Sunday, September 25, 2016சம்ஸ்கிருதத்தை ,

பா.ஜ .க. வால் ,

நட்டமாக நிறுத்த முடியாது ...!!!--- 9

"கடவுள் இல்லை ! கடவுள் இல்லை ! கடவுள் இல்லவே இல்லை !!" என்று தெருவெங்கும் கூவியவர்கள் அந்த இல்லாத கடவுளுக்கு அருளிய மொழிதான் சம்ஸ்கிருதம். அது  தேவ பாஷையாம்.

சாதீயை ஒழிக்கப் புறப்பட்டவர்கள் மொழிக்கே  சாதியை கொடுத்தார்கள்.சம்ஸ்கிருதம் பிராமனபாஷை என்கிறார்கள்.

மதமாற்றத்திற்காக திருசபையினர் கூறிய பொய்யை ஏற்றுக்கொண்டவர்கள்   இவர்கள்.  இந்த" பகுத்தறிவாளர்க"ளுக்கு  இது தெரியும் .இருந்தும் தங்கள் அரசியல் லாபத்திற்காக  அதனை பயன்படுத்திக் கொண்டார்கள். 

கேரளத்தில் உள்ள ஆதிசங்கரர் சம்ஸ்கிருத பல்கலைக்கழகத்தில சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கருத்தரங்கம்நடந்தது.அந்த கேரளத்து "புத்திராட்சஸன் " மறைந்த இ.எம்.எஸ் அவர்களை சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தனர். "The  relevence of Adhi Sankara " என்பது தலைப்பு.

( 2010 ஆண்டு social scientist இதழில் முழு  பேசசும் வந்திருக்கிறது)

மன்னன் மூன்று மணிநேரம் பேசினார்   வேதத்திலிருந்தும் , உபநிஷத்திலிருந்தும் ,.ஸ்மிருதியிலிருந்தும் மேற்கோள்களை காட்டி மழையாக பொழிந்தார். பார்வை யாளர்கள் மெய்ம்மறந்து பிரமித்திருந்தனர்.

கூட்டம்முடிந்து அவர் மேடையிலிருந்து இறங்கும் பொது பார்வையாளர் ஒருவர் அவரை நெருங்கி " வேதம், உபநிஷத் ,என்று படித்த நீங்கள் எப்படி கம்யூனிஸ்ட்  ஆனிர்கள் ? "என்று கேட்டார்.மிகவும் நிதானமாக " "படித்ததால் தான் " என்றார்இ.எம்.எம். எஸ். 

ஆதி சங்கர சம்ஸ்கிருத பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பஞ்ச்கசம் , அங்கவஸ்திரம் அணிந்து கையில் தர்ப்பைப்புல் கொண்டு திதி சொல்ல   போகும் பாப்பான் அல்ல. ஜவகர் பல்கலையிலும், வெளிநாட்டு பல்கலையிலும் வரலாற்று பேராசிரியராக இருந்த கே.என். பணிக்கர்.  

சம்ஸ்கிருதம் பிராமணர்களுக்கு உரியது என்பது  பொய் . ஆப்பிரிக்க அரேபிய இந்தோஅய்ரோப்பிய மொழிகளைகலந்து கட்டி கொசைமொழியில்பேசிக்கொண்டிருந்ததை சீராக்கி செம்மைப்படுத்தி சம்ஸ்கிருதத்தை உருவாக்கினான் பாணினி என்பவன். பாகிஸ்தானில் உள்ள தக்க சீலம் பலகலை அருகில் உள்ள கிராமத்து காரன்அவன் . பிராம்மண மத்தை சேர்ந்தவனா என்பது கூட சந்தேகமாகவுள்ளது என்கிறார்கள் வரலாற்றாளர்கள்.கிட்டத்தட்ட இதேகாலத்தில் தான் தமிழு க்கு வரிவடிவமும், இலக்கணம் மம் கொடுத்தார் தொல்காப்பியர்.என்ற சமணர்(கி மு 3--5  ம்நூற்றாண்டு)  தமிழையும்,சமஸ்கிருதத்தையும் கொடுத்தவர்கள் பிராமணர்கள் இல்லை .

நான் முழுமையாக சம்ஸ்கிருதம் படித்தவன் இல்லை.எல்.ஐ.சி யில் பணியில் செந்தபிறகுஅந்தமொழியின் நுணுக்கங்களையும், செவ்வியல்  தன்மையையும் நண்பர் மூலம் கற்றுக்கொண்டேன் .அதனை கற்றுத்தந்தவர் பெயர் வீர கணபதி. அவர் பிராமண ர் அல்ல.  மதுரையில் உள்ள கல்லூரியில் சம்ஸ்கிருத பேராசிரியராக இருப்பவர்  பிராமணர் அல்ல.

சம்ஸ்கிருதத்தை எதிர்ப்பவர்கள் போலியான கருத்துக்களோடு அதனை வளர்ப்பதாகாச சொல்லும் இந்துத்வா வாதிகளின் அழிசசாட்டியமும் சேர்ந்து  நிற்கிறது.மொழித்திணிப்பு எதிர்க்கப்பட வேண்டியது தான்.

இந்தி திணிப்பை நாம் எதிர்த்தோம். அதே சமயம் "என் பேரனுக்கு சரளமாக ஆங்கிலம்,தமிழ் மட்டுமல்லாமல் "இந்தியும் " பேச முடியும் .அவனுக்கு அதனால் அமைசர் பதவி வேண்டும் "என்ற தாத்தாவை பார்த்தவர்கள்நாம் . 

"குறளோவியம் " என்ற நூல் சம்ஸ்கிருத மொழியில் மொழி பெயர்க்க பட்டதாக தளம் என்ற பத்திரிகையில் படித்தேன். தனித்தமிழ் இயக்க தலைவர் ஒருவரின் உறவினரான கண்ணன் என்பவர் அதன்முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார் ..  

( தொடரும்)

  


0 comments: