Thursday, September 01, 2016


வைரம் பாய்ந்த எல்.ஐ.சி.யும்




நானும் ................!!!










1954ம் ஆண்டில் மதறாஸ் மாகாண மின்சார இலாகாவில் பணியில் செர்ந்தேன் ! அரசாங்கம் மிகுந்த பொருட் செலவில் அணைகளைக் கட்டி மின் உற்பத்திசெய்யும் .நெல்லை,தூத்துக்குடி,புதுக்கோட்டை  என்று பல்வேரு நகரங்களுக்கு டாடா கம்பெனி வினியோகம் செய்து லாபம் சம்பாதிக்கும். 1957ம் ஆண்டு மின் உற்பத்தி, வினியோகம் ஆகியவற்றை பொதுத்துறைக்கு கொண்டு வந்து "மின் வாரிய"மென்ற அமைப்பை உருவாக்கினார்கள். மேட்டுர் மின் உற்பத்தி நிலயத்திலிருந்து நான் மாற்றலாகி மதுரை வந்தேன்.ஐந்தே நாளில் அங்கிருந்து நெல்லை வண்ணாரப்பெட்டையில் உள்ள மின் வாரிய வசூல் பிரிவுக்கு மாற்றப்பட்டேன்.




நெல்லை டவுண் வடக்கு ரத வீதியில்   அப்போது "ஆயத்த அணீகல அங்காடி" என்ற (ready maden) கடை இருந்தது அதன் மாடியில் இருந்த ஆபீசை "பண்டா  பீஸ்" என்று அழைப்பார்கள் ! சிலர் அதன மரண பண்டாபீஸ் என்பார்கள் !




எனது நண்பர் ஒருவர் "எப்பா ! எல்.ஐ.சி ஆபீஸ்ல ஆள் எடுக்காங்களாம் . சம்பள ம் 130/- ரூ ! மனுபோடேண் டேய் "என்றார் " 


 "அது என்ன வே எல்.ஐ.சி ? " 


 "மரண பண்டாபீஸ் "


"5.-ரூ பாரம் வாங்கி போடுல "


5/-ரூ போட்டு கிளிக்கணுமா ?'




இரண்டு நாள்கழித்து மீண்டும் அவர் வந்தார் "எலே ! யாரும்வரலயாம் ! பாரம் விலையை 3/- ரூ ஆக்கிட்டானுக" என்றார்




போட்டென்.மதுர ஸ்டெஷன் பக்கத்துல் உள்ள மதுரைகல்லூரிஉயர்நி லைபள்ளீயில்.தேர்வு


 இது நடந்தது 1957 முன்பகுதியில இருக்கும்.




எனக்கு பயிற்சிக்காக சென்னை வரச்  சொல்லி தகவலும் பணி நியமன உத்திரவும் வந்தது. என் நன்பர்கள் ' சிறுக்கி பீள்ளை சாமள த்துக்கு ஒத்த நோட்டுக்குமேல சம்பளம் டேய் " நுகூவி கூவி மகிழ்ந்தார்கள்.ஆனால் சிக்கல்வேறு வகைல வந்தது/எங்க தெரு போஸ்ட்மான்  எங்க அண்ணன் கூட படிச்சவரு.ஆர்டர்ல kumaari.syamalam என்று முகவரி இருக்கு ."எய்! நீ ஆம்பள பொம்பள  முகவரி கடிதத்தை உங்கிட்ட தரமாட்டேன்னு பிடிவாதமா சொல்லிபுட்டாரு .




நோந்து நூலாகி பொன என்னை எங்க உறவினர் ஒத்தர் சமாதானபடுத்தினார். கீழரதவீது "சாமி"    தேர்  முக்குல் டாக்டர் சந்திர செகரன் நு இருந்தார் அவ்ர்ட கூட்டிபோய் சாண்றிதழ் வாங்கினார் . என் எடை,உயரம்,மச்சம் எல்லாத்தையும் எழுதி இந்தபையன் எனக்கு அறிமுகமானவண் .he is amale by sex from  birth  என்று எழுதி மெட்றாஸ்ல  உள்ள ஜோனல் ஆபிசர் பலராம் ராவ் என்பவருக்கு கடிதம் எழுதினார் .பத்து நாளுக்குபிறகு என்க்கு ஆர்டர் வந்தது பயிற்சி முடிந்து விட்டதால் நான் நேரடியாக ஹைதிராபாத் போய் பணியில் செருமாறு  இருந்தது .பின்னர் எனக்கு தனியாக பயிற்சி கொடுத்தார்கள்.




ஹைதிராபாத்தில் எல்.ஐ.சி யில்சேர்ந்தேன் .




பத்து நாளிருக்கும்.அங்குள்ள தோழிசங்க கூட்டம் நடப்பதாகவும்   நானும்  கலந்துகொள்ள வேண்டுமென்று சொன்னார்கள். அவ்ர்கள் தெலுங்கு.உருது,இந்தியில் பேசுவார்கள்.நமக்குபுரியாது .இருந்தாலும்பொய்தான்பார்ப்போமே என்று போனேன் !




கூட்டம் நடக்குமிடத்தில்  நிறைய ஊழியர்கள் நின்றுகொண்டும்  பேசிக்கொண்டும்       இருந்தார்கள்.கூட்டம் ஆரம்பிப்பதர்கான ஏற்பாடு தெரியவில்லை .




எங்கள் கிராமத்தில்  ஸ்ரீராமநவமி, கிருஷ்ண ஜெய்ந்தி,பொங்கல் விழா கொண்டாடுவோம்.  ஜமக்காளம் விரிப்பது, மேஜை விரிப்பை போடுவது குடிதண்ணீரை மேசையில்வப்பது என்று நான் தான்  செய்வேன். சங்க கூட்டம் நட்க்கும் இடத்தில் ஓரமாக இருந்த ஜமக்காளத்தை விரித்தேன். மேசையை போட்டு விரிப்புவிரித்து கிளாசில் தண்ணிர் உற்றிமேசையி ல்வத்தேன்.




மளமள வென் று எல்லோரும் அமர்ந்தார்கள் .கூட்டம் ஆரம்பமாகியது.




கூட்டம் முடிந்ததும் ஜமக்காள த்தை மடிக்க முற்பட்டேன். பெரியவர் ஒருவர் அவ்ர்தான் தலமை தாங்கினார் ." comrade 1 I am Kelkar ! fromwhich branch you are ?" என்றார்.


"I Madras .from come "என்று உளறினேன்.


let us meet tomorow at N.B dept. "என்று கை குலுக்கினார்.


சங்கம் என்னை அணைத்துக் கொண்டது அகில இந்தியஇ ன்ஸூரன்ஸ் ஊ ழியர் சங்கம் எனக்கு மனித நேயத்தைகற்றுத்தந்த்து.




மனித நேயத்தின் உட்சபட்ச வளர்ச்சியான "மார்க்சிசம் " என்னை ஆட்கொண்டது

0 comments: