Thursday, September 22, 2016சமஸ்கிருதத்தை  , 

பா.ஜெ.க.வால் ,

நட்டமாக நிறுத்த முடியாது...!!!---7
( மதராஸ் மாகாணத்தில் நீதிகடசி,ராஜாஜியின் ஆடசி,இரண்டாம் உலககப்போர்,இந்திய சுதந்திர பிரகடனம் என்று  வரலாற்றோடு இணைத்து எழுத திட்டமிட்டிருந்தேன். மூன்று  நாட்களாக மடிக்கணினி முன் அமரமுடியாமல் முதுகு வலி.திட்டத்தை மாற்றிக்கொண்டேன். விரைவில் முடித்துவிட முடிவு செய்துள்ளேன்..) 


இந்துத்வா வின் குரல் 1925ம் ஆண்டு வாக்கில்  ஆரம்பித்தது. இந்தியா பூராவுக்கும் கொண்டுசெல்ல அவர்களுக்கு ஒரு அகில இந்திய (Pan Indian ) மொழி யாக சமஸ்கிருதம் கிடைத்தது. சுதந்திர இந்தியாவில் தாயமொழிக்கல்வி ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில் தமிழ் நாட்டில் அதனை நடைமுறைப்படுத்த காங்கிரஸ் கடசி தயங்கியது நேருவின் ஏக இந்தியா கொளகைக்கு பங்கம் ஏற்படுமோ என்றும் நினைத்தது

இந்த தயக்கம் திக,திமுக கடசிகளுக்கு ஆதாயமாக அமைந்தது. இதற்கிடையே செம்மொழி யாகிய  சம்ஸ்கிருதம் இந்துத்வ காரர்களுக்கு வரப்பிரதேசமாக மாறியது.இந்தி பிரசார சபா போன்று   இந்தியாமுழு வதும்   சம்ஸ்கிருத பாரதி என்ற அமைப்பை உருவாக்கினார்கள். செம்மொழிக்காக வந்த நிதி அவர்களுக்குப்பயன்பட்டது.

தமிழ் நாட்டில் மட்டும் சம்ஸ்கிருத எதிர்ப்பு என்பது பிராம்மணிய எதிர்ப்போடு இணைந்தது. 

தி.க.,திமுக  வின் பிரிவினை வாத கோஷம் பொதுவான மக்களையும் கவ்விப்பிடித்துவிடுமோ என்ற பயத்தில்காங்கிரஸ்  காட்ச்சியும் ஏக இந்தியாவுக்கு அதிக அழுத்தம்கொடுக்காமல் பம்மியது.

லால்பகதூர் சாஸ்திரியின்  பிரிவினைவாத தடை  சட்டம்  நிலமையைமாற்றியது. "காஞ்சிபுரத்தில் என் விட்டு திண்ணையில் படுத்துக்க கொண்டாவது திராவிட நாடு திராவிடருக்கே " என்று உரிமைக்குரல் எழுப்புவேன் என்று அறிவித்த அண்ணாதுரை அந்த கோரிக்கையைகைவிட்டார். தன ஜீவாதாரமான கொள்கையை கைகழுவி ஒரு கடசி ஆட்ச்சியைப்பிடித்த அதிசயமும் நடக்கத்தான் செய்தது . ஏக இந்தியர்கள் செய்த தவறு அண்ணாதுரையை  முதல்வராகக்கியது.

1965ம் ஆண்டு நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டம் தமிழ் நாட்டில் காங்கிரசை தூக்கி எரிந்ததது மட்டுமல்லாமல் 67ம் ஆண்டு திமுகவை ஆடசியிலும்  அமர்த்தியது. 

தமிழகத்தில்  சம்ஸ்கிருதம் இல்லாத சரக்காக மாறியது. சம்ஸ்கிருதம் பிராமாணர்களின் மொழி என்ற பொய்யான பிரசசாரம் பலனளித்தது. தெலுங்கு ,கன்னடம், மலையாள மொழியாளர்கள் சம்ஸ்கிருதம் மற்றும் இந்தி கற்றக்கொள்ளமுடிந்தது.

இந்துத்வா தமிழகத்தில் தலை   எடுக்க முடியாத நிலை  ஏற்பட்டதற்கு காரணமாகவும் இது அமைந்தது. அதுமட்டுமல்லாமல் அறிவியலை கைவிட்ட சம்ஸ்கிருதம இந்துத்வ வாதிகளின் தேவையாக மாறிற்று.

மொழி இயல் வல்லுநர்கள் அநியாகமாக ஒரு தொன்மையான மொழி அழிவதை கண்டு எதுவும்செய்ய முடியாமல்தவித்தார்கள். இதற்கான விடிவு காலம் வாஜ்பாய் ஆட்ச்சிக்கு வந்தபோது நடக்கும் என்று நம்பினார்கள்.

மனித வள மேம்பாட்டு துறை தான் செம்மொழியையும் கொண்டிருந்தது வாஜ்பாயாய் தன அமைச்சரவையிலிந்த துறைக்கு விஞ்ஞ்ந பேராசிரியராக இருந்த dr .முரளி மனோகர் ஜோஷியை நியமித்தார்.

ஜோஷி விஞ்ஞனத்தில்  பட்டம் பெற்று விட்டு  அலகாப்பாத் பல்கலையில் முனைவர் பட்டம் பெற்றார்.அவர் ஆராய்சசிக்கு எடுத்துக்கொண்டது spectroscopy   ஆகும்,ஒளியின் வர்ணங்களை நிறப்பிரிகை மூலம் பிரித்து ஆராயும் துறை இது. அதே பல்கலைகழகத்தில்    இயற்பியல் பேராசிரியராகவும் பலஆண்டுகள் பணியாற்றினார். அறிவியலார்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற அவரால் முடியும் .ஜோஷி பதவி ஏற்றதும் பட்டப்படிப்பில், இலக்கியம்,அரசியல்,வரலாறு என்று இருப்பது போல் ஜோதிடமும் படிக்கலாம் என்று உத்திரவு போட்டார்.அறிவுலகம் அதிர்ந்தது.

ஆலமரத்தடியில் ராம்சந்த் BA (ஜோதிடம் ) என்று அட்டை எழுதி கிளிஜோசியம் பார்க்க வாய்ப்பு கிடைத்தது.  

(தொடரும் )
0 comments: