Thursday, October 16, 2014

(மீள் பதிவு )




HOME

ABOUT

POSTS RSS

CONTACT

LOG IN

Monday, December 24, 2012


ஒரு  ஊறுகாய் தாத்தா .....!!!



"தீக்கதிர் " பத்திரிகைக்கு மதுரையில் கட்டிடம் கட்ட முடிவாகியது  . "ஜனசக்தி"  பத்திரிகைக்காக வாங்கிய இடம் கைவந்துவிட்டது. மதுரை பை-பாஸ் சாலைக்கும்,கொன்னவாயன் சாலைக்கும் இடையே அரைகுறையாக கட்டப்பட்டிருந்த இடம் சுத்தம் செய்யப்பட்டு வேலை  ஆரம்பமாகியது. இந்த கட்டிட வேலையை கண்காணிக்க "ஆர்.ஆர் " என்று அன்போடு அழைக்கப்பட்டமுது பெரும் தோழர் ராமராஜ்  பொறுபளிக்கப்பட்டார்


விவசாயிகளின் தலைவர் ராமராஜ் .கட்சி பிரிநதபோது பலதலைவர்கள்  ,மற்றும் தொண்டர்கள் சிறையிலிருந்தனர்.. மேலும் பலர் தலைமறைவாக செயல்பட்டனர். தன்னந்தனியாக கிராமம் கிராமமாகச் சென்று விவசாயிகளை ஒன்று திரட்டி மார்க்சிஸ்டு கட்சிக்கு கொண்டுவந்த மகத்தான பணியைச் செய்தவர் ராமராஜ்.. அங்கேயே தங்கி சமைத்து சாப்பிட்டு வந்தார்.


மதுரை  1ம் நம்பர் சந்தில் அப்போது தீக்கதிர் பத்திரிக்கை செயல்பட்டு வந்தது. ஆர்.ஆர் அங்க் அடிக்கடி வருவார் என் வீடும் கொன்னவாயன் சாலைக்கு அருகிலிருந்தது வெறும் சோறும் தயிரும் சாப்பிடும் அவருக்கு வெஞசனமாக பள்ளியில் படிக்கும் என்  மகன் அல்லது மகள்மூலமாக  ஊறு காய் கொடுத்து அனுப்புவேன்.அவர்களைப் பொருத்தவரை அந்த மாபெரும் தலைவர் "ஊறுகாய் தத்தா".


இந்த  சமயத்தில் தான் அவசர் நிலை வந்தது. தலைமறைவு தலைவர்களுக்கும், வெளியில் செயல் படும் தலைவர்களுக்கும் தொடர்பாக ஆர்.ஆர் செயல் பட்டு வந்தார்.


நான் வசித்த பகுதியில் "சூரிய போஸ் " என்று ஒரு தோழர் இருந்தார் . அவருடைய தந்தை நேதாஜியின் ராணுவத்தில் பணியாற்றியவர். இது தவிர என்னோடு பணியாற்றிய தோழர் இப்ராகிம் அவர்களுக்கு "போஸ் " நெருக்கமானவர் .அவர் அடிக்கடி விளாங்குடி பெரிய கருப்பன் கொடுத்தார் 

என்று கூறி   ஒரு கவரை கொடுப்பார். போஸ் கொடுப்பதை .ஆர் ஆர்  இடம் கொடுக்கவேண்டியது என் பொறுப்பு..ஒரு சிறிய எவர்சில்வர் டப்பாவில் அந்த பிளாஸ்டிக் கவரை வைத்து அதன் மீது வாழையிலையினை வைத்து அதில் ஊறுகாயை போட்டு என் குழ்ந்தைகள் மூலம் கொடுத்தனுப்பி விடுவேன்.


என் மகன் MA  மற்றும் IRPM  முடித்து BL படித்து மத்திய உள் துறை அமைச்சகத்தில் பணியாற்றுகிறான்.


என் மகள் MA , Mphil , ML முடித்து வக்கில் தொழில் செய்கிறாள்.  




வேடிக்கை என்ன வென்றால்  அவர்கள் இருவருக்குமே நான் அவர்களை இப்படி use ( misuse ) பண்ணினேன் என்பது தெரியாது.




இந்த இடுகையை பார்த்து

தெரிந்து கொண்டால் தான் உண்டு.



2 comments:

சிவகுமாரன் said...

நிச்சயம் பெருமைப் படுவார்கள் அய்யா.

கரந்தை ஜெயக்குமார் said...

இன்று அறிந்தார் நண்பர் சிவகுமாரன் கூறியுள்ள படி பெருமைதான் படுவார்கள் ஐயா