Friday, September 16, 2016







சமஸ்கிருதத்தை , 

பா.ஜ.க வால் ,

நட்டமாக நிறுத்த முடியாது !!!.....3




ஆதி சங்கரர் அவதாரமானது கி.பி 788ம் ஆண்டு என யூகிக்கப்படுகிறது. மிகசிறுவயதிலேயே சந்நியாசம் பூண்டவர் அவர். தனது 32 வைத்து வயதில் மறைந்தார்.

இந்த குறுகிய காலத்தில் அவர் ஆற்றிய பாணி மகத்தானது.

பிராம்மணிய மதம்மிகவும் சிதிலமடைந்திருந்த நேரம் அது.சமணம் பல்கிப்பறந்திருந்தது  மித முள்ள  பகுதிகளில் பௌத்தம் இருந்தது. வேதத்தையும், கடவுளையும் ஏற்காத இந்த இரண்டின் கிடுக்கிப்பிடியில் சிக்குண்ட பிராம்மணியம் தன செல்வாக்கான இழந்து பலமற்று     இருந்தது.

சமணமோ சிற்றுர்களில்கூட குழுக்களை அமைத்து செயல்பட்டது. ஏழு ஊர் கொண்டது ஒருநாடு. இந்தநாட்டை ஆள ஊர்களில் உள்ள குழுக்கள்  ஒருவரை நியமிக்கும். இந்த குழுக்களை கிராம சபை என்று அழைத்தார்கள். ஒரு  கொசசை வடிவ ஜனநாயகம் என்று இதனை சொல்லலாம். இதனை காரணமாக நிர்வாகம் மக்களுக்கு அருகில்  வந்தது..நிர்வாகம் மக்கள் மொழியில் பேச வேண்டியதாயிற்று. மொழியும்மக்களுக்கு மிக அருகில் வந்தது.

தமிழகத்தை  எடுத்துக்கொண்டால் இந்த சமண  பௌத்த ஆடசிகளின் பொதுதான் தமிழின் பொற்காலம் துவங்கியது என்று கூறலாம்கலையும்,இலக்கியமும் பறந்து விரிந்து வளர்ந்தது. அற்புதமான இலக்கியங்கள் தோன்றின .இதுவே சங்க இலக்கிய காலம் எனலாம். ஐம்பெரும் காப்பியங்களை படைத்தவர்கள் சமணர்களும்,பௌத்தர்களும் தான் .

எனோ ! தெரியவில்லை ! ஆதிசங்கரர் இதனை கணக்கில் கொள்ள தவறி விட்டார். 

மாறாக பிராம்மணிய மதத்தை மீட்டுருவாக்க நாடுமுழு வதும் சுற்றுப்பயணம் செய்தார்.சமண,பௌத்த மத தலைவர்களோடு விவாதித்தார். வாதிட்டார். 1200ஆண்டுகளுக்கு முன்பு இப்படி ஒரு பயணத்தை சாத்தியமாக்கினார்.

( 1980 ஆண்டு ஜி.வி அய்யர் "ஆதிசங்கரா " என்ற படம் எடுக்கும் பொது அவருடைய இணை இயக்குனராக இருந்த துறை பாரதி இந்த பயணத்தில் பட்ட சிரமத்தை நாட்கணக்கில் சொல்வார் )

அவர் கண்டு கொண்ட காரணங்களில் மிகவும் முக்கியமானது சமணமும்,பௌத்தமும் ஸ்தாபனப்படுத்தப்பட்ட மதங்கள். ஆங்காங்கே மடாலயங்களை நிறுவி அவற்றின் மூலம் சமயக்கல்வியும் ,சமயக்கட்டுப்பாடும் கொண்டவையாக இருந்தன.பிராம்மணிய மதம் அப்படி இல்லாமல் சிதறி இருந்தது என்பது தான்  

மதத்தை ஸ்தாபனப்படுத்தும் பணியை சங்கரர் துவக்கினார்.

தெற்க்கே சிருங்கேரி,கிழக்கே  பூரிஜெகந்நாதம், மேற்கே துவாரகை,வடக்கே பத்திரிநாத் என்று நான்கு மடாலயங்களை உருவாக்கினார்.சமய,சடங்கு வழிக்காட்டுத்தலாக அந்தந்த பகுதிகளில் இந்த மடாலயங்களுக்கு முழு  அதிகாரம் கொடுக்கப்பட்டது.

இந்த நான்கு மடங்களும் பரஸ்பரம் தொடர்பு கொள்ளவும், பிரார்த்தனை செய்யவும் சங்கரர் சம்ஸ்கிருதத்தை பயன்படுத்த ஆரம்பித்தார்.

தேசம் முழுவதும் சம்ஸ்கிருதம்கற்றுத்தர பாடசாலைகள் உருவாகின. தோத்திரங்கள் உருவாகின.புராண இதிகாச கதைகள் எழுதபட்டன.புரோகிதர்களும்,பூசாரிகளும் சம்ஸ்கிருத பண்டிதர்கள் ஆனார்கள்.

சம்ஸ்கிருத மொழி அறிவார்ந்தவர்கள் கையிலிருந்து மெள்ள இவர்கள் கைக்கு போயிற்று . மொழியின் அறிவியல் பார்வை (scientific temper ) .மறைய ஆரம்பித்தது.

சங்கரருக்கு பிறகு மீட்டுருவான பிராமணியம் மிகவும் ஆக்ரோஷமாக சமணத்தையும், பௌத்ததையும்  அழித்தொழிக்க ஆரம்பித்தது. 

ஆனாலும் இது நிலைக்கவில்லை !

காரணம் மேற்கே இருந்து மெலிதான "தென்றல்" இஸ்லாம்,கிறிஸ்துவம் என்று கிபி 1000 ஆண்டுகளில் வீச ஆரம்பித்ததுதான்


0 comments: