அம்மா , தம்பிதுரை ,
ராம் ஜெத்மலானி ......!!!
ஜெயலலிதா அம்மையார் சிறையிலுள்ளார் ! எந்த வகையிலும் அவர் வசதியான் வாழ்க்கையைக் கொண்டவர் ! திரைப்படத்துறையில் கைகொள்ளாமல் சம்பாதித்தவர் ! அப்படிப்பட்டவர் தன பதவியை பயன் படுத்தி மேலும் சம்பாதிக்க வேண்டிய நிலை இல்லாதவர் !
பின் எப்படி இந்த 58 சொச்சம் கோடி வழக்கு ?
கவிஞர் செஙகீரன் அவர்கள் எழுதிய கவிதைதான் நினைவு தட்டுகிறது !
யாரோ ஒருவீட்டில் ,
எவரோ தீவக்க ,
தங்க மகன் (ள் ) அன்றோ
தண்ணீர் சுமக்கின்றார் !!!
இது தான் அவருடைய கவிதை !
சட்ட நியாயம் என்பதும் இயற்கை நியாயம் என்பதும் வேவேறானவை !
இந்த வழக்கு தமிழ்நாட்டில் நடந்தால் நியாயம்(!) கிடைக்காது என்று தி .மு.க வின் தலைவர் கருதினார் ! அதனால் அவருடைய கையாளான அன்பழகன் அவர்களை வழக்கினை வேறு மாநிலத்திற்கு அனுப்பி விசாரிக்க வேண்டூம் என்று முறையிட வைத்தார் !
அப்போது மத்தியில் வாஜ்பாய் அவர்கள் தலைமையில் பா.ஜ.க ஆட்சி நடந்து கொண்டிருந்தது ! சட்ட அமைச்சராக எம்.தம்பித்துரை இருந்தார் !
பா.ஜ.க கூட்டணி அரசு சக்கை போடு போட்டுக்கொண்டிருந்தது ! வழக்கு அப்போது நடந்து கொண்டிருந்த நீதிமன்றத்திலிருந்து தமிழகத்திற்கு உள்ளேயே வேறு நீதிமன்றத்திற்கு அனுப்பலாம் என்று மட்டும் தம்பித்துரை பரிந்துரை செய்தார் ! வாஜ்பாய் அதனை ஏற்றுக் கொள்ளூம் நிலை இருந்தது !
அப்போது மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் தலையிட்டார் !
"இந்த வழக்கை வேறு மாநிலத்திற்கு அனுப்பவேண்டும் ! லஞசக் குற்றச்சாட்டு வழக்கு ! சிறந்த ,துணிச்சலான நீதிபதியிடம் ஒப்படைக்க வேண்டும் ! யாருக்கும் பயப்படாத ஒருவரை அரசு வக்கீலாக நியமித்து சம்மந்தப்பட்டவரை தண்டித்து சிறையில் அடை க்க வேண்டும் "என்று அவர் பரிந்துறைத்தார் !
அரசிடம்வாதாடிஅதனை நடைமுறைப்படுத்தினார் அந்த அமைச்சர் !
அவர் பெயர் ராம் ஜெத்மலானி !!!!!
2 comments:
அப்படியா
விநோதம்தான்
வேடிக்கையாகவும் வருத்தமாகவும் இருக்கிறது.
மக்களை எவ்வளவு முட்டாளாக நினைத்திருக்கிறார்கள் பாருங்கள்
Post a Comment