Friday, September 30, 2016
Thursday, September 29, 2016
"surgical strike "
இந்திய ராணுவம் தீவிர வாதிகளின் முகாமுக்குள் புகுந்து அழித்தது . இது முற்றிலும் உண்மை.
இந்திய ராணுவம் எங்கள் எல்லைக்குள் வரவில்லை என்று பாகிஸ்தான் கூறி உள்ளது .இதுவும் உண்மை .
காஷ்மீரில் ஒவ்வொரு ஐந்து ஆண்டும் தேர்தல் நடக்கிறது. தேர்தல் கமிஷன் மொத்தமுள்ள 124 தொகுதிகளுக்கும் அறிவிக்கும். தேர்தல் 100 தொகுதிக்கு மட்டுமே நடக்கும். மிசமுள்ள 24 தொகுதிகள் பாகிஸ்தான் வசம் உள்ள காஷ்மீர் பகுதியிலுள்ளது. தவிர்க்க முடியாத காரணங்களால் 24 தொகுதிகளில் தேர்தல்நடத்தமுடியவில்லை என்று தேர்தல் கமிஷன் "பைலை" மூடிவிடும்.70 ஆண்டுகளாக இது தான் நடக்கிறது.
பஞ்சாபிலிருந்து கராசி போனால் சர்வதேச எல்லையை கடக்கவேண்டும். ராஜஸ்தானிலிருந்து சிந்துமாகாணம் போக சர்வதேச எல்லையை கடக்க வேண்டும். காஷ்மீரின் குப்வாராவிலிருந்து கட்டுப்பாட்டு எல்லையை தாண்டினாலே ஆஜாத் காஷ்மீர் வந்து விடும் .இந்திய ராணுவம் பாகிஸ்தானுக்கும் புகவில்லை என்பதும் உண்மை .ஏனென்றால் ஆஜாத் காஷ்மீரும் இந்திய பகுதிதான்.அது தாவாவில் இருக்கிறது.
பாகிஸ்தான் தலைமையும்-இந்திய தலைமையும் ஆட்டும் ஆட்டம் தான் இது. குமரியில்,கோவை யிலும்,திருப்பூரில் நாலு விடலைகள் "பாரத் மாதா கி ஜெ' என்று கோஷம்போடமாட்டுமே உதவும்.
அப்படியானால் காங்கிரஸ் கடசி ஏன் இதனை செய்யவில்லை ?
2007ம் ஆண்டிலிருந்து 2013 ஆண்டுவரை இரண்டு முறை இந்திய ராணுவம் "surgical strike நடத்தி இருக்கிறது . முந்தாநாள் இரவு முழுவதும் மோடி தண்ணீர்குடிக்காமல் நல்ல செய்திக்காக முழித்திருந்ததாக ஒரு தொலைக்காட்ச்சி புலம்புகிறது. ஆனால் மன்மோகன் சிங் நன்றாக தூங்கினார். இது சாதாரணமாக நடப்பது என்பதால். அதே சமயம் 1971ம்ஆண்டுநடந்தவங்கதேசவிடுதலையை மறக்க முடியாது.
அமெரிக்க enterprice கப்பல் இந்துமகாசமுத்திரத்திற்குள் பாகிஸ்தானுக்கு ஆதரவாக நுழைந்த பொது, "வங்க விரிகுடாவுக்குள் நுழையாதே நுழைந்தால் உலக யுத்தம் தான் " என்று சோவியத் யூனியன் எசரித்தது இந்திய ராணுவமும் வங்கதேசமக்களும் வீரம்செறிந்த விடுதலைப்போரை நடத்னதினர்அதற்கு மேற்கு வங்க மக்கள் முழு ஆதரவையும் தந்தனர்.
அதன் பிறகு இந்திய நாடாளுமன்றம் கூடியது. இந்திரா அம்மையார் நாடாளுமனறத்திற்குள் நுழைத்த பொது பிரும்மாண்டமான கரகோஷம் எழுந்ததுதலைவர்கள்பாராட்டினர்.அப்பொதுக்குட்டி தலைவராயிருந்த வாஜ்பாயாய் கூறினார்.
" கம்பிரமாக பிரதமர் வரும் பொது நான் இந்திரா அம்மையாரை பார்க்கவில்லை ! துர்கா தேவியை தரிசித்தேன். she Made history and also geography " என்றார். இந்திய துணைகாண்டத்தில் பூகோளத்தையே மாற்றினார்கள்.
சக்கரத்தின் "டயரில் " காற்றுபோய்க்கொண்டிருக்கிறது.
"பஞ்ச்சர் "பார்ப்பதால்பயனில்லை.
புதியதாக வாங்குவோம் !!!
Tuesday, September 27, 2016
" புளுகுணிகள் "
நான் வசிக்கும் அடுக்ககத்தில் ஐந்து மாடிகள் உள்ளன> அந்த மனிதர் ஐந்தாவதுமாடியில் இருந்தார். ஜிப்பா,பைஜாமாபோட்டிருப்பார். சிலசமயம் வடநாட்டு பஞ்ச்கசம் அணிந்திருப்பார். நெற்றியில் சந்தனகோடு நடுவில் குங்குமம்.சுத்தமான சுயம் சேவக். இவரைப் பொறுத்தவரை தான் சுயம் சேவக் என்பதை காட்டிக்கொள்வதில் பிரியம் கொண்டவர்.
எங்கள் யார்ட்டிவீ ட்டி லாவது பூஜைமணி அடிக்கும் சத்தம் கேட்டால் அந்த வீட்டின் பூஜை அறைக்குள் புகுந்து விடுவார்அவருக்கு தெரிந்த பாடல்கள்,ஸ்லோகங்கள் என்று பாட ஆரம்பித்து விடுவார்.சில சமயம்பிரவசனங்கள்செய்ய ஆரம்பித்து விடுவார்.பாதி தப்பாக இருக்கும். இங்கு விநாயக சதுர்த்தி, விஜய தசமி என்று கூட்டு வழிபாடு நடக்கும்.பந்தலில் அமர்ந்தால் லேசில் எழந்திரிக்க மாட்டார்.
நான் காலையில் "இந்து" பத்திரிக்கை படிப்பவன். ஹைதிராபாத் பதிப்பு. நேற்றைய பதிப்பு நாளை வரும். தலையங்கம், நடுப்பக்க கட்டுரை, சிறப்பு கட்டுரை ஆகியவற்றுக்காக வாங்குவேன். சிலசமயம் வரவில்லை என்றால் கீழே சென்று செக்க்யுரிட்டியிடம் இருந்து பெற்றுக்கொள்வேன்.
ஒருநாள் அப்படி வாங்கி வரும்போது இந்தமனிதர் எதிர்ப்பட்டு விட்டார். "இந்து" பத்திரிகையா? என்று விசாரித்தார்.
"ஆம்" "
"நானும் வாங்க வேண்டும் "
"வாங்குங்களேன் "
"இந்து" தர்மம் பற்றியும் இந்து மதம் பற்றியும் நிறைய கட்டுரைகள் வரும் .அதனால்தான்"
இந்த கிறுக்கன் என்ன சொல்கிறான் என்று யோசித்தேன்..பத்திரிகையின் பெயர் " இந்து"ஆகவே அப்படித்தான் இருக்குமென்று நினைத்து விட்டான்.நின்றால் ஆபத்து என்று கருதி லிப்டுக்குள் புகுந்து விட்டேன்.
மதியம் தான் கட்டுரைகளை படிப்பது வழக்கம் . ஒருநாள் அப்படி படித்துக்கொண்டிருந்தேன்.இந்தமனுஷன் எட்டி பார்த்தார் . " வாருங்கள்"என்றேன் அமர்ந்தார்.
"நான் சிறு வயதிலேயே "இந்து" ஆசிரியர் சொற்பொழிவை "ரஷிம்பாக்கில்" கேட்டிருக்கிறேன்.அருமையாக பேசுவார் : "
"யாரு ? அவர் N .ராம் .அவருக்கு வயது 60 அல்லது 61 தானே இருக்கும் !"
ரஷீம் பாக் பாக் எனபது ஆர்.எஸ்.எஸ். தலைமையகம் இருக்கும் இடத்திலுள்ள மைதானம்.
"ஆமாம் இல்ல ! அவருடைய தந்தை நாராயண் !'
"அவர் பெயர் நரசிம்மன்."
"ஆமாம் .அவர்தான். மைதானத்தில் பெரும் கூட்டம். அவர் அற்புதமாக பேசினார்.அருகில் அவர்மகன் சின்ன பையன் ராம் பூணுல் போட்டு நின்று கொண்டு சுலோகம் சொன்னான் "
என்முகத்தில் எள்ளும்கொள்ளும் வெடிக்கஆரம்பித்து விட்டது. "இந்தாங்க ! போன் " என்று கூறி முத்து மினாடசி கை பேசிய நீட்டினாள். எடுத்துக்கொண்டுவெளியேறினேன். போன் சத்தமேயில்லை ." அந்த ரூம்ல போய் இருங்க .இந்த ஆளு போனப்புரேம் வாருங்க " .என்று சமாளித்தார் .
மறை ந்த தலைவர் ஏ.பாலசுப்பிரமணியம் கூறுவார் ." ஒரு கூடை செங்கல்லும் "பிடாரி"னா என்ன செய்யமுடியும்டா சாமா ? "என்பார்
"ஒரு அரசன் இருந்தான். தனக்கே தனக்கு என்று அரண்மனை கட்டினான் .அவன் குடிபுகுமுன் அங்கு பேய் குடிபுகுந்து விட்டது. மலையாள தேசத்திலிருந்து மந்திரவாதியா அழைத்து பேய் ஓட்ட ஏற்பாடு செய்தான்.மந்திரவாதி என்ன செய்தும் பேயை ஓட்டமுடியவில்லை.
"மகாராஜா ! நீங்கள் அரண்மனை சுவருக்கு செங்கல் வாங்கினீர்கள் இல்லையா ? அவை அத்தனையிலும் பேய் புகுந்துவிட்டதுஇதனை ஓட்டமுடியாது " என்றான் மந்திர வாதி..
நரேந்திர மோடி வடகிழக்கு மாநிலம் போனார் "அங்கு உங்கள்நாட்டு இளவரசி ருக்மனியை எங்கள் கிருஷ்ணன் மணந்தான் " என்றார் நாகபுரியில் உள்ள 8ம் வகுப்பு சிறுவன் " விதர்ப்ப தேசத்து இளவரசி ருக்மணி அது நாகபுரியை சுற்றி உள்ள தேசம்."என்று பிரதமருக்கு பதிலளித்தான்.
பிரதமராகுமுன் மோடி திருசி வந்தார்." வ.உ.சி தலைமையில்நடந்த உப்புசத்த்யாக்கிரகம் "என்று கூறி புதிய சரித்திரமெழுதினார் ..
கூடை செங்கல்லும் பிடாரி என்றால் என்ன செய்ய முடியும்.!!!
அறியாமை வேறு .!
புளுகுவது வேறு !!
இவர்கள் புளுகுணிகள்.!!!
Sunday, September 25, 2016
சமஸ்கிருதத்தை ,
பா.ஜ .க . வால் ,
நட்டமாக நிறுத்த முடியாது ...!!!---10.
இந்துத்வா காரர்கள் "சம்ஸ்கிருத பாரதி " என்ற அமைப்பின் மூலம் சம்ஸ்கிருத வளர்சசி என்று ஆரம்பித்தார்கள்.
ஆரம்பத்தில மதுரை கிழக்கு தொகுதியில் மட்டும் நிறைய டியூஷன் வகுப்புகள் இவர்களால்நடத்தப்பட்டான்.இந்துத்துவா அதிகாரத்திற்கு வந்ததும் தமிழகம் பூராவும்இவை நடந்து வருகின்றன.
இந்தமைப்பின் தலைமையகம் டெல்லியில் உள்ளது . மொத்தம் நான்கு தேர்வுகள்.நான்காவது தேர்வு முடிந்தவுடன் சான்றிதழ் தருகிறார்கள்.
இந்த சான்றிதழை வைத்துக் கொண்டு பல்கலையில் சம்ஸ்கிருத பட்டப்படிப்பில் சேரலாம்.
சான்றிதழ் தேர்வு வீட்டிலிருந்தே எழுதலாம்.டெல்லியிலுள்ளதலமை அலுவலகத்திற்கு மனு செய்தால் அவர்கள் பாடங்களைஅனுப்புவார்கள்.
தேர்வுக்கு உண்டான கேள்வித்தாள்கள் உங்கள்வீட்டிற்கு அனுப்பப்படும். நீங்கள் உங்கள்வீட்டில் அமர்ந்து கொண்டு தேர்வு எழுதலாம். உங்களை கண்காணிக்க உங்கள் மனசாட்ச்சி மட்டுமே.
இப்போது புதிதாக தமிழ் மக்களுக்கு ஒரு சலுகை அளித்திருக்கிறார்கள். இந்த சம்ஸ்கிருத தேர்வை சம்ஸ்கிருதத்தில் தான் எழுத வேண்டும் என்பதில்லை . உங்கள் தாயமொழி தமிழிலேயே சம்ஸ்கிருத தேர்வு எழுதி வெற்றி பெறலாம். இப்படி இவர்கள் சம்ஸ்கிருதத்தை வளர்ப்பது என்பது "இந்துத்வாவை " கொண்டு செல்வது தவிர வேறொன்றுமில்லை .
இந்த போலிகளை எதிர்த்து நிழற்சண்டை போடுகிறார்கள். "இந்துத்வாவை " அதன் கோரமுகத்தை எதிர்ப்பதை விட்டு மொழியை , எதிர்க்கிறார்கள்.
நாம் என்ன செய்யப்போகிறோம் ???
சம்ஸ்கிருதத்தை ,
பா.ஜ .க. வால் ,
நட்டமாக நிறுத்த முடியாது ...!!!--- 9
"கடவுள் இல்லை ! கடவுள் இல்லை ! கடவுள் இல்லவே இல்லை !!" என்று தெருவெங்கும் கூவியவர்கள் அந்த இல்லாத கடவுளுக்கு அருளிய மொழிதான் சம்ஸ்கிருதம். அது தேவ பாஷையாம்.
சாதீயை ஒழிக்கப் புறப்பட்டவர்கள் மொழிக்கே சாதியை கொடுத்தார்கள்.சம்ஸ்கிருதம் பிராமனபாஷை என்கிறார்கள்.
மதமாற்றத்திற்காக திருசபையினர் கூறிய பொய்யை ஏற்றுக்கொண்டவர்கள் இவர்கள். இந்த" பகுத்தறிவாளர்க"ளுக்கு இது தெரியும் .இருந்தும் தங்கள் அரசியல் லாபத்திற்காக அதனை பயன்படுத்திக் கொண்டார்கள்.
கேரளத்தில் உள்ள ஆதிசங்கரர் சம்ஸ்கிருத பல்கலைக்கழகத்தில சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கருத்தரங்கம்நடந்தது.அந்த கேரளத்து "புத்திராட்சஸன் " மறைந்த இ.எம்.எஸ் அவர்களை சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தனர். "The relevence of Adhi Sankara " என்பது தலைப்பு.
( 2010 ஆண்டு social scientist இதழில் முழு பேசசும் வந்திருக்கிறது)
மன்னன் மூன்று மணிநேரம் பேசினார் வேதத்திலிருந்தும் , உபநிஷத்திலிருந்தும் ,.ஸ்மிருதியிலிருந்தும் மேற்கோள்களை காட்டி மழையாக பொழிந்தார். பார்வை யாளர்கள் மெய்ம்மறந்து பிரமித்திருந்தனர்.
கூட்டம்முடிந்து அவர் மேடையிலிருந்து இறங்கும் பொது பார்வையாளர் ஒருவர் அவரை நெருங்கி " வேதம், உபநிஷத் ,என்று படித்த நீங்கள் எப்படி கம்யூனிஸ்ட் ஆனிர்கள் ? "என்று கேட்டார்.மிகவும் நிதானமாக " "படித்ததால் தான் " என்றார்இ.எம்.எம். எஸ்.
ஆதி சங்கர சம்ஸ்கிருத பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பஞ்ச்கசம் , அங்கவஸ்திரம் அணிந்து கையில் தர்ப்பைப்புல் கொண்டு திதி சொல்ல போகும் பாப்பான் அல்ல. ஜவகர் பல்கலையிலும், வெளிநாட்டு பல்கலையிலும் வரலாற்று பேராசிரியராக இருந்த கே.என். பணிக்கர்.
சம்ஸ்கிருதம் பிராமணர்களுக்கு உரியது என்பது பொய் . ஆப்பிரிக்க அரேபிய இந்தோஅய்ரோப்பிய மொழிகளைகலந்து கட்டி கொசைமொழியில்பேசிக்கொண்டிருந்ததை சீராக்கி செம்மைப்படுத்தி சம்ஸ்கிருதத்தை உருவாக்கினான் பாணினி என்பவன். பாகிஸ்தானில் உள்ள தக்க சீலம் பலகலை அருகில் உள்ள கிராமத்து காரன்அவன் . பிராம்மண மத்தை சேர்ந்தவனா என்பது கூட சந்தேகமாகவுள்ளது என்கிறார்கள் வரலாற்றாளர்கள்.கிட்டத்தட்ட இதேகாலத்தில் தான் தமிழு க்கு வரிவடிவமும், இலக்கணம் மம் கொடுத்தார் தொல்காப்பியர்.என்ற சமணர்(கி மு 3--5 ம்நூற்றாண்டு) தமிழையும்,சமஸ்கிருதத்தையும் கொடுத்தவர்கள் பிராமணர்கள் இல்லை .
நான் முழுமையாக சம்ஸ்கிருதம் படித்தவன் இல்லை.எல்.ஐ.சி யில் பணியில் செந்தபிறகுஅந்தமொழியின் நுணுக்கங்களையும், செவ்வியல் தன்மையையும் நண்பர் மூலம் கற்றுக்கொண்டேன் .அதனை கற்றுத்தந்தவர் பெயர் வீர கணபதி. அவர் பிராமண ர் அல்ல. மதுரையில் உள்ள கல்லூரியில் சம்ஸ்கிருத பேராசிரியராக இருப்பவர் பிராமணர் அல்ல.
சம்ஸ்கிருதத்தை எதிர்ப்பவர்கள் போலியான கருத்துக்களோடு அதனை வளர்ப்பதாகாச சொல்லும் இந்துத்வா வாதிகளின் அழிசசாட்டியமும் சேர்ந்து நிற்கிறது.மொழித்திணிப்பு எதிர்க்கப்பட வேண்டியது தான்.
இந்தி திணிப்பை நாம் எதிர்த்தோம். அதே சமயம் "என் பேரனுக்கு சரளமாக ஆங்கிலம்,தமிழ் மட்டுமல்லாமல் "இந்தியும் " பேச முடியும் .அவனுக்கு அதனால் அமைசர் பதவி வேண்டும் "என்ற தாத்தாவை பார்த்தவர்கள்நாம் .
"குறளோவியம் " என்ற நூல் சம்ஸ்கிருத மொழியில் மொழி பெயர்க்க பட்டதாக தளம் என்ற பத்திரிகையில் படித்தேன். தனித்தமிழ் இயக்க தலைவர் ஒருவரின் உறவினரான கண்ணன் என்பவர் அதன்முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார் ..
( தொடரும்)
Saturday, September 24, 2016
சமஸ்கிருதத்தை ,
பா.ஜ .க வால் ,
நட்டமாக நிறுத்த முடியாது ....!!!---8
dr .முரளி மனோகர் ஜோஷி அவர்களுக்கு அறிவியலை வீட இந்துத்வா முக்கியமாக பட்டுவிட்டது.
இது தான் அவர்களின் மன நிலை.(MINDSET ). வெள்ளாவி வைத்தாலும் போகாத அழுக்கு ! என்ன செய்ய முடியும். புது டெல்லி அருகில் உள்ள ஜான்டேன்வால் என்ற இடம் தான் அவர்களுடைய தலைமையகம்.அங்குதான் அவர்களுடைய அத்துணை அமைப்புகளின் அலுவலகம் உள்ளது.அதிலொன்றுதான் சம்ஸ்கிருத பாரதி. சம்ஸ்கிருத மொழியை பரப்ப உருவாக்கப்பட்டதாக சொல்லப்பட்டது.இந்தியா புறாவும் இதற்கு கிளை உள்ளது. செம்மொழி துறை மூலம் இதற்கு நிதி கிடைக்கிறது.
வளர்ந்த மொழிகளில் ஒன்று சமஸ்கிருதம். அதன் உயிர் நாடியான அறிவியலை அதன் அருகில்கூட வரவிடாமல் இவர்கள் வளர்க்கபோகிறார்கள்என்பதிலிருந்தே புரிந்துகொள்ளலாம்.மகாராஷ்டிராவில் அம்பெத்கார் மூலம் லட்க்கணக்கானவர் பௌத்தமதத்தை தழுவினர்.இவர்கள பாலி ,மொழியையும் சமஸ்கிரதத்தையும் படித்து தேர்ந்தவர்கள். பலர் முனைவர் பட்டம் பெற்றவர்கள். உரைநடையில் அந்த மொழியில் பல பரிசோதனைகளை செய்து வளர்க்க விரும்புகிறார்கள். ஆனால் சம்ஸ்கிருத பல்கலைக்கழகமும் மற்ற அமைப்புகளும் இந்துத்வா காரர்கள் வசம் உள்ளது.
அந்த பேராசிரியர்களோடு ஊடாடிய பொது மொழி உருப்படும் வாய்ப்பு இல்லை என்றே தொண்றுகிறது. இதற்கு பல உதாரணங்களை சொல்லலாம்.
எழுத்தாளரும் ,மொழிபெயர்ப்பாளருமான முத்து மீனாட்ச்சி அவர்கள் சம்ஸ்கிருதத்தில் மேடையில் பேசும் அளவுக்கு புலமை பெற்றவர். உரைநடையில் "செம்மலர் " பத்திரிகையில் வந்த முற்போக்கு கதைகளை சமஸ்கிருதத்தில் மொழி பெயர்த்தார்;அதனை பெங்களூருவிலிடுந்து வரும் "சம்பாஷணை சந்தேஷ் " என்ற சம்ஸ்கிருத பத்திரிகைக்கு அனுப்பினார். மிகவும் பாராட்டிய அவர்கள் பத்து கதை வாக்கில் பிரசுரித்தனர் .
இந்த கதைகளை தொகுப்பாக கொண்டுவர முனைந்த பொது, பல்கலைக்கழக பேராசிரிய பெருந்தகைகளை நாடினோம். சிலகதை களை பிரசுரிக்க அவர்கள் மறுத்தார்கள்.
"சிறுவயதில் கர்ணனைப்பற்றி கேள்விப்பட்ட திரௌபதி சுயம்வர த்தில் கர்ணணன் வெற்றி பெறுவதை விரும்புகிறாள். பின்னாளில் சொர்க்கவாசலில் காவலாளியிடம் இதனை சொன்ன திரௌபதியை அவன் சொர்க்கத்தின் கதவுகளை மூடிவிட்டு அவளை நரகத்திற்கு தள்ளுகிறான். செம்மலரில் வந்து பரவலாக பேசப்பட்டகதை இது.
அதே போல் 12 வயதே ஆன குந்தி முனிவருக்கு பணிவிடை செய்யப்போனவள் அவரால் கர்ப்பிணியான கதை . இதுசம்ஸ்கிருத பத்திரிகையிலும், வண்ணக்கதிரிலும் வந்தது இத்தனையும் எடுத்துவிட வேண்டும் என்றார்கள . அதன் பிறகும் வெளியிட எந்த பதிப்பகமும் தயாராக இல்லை.
இது பற்றி ஆந்த்ரா தோழர் வி.சந்திர சேகர் அவர்களிடம் கலந்து கொண்டேன். மார்க்சிஸ்டுகடசியின் தினசரியான "பிரஜாசக்தி "பத்திரிகையின் திருப்பதி பதிப்பின் நிர்வாகியாக உள்ளவர் அவர். நகலை வாங்கி பிரஜாசக்தி பதிப்பகத்தின்முலம் தொகுப்பை வெளியிட்டு உதவினார்.
இந்துத்வா வாதிகள் சம்ஸ்கிருதத்தின அருகில் எவரும் குறிப்பாக முற்போக்காளர்கள்வருவதை விரும்புவதில்லை.மொழியில் அறிவார்ந்த விஷயங்கள் வருவதையும் அவர்கள் விரும்புவதில்லை . மொழி மக்களை நெருங்கவிடுவதில்லை.
தமிழகத்தில் சம்ஸ்கிருதத்தை எதிர்ப்பவர்கள் செய்யும் தவறுகளில் முக்கியமானது ....
(தொடரும் )
Thursday, September 22, 2016
சமஸ்கிருதத்தை ,
பா.ஜெ.க.வால் ,
நட்டமாக நிறுத்த முடியாது...!!!---7
( மதராஸ் மாகாணத்தில் நீதிகடசி,ராஜாஜியின் ஆடசி,இரண்டாம் உலககப்போர்,இந்திய சுதந்திர பிரகடனம் என்று வரலாற்றோடு இணைத்து எழுத திட்டமிட்டிருந்தேன். மூன்று நாட்களாக மடிக்கணினி முன் அமரமுடியாமல் முதுகு வலி.திட்டத்தை மாற்றிக்கொண்டேன். விரைவில் முடித்துவிட முடிவு செய்துள்ளேன்..)
இந்துத்வா வின் குரல் 1925ம் ஆண்டு வாக்கில் ஆரம்பித்தது. இந்தியா பூராவுக்கும் கொண்டுசெல்ல அவர்களுக்கு ஒரு அகில இந்திய (Pan Indian ) மொழி யாக சமஸ்கிருதம் கிடைத்தது. சுதந்திர இந்தியாவில் தாயமொழிக்கல்வி ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில் தமிழ் நாட்டில் அதனை நடைமுறைப்படுத்த காங்கிரஸ் கடசி தயங்கியது நேருவின் ஏக இந்தியா கொளகைக்கு பங்கம் ஏற்படுமோ என்றும் நினைத்தது
இந்த தயக்கம் திக,திமுக கடசிகளுக்கு ஆதாயமாக அமைந்தது. இதற்கிடையே செம்மொழி யாகிய சம்ஸ்கிருதம் இந்துத்வ காரர்களுக்கு வரப்பிரதேசமாக மாறியது.இந்தி பிரசார சபா போன்று இந்தியாமுழு வதும் சம்ஸ்கிருத பாரதி என்ற அமைப்பை உருவாக்கினார்கள். செம்மொழிக்காக வந்த நிதி அவர்களுக்குப்பயன்பட்டது.
தமிழ் நாட்டில் மட்டும் சம்ஸ்கிருத எதிர்ப்பு என்பது பிராம்மணிய எதிர்ப்போடு இணைந்தது.
தி.க.,திமுக வின் பிரிவினை வாத கோஷம் பொதுவான மக்களையும் கவ்விப்பிடித்துவிடுமோ என்ற பயத்தில்காங்கிரஸ் காட்ச்சியும் ஏக இந்தியாவுக்கு அதிக அழுத்தம்கொடுக்காமல் பம்மியது.
லால்பகதூர் சாஸ்திரியின் பிரிவினைவாத தடை சட்டம் நிலமையைமாற்றியது. "காஞ்சிபுரத்தில் என் விட்டு திண்ணையில் படுத்துக்க கொண்டாவது திராவிட நாடு திராவிடருக்கே " என்று உரிமைக்குரல் எழுப்புவேன் என்று அறிவித்த அண்ணாதுரை அந்த கோரிக்கையைகைவிட்டார். தன ஜீவாதாரமான கொள்கையை கைகழுவி ஒரு கடசி ஆட்ச்சியைப்பிடித்த அதிசயமும் நடக்கத்தான் செய்தது . ஏக இந்தியர்கள் செய்த தவறு அண்ணாதுரையை முதல்வராகக்கியது.
1965ம் ஆண்டு நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டம் தமிழ் நாட்டில் காங்கிரசை தூக்கி எரிந்ததது மட்டுமல்லாமல் 67ம் ஆண்டு திமுகவை ஆடசியிலும் அமர்த்தியது.
தமிழகத்தில் சம்ஸ்கிருதம் இல்லாத சரக்காக மாறியது. சம்ஸ்கிருதம் பிராமாணர்களின் மொழி என்ற பொய்யான பிரசசாரம் பலனளித்தது. தெலுங்கு ,கன்னடம், மலையாள மொழியாளர்கள் சம்ஸ்கிருதம் மற்றும் இந்தி கற்றக்கொள்ளமுடிந்தது.
இந்துத்வா தமிழகத்தில் தலை எடுக்க முடியாத நிலை ஏற்பட்டதற்கு காரணமாகவும் இது அமைந்தது. அதுமட்டுமல்லாமல் அறிவியலை கைவிட்ட சம்ஸ்கிருதம இந்துத்வ வாதிகளின் தேவையாக மாறிற்று.
மொழி இயல் வல்லுநர்கள் அநியாகமாக ஒரு தொன்மையான மொழி அழிவதை கண்டு எதுவும்செய்ய முடியாமல்தவித்தார்கள். இதற்கான விடிவு காலம் வாஜ்பாய் ஆட்ச்சிக்கு வந்தபோது நடக்கும் என்று நம்பினார்கள்.
மனித வள மேம்பாட்டு துறை தான் செம்மொழியையும் கொண்டிருந்தது வாஜ்பாயாய் தன அமைச்சரவையிலிந்த துறைக்கு விஞ்ஞ்ந பேராசிரியராக இருந்த dr .முரளி மனோகர் ஜோஷியை நியமித்தார்.
ஜோஷி விஞ்ஞனத்தில் பட்டம் பெற்று விட்டு அலகாப்பாத் பல்கலையில் முனைவர் பட்டம் பெற்றார்.அவர் ஆராய்சசிக்கு எடுத்துக்கொண்டது spectroscopy ஆகும்,ஒளியின் வர்ணங்களை நிறப்பிரிகை மூலம் பிரித்து ஆராயும் துறை இது. அதே பல்கலைகழகத்தில் இயற்பியல் பேராசிரியராகவும் பலஆண்டுகள் பணியாற்றினார். அறிவியலார்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற அவரால் முடியும் .ஜோஷி பதவி ஏற்றதும் பட்டப்படிப்பில், இலக்கியம்,அரசியல்,வரலாறு என்று இருப்பது போல் ஜோதிடமும் படிக்கலாம் என்று உத்திரவு போட்டார்.அறிவுலகம் அதிர்ந்தது.
ஆலமரத்தடியில் ராம்சந்த் BA (ஜோதிடம் ) என்று அட்டை எழுதி கிளிஜோசியம் பார்க்க வாய்ப்பு கிடைத்தது.
(தொடரும் )
Monday, September 19, 2016
சமஸ்கிருதத்தை ,
பா.ஜ .க வால் ,
நட்டமாக நிறுத்தமுடியாது ....!!! ---6
ராபர்ட் கால்வேடு ல் பாதிரியார் அயர்லாந்தில் பிறந்தவர் . மரபாய்ந்த கிறிஸ்தவ குடும்பத்தினரான அவர் தன 24 வயதில் இந்தியா வந்தார்நெல்லை மாவட்டத்தின் கடற்கரை பகுதியில் திருசபை பணியில் ஈடுபட்டார். மதமாற்றம் அவருடைய முக்கிய நோக்கமாக இருந்தது.
நொபிலிக்கு கிடைத்த அனுபவமே கால்வேடு ம் பெற்றார்மதமாற்றத்திற்கு இடஞ்ச்சலாக இருந்ததும்.பிராம்மணியமும்,என்பதை உணர்ந்தார். அவர்களின் "விதி ,மறுபிறவி " கோட்பாடு இந்தமக்களை கவ்விப்பிடித்து வைத்திருப்பதை அறிந்தார்.
"நீ இன்று அனுபவிப்பது போன பிறவியில் செய்த பாவ புண்ணியத்தின் பலன்இந்த பிறவியில் நல்லது செய்து அடுத்தபிறவியிலாவது நன்மை அடைய காத்திரு " என்பது அவ்வளவு பலமாக அவர்கள் மனதில் பதிந்திருந்தது.
இதற்கான சடங்குகளை செய்விக்கும் புரோகிதர்கள் (பிராமணர்கள்)மீதுள்ள நம்பிக்கை .
ராமேஸ்வரத்திலிருந்து -காசிவரை அவர்கள் உசசரிக்கும் சம்ஸ்கிருதம்.
இதனை உடைக்காமல் மத மாற்றம் சாத்தியமில்லை என்று கருதின கால் டுவேல் மொழி அறிஞரம் ஆவார்.அவர் எழுதிய ஒப்பிலக்கண நூல் முக்கியமானது. "தமிழ்,தெலுங்கு ,கன்னடம்மலையாளமாகியவை திராவிட குடுமபத்தை சேர்ந்தவை. துளு வும் அப்படியே.பாகிஸ்தானிலும்,ஆப்கானிஸ்தானத்திலும் பேசப்படும் இரண்டு மொழிகளும் திராவிட மொழிகளே இந்த மொழிகளுக்கெல்லாம் தாய் மொழி தமிழ்.சம்ஸ்கிருதம் ஆரியமொழி. அது பிராமணர்களுக்கானது . " என்று அறிவித்தார்.
( கால்துவேல் மொழி அறிஞர்தான் அதே சமயம் .அவர் கிஸ்துவ பிரசுசாராரு ம் கூட . அவருடைய கருத்துக்களில் கிறிஸ்துவ நன்மை மேலோங்கி இருக்கும் என்று சார்லஸ் -இ-க்ரோவர் என்பவர் விமரிசித்தார் தென் இந்திய கிராமிய பாடல்கள் என்ற நூலை எழு திய குரோவர் மொழி ஆராய்சசி ஆளர் )
இதே சமயத்தில் கிழக்கிந்திய கம்பெனியிட மிருந்து பிரிட்டிஷாரின் நேரடி பார்வையிலஇந்தியாவந்தது.படிப்பறிவுள்ள மேல்சாதி பிராம்மணர்கள் அரசு உத்தியோகம். பதவி களை ஆக்கிரமித்தனர் .செல்வாக்கோடு வாழ்ந்தனர் . பிரிட்டிஷாரின் கல்வி கொள்கையால் மிக கொஞ்ச்மாக வேணும் பயன் பெற்ற பிரம்மானர் அல்லாத மேல்சாதியினர் தங்களுக்கும்பதவிகள் கேட்டனர்.தங்கள் நலனை பாதுகாக்க நலஉரிமை சங்கத்தை ஆரம்பித்தனர்.. பின்னாளில் இதுதான் நீதி கடசியாக வளர்ந்தது.இந்திய சுதந்திரத்திற்கான முழக்கம் பலமாக கேட்க ஆரம்பித்தது.இது பிரிட்டிஷாருக்கு பயத்தை ஏற்படுத்தியது நீதி கட்ச்சியோ பிராம்மண எதிர்ப்பை முதன்மைப்படுத்தி சுதந்திர கோரிக்கையை பின்னுக்கு தள்ளியது.இது ஆளும் பிரிட்டிஷாருக்கு மகிழ்சசியை அளித்தது.
இதனால் பிரிட்டிஷார்- நீதி கடசி- கிறிஸ்தவம் என்று ஒரு அணி கிடைத்தது. பிராமண எதிர்ப்பும் ,சம்ஸ்கிருத அழிப்பும் சிறப்பாக நடந்தது.
இந்த அணியின் காரணமாக பிராமணர் அல்லாத பிற மேல்சாதிஒற்றுமை சாத்தியமானது.பிராமணர் அல்லாதவர்களுக்கான சில சலுகைகளும்,உரிமைகளும் கிடைத்தன.
(தொடரும்)
சம்ஸ்கிருதத்தை ,
பா.ஜ .க. வால்,
நட்டமாக நிறுத்தமுடியாது...!!! ---5
முகலாய சாம்ராஜ்யத்தை பாபர் நிறுவிய பின் 1606 ம் ஆண்டு இத்தாலி நாட்டிலிருந்து ராபர்ட் டீ நொபிலி என்ற போதகர் மதுரையில்வந்து இறங்கினார். ஜெசூட் குழுமத்தை சேர்ந்த இவர்கள் முழுமையாகாதங்களை ஏசு பிரானுக்கு ஒப்புக்கொடுத்தவர்கள். செழிப்பும்,அமைதியும்கொண்ட இந்தமண்ணில் கிறிஸ்தவத்தை பரப்ப வந்தவர்கள்.
பிராம்மண மதம் தன்பிடியை வலிமையாக வைத்திருக்கத்தான் செய்தது.இருந்தாலும் விளிம்பு நிலை மக்களும் உதிரியாக இருந்தவர்களும் ஒடுக்கப்பட்டு இருந்தார்கள்.கிறிஸ்தவ போதகர்களின் பிரசசாரம் இந்த மக்களை பாதித்தது . ஆனால் நொபிலி போன்றவர்களுக்கு இது திருப்தி அளிக்கவில்லை. சமூகத்தின் மேல்தட்டு மனிதர்களை இவர்களைக்காட்டி இழுக்க முடியவில்லை. விளிம்பு நிலை மக்களும் முழுமையாக வரவில்லை.இன்னுமவர்கள் அய்யர் என்றும் கோவிலையும் சுற்றி வந்து கொண்டுதானே இருந்தார்கள் .நொபிலி இதுபற்றி தீவிரமாக ஆராய்ந்தார்.
"இனி போதகர்கள் அய்யர் என்றுதான் அழைக்கவேண்டும்.சர்ச்சு என்பதற்கு பதிலாக கோவிலென்று சொல்ல வேண்டும். போதகர்கள் பஞ்சாகஸ்சம் ,உத்தரீயம் அணியவேண்டும்.தலைமுடியை வெட்டி குடுமி வைக்கவேண்டும். காதில் கடுக்கணும்,தலையில் சரிகை தலைப்பாகையும் அணியவேண்டும். சந்தனம் பூசிக்கொள்ள வேண்டும். மார்பில் பூணுல் அணியவேண்டும் "என்று உத்திரவிட்டார்.
இதுநோபிலை எதிர்ப்பவர்களைஆத்திரமூட்டியது.திருசபையிலிருந்து ரோமில் உள்ள போப் ஆண்டவருக்கு புகார் அனுப்பினார்கள் .
"அந்தத்த நாட்டின் மரபினை கடைப்பிடிப்பது கிஸ்துவத்திற்கு எதிர்ப்பானது அல்ல என்று நொபிலி விளக்கம் அளித்தார் . பூணுல் போடுவதை குறிப்பிடும்பொது "முப்புரி நூல் பிதா,சுதன்,பரிசுத்த ஆவியை குறிக்கிறது " என்று ஒரு போடு போட்டார்.
இந்த விளக்கத்தை அப்போது போப்பாக இருந்த கிரிகேரி xv ஏற்றுக்கொண்டார்.
(மதுரை பைபாஸ் சாலையில் உள்ள பாத்திமா கல்லூரி -ஆலமரம் பகுதியில் வைக்கப்பட்டிருக்கும் நொபிலி சிலை,காதில்கடுக்கான்,தலைப்பாகை,,பூணுல் ஆகியவற்றோடு இருப்பதாய் காணலாம்.உலகத்த தமிழ் மாநாட்ன்டிபொது இந்த சிலை வைக்கப்பட்டது)
ஆனாலும் மத மாற்றம் இவர்கள் நினைத்த படி நடக்க வில்லை .இதே சமயத்தில் நெல்லை மாவட்டத்தில் ராபர்ட் கால்வேடு ல் பாதிரியாரும் இதே போன்ற பிரசினையில் சிக்கி தவித்தார்.
கிறிஸ்துவ மதமாற்றத்தை தடுப்பது .பிராம்மணமதமும் சம்ஸ்கிருதமும் தான்.பிராம்மணர்களையும் சமஸ்கிருதத்தையும் தனிமைப்படுத்தினால் ,
(தொடரும்)
Saturday, September 17, 2016
சம்ஸ்கிருதத்தை ,
பா .ஜ .க வால் ,
நட்டமாக நிறுத்த முடியாது.. !!!---4
மத்திய ஆசியாவில் வாழ்ந்து வந்தபழங்குடி மக்களில் சிலர் "இஸ்லாமியர் " ஆனர்கள் .உஸ்பெகிஸ்தானில் அவர்கள் ஆடசி அமைத்திருந்தார்கள். அரசன் மறைந்ததும்,இளவரசன் சிறுவனை விரட்டிவிட்டு பங்காளி ஆட்ச்சியை பிடித்தான். தப்பி வந்த 16 வயது இளவரசன் காபூல் சென்று குட்டி அரசை நிறுவிக்கொண்டான். வீரமும் விவேகமும் கொண்ட இளவரசன் தெற்கேயும் ,கிழக்கேயும் நகர்ந்து தன ஆட்ச்சியை விரிவாக்கிக் கொண்டான். கிபி 1556 ம் ஆண்டு டெல்லியை கைப்பற்றி முதல் முகலாய சாம்ராஜ்ஜியத்தைநிறுவினான் அவன் பெயர் பாபர்.
ஒருகட்டத்தில் முகலாய சாம்ராஜ்ஜியம் காபூலில் இருந்து கிழக்கே இன்றய வங்கதேசம் வரை, காஷ்மீரிலிருந்து கிட்டத்தட்ட காவிரிக்கரை வர விரிந்திருந்தது.இந்த முகலாய சக்ரவர்த்திகளுடைய ஒரேநோக்கம் சாம்ராஜ்ஜிய விரிவாக்கம் மட்டுமே என்றிருந்தது. விரிந்த நிலப்பரப்பை தக்க வைத்துக் கொள்வதில் அவர்கள் கண்ணும் கருத்துமாக இருந்தார்கள் அதற்காக எந்தவித சமரசத்திற்கு தயாராக இருந்தார்கள்.
இஸ்லாத்தை பரப்புவதை அவர்கள் எந்த சந்தர்ப்பத்திலும்நோக்கமாகக் கொள்ளவில்லை.
பாபர்.ஹுமாயூன் ,அக்பர், ஜஹாங்கிர், ஷாஜகான்,ஓவுறாங்க சிப் , என்று அத்துணைபெரும்இந்தசகவழ்வு முறையைஅனுசரித்தேவாழ்ந்தார்கள்.மதமாற்றத்தை ஏற்கவில்லை. இன்றய இஸ்லாமிய தீவிர வாதத்தை கணக்கில் கொண்டால் அன்றய முகலாய சக்கரவர்த்திகள் இந்த மண்ணை பெரும் இஸ்லாமிய நாடாக மாற்றி இருக்க முடியும்.அந்த அளவுக்கு அவர்களுக்கு ஆடசி,அதிகாரம் பலமாக இருந்தது.உலக இஸ்லாமிய மையமாக அரேபியாவாகஇல்லாமல் இந்தமண்ணாக செய்திருக்க முடியும்.
அவர்களுக்கு நிலமும் நாடும் மட்டுமே நோக்கமாக இருந்தது . இஸ்லாம் என்பது முக்கியமாக இருந்ததில்லை.
அக்பர் ராஜபுத்திர பெண்ணை மணந்து கொண்டார்.அவருடைய மத சடங்குகளை செய்வதை தடுக்க விரும்பவில்லை.தன்னுடைய கோட்டைக்குள் அவருக்காக கிருஷ்ணன் கோவிலை கட்டித்தந்தார். கிருஷ்ணஜயந்தியைவிமரிசையாக கொண்டாட செய்தது மட்டுமல்லாமல் அதில் தானும் கலந்துகொண்டார்.
அக்பர் ஒரு கட்டத்தில் இஸ்லாத்தில் இருந்து விலகி வாழ்ந்தார். மற்ற மதத்தலைவர்களோடு விவாதித்து "தீன்- இலாஹி " என்ற புதிய மதத்தை உருவாக்கினார். கோவில்களுக்கு உதவி அளித்தார் சம்ஸ்கிருதத்தை ஆதரித்தார்.
ஆக்ரோஷமாக சமணத்தையும், பௌத்தத்தையும் விரட்டிய பிராமணிய மதத்தினரும் கொஞ்சம் ஆசுவாசம் கொண்டனர். அவர்களும் அரசு நிர்வாகத்தில் பங்கெடுத்துக் கொண்டனர். இதற்கான மிகசிறந்த உதாரணம் தெற்கே நடந்தது.
ஆதி சங்கரர் உருவாக்கிய சிருங்கேரி மடத்திற்கும், ஹைதர் அலி,திப்பு சுல்தான் ஆகியரின் நெருக்கத்திற்கும் காரணம் இவைதான்.
இந்த மண்ணின் செழிப்பையும் ,அமைதியாயும் கண்ட ஐரோப்பியர்கள் இங்கு வந்தார்கள். அக்பரின் தர்பாருக்கு வியாபார நோக்கோடு ஐரோப்பியர்கள் வந்த விபரம் உண்டு. ஜஹாங்கிர் காலத்தில் ஐரோப்பியர்கள் ஏற்றுமது இறக்குமதி செய்ய கிட்டங்கிகளை உருவாக்கிக் கொள்ள அனுமதி கிடைத்ததுமுண்டு .
ஆனால் ஐரோப்பவியர்களின் வருகைக்கும் முகம்மதியர் வருகைக்கும் அடிப்படையிலொரு வித்தியாசம் இருந்தது.
ஐரோப்பியர்கள் வரும் பொது ,ஒருகையில் வர்த்தகத்தையும் ,மறுகையில் கல்வியையும், நெஞ்சில் கிறிஸ்துவத்தையும் கொண்டுவந்தார்கள் .
(தொடரும்)
..
சம்ஸ்கிருதத்தை ,
பா .ஜ .க வால் ,
நட்டமாக நிறுத்த முடியாது.. !!!---4
மத்திய ஆசியாவில் வாழ்ந்து வந்தபழங்குடி மக்களில் சிலர் "இஸ்லாமியர் " ஆனர்கள் .உஸ்பெகிஸ்தானில் அவர்கள் ஆடசி அமைத்திருந்தார்கள். அரசன் மறைந்ததும்,இளவரசன் சிறுவனை விரட்டிவிட்டு பங்காளி ஆட்ச்சியை பிடித்தான். தப்பி வந்த 16 வயது இளவரசன் காபூல் சென்று குட்டி அரசை நிறுவிக்கொண்டான். வீரமும் விவேகமும் கொண்ட இளவரசன் தெற்கேயும் ,கிழக்கேயும் நகர்ந்து தன ஆட்ச்சியை விரிவாக்கிக் கொண்டான். கிபி 1556 ம் ஆண்டு டெல்லியை கைப்பற்றி முதல் முகலாய சாம்ராஜ்ஜியத்தைநிறுவினான் அவன் பெயர் பாபர்.
ஒருகட்டத்தில் முகலாய சாம்ராஜ்ஜியம் காபூலில் இருந்து கிழக்கே இன்றய வங்கதேசம் வரை, காஷ்மீரிலிருந்து கிட்டத்தட்ட காவிரிக்கரை வர விரிந்திருந்தது.இந்த முகலாய சக்ரவர்த்திகளுடைய ஒரேநோக்கம் சாம்ராஜ்ஜிய விரிவாக்கம் மட்டுமே என்றிருந்தது. விரிந்த நிலப்பரப்பை தக்க வைத்துக் கொள்வதில் அவர்கள் கண்ணும் கருத்துமாக இருந்தார்கள் அதற்காக எந்தவித சமரசத்திற்கு தயாராக இருந்தார்கள்.
இஸ்லாத்தை பரப்புவதை அவர்கள் எந்த சந்தர்ப்பத்திலும்நோக்கமாகக் கொள்ளவில்லை.
பாபர்.ஹுமாயூன் ,அக்பர், ஜஹாங்கிர், ஷாஜகான்,ஓவுறாங்க சிப் , என்று அத்துணைபெரும்இந்தசகவழ்வு முறையைஅனுசரித்தேவாழ்ந்தார்கள்.மதமாற்றத்தை ஏற்கவில்லை. இன்றய இஸ்லாமிய தீவிர வாதத்தை கணக்கில் கொண்டால் அன்றய முகலாய சக்கரவர்த்திகள் இந்த மண்ணை பெரும் இஸ்லாமிய நாடாக மாற்றி இருக்க முடியும்.அந்த அளவுக்கு அவர்களுக்கு ஆடசி,அதிகாரம் பலமாக இருந்தது.உலக இஸ்லாமிய மையமாக அரேபியாவாகஇல்லாமல் இந்தமண்ணாக செய்திருக்க முடியும்.
அவர்களுக்கு நிலமும் நாடும் மட்டுமே நோக்கமாக இருந்தது . இஸ்லாம் என்பது முக்கியமாக இருந்ததில்லை.
அக்பர் ராஜபுத்திர பெண்ணை மணந்து கொண்டார்.அவருடைய மத சடங்குகளை செய்வதை தடுக்க விரும்பவில்லை.தன்னுடைய கோட்டைக்குள் அவருக்காக கிருஷ்ணன் கோவிலை கட்டித்தந்தார். கிருஷ்ணஜயந்தியைவிமரிசையாக கொண்டாட செய்தது மட்டுமல்லாமல் அதில் தானும் கலந்துகொண்டார்.
அக்பர் ஒரு கட்டத்தில் இஸ்லாத்தில் இருந்து விலகி வாழ்ந்தார். மற்ற மதத்தலைவர்களோடு விவாதித்து "தீன்- இலாஹி " என்ற புதிய மதத்தை உருவாக்கினார். கோவில்களுக்கு உதவி அளித்தார் சம்ஸ்கிருதத்தை ஆதரித்தார்.
ஆக்ரோஷமாக சமணத்தையும், பௌத்தத்தையும் விரட்டிய பிராமணிய மதத்தினரும் கொஞ்சம் ஆசுவாசம் கொண்டனர். அவர்களும் அரசு நிர்வாகத்தில் பங்கெடுத்துக் கொண்டனர். இதற்கான மிகசிறந்த உதாரணம் தெற்கே நடந்தது.
ஆதி சங்கரர் உருவாக்கிய சிருங்கேரி மடத்திற்கும், ஹைதர் அலி,திப்பு சுல்தான் ஆகியரின் நெருக்கத்திற்கும் காரணம் இவைதான்.
இந்த மண்ணின் செழிப்பையும் ,அமைதியாயும் கண்ட ஐரோப்பியர்கள் இங்கு வந்தார்கள். அக்பரின் தர்பாருக்கு வியாபார நோக்கோடு ஐரோப்பியர்கள் வந்த விபரம் உண்டு. ஜஹாங்கிர் காலத்தில் ஐரோப்பியர்கள் ஏற்றுமது இறக்குமதி செய்ய கிட்டங்கிகளை உருவாக்கிக் கொள்ள அனுமதி கிடைத்ததுமுண்டு .
ஆனால் ஐரோப்பவியர்களின் வருகைக்கும் முகம்மதியர் வருகைக்கும் அடிப்படையிலொரு வித்தியாசம் இருந்தது.
ஐரோப்பியர்கள் வரும் பொது ,ஒருகையில் வர்த்தகத்தையும் ,மறுகையில் கல்வியையும், நெஞ்சில் கிறிஸ்துவத்தையும் கொண்டுவந்தார்கள் .
(தொடரும்)
..
Friday, September 16, 2016
சமஸ்கிருதத்தை ,
பா.ஜ.க வால் ,
நட்டமாக நிறுத்த முடியாது !!!.....3
ஆதி சங்கரர் அவதாரமானது கி.பி 788ம் ஆண்டு என யூகிக்கப்படுகிறது. மிகசிறுவயதிலேயே சந்நியாசம் பூண்டவர் அவர். தனது 32 வைத்து வயதில் மறைந்தார்.
இந்த குறுகிய காலத்தில் அவர் ஆற்றிய பாணி மகத்தானது.
பிராம்மணிய மதம்மிகவும் சிதிலமடைந்திருந்த நேரம் அது.சமணம் பல்கிப்பறந்திருந்தது மித முள்ள பகுதிகளில் பௌத்தம் இருந்தது. வேதத்தையும், கடவுளையும் ஏற்காத இந்த இரண்டின் கிடுக்கிப்பிடியில் சிக்குண்ட பிராம்மணியம் தன செல்வாக்கான இழந்து பலமற்று இருந்தது.
சமணமோ சிற்றுர்களில்கூட குழுக்களை அமைத்து செயல்பட்டது. ஏழு ஊர் கொண்டது ஒருநாடு. இந்தநாட்டை ஆள ஊர்களில் உள்ள குழுக்கள் ஒருவரை நியமிக்கும். இந்த குழுக்களை கிராம சபை என்று அழைத்தார்கள். ஒரு கொசசை வடிவ ஜனநாயகம் என்று இதனை சொல்லலாம். இதனை காரணமாக நிர்வாகம் மக்களுக்கு அருகில் வந்தது..நிர்வாகம் மக்கள் மொழியில் பேச வேண்டியதாயிற்று. மொழியும்மக்களுக்கு மிக அருகில் வந்தது.
தமிழகத்தை எடுத்துக்கொண்டால் இந்த சமண பௌத்த ஆடசிகளின் பொதுதான் தமிழின் பொற்காலம் துவங்கியது என்று கூறலாம்கலையும்,இலக்கியமும் பறந்து விரிந்து வளர்ந்தது. அற்புதமான இலக்கியங்கள் தோன்றின .இதுவே சங்க இலக்கிய காலம் எனலாம். ஐம்பெரும் காப்பியங்களை படைத்தவர்கள் சமணர்களும்,பௌத்தர்களும் தான் .
எனோ ! தெரியவில்லை ! ஆதிசங்கரர் இதனை கணக்கில் கொள்ள தவறி விட்டார்.
மாறாக பிராம்மணிய மதத்தை மீட்டுருவாக்க நாடுமுழு வதும் சுற்றுப்பயணம் செய்தார்.சமண,பௌத்த மத தலைவர்களோடு விவாதித்தார். வாதிட்டார். 1200ஆண்டுகளுக்கு முன்பு இப்படி ஒரு பயணத்தை சாத்தியமாக்கினார்.
( 1980 ஆண்டு ஜி.வி அய்யர் "ஆதிசங்கரா " என்ற படம் எடுக்கும் பொது அவருடைய இணை இயக்குனராக இருந்த துறை பாரதி இந்த பயணத்தில் பட்ட சிரமத்தை நாட்கணக்கில் சொல்வார் )
அவர் கண்டு கொண்ட காரணங்களில் மிகவும் முக்கியமானது சமணமும்,பௌத்தமும் ஸ்தாபனப்படுத்தப்பட்ட மதங்கள். ஆங்காங்கே மடாலயங்களை நிறுவி அவற்றின் மூலம் சமயக்கல்வியும் ,சமயக்கட்டுப்பாடும் கொண்டவையாக இருந்தன.பிராம்மணிய மதம் அப்படி இல்லாமல் சிதறி இருந்தது என்பது தான்
மதத்தை ஸ்தாபனப்படுத்தும் பணியை சங்கரர் துவக்கினார்.
தெற்க்கே சிருங்கேரி,கிழக்கே பூரிஜெகந்நாதம், மேற்கே துவாரகை,வடக்கே பத்திரிநாத் என்று நான்கு மடாலயங்களை உருவாக்கினார்.சமய,சடங்கு வழிக்காட்டுத்தலாக அந்தந்த பகுதிகளில் இந்த மடாலயங்களுக்கு முழு அதிகாரம் கொடுக்கப்பட்டது.
இந்த நான்கு மடங்களும் பரஸ்பரம் தொடர்பு கொள்ளவும், பிரார்த்தனை செய்யவும் சங்கரர் சம்ஸ்கிருதத்தை பயன்படுத்த ஆரம்பித்தார்.
தேசம் முழுவதும் சம்ஸ்கிருதம்கற்றுத்தர பாடசாலைகள் உருவாகின. தோத்திரங்கள் உருவாகின.புராண இதிகாச கதைகள் எழுதபட்டன.புரோகிதர்களும்,பூசாரிகளும் சம்ஸ்கிருத பண்டிதர்கள் ஆனார்கள்.
சம்ஸ்கிருத மொழி அறிவார்ந்தவர்கள் கையிலிருந்து மெள்ள இவர்கள் கைக்கு போயிற்று . மொழியின் அறிவியல் பார்வை (scientific temper ) .மறைய ஆரம்பித்தது.
சங்கரருக்கு பிறகு மீட்டுருவான பிராமணியம் மிகவும் ஆக்ரோஷமாக சமணத்தையும், பௌத்ததையும் அழித்தொழிக்க ஆரம்பித்தது.
ஆனாலும் இது நிலைக்கவில்லை !
காரணம் மேற்கே இருந்து மெலிதான "தென்றல்" இஸ்லாம்,கிறிஸ்துவம் என்று கிபி 1000 ஆண்டுகளில் வீச ஆரம்பித்ததுதான்
Thursday, September 15, 2016
சம்ஸ்கிருதத்தை,
பா.ஜ .கவால் ,
நட்டமாக நிறுத்தமுடியாது !!!........ 2.
காளிதாசனின் "சாகுந்தலமும் " ஹர்ஷனின் "ரத்னாவளியும் " சம்ஸ்கிருத மொழியின் இலக்கியத்தரத்தை உயர்த்தியது என்றால் மிகையில்லை.
அதேசமயம் இதிகாசங்களான வால்மீகியின் "ராமாயணமும்" வியாசனி ன் "மகாபாரதமும்" அந்த மொழிக்கு ஒரு சர்வதேச அந்தஸ்தை அளித்தன .
இதில் முக்கியமாக கவனிக்கப்படவேண்டியது,இந்த நான்கையும் பிராமணர்கள் (பாப்பான்கள் ) படைக்கவில்லை என்பதுதான்.
இலக்கியம் தவிர தத்துவார்த்த துறையிலும் சிறப்பாகவே செயல்பட்டது. தத்துவத்தையும் ,அறிவியலையும் வளர்த்தெடுப்பதில் முக்கிய பங்காற்றியது. "உயிர் என்றால் என்ன ? " ; "காலம் என்றால் என்ன ?" ; "மறு பிறவி உண்டா ?" ; என்று பல கேள்விகளை எழுப்பி அதற்கு அறிவியல் ரீதியான பதில்களை தர முனைந்தது.
நசிகேதன் என்ற சிறுவன் யமனை சந்தித்து இறந்தபின் என்ன ஆகிறது என்பதை கற்பனையாக சித்தரிக்கும் "கடோப நிஷத்" முக்கியமான ஒன்றாகும். சிகாகோவில் வசிக்கும் தமிழர் அப்பாதுரை என்பவர் கடோபநிஷத்தை "நசிகேத வெண்பா " என்று வெண்பாவாக பாடி முக நூலில் பதிந்திருந்தார் அதற்கு பின்னுட்டமாக கிட்டத்தட்ட 1000 பக்கங்கள்மட்டும் வந்திருந்தன. அமிரிக்காவில் உள்ள மனித வளமேமைப்பாட்டுத்துறை.நிர்வாகவியல்துறை ஆகியவையே இவற்றை பயன்படுத்துவதாக கேள்விப்படுகிறேன் .
அறிவியல் ரீதியாக சம்ஸ்கிருதம் அணுகுவதை சொல்ல உதாரணம் நிறைய உள்ளது. "உயிர் என்றால் என்ன? "என்ற கேள்வியை எழுப்பி பதில் எழுதி உள்ளார்கள் .
"எந்த ஒரு பொருள் தனக்கு வேண்டியதை தனக்கு வெளியிலிருந்து எடுத்துக்கொள்கிறதோ , எந்த ஒரு பொருள் தனக்கு வேண்டாததை தனக்குள் இருந்து வெளியேற்றுகிறதோ அந்த பொருள் உயிருள்ள பொருளாகும் ". (katabolism & metabolism )
இது அறிவியலின் பொதுவான கோட்பாடு நாம் பிராணவாயுவை வெளியிலிருந்து எடுக்கிறோம். கரியமில வாயுவை உள்ளிருந்து வெளியேற்றுகிறோம். நீரை அறுந்து கிறோம்.சிறு நீரை வெளியேற்றுகிறோம். உண்கிறோம். கழிவை வெளியேற்றுகிறோம்.இதில் எது நின்றாலும் உயிரற்ற நிலை தோன்றி விடும்.
நீத்தார் நினைவு நாளில் சடங்கு செய்ய வரும் பூசாரி சம்ஸ்கிருதத்தில் செய்யுளை சொல்கிறார்.
பிரணோவா அன்னம் : உணவுதான் உயிர்
தத் வ்ரதம் : அது வரையறுக்கப்பட்டது.இன்னும் இன்னுமென்று கேட்கும்
மனிதன் போதும் என்று சொல்வது உணவை மட்டுமே ,
அன்னம் ந நிந்தஏத்: உணவை வெறுக்காதே
அன்னமேவ பிராணன் : அன்னம் தவிர உ யிர் என்பது இல்லை .
பல நூற்ண்டுறாண்டு களுக்கு முன்பு சொன்ன இந்த வாக்கியத்திற்கு, நவீன அறிவியலுக்கும் அதிக வித்தியாசமிருப்பதாக தெரியவில்லை.
இதன் பொருள் plastic saurgery யும் rocketory யம் அறிந்தவர்கள் என்பதல்ல .
சம்ஸ்கிருத மொழியில் scientific temper இருந்தது என்பதை சுட்டிக் காட்டவே !
பின் அது தன அறிவியல் தனமையை இழந்தது ஏன் ?
யாரால் ?\
பின்னாளில் மிகவும் போற்றப்பட்ட "ஆதி சங்கர பகவத் பாதர் " அவர்களால் என்பது .......
(தொடரும் )
Wednesday, September 14, 2016
சம்ஸ்கிருதத்தை
பா.ஜ.க வால் ,
நட்டமாக நிறுத்தமுடியாது !!!
தொன்மையான மொழிகளில் இரண்டு இந்தியாவில் உருவானது என்பது பெருமைக்குரியதாகும். ஒன்று தமிழ் .மற்றோன்று சமஸ்கிருதம் . சம்ஸ்கிருதம் பேசசு வழக்கற்று போனது. "சீரிளமை" தமிழ் வாழ்ந்து கொண்டிருக்கிறது. "தமிழா ! நீ பேசுவது தமிழா !"என்ற மறைந்த திருவுடையானின் கம்பிரக் குரல் மனதை அலைக்கழித்துக் கொண்டுதான் இருக்கிறது.
வேத காலத்தில் சம்ஸ்கிருதம் பேசப்பட்டு வந்ததா ? என்று பலர் கேள்வி எழுப்புகிறார்கள். மானுடவியல்,மொழியியல்,வரலாற்று அறிஞர்களே இதற்கான விடை தேடிக்கொண்டு இருக்கிறார்கள்.
12 ம் நூற்ரான்டில் இளங்கோ அடிகள் "தேரா மன்னா " என்று எழுதினர் அப்போது வாழ்ந்த முநிசாமியும் ,முப்பிடாத்தியும் இதே மாதிரி பேசி இருப்பார்களா ?
டாக்டர் சிவத்தம்பி இதைப்பற்றி த.மு.ஏ.ச கருத்தரங்கில் குறிப்பிட்டுள்ளார் . 'சாங்க கால தமிழ் இறு க்கமாகஇருந்தது.பக்தி இலக்கிய காலத்தில் அதே தமிழ் இளகி நேகிழ்சசி யோடு அமைந்திருந்தத்த்து. அதனால் தான் அது இன்றும் வாழ்கிறது "என்கிறார்.
கிறிஸ்து பிறப்பதற்கு முன் 3 - 5 ம் நூற்ராண்டு வாக்கில் மக்கள் பிராகிருதம்,பாலி , ஆப்பிரிக்க அரேபிய மொழிகளின் கலப்பில் கோச \சை மொழியை பேசிக்கொண்டு இருந்தனர்.இன்றைய பாகிஸ்தானில் உள்ள தக்க சிலத்தில் பல்கழகம் இருந்தது.அதன் அருகில் இருந்த கிராமத்து அறிவாளி இந்தமொழிகளை சீராக்கி புதியதாக சம்ஸ்கிருதமொழிக்கான கட்டுமானம்,இலக்கணம்,இலக்கியம், ஆகியவற்றை அளித்தார். அவர் பெயர் பாணினி..
இதற்கான சான்றாக ராமாயணத்தையும், மகாபாரதத்தையும் பார்க்கலாம். ராமன் அவதரித்த பிண தான் கிருஷ்ணாவதாரம். ராமாயணம் சிறந்த சம்ஸ்கிருதத்தில் உருவாக்கி உள்ளது>மகாபாரத செய்யுள்கள் கொசசையாக உள்ளன காரணம் ராமாயணம் எழுதப்பட்ட காலத்தில் உள்ளதை பின்னாளில் வளர்சசி பெற்ற மொழியில் திருப்பி எழு தினர் . மகாபாரதத்தை அப்படி எழ்த்தவில்லை ..
மதுரையில் உள்ள முற்போக்காளர்களுக்கு டாக்டர் தா.ச ராசாமணி அய்யாவை தெரிந்திருக்கும். சிறந்த மார்க்சியவாதி தமிழ் அன்பர். கலப்பில்லாதசுத்தமான இலக்கிய தமிழைத்தான் பேசுவார். "ஐயா! அஞ்சல் அட்டை அனுப்பி இருந்தேனே ?'என்று கேட்பார். நாங்கள் அவருடைய பேசசுக்கு அடிமை சுவையாகவும் பிமிப்பாகவும் இருக்கும்.இருந்தாலும் இது யதார்த்தமா? என்ற கேள்வி இருக்கும். எதோ ஒரு "அந்நியத்தனம் " இருப்பது போல் நினைப்பு வரும்.
இதற்கு உதாரணமாக காளிதாசனை குறிப்பிடலாம். அவனுடைய "சாகுந்தலம் " நாடகத்தில் துஷ்யந்தன் , சகுந்தலை,கன்வர், ஆகியோர் சம்ஸ்கிருதத்தில் பேசுவார்கள். தோழிகள் ,விதூஷகன், பணியாட்கள் ஆகியோர் பிராகிருத்தால் பேசுவார்கள். காளிதாசனின் யதார்த்தமான படைப்பில் ஒன்று சாகுந்தலம்.
(தொடரும் )