Saturday, September 24, 2016சமஸ்கிருதத்தை ,

பா.ஜ .க  வால் ,

நட்டமாக நிறுத்த முடியாது ....!!!---8
dr .முரளி மனோகர் ஜோஷி அவர்களுக்கு அறிவியலை வீட இந்துத்வா முக்கியமாக பட்டுவிட்டது.

இது தான் அவர்களின் மன நிலை.(MINDSET ). வெள்ளாவி வைத்தாலும் போகாத அழுக்கு ! என்ன செய்ய முடியும். புது டெல்லி அருகில் உள்ள ஜான்டேன்வால் என்ற இடம் தான் அவர்களுடைய தலைமையகம்.அங்குதான் அவர்களுடைய அத்துணை அமைப்புகளின் அலுவலகம் உள்ளது.அதிலொன்றுதான் சம்ஸ்கிருத பாரதி. சம்ஸ்கிருத மொழியை பரப்ப  உருவாக்கப்பட்டதாக சொல்லப்பட்டது.இந்தியா புறாவும் இதற்கு கிளை உள்ளது. செம்மொழி துறை மூலம் இதற்கு நிதி கிடைக்கிறது.

 வளர்ந்த மொழிகளில் ஒன்று சமஸ்கிருதம். அதன் உயிர் நாடியான அறிவியலை அதன் அருகில்கூட வரவிடாமல் இவர்கள் வளர்க்கபோகிறார்கள்என்பதிலிருந்தே   புரிந்துகொள்ளலாம்.மகாராஷ்டிராவில் அம்பெத்கார்  மூலம் லட்க்கணக்கானவர்  பௌத்தமதத்தை தழுவினர்.இவர்கள பாலி ,மொழியையும் சமஸ்கிரதத்தையும் படித்து தேர்ந்தவர்கள். பலர் முனைவர் பட்டம் பெற்றவர்கள். உரைநடையில் அந்த மொழியில் பல பரிசோதனைகளை செய்து வளர்க்க விரும்புகிறார்கள். ஆனால் சம்ஸ்கிருத பல்கலைக்கழகமும் மற்ற அமைப்புகளும் இந்துத்வா காரர்கள் வசம் உள்ளது.

அந்த பேராசிரியர்களோடு ஊடாடிய பொது மொழி உருப்படும் வாய்ப்பு இல்லை என்றே தொண்றுகிறது. இதற்கு பல உதாரணங்களை சொல்லலாம்.

எழுத்தாளரும் ,மொழிபெயர்ப்பாளருமான முத்து மீனாட்ச்சி அவர்கள் சம்ஸ்கிருதத்தில் மேடையில் பேசும் அளவுக்கு புலமை பெற்றவர். உரைநடையில்  "செம்மலர் "  பத்திரிகையில் வந்த முற்போக்கு கதைகளை சமஸ்கிருதத்தில் மொழி பெயர்த்தார்;அதனை பெங்களூருவிலிடுந்து வரும் "சம்பாஷணை சந்தேஷ் " என்ற சம்ஸ்கிருத பத்திரிகைக்கு அனுப்பினார். மிகவும் பாராட்டிய அவர்கள் பத்து கதை வாக்கில் பிரசுரித்தனர் .

இந்த கதைகளை தொகுப்பாக கொண்டுவர முனைந்த பொது, பல்கலைக்கழக  பேராசிரிய பெருந்தகைகளை  நாடினோம். சிலகதை களை  பிரசுரிக்க அவர்கள் மறுத்தார்கள்.

"சிறுவயதில் கர்ணனைப்பற்றி கேள்விப்பட்ட திரௌபதி சுயம்வர த்தில் கர்ணணன்  வெற்றி பெறுவதை விரும்புகிறாள். பின்னாளில் சொர்க்கவாசலில் காவலாளியிடம் இதனை சொன்ன திரௌபதியை  அவன் சொர்க்கத்தின் கதவுகளை மூடிவிட்டு அவளை நரகத்திற்கு தள்ளுகிறான். செம்மலரில் வந்து பரவலாக பேசப்பட்டகதை  இது.

அதே போல் 12 வயதே ஆன குந்தி முனிவருக்கு பணிவிடை செய்யப்போனவள் அவரால் கர்ப்பிணியான கதை . இதுசம்ஸ்கிருத பத்திரிகையிலும், வண்ணக்கதிரிலும் வந்தது இத்தனையும் எடுத்துவிட வேண்டும் என்றார்கள .  அதன் பிறகும் வெளியிட எந்த பதிப்பகமும் தயாராக இல்லை. 

இது பற்றி ஆந்த்ரா தோழர் வி.சந்திர  சேகர் அவர்களிடம் கலந்து கொண்டேன். மார்க்சிஸ்டுகடசியின் தினசரியான  "பிரஜாசக்தி "பத்திரிகையின் திருப்பதி பதிப்பின் நிர்வாகியாக உள்ளவர் அவர்.  நகலை வாங்கி பிரஜாசக்தி பதிப்பகத்தின்முலம் தொகுப்பை வெளியிட்டு உதவினார்.

இந்துத்வா வாதிகள் சம்ஸ்கிருதத்தின அருகில்  எவரும் குறிப்பாக முற்போக்காளர்கள்வருவதை விரும்புவதில்லை.மொழியில் அறிவார்ந்த விஷயங்கள் வருவதையும் அவர்கள் விரும்புவதில்லை . மொழி மக்களை நெருங்கவிடுவதில்லை.   

தமிழகத்தில் சம்ஸ்கிருதத்தை எதிர்ப்பவர்கள் செய்யும் தவறுகளில் முக்கியமானது ....

(தொடரும் )

0 comments: