Monday, September 19, 2016






சம்ஸ்கிருதத்தை ,

பா.ஜ .க.  வால், 

நட்டமாக  நிறுத்தமுடியாது...!!! ---5








முகலாய சாம்ராஜ்யத்தை பாபர் நிறுவிய பின் 1606 ம் ஆண்டு இத்தாலி நாட்டிலிருந்து ராபர்ட் டீ நொபிலி என்ற போதகர் மதுரையில்வந்து இறங்கினார். ஜெசூட் குழுமத்தை  சேர்ந்த இவர்கள் முழுமையாகாதங்களை ஏசு பிரானுக்கு ஒப்புக்கொடுத்தவர்கள். செழிப்பும்,அமைதியும்கொண்ட இந்தமண்ணில் கிறிஸ்தவத்தை பரப்ப வந்தவர்கள்.  

பிராம்மண மதம் தன்பிடியை வலிமையாக வைத்திருக்கத்தான் செய்தது.இருந்தாலும் விளிம்பு நிலை மக்களும் உதிரியாக இருந்தவர்களும் ஒடுக்கப்பட்டு  இருந்தார்கள்.கிறிஸ்தவ போதகர்களின் பிரசசாரம்  இந்த மக்களை பாதித்தது . ஆனால்  நொபிலி போன்றவர்களுக்கு இது திருப்தி அளிக்கவில்லை. சமூகத்தின் மேல்தட்டு மனிதர்களை இவர்களைக்காட்டி இழுக்க முடியவில்லை. விளிம்பு நிலை  மக்களும் முழுமையாக வரவில்லை.இன்னுமவர்கள் அய்யர் என்றும் கோவிலையும் சுற்றி வந்து கொண்டுதானே இருந்தார்கள் .நொபிலி இதுபற்றி தீவிரமாக ஆராய்ந்தார். 

"இனி போதகர்கள்  அய்யர் என்றுதான் அழைக்கவேண்டும்.சர்ச்சு என்பதற்கு பதிலாக கோவிலென்று சொல்ல வேண்டும். போதகர்கள் பஞ்சாகஸ்சம்  ,உத்தரீயம் அணியவேண்டும்.தலைமுடியை வெட்டி குடுமி வைக்கவேண்டும். காதில் கடுக்கணும்,தலையில் சரிகை  தலைப்பாகையும் அணியவேண்டும். சந்தனம் பூசிக்கொள்ள வேண்டும். மார்பில்  பூணுல் அணியவேண்டும் "என்று உத்திரவிட்டார்.

இதுநோபிலை எதிர்ப்பவர்களைஆத்திரமூட்டியது.திருசபையிலிருந்து ரோமில் உள்ள போப்  ஆண்டவருக்கு புகார் அனுப்பினார்கள் .  

"அந்தத்த நாட்டின் மரபினை கடைப்பிடிப்பது கிஸ்துவத்திற்கு எதிர்ப்பானது அல்ல என்று நொபிலி விளக்கம் அளித்தார் . பூணுல் போடுவதை குறிப்பிடும்பொது  "முப்புரி நூல் பிதா,சுதன்,பரிசுத்த ஆவியை குறிக்கிறது " என்று ஒரு போடு போட்டார்.

இந்த விளக்கத்தை அப்போது போப்பாக இருந்த கிரிகேரி xv ஏற்றுக்கொண்டார். 

(மதுரை பைபாஸ் சாலையில் உள்ள பாத்திமா கல்லூரி -ஆலமரம் பகுதியில் வைக்கப்பட்டிருக்கும் நொபிலி சிலை,காதில்கடுக்கான்,தலைப்பாகை,,பூணுல் ஆகியவற்றோடு இருப்பதாய் காணலாம்.உலகத்த தமிழ் மாநாட்ன்டிபொது இந்த சிலை வைக்கப்பட்டது)

ஆனாலும் மத மாற்றம் இவர்கள் நினைத்த படி நடக்க வில்லை .இதே சமயத்தில் நெல்லை மாவட்டத்தில் ராபர்ட் கால்வேடு ல் பாதிரியாரும் இதே போன்ற   பிரசினையில்  சிக்கி தவித்தார்.

கிறிஸ்துவ மதமாற்றத்தை தடுப்பது .பிராம்மணமதமும் சம்ஸ்கிருதமும் தான்.பிராம்மணர்களையும் சமஸ்கிருதத்தையும் தனிமைப்படுத்தினால் ,

(தொடரும்)


0 comments: