தீண்டாமையை அனுசரித்தனர்.

நெஞ்சில்  உரமும் ,நேர்மை திறமும் கொண்ட மார்க்சிஸ்டுகள் திமுகவை ஆதரித்தனர் . தி.மு.கே 2இடங்களில்மட்டுமே வெற்றி பெற்றதுமார்க்சிஸ்ட் படுதோல்வியை சந்த்தித்தது. .

உடனடியாக சட்டமன்ற தேர்தல் வந்தது . இ.காங்கிரஸ் ஆட்ச்சியை இழந்து நிற்கிறது. ஜனதாமத்திய ஆட்ச்சியை எதிர்க்க வேண்டும் எம்ஜி.ஆர் கையைப்பிசைந்து கொண்டு நின்றார் . ஜனதாவின் குமாரி அனந்தன் கண்ணாமூசசி    ஆடிக்கொண்டிருக்க தெளிவான அணி உருவாகவில்லை .இந்த நிலையில் 

ஒருநாள் நானும் தீக்கதிர் நிருபர் நாராயணன் அவர்களும் மதுர மேலமாசி வீதியில் வந்து கொண்டிருந்தோம். அப்போது ஒருவரநாராயணனை அழைத்தார்நாராயணன் அவரிடம் தனியாக பேசினார் பின்னர் என்னிடம் வந்து "ஜி ! நான் நெடுமாறனை பார்க்க அவசரமாகபோகவேண்டும். நீங்கள் போங்கள் ! நான் பிறகு சந்திக்கிறேன் " என்றார் .

இரண்டு நாள் கழித்து நெடுமாறன் அவர்கள் தீக்கதிர் அலுவலகம் வந்து A .பாலசுப்பிரமணியன் அவர்களை சந்தித்தார் .அன்று இரவு நான் வீடு திரும்பும்போது  பெரி ய்யவர் ராமராஜ் என்ற ஆர்.ஆர் "என்னடாக்கண்ணா ! சோர்ந்து இருக்கே ! "என்று  கிண்டலடித்தார். 

"தேர்தலை நினைச்சா  பயமா இருக்கு "

"என்ன செய்ய ஒத்தன் கூட வரமாட்டேங்கங் ! ஏங்கண்ணா ! பேசாம எம்ஜிஆர் கூ ட சேந்துருவமா ?  கேடர்ஸ்  ஒத்துக்க மாட்டாங்க இல்லையா ?"

 நான் பதில்  சொல்லவில்லை.வீடுவந்து விட்டேன்.

மறுநாள் கால பத்திரிகையில் அதிமுக -மார்க்சிஸ்ட் கூட்டு என்று செய்தி வந்திருந்தது.எனக்கு பொறி தட்டியது நாராயணனை நெடுமாறன் கூப்பிட்டது,நெடுமாறன் AB அவர்களை சந்தித்தது.-நான் நாராயணனை தொடர்பு கொண்டேன்.

ஆமாம் ஜி ! நெடுமாறன் AB .யை உடனே பாக்கணம்னார் .நான் AB யை தொடர்பு கொண்டேன் .இரண்டு பெரும் நெடுமாறன் வீட்டுக்கு போனோம் அவர் எம்.ஜி ஆர் சொல்லித்தான் வந்திருக்கார் .விஷயம் முடிஞ்சாச்சுபோச்சு" . 

"இதுக்கெல்லாம் நீ சாட்ச்சி ! ஆனா எங்கிட்ட சொல்லல!"

"சாட்ச்சி தான் ஜி ! ஆனால் வாய் பேசாத  சாட்ச்சி "

அதிமுக வின் முதல் தேர்தலில் எம்பி வாங்கி கொடுத்ததும் மார்க்சிஸ்டுகள் தான் . என்.ஜி.ஆரை முதல்வராக்கியதும் மார்க்சிஸ்டுகள்  தான் .

"சம்பவாமி யுகே! யுகே !!"


1 comments:

சிவகுமாரன் said...

என்னது... எம்.ஜி.ஆரை முதல்வராக்கியது மார்க்சிஸ்டா?,