துப்புரவுப்பணி
துயர் துடைக்கும் பணியாகும் ...!!!
பாதிக்கப்பட்டசென்னை மக்களுக்கு நிவாரணம் முழுமையாக கொடுக்கப்படவில்லை . மழை பகுதிகளில் குறைந்து விட்டது. இப்போது அவர்கள் இருப்பிடம்,தெருக்கள் ,ஆகிய பகுதிகளில்தேங்கிய நீர வெளியேற்றுவதும் சுத்தப்படுத்துவதும்மிகவுமமுக்கியமான பணியாகமாறியுள்ளது.
சென்னியில் 20000 ஆயிரம் துப்புரவுத் தொழிலாளர்கள் இருக்கிறார்கள். அவ்ர்களால் மட்டும் இந்த பிரும்மாண்ட மான பணியைச் செய்யமுடியாது.ஆகவே கோவை,திருச்சி,மதுரை ஆகிய நகரங்களில் இருந்து துப்புரவு தஒழிலளர்களை வரவழைத்துள்ளாஎகள்.
சென்னையின் சில பகுதிகளில் வாலிபர் சங்கம்.மாணவர் சங்கம்.மற்றும் மாதர் சங்க உறுப்பினர்கள் இந்த பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலசெயலாளர் ஜி . ராமகிருஷ்ணன் இந்த பணியிலீடுபட்டிருக்கிறார்.
துப்புறவுப்பனியை ஒருகுறிப்பிட்ட சாதிமட்டும் தான் செய்யவேண்டுமா? என்று அருந்ததியர் சங்க தலைவர் கேட்டிருக்கிறார்.
குழந்தை கழித்து விட்டால் அய்யர்,அய்யங்கார், பிள்ளை, முதலி என்று எல்லாருமே துப்புரவுத்தோழிலாளியாக மாறத்தான் வேண்டும்.
மாவீரன் பகத் சிங் தூக்கிலிடப்பட்டான். உங்கள்கடைசி ஆசை என்ன என்று கேட்டிருக்கிறார்கள்." எங்கள் சிறையில்துப்புரவுப்பணி செய்த அந்த அம்மையார் என் தாயாகத்தெரிகிறார . அவர் கையால் இரண்டு ரொட்டி திங்க வேண்டும் " என்று கூறி ரொட்டி சாப்பிட்டுவிட்டு தூக்கு மரம் நோக்க நடந்துள்ளார் .
இந்த சமயத்தில் நரேந்திர மோடி சொன்னது நினவு தட்டுகிறது .
சமீபத்தில் "கர்ம யோகி " என்ற புத்தகம் ஒன்று பார்க்கக் கிடைத்தது ! குஜராத்தி மொழியில் வெளிவந்துள்ளது ! முன் அட்டையிலும்,பின் அட்டையிலும் "பளபள " வென்று வண்ணத்தில் நரேந்திர மோடியின் படம் போடப்பட்டிருந்தது !
அதில் துப்புரவு தொழிலாளி பற்றி "தலித் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக மட்டும் துப்புரவுத்தொழிலை செய்கிறார்கள் என்று நான் நம்பவில்லை ! வாழ்வாதாரத்திற்காக என்றிருந்தால் தலைமுறை தலைமுறையாக இதனை செய்து வந்திருக்க மாட்டார்கள் ! ஒரு குறிப்பிட்ட கலத்திற்கு பிறகு திடிரென்று அறவிளி வந்து நாம் செய்யும் தொழில் ஒட்டுமொத்த சமூகத்தின், கடவுளின் மகிழ்ச்சிக்கானது ,அதனால் கடவுளால் அவர்களுக்கு வழங்கப்பட்ட தொழிலை பல நூற்றாண்டுகளாக ஒரு ஆண்மீகப்பணியக செய்து வருகிறார்கள் ! அதனால் தான் தலைமுறை தாண்டியும் அவர்கள்மட்டுமே செய்யும் தொழிலாக நிடிக்கின்றது "
என்று குறிப்பிடப்பட்டுள்ளது !
மனித கழிவை மனிதன் அள்ளுவது ஆன்மிகச் செயல் !
கடவுளை மகிழ்ச்சி யுறச் செய்வது !!
My dear youths of India
Watch This point ...!!!
1 comments:
மகாத்மா காந்தி கூட ஒரு முறை குறிப்பிட்டாராம். துப்புரவுப்பணி மிகவும் புனிதமானது. வியாதியஸ்தர்கள் முதியவர்கள் எவருக்கும் அவரது நிலையறிந்து துப்புரவுப்பணி மேற்கொள்ளுதல் வேண்டும். துப்புரவுப்பணியாளர்களை மேற்கு மாவட்டங்களில் இருந்து ஒரு ஐந்து நாள் வேலை என்று குப்பை லாரியிலேயே அழைத்து வந்து (பஸ்ஸில் ஏன் அவர்களை அழைத்து வரக்கூடாது?) சரியான தங்கும் இடம் இல்லாமல்,எந்தவித பாதுகாப்பு சாதனங்களும் தராமல் வெறுங்கையுடனே பணியாற்ற வைத்த கொடுமையை என்னவென்று சொல்லுவது. மனித உரிமைகள் என்பது எங்கேயும் இருக்கிறதா என்ன? தொடர்ந்து 30 மணி நேரம் பணியில் ஓய்வின்றி ஈடுபடுத்தப்பட்ட பழனிச்சாமி என்பவர் இறந்தே போய் விட்டார். எந்த வித அசைவும் அரசு இயந்திரத்தில் இல்லை. குப்பையைப்போட ஒருவன் குப்பையை அள்ள ஒருவனா ?
Post a Comment