Saturday, September 17, 2016சம்ஸ்கிருதத்தை ,

 பா .ஜ .க  வால் ,

நட்டமாக நிறுத்த முடியாது.. !!!---4
மத்திய ஆசியாவில் வாழ்ந்து வந்தபழங்குடி மக்களில் சிலர் "இஸ்லாமியர் " ஆனர்கள் .உஸ்பெகிஸ்தானில் அவர்கள் ஆடசி   அமைத்திருந்தார்கள். அரசன் மறைந்ததும்,இளவரசன் சிறுவனை விரட்டிவிட்டு  பங்காளி ஆட்ச்சியை பிடித்தான். தப்பி வந்த 16 வயது இளவரசன் காபூல் சென்று குட்டி அரசை  நிறுவிக்கொண்டான். வீரமும் விவேகமும் கொண்ட இளவரசன் தெற்கேயும் ,கிழக்கேயும் நகர்ந்து தன ஆட்ச்சியை விரிவாக்கிக் கொண்டான். கிபி 1556 ம் ஆண்டு டெல்லியை கைப்பற்றி முதல் முகலாய சாம்ராஜ்ஜியத்தைநிறுவினான் அவன் பெயர் பாபர். 

ஒருகட்டத்தில் முகலாய சாம்ராஜ்ஜியம் காபூலில் இருந்து கிழக்கே இன்றய வங்கதேசம் வரை, காஷ்மீரிலிருந்து கிட்டத்தட்ட காவிரிக்கரை வர விரிந்திருந்தது.இந்த முகலாய சக்ரவர்த்திகளுடைய ஒரேநோக்கம் சாம்ராஜ்ஜிய விரிவாக்கம் மட்டுமே என்றிருந்தது. விரிந்த நிலப்பரப்பை தக்க வைத்துக் கொள்வதில் அவர்கள் கண்ணும் கருத்துமாக இருந்தார்கள் அதற்காக எந்தவித சமரசத்திற்கு தயாராக இருந்தார்கள்.

இஸ்லாத்தை பரப்புவதை அவர்கள் எந்த சந்தர்ப்பத்திலும்நோக்கமாகக் கொள்ளவில்லை.

பாபர்.ஹுமாயூன் ,அக்பர், ஜஹாங்கிர், ஷாஜகான்,ஓவுறாங்க சிப் , என்று அத்துணைபெரும்இந்தசகவழ்வு  முறையைஅனுசரித்தேவாழ்ந்தார்கள்.மதமாற்றத்தை ஏற்கவில்லை. இன்றய இஸ்லாமிய தீவிர வாதத்தை கணக்கில் கொண்டால் அன்றய முகலாய சக்கரவர்த்திகள் இந்த மண்ணை பெரும் இஸ்லாமிய நாடாக மாற்றி இருக்க முடியும்.அந்த அளவுக்கு அவர்களுக்கு ஆடசி,அதிகாரம் பலமாக இருந்தது.உலக இஸ்லாமிய மையமாக அரேபியாவாகஇல்லாமல் இந்தமண்ணாக செய்திருக்க முடியும். 

அவர்களுக்கு நிலமும் நாடும் மட்டுமே நோக்கமாக இருந்தது . இஸ்லாம் என்பது முக்கியமாக இருந்ததில்லை. 

அக்பர் ராஜபுத்திர பெண்ணை மணந்து கொண்டார்.அவருடைய மத சடங்குகளை செய்வதை தடுக்க விரும்பவில்லை.தன்னுடைய கோட்டைக்குள் அவருக்காக கிருஷ்ணன் கோவிலை கட்டித்தந்தார். கிருஷ்ணஜயந்தியைவிமரிசையாக கொண்டாட செய்தது மட்டுமல்லாமல்   அதில் தானும்  கலந்துகொண்டார்.

அக்பர் ஒரு கட்டத்தில் இஸ்லாத்தில் இருந்து விலகி வாழ்ந்தார். மற்ற மதத்தலைவர்களோடு விவாதித்து "தீன்- இலாஹி " என்ற புதிய மதத்தை உருவாக்கினார். கோவில்களுக்கு உதவி அளித்தார் சம்ஸ்கிருதத்தை ஆதரித்தார்.

ஆக்ரோஷமாக சமணத்தையும், பௌத்தத்தையும் விரட்டிய  பிராமணிய மதத்தினரும் கொஞ்சம் ஆசுவாசம் கொண்டனர். அவர்களும் அரசு நிர்வாகத்தில் பங்கெடுத்துக் கொண்டனர். இதற்கான மிகசிறந்த உதாரணம் தெற்கே நடந்தது.

ஆதி சங்கரர் உருவாக்கிய சிருங்கேரி மடத்திற்கும், ஹைதர் அலி,திப்பு சுல்தான் ஆகியரின் நெருக்கத்திற்கும் காரணம் இவைதான். 

இந்த மண்ணின் செழிப்பையும் ,அமைதியாயும் கண்ட  ஐரோப்பியர்கள் இங்கு வந்தார்கள். அக்பரின்  தர்பாருக்கு வியாபார  நோக்கோடு ஐரோப்பியர்கள் வந்த விபரம் உண்டு. ஜஹாங்கிர் காலத்தில் ஐரோப்பியர்கள் ஏற்றுமது இறக்குமதி செய்ய கிட்டங்கிகளை உருவாக்கிக் கொள்ள அனுமதி கிடைத்ததுமுண்டு .

ஆனால் ஐரோப்பவியர்களின் வருகைக்கும் முகம்மதியர்  வருகைக்கும் அடிப்படையிலொரு வித்தியாசம் இருந்தது.

ஐரோப்பியர்கள் வரும் பொது ,ஒருகையில் வர்த்தகத்தையும் ,மறுகையில் கல்வியையும், நெஞ்சில் கிறிஸ்துவத்தையும் கொண்டுவந்தார்கள் .

(தொடரும்)

  

 

..

0 comments: