Thursday, September 08, 2016


நம்பிக்கையும் ,

மூடநம்பிக்கையும் ...!!!

திருநெல்வேலி "டவுணில் " சோமயாஜுலு அய்யர் என்ற சுதந்திர போராட்ட தியாகி இருந்தார்.எம்.எல்.ஏ வாக இருந்தாரென்று நினைக்கிறேன் .

காந்திமதி அம்மன் சன்னதி தெருவில் வசித்து வந்தார் .தாழையூத்து சிமெண்டு தொழிலாளர்களுக்காக சங்கம் அமைத்து அவர்களுக்காக பல போராட்டங்களை நடத்தியவர். ராஜாஜியின் அணுக்கத்தொண்டர் .

அதேபோல காந்திமதி-நெல்லையப்பர் தேவஸ்தான ஊழியர்களுக்காக சங்கம்அமைத்தார்.கோவில்பட்டர்,மடப்பள்ளிஊழியர், பல சொல்லிக்காரர்கள் , மற்ற சிப்பந்திகள் என்று ஒன்று சேர்த்தார். சுதந்திர போராட்டக்காரர்கள் தலைமறைவு வாழ்க்கையின்  பொது இந்த கோவில் ஊழியர்கள் தான் இவர்களை அடைகாத்தார்கள்.

நான் வசித்த தெருவில் லட்சுமி நாராயணன் அண்ணன் காங்கிரஸ் சோஷலிஸ்டகடசிகாரன் , ஒருகையில் பகத் சிங் மறுகையில் ஜெ பி படங்களை பசசை  குத்தி இருப்பான்.தலைமறைவாக அவன் ஒருமாதம் இவர்கள்மத்தியில்இருந்தான்.என்னோடுபடித்தவன்சொக்கநாதன் .அவனுடைய தாத்தா சுப்பிரமணிய பட்டர் . காந்திமதி அம்மன் சன்னதி பட்டர்.

"அம்பி ! அஷ்டோத்ரம் சொல்லி அர்சசனை பண்ணுவேன். எல்லாரும்காந்திமதி அம்பாளை நேனைசுசுப்பா ! நான் பாரத தாயை நெனைசுப்பேன்.நம்பிக்கை-அவநம்பிக்கை எல்லாம் ஒண்ணுதாண்டா "

நான் பெரியவனான பொது அவரை பார்த்தேன் அப்போது சொன்னவை இவை .

ராமேஸ்வரம் புண்ணிய பூமி . வடநாட்டு யத்திரிக்கர்கள் அதிகமாக வருவார்கள். இவர்களின் தேவைகளை,சடங்குகளை செய்ய "பண்டா" க்கள் உண்டு. இவர்கள் மராட்டிய பிராமணர்கள். ராம்நாத் சுவாமி தேவஸ்தான ஊழியர்களும் இவர்களும் சேர்ந்து சங்கம் வைத்துள்ளார்கள். இந்த சங்கத்தின் தலைவராக இருந்தவர் தசபுத்ர பண்டா " . இவருடைய மகளை மணந்தவர் உபேந்திதானாத் ஜோஷி. எல்.ஐ.சி ஊழியர். மதுரை பீப்பிள்ஸ் தியேட்டரின் செயலாளராக இருந்தார். ஜோஷி மார்க்சிஸ்ட் கடசி உறுப்பினர்>இந்த சங்கத்தை வழிநடத்தியவர் ஆவுல் நயினா . மார்க்சிஸ்ட் கடசியின் தாலுகா செயலாளர். திருமண சம்மந்தத்தில் மறைந்த அப்துல் கலாமவர்களின் உறவினரும்கூட.

"நான் என்றும் மக்கள்   ஊழியனே " என்று அறிவித்தவர் ஏ.கே .கோபாலன். கம்யூனிஸ்ட் தலைவர்.பல வருடங்கள் தலைமறைவு வாழ்க்கை  நடத்தியவர். பல சந்தர்ப்பங்களில் மதுரை மினாடசி அம்மன் கோவிலில் தலைமறைவாக இருந்திருக்கிறார்என்று கேள்வி பட்டிருக்கிறேன். 

அணுகுண்டை காட்டி உலகை மிரட்டிவந்த அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கண்களில்  விரலை விட்டு ஆட்டியவர்கள் வீர வியட்நாம் போராளிகள். வட வியட்நாமிலிருந்து "வியட்  காங் " லாவோஸ் காடுகளில் சுரங்கப்பாதை அமைத்து தெற்கே வந்து அமெரிக்கர்களை தாக்கிவிட்டு செல்ர்வார்கள். இவர்களோடு தோள்  கொடுத்து துப்பாக்கி ஏந்தி போராடியவர்கள் தென் வியட்நாமை சேர்ந்த புத்த பிக்குகள்.

ஒரு முறை ஹோ சி மின் அவர்களிடம் நிருபர் இதுபற்றி கேட்ட பொது '"விடுதலை வேட்கைக்கு மத இன பாகு பாடு  தெரியாது "என்றார்.

ஆந்திராவில் கோவில்விழாக்களில் ,பங்கு பெரும் கலைஞர்கள்,பாடகர்கள், வாத்தியக்காரர்கள், சிப்பந்திகள் ஆகியோர் சங்கம் அமைத்துள்ளார்கள். திருப்பதியில் தலைமையகம் உள்ளது. கிட்டத்தட்ட 38000 உறுப்பினர்கள் உள்ளனர்.திருப்பதி தேவஸ்தானத்தோடு பேசசு  வார்த்தை நடத்தி சில சலுகைகளை சி.ஐ .டி யு சங்கம் வாங்கித்தந்துள்ளது.சங்கத்தின் தலைவர் யதுகிரி. மார்க்சிஸ்ட் கடசியின் மாவட்ட செயற்கு உறுப்பினர். 

 சென்ற ஆண்டு நடந்த  மாநாட்டிற்கு  தோழர் எஸ்.ஏ.பெருமாள் அவர்கள் சென்று வாழ்த்தி விட்டு  வந்தது நினைவிருக்கலாம்.   1 comments:

Unknown said...

பகுதி நேரத்தில் பணம் சம்பாதிப்பது எப்படி?

இன்று இருக்கும் கால கட்டத்தில் வீட்டில் இரண்டு பெரும் வேளைக்கு போனால் கூட குடும்ப செலவு சமாளிக்க முடியவில்லை .அப்படி இருக்கும் பொழுது மேற்கொண்டு எப்படி சம்பாதிப்பது என்று பலரும் தேடி அலைந்து கொண்டு தான் இருக்கிறார்கள்.

சரி வீட்டில் கம்ப்யூட்டர் இருக்கிறது இன்டர்நெட் இருக்கிறது ஆன்லைன் வேலை செய்து மாதம் ஒரு 2000 சம்பாதித்தால் கூட வாடகை கட்டிவிடலாம் என்று எண்ணி நிறைய பேர் ஆன்லைன் வேலை தேடி ஏமாந்து கடைசியாக இந்த ஆன்லைன் வேலை என்றாலே ஏமாற்று என்று நினைப்பவர்கள் மத்தியில் .எங்களிடம் உள்ள நண்பர்கள் எப்படி ஆன்லைன் மூலமாக பணம் எடுக்கிறார்கள் .சரியான வழிமுறைகள் இருந்தால் கண்டிப்பாக ஆன்லைன் மூலமாக பணம் சம்பாதிக்க முடியும் என்பதற்கு நாங்கள் ஒரு முன் உதாரணம் .இங்கு ஏமாறுவதற்கு வாய்ப்பு இல்லை ஏமாற்ற எங்களுக்கு மனதும் இல்லை .நானும் உங்களை போன்று ஆன்லைன் வேலைகளை தேடி தேடி அலைந்தவனில் நானும் ஒருவன் இப்பொழுது .நான் அனைவருக்கும் வேலை கொடுக்கும் அளவுக்குஉள்ளேன். நீங்கள் வேலை செய்தால் கண்டிப்பாக பணம் பெற முடியும் .நீங்கள் வேலை செய்யும் பணம் உங்களது ஆன்லைன் பேங்க் அக்கௌன்ட் இல் தான் உங்களது பணம் இருக்கும் .
அதனால் எந்த பயமும் தேவை இல்லை நீங்கள் உழைக்கும் பணம் எங்களுக்கு தேவை இல்லை .உங்கள் உழைப்பு வீண் போகாது. எங்களது நேரமும் நாங்கள் வீணாக விரும்பவில்லை .தேவைப்படுவோர் தொடர்பு கொள்ளலாம் பயன் பெறலாம்.
நன்றி வாழ்க வளர்க
மேலும் விவரங்களுக்கு

Our Office Address
Data In
No.28,Ullavan Complex,
Kulakarai Street,
Namakkal.
M.PraveenKumar MCA,
Managing Director.
Mobile : +91 9942673938
Email : mpraveenkumarjobsforall@gmail.com
Our Websites:
Datain
Mktyping