தஞ்சை நாடக விழாவை
இளைய ராஜா
தட்டிக்கழித்தது ஏன் ...?
1979ம் ஆண்டு மே மாதம் 25,26,27,ம்தேதிகளில் தஞ்சையில் த.மு.எ.ச நாடக விழாவினை நடத்தியது.
ஏழு முழு நாடகங்கள் நடந்தன இது தவிர ஐந்து குறு நாடகங்கள் நடந்தன .
இது தவிர பல கலை நிகழ்ச்சிகளும் இருந்தது.
நாடக கலைஞர்கள், எஸ்.வி .சகஸ்ரநாமம்,கர்நாடகத்தைச்சேர்ந்த சமுதயாவின் பிரசன்னா , த.மு எ.ச வின் புரவலர் சங்கரய்யா ,கேவை மக்களின் பிரதிநிதியாக தோழர் ரமணி ஆகியோர் வந்திருந்து கருத்துரை ஆற்றினர்.
முழுநீள நாடகமாக,"நினைவுகள்அழிவதில்லை",நாடகத்தைவேல்லுரிளிருந்து வந்த நாடகக்குழு அரங்கேற்றியது
மதுரை பீபீள்ஸ் தியேட்டரஸ் குழு ஜெயந்தனின் "நினக்கப்படும்" நாடகத்தை நடத்தினர்.
மேலூர் எம்.கே. சுந்தரம் அவ்ர்கள் "காலங்களின்னிழல்கள் " என்ற அபத்தவகை நாடகம் ஒன்றை அரங்கேற்றினார்.
பிரம்பை செல்வனின் மௌன நாடகம்,விதினாடகங்கள் என்று நாடகத்தில் எத்தனைவகைஉண்டோ அத்துணை வகையும் இருந்தன.
நாடகத்தில் எத்தனை வடிவம் உண்டோ அவைகளும் நிகழ்த்தப்பட்டன.
உருவம் பற்றியும், உள்ளடக்கம் பற்றியும் விவாதிக்கப்பட்டன.
சமுதாயவின் பிரசன்னா, சஹஸ்ரநாமம் ஆகியொர் இவைபற்றி ஆழமாக விவாதித்தனர்.
இந்த விவாதங்களின் முத்தாய்ப்பாக தோழர் கே.ரமணி அவர்கள் பேசினார்கள்.
"கரு நீர்த்திருக்கும்போது அது முட்டை வடிவம் கொள்கிறது. குஞ்சாகும் பொது முட்டையை உடைத்துக் கொண்டு இறக்கை,கால், அலகு கொண்ட வடிவத்தைபெருகிறது..உள்ளடக்கம் தான் வடிவத்தை தேர்ந்தெடுக்கும். "
என்று அவர் குறிப்பிட்டார் .
இறுதி நாள் அன்று புதிதாக வளர்ந்து வரும் இளையராஜா அவர்களின் இசை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
விழாக்குழுவினர் தஞ்சை மாவட்டம் முழுவது காரில் பிரச்சாரம் செய்துமக்களைதிரட்டும் முயற்சியில் இருந்தனர் நகரத்தில் "மைக்" கட்டி வான் மூலம் பிரச்சாரம் தூள் பறந்தது.
சென்னைதோழர்கள் தஞ்சைக்கு ரயில்டிக்கெட் எடுத்து இளையராஜாவிடம் அளித்திருந்தனர் . ஏனென்று தெரியவில்லை .வருகிறேன் என்று கூறிய
இளைய ராஜா வரவில்லை.!!
வரவேற்புக்குழு தலைவரான பெ.மணியரசன் இடிந்து போனார் . ஆயிரக்கணக்கான் ரசிகர்கள் எமாற்றத்தினால் என்ன செய்வார்களொ என்ற நியாயமான பயம் வேறு இருந்தது.
முற்போக்காளர்களின் கட்டுப்பாடும் எதயும்சமாளிக்கும் தெம்பும் அன்று பட்டுத்தெறித்து .
1 comments:
இளையராஜா ஏன் வரவில்லையாம்?
Post a Comment