Tuesday, May 29, 2018





எளிய மக்களின் 

"ஈரலை " வறுத்து ,

தின்பவர்கள் ....!!!




ஆலையை மூடிவிட உத்திரவு வந்து விட்டது .கலெக்டர் சீல்  வைக்க தொலைகாட்டசியில் நாடகம் அரங்கேறியது .

பதிமூன்று பேர் இறந்தார்கள் என்று தொலைக்காட்சி யில் சொல்கிறார்கள் .1996லிருந்து புற்று நோயால் இறந்தவர்கள் கணக்கு இல்லை>அரைகுறையாக பிறந்த சிசு,கண் புற்றுநோயால்  நடமாடும் பிணங்கள் ,க ணக்கில் இல்லை .

ஆஸ்திரேலியாவில் சுரங்கம்.அங்கிருந்து கப்பலில் ஏற்றி தூத்துக்குடி வந்து உருக்கவேண்டும். என் அங்கேயே ஆஸ்திரேலியாவில் உருக்கலாமே ! அவன் அகர்வாலின் கோட்டையை நசுக்கி விடுவான்> அவனுக்கு அவன் மக்கள் நலம் முக்கியம். இளிச்சவாயன் வேண்டும் தேடினார்கள்> இந்தியா கிடைத்தது> முதலில் குஜராத். அப்புறம் கோவா ! அதன் பிறகு மஹாராஷ்டிரா > மராட்டியத்தில் ஆலை கட்டிய பின்பு அடித்து விராட்டப்பட்டான் .தமிழகத்தில் பிசாசு ஆடசி ! வரவேற்றது ! அதன் பிறகு வந்த பிடாரி விரிவாக்கம் செய்ய உதவியது.

இது இறுதி அல்ல !"பசி " த்த வக்கீல்கள் நாக்கை தொங்க போட்டுக்கொண்டு நிற்கிறார்கள். நீதிபதிகளும் தயார்.

எளியமக்களின் ஈரலை  வறுத்து திங்க போகிறார்கள் !!!



Friday, May 25, 2018





A .S .K . ஐயங்காரும் ,

"தீக்கதிர்"  கட்டிடமும்...!!!







60 ம்    ஆண்டுகளின் முற்பகுதி ! கம்யூனிஸ்ட்கட்ச்சியின் தமிழ் நாளேடான "ஜனசக்தி "பத்திரிகையை விரிவாக்க ஏற்பாடுகள்  நடந்தன . பத்திரிகைக்கான நிலம்,கட்டிடம்அச்சகம்  ஆகியவற்றை உருவாக்கி தமிழகத்தின் மையப்பகுதியான மதுரையில் இருந்து வெளியிடுவது எனமுடிவாகியது .இதற்காக ஜனசக்தி என்ற கம்பெனி ஆரம்பிக்கப்பட்டு பங்குகள் விற் கவும் முடிவு செய்யப்பட்டது.

அப்போதைய எல்.ஐ.சி ஊழியர்கள்  நிறைய பங்குகளை வாங்கினர்.ஒருபங்கு 250 ரூ . மறந்த தோழர் என்.கே பாலகிருஷ்ணன் அதிகமான பங்குகளை விற்றார். அப்போது தான் மதுரை பைபாஸ் சாலைக்கான காமராஜர் பாலம் கட்ட திட்டமிடப்பட்டிருந்தது. கொண்ணவாயன் சாலையின் பின்புறம் பைபாஸ் சாலையை ஒட்டி நிலம் வாங்கப்பட்டது.

காட்டிட வேலைகளும் ஆரம்பமாகி முதல் தளம் முடிவுறும் தருவாயில் சிக்கல் வந்தது .

கடசிக்குள் இருந்த தத்தவார்த்த விவாதம் பெரியதாகி கடசி வலது இடது என்று பிரிந்தது .மதுரை கடசி இடதுகளின் ஆதிக்கத்தில் வந்தது . ஜனசக்தி அறக்கட்டளையில் வலது சாரிகள் அதிகம்.அதனால் கட்டட வேலை நின்றது 

தத்துவார்த்த நிலையில் இடதுசாரிகளை ஆதரித்தாலும் பாரம்பரியமிக்க கம்யூனிஸ்ட கட்சி  பிளவு படுவதை பலர் விரும்பவில்லை. அவர்களில் ஒருவர்தான் எ.எஸ்,கே அய்யங்கார்.  அவரும் அறக்கட்டளையின் உறுப்பினராக இருந்தார்.

தமிழகத்தில் இடது  சாரிகள்  மார்க்சிஸ்ட் கடசியாக பரிமணித்தார்கள். வலது சாரிகள் பலவீனமடைந்தார்கள். நிதி பற்றாக்குறை காரணமாக ஜனசக்திக்காக வாங்கிய நிலம் ஆகியவற்றை விற்று சமாளிக்க அறக்கட்டளையை நாடினார்கள் .அங்கே இடது சாரிகள் அதனை கடுமையாக எதிர்த்தனர் . சமரசம் ஏற்பட்டது. 

அதன்படி ஏ.எஸ்கே அய்யங்காருக்கு முழு அதிகாரமும் கொடுக்கப்பட்டு அவர் முடிவுக்கு விடப்பட்டது.

மதுரையி அப்போது மில் அதிபரான கருமுத்து தியராஜன் செட்டியார் தமிழ் நாடு என்ற நாளிதழை நடத்தி வந்தார் .முதலமைச்சராக வந்த சி என் அண்ணாதுரை சென்னை மாகாணத்தை தமிழ்நாடு என்று ஆறிவித்தை காரணம் காட்டி செட்டியார் பத்திரியை மூடினார் .அதன் அச் சகம்  ஆகியவற்றை அப்போதைய அமைசர் மாதவன் வாங்கி தமிழ் முரசு என்ற பாத்திரிகையை நடத்தி வந்தார் /அவருக்கு ஜனசக்தியின் நிலம் தேவை பட்டது. அதேபோல் குமாரி மாவட்ட பத்திரிக்கை அதிபர் ஒருவரும் நல்லவிலைகொடுப்பதாக நிலத்தை கேட்டார்.

ஏழை எளிய மக்களுக்காகபத்திரிகைநடத்த தொழிலாளர்கள் சேமித்தாபணத்தில் வாங்கிய நிலத்தை முதலாளிங்களுக்கு கொடுக்கும்  நிலை  ஏற்பட்டதை நினைத்து அய்யங்கார் மனஉளைசலுக்கு ஆரானார்.

சென்னயில்கடசி உறுப்பினர் ஒருவர் திருமண  விழாவுக்கு சென்றிருந்தவர் அங்கு வந்திருந்த பி.ராமமூர்த்தி அவர்களிடம்  சொல்லி வருந்தியுள்ளார் . 

பி ஆர்    >செயல்பட்டார். சிலநணபர்களை சந்தித்து சில லட்சங்களை கடனாக பெற்று அய்யங்காரிடம் கொடுத்தார்.காதும்காதும் வைத்தது போல் ஜனசக்தி கட்டிடம் தீக்கதிரவசம் வந்தது.

மதுரை தேனி சாலையிலிருந்துபை பாஸிசாலையில் வைகை ஆற்றை பார்த்தால் வை கையின் மறுக்கரையில"தீக்கதிர்" கட்டிடமும் அதன் மீது பறக்கும் செங்கொடியும், பி.ஆர்-அய்யங்கார் ஆற்றிய பணியின் பெருமையைகாலம் காலத்திற்கும்  சொல்லிக்கொண்டேஇருக்கும்.






வட சென்னையின் ,


மற்றோருபக்கம் ... !!!




"வெள்ளையனே வெளியேறு " போராட்ட காலம் அது .காங்கிரஸ் சோஷலிஸ்ட்டா கடசிக்குள் கம்யூனிஸ்டுகளும் இணைந்து போராட்டங்கள் நடந்து கொண்டிருந்த காலம். அவர்களுக்கு தலைமை தாங்கியவர் ஜெயபிரகாஷ் நாராயணன்,எம்.ஆர்.மாசாணி போன்றவர்கள்.

பிரி ட்டிஷாரின் தகவல் தொடர்பு சாதன ங்களை குறிவைத்து தாக்கிக் கொண்டிருந்தார்கள் .சென்னையில் போராட்டக்காரர்களுக்கு தலைமறைவு இடமாக அடைக்கலம் கொடுத்தது  வட சென்னை . சுதந்திரவேடகை கொண்ட இளைஞர்கள் தங்கள் உயிரை திருணமாகாமத்தித்து போராடிவந்தார்கள் . துறைமுக தொழிலாளர்கள், ஆலை  தொழிலாளர்கள் மற்றும் அன்றாடம் கூலி  வாங்கும் தொழிலாளர்கள் நிறைந்த பகுதி அது.

அப்படி இருந்த குழுவினரில் ஒரு இளைஞருக்கு கடுமையான விஷக்காய்ச்சல் . கடுமையான நிலைமையிலவருக்கு  மருத்துவ வசதி செய்யவேண்டும் தோழர்கள் செய்வது அறியாமல் தவித்தார்கள்.

மறுநாள் காலை எட்டுமணி இருக்கும். தலையில் முண்டாசுக்கட்டி கொண்டு ஒருவன்சை க்கிளில் சென்றான், அவன் தொளி ல் விறகு வெட்டும் கோடாலி . "விறகு வாங்கலையோ விறகு "என்று கூவிக்கொண்டு சென்றான்> அவனுக்கு பின்னால் ஒரு மூன்று சக்கர சைக்கிளில் விறகுஇருக்க ஒருவன் ஒட்டிக்கொண்டு வந்தான் அந்த மூன்று சக்கர வண்டியில் வேறொரு இளை ஞன் அமர்ந்திருந்தான்>அவர்கள் ஒரு டாக்டர் வீட்டில் விறகை இறக்கினார்கள்   பின்னர் பணம் பெற்றுக்கொண்டு வெளியேறினார்கள் .

தோளில் கோடாலியை போட்டுக்கொண்டு முதலில் சென்றவர் எம் .ஆர்.வெங்கடராமன் .  மூன்று சக்கர சைக்கிளை ஓட்டிச்சென்றவர் பி.சுந்தரய்யா .விறகோடு வந்த  இளைஞர்  சி.சுப்பிரமணியம்-விஷ காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர். பின்னாளில் காமராஜர் அமைச்சரவையில் கல்வி அமைச்சர்,மற்றும் நிதி அமைச்சராக இருந்தவர் .காங்கிரஸ்கட்ச்சியின் தலைவராகவும் சி.சுப்பிரமணியம் பணியாற்றினார் 





வட சென்னையின் ,


மற்றோருபக்கம் ... !!!




"வெள்ளையனே வெளியேறு " போராட்ட காலம் அது .காங்கிரஸ் சோஷலிஸ்ட்டா கடசிக்குள் கம்யூனிஸ்டுகளும் இணைந்து போராட்டங்கள் நடந்து கொண்டிருந்த காலம். அவர்களுக்கு தலைமை தாங்கியவர் ஜெயபிரகாஷ் நாராயணன்,எம்.ஆர்.மாசாணி போன்றவர்கள்.

பிரி ட்டிஷாரின் தகவல் தொடர்பு சாதன ங்களை குறிவைத்து தாக்கிக் கொண்டிருந்தார்கள் .சென்னையில் போராட்டக்காரர்களுக்கு தலைமறைவு இடமாக அடைக்கலம் கொடுத்தது  வட சென்னை . சுதந்திரவேடகை கொண்ட இளைஞர்கள் தங்கள் உயிரை திருணமாகாமத்தித்து போராடிவந்தார்கள் . துறைமுக தொழிலாளர்கள், ஆலை  தொழிலாளர்கள் மற்றும் அன்றாடம் கூலி  வாங்கும் தொழிலாளர்கள் நிறைந்த பகுதி அது.

அப்படி இருந்த குழுவினரில் ஒரு இளைஞருக்கு கடுமையான விஷக்காய்ச்சல் . கடுமையான நிலைமையிலவருக்கு  மருத்துவ வசதி செய்யவேண்டும் தோழர்கள் செய்வது அறியாமல் தவித்தார்கள்.

மறுநாள் காலை எட்டுமணி இருக்கும். தலையில் முண்டாசுக்கட்டி கொண்டு ஒருவன்சை க்கிளில் சென்றான், அவன் தொளி ல் விறகு வெட்டும் கோடாலி . "விறகு வாங்கலையோ விறகு "என்று கூவிக்கொண்டு சென்றான்> அவனுக்கு பின்னால் ஒரு மூன்று சக்கர சைக்கிளில் விறகுஇருக்க ஒருவன் ஒட்டிக்கொண்டு வந்தான் அந்த மூன்று சக்கர வண்டியில் வேறொரு இளை ஞன் அமர்ந்திருந்தான்>அவர்கள் ஒரு டாக்டர் வீட்டில் விறகை இறக்கினார்கள்   பின்னர் பணம் பெற்றுக்கொண்டு வெளியேறினார்கள் .

தோளில் கோடாலியை போட்டுக்கொண்டு முதலில் சென்றவர் எம் .ஆர்.வெங்கடராமன் .  மூன்று சக்கர சைக்கிளை ஓட்டிச்சென்றவர் பி.சுந்தரய்யா .விறகோடு வந்த  இளைஞர்  சி.சுப்பிரமணியம்-விஷ காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர். பின்னாளில் காமராஜர் அமைச்சரவையில் கல்வி அமைச்சர்,மற்றும் நிதி அமைச்சராக இருந்தவர் .காங்கிரஸ்கட்ச்சியின் தலைவராகவும் சி.சுப்பிரமணியம் பணியாற்றினார் .

Tuesday, May 22, 2018





தூத்துக்குடி 

துப்பாக்கி சூடு !!!


பதினோரு பேர் இறந்துவிட்டார்கள் என்று  செய்தி. இல்லை 16 பேர் என்கிறது  செய்தி. இல்லை 9  தான் என்கிறது.அரசு. !

இறந்தவர்களில்- இல்லை-  சுட்டு கொல்லப்பட்டவர்களில் 7பேர் இந்த மக்களை திரட்டி  முன்கை எடுத்தவர்கள். மிகவும் உயர்ரக துப்பாக்கியால்  பதட்டம் இல்லாமல்  சுட்டிருக்கிறார்கள் . வீடியோவில் " ஓத்தனாவது சாகனும் " என்ற பின்னணி இசை காதில்  விழுகிறது .

மஞ்சள்   மேல் சட்டை அணிந்த  இந்த நபர்கள் சிறப்பு பயிற்சி பெற்றவர்கள்>  தூரத்தில் இருந்தும் குறி தவறாமல் சுடும்  பயிற்சி பெற்றவர்கள் இவர்கள் என்று செய்திகள் சொல்கின்றன .  

20 வருடமாவது இருக்கும்.  ஆலையின் அதிகாரி ஒருவரோடு ரயில் பயணத்தில் சந்திக்கநேர்ந்தது .பொதுவான பேச்சு முடிந்து பரஸ்பரம் பேசஆரம்பித்தோம். அப்போது ஆலை   நடந்துகொண்டிருந்தது. "என்ன  ! செய்ய சார் !  அம்பிட்டு பேருக்கும் காசு  கொடுத்தாச்சு ! சும்மானாட்டியும்  நடடத்தறானுக" "முக்கியத்தலைவருக்கும் கொடுத்திங்களா ?" ! 

"நேர்ல கொடுப்பார்களா ? "  

"பின்ன ?"

"உறவுக்காரர்முலமா போயிட்டு !"

"ஒரே ஒரு குரூப் தான் வங்கல !

"யாரு ?! "

"சி.ஐ.டி யு சங்கம் "

"இப்ப மக்கள் தங்கள் அனுபவத்துல போராடறாங்க !"

தூத்துக்குடி நகரமே அழிஞ்ச்சுடும் . அத சொல்லி ஜனங்களை திறட்டி ன 7 பேரை சிட்டுசுட்டு கொன்னுப்புட்டாங்க .

போராட்டம் தொடருமா ?

 தொடரும் ! தொடரவேண்டும்.!!!


Monday, May 21, 2018




கர்நாடகமும் ,

வட மாநில பா.ஜ.க,

ஆதரவு பத்திரிகைகளும் ...!!!



"எடியூரப்பாவின்  தோல்வி அது. பாஜக வின் தோல்வி  அல்ல  "என்று கட்டமைக்கும் முயற்சி நடக்கிறது .குமாரசாமியை எடியூரப்பா ஏமாற்றினார்> இப்போது குமாரசாமி பழிவாங்கி விட்டார் .என்று விளக்கம் கொடுக்கிறார்கள். 

"பா.ஜே.கவின் பெரியண்ணன்  மனோபாவம் தான் காரணம் "என்று சிலர் கூறுகிறார்கள் .தேர்தலுக்கு முன்பே கூட்டணி அமைத்திருக்க வேணர்டும் என்றும் அபிப்பிராயம் சொல்கிறார்கள்.

பாஜக கூட்டணி கலகலத்திருக்கிறது என்பது உண்மை. ஆந்திராவின் சந்திரபாபு நாயுடு ஒதுங்கி விட்டார் .சுத்தமான சுயநலக்கறார் என்றாலும் அவர் மோடியை பிரதமராக்க முயன்ற வர்களில் முக்கியமானவர் . தெலுங்கானா ராவ் பற்றி கேட்கவே வேண்டாம் . இப்போது மூன்றாவது அணிக்கு வக்காலத்து வாங்குகிறார்.

பாஜகவுக்கு நாடாளுமன்றத்தில் இரண்டு இடங்கள் இருந்தபோதும் அவர்களோடு நெருங்கிய உறவின கொண்டிருந்தார் பால்தாக்கறே. தவிர சிவ சேனைக்கும், பாஜவுக்கும் தத்துவார்த்தநிலையில் பங்கும் பாசமும் உண்டு. ஆனால் இன்று மகாராஷ்டிராவில் இருவரும் மோதிக்கொள்ளும் நிலை. 

மோதி நிதிஷ்குமாரை என்றும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை.

தமிழகத்தில் நிழலாட்டம் ஆடுகிறார்கள். அண்ணாதிமுகவின் எந்த அணியும் உருப்படியாக இல்லை தமிழக மக்களின் மனநிலை அதிமுக என்ற பெயரையே உச்சரிக்க மறுக்கிறது. அவர்களோடு சேர்ந்தால்  அண்ணல் காந்தியடிகள் நின்றாலும் டெபாசிட் கிடைக்காது என்பது உறுதி.

திமுகவில் பாஜக ஆதரவு ஸ்லீப்பர் செல்கள் கரடுமையாக வினையாற்றுகின்றன. மத்திய தஞ்சசையில்  சாராய ஆலை வைத்துள்ள முன்னாலமைசர் தலைமையில் காரியங்கள் நடப்பதாக தெரிகிறது .அதன் வெளிப்பாடுதான் எடியூரப்பாவுக்கு ஸ்டாலின் அனுப்பிய கடிதம் .

இந்த கடிதம் காங்கிரஸ் கடசிக்கு கொடுக்கப்பட்ட எச்சரிக்கை என்றும்கூறப்படுகிறது. 

திருமாவளவன் ராகுல்ஜி  பார்த்தது திமுகவை பொறுத்தவரை  பெரிசல்ல. அந்த கையோடு சீதாராம் எச்சூரியை பார்த்தது தான் சிக்கல்.  

அகிலஇந்திய அளவிலும்,மாநில அளவிலும் மாற்றங்கள் எதிர்பார்க்க காலம் கனிந்து வருகிறது


Wednesday, May 16, 2018




"அனுபவமே ஆண்டவன் "

கண்ணதாசன் வரிகள்....!!!









இந்திய தத்துவ ஞானத்தில் சமணமும் பௌத்தமும் தெய்வத்தை ஏற்கவில்லை . பின்னாளில் வர்த்தமானரையும்,புத்தனையுமே கடவுளாக்கி விட்டார்கள் .ஆனாலும் நமது முன்னோர்கள் இது பற்றி நிரம்ப விவாதித்துள்ளார்கள் . 

"புராணங்களும்,இதிகாசங்களும் அவர்களுக்கு மட்டும் சொந்தமா? நமக்கும் அதில் உரிமை உண்டு " என்கிறார், சீத்தாராம் எச்சூரி.

அறிவு என்றால் என்ன ?

இந்தக்கேள்வியை எழுப்பி விடைகாண முயன்றார்கள். இறுதியில்  அறிவு அனுபவத்தின் சாறு என்று கண்டார்கள் . அனுபவம் எப்படி உண்டாகிறது ?

அனுபவம் பெறவேண்டு மென்றால் மூன்று முக்கியமான( factor ) சங்கதிகள் வேண்டும். 1.அனுபவிப்பவன். (experiencer ) 2 அனுபவிக்கப்படுவது.(experienced ) முன்றாவது (experience )

கரும்பை பார்க்கிறோம். சுவைக்கிறோம். இனிப்பை உணர்கிறோம். இங்கு நாம்,கரும்பு, உணர்வு மூன்றும் சேர்கிறது .இப்படி நூற்றுக்கணக்கான முறை இதனையே பார்த்து,சுவைத்ததின் காரணமாக இந்த துண்டு கரும்பு இனிக்கும் என்ற உணர்வு ஏற்படுகிறது .இந்த உணர்வு தேங்கி அறிவாக மாறுகிறது  என்று கண்டார்கள்.

இதையே கீதையில் சொல்கிறார்கள்.க்ஷேத்திர,க்ஷேத்த்ரக்யா  யோகம் என்கிறார்கள் .

இங்கு இந்த உடம்பு , இது சுவைப்பது தான் அனுபவம் .இதனால் கிடைக்கும் அனுபவம் தான் அறிவு . இதில் உடம்பும் நான்தான் சுவைக்கப்படும் கரும்பும்   நான் தான் அதில்கிடைக்குமனுபவ அறிவும் நான் தான் என்று கூறுவதாக வரும் .

இதனையே கண்ணதாசன்  குறிப்பிடுகிறார். 





"அனுபவித்தேதான் அறிவது என்றால் 

ஆண்டவனே நீ எதற்கு என்றேன் ?



ஆண்டவன் சற்றே  அருகில் வந்து .

அந்த அனுபவமே  நான் தான் என்றான் !


கண்ணதாசன் அவர்களின் தத்துவார்த்த அறிவு பற்றி சொல்லிக் கொண்டே போகலாம் . 

இந்த பாடலை எனக்கு எடுத்துக்கொடுத்தவர் சுவாமி சுஷாந்தா அவர்களால் எனக்கு அறிமுகப்படுத்தப்பட்டவர் அவர் கண்ணதாசனின் அற்புதமான ரசிகர்.அவரிடம் கண்ணதாசன் பற்றி கேட்டால் அருவியாக கொட்டுமளவுக்கு கண்ணதாசனை அறிந்தவர். அவர்பெயர் சரவணன். 

சென்னையில் ராமவாரத்தில் வசிக்கிறார்.36/5,அன்னை சத்யா  மெயின் சாலை ராமாபுரம். M .07845488221


(இவர் நடமாடும் இஸ்திரி போடும் சலவை தொழிலாளி )

   

Friday, May 11, 2018


சாதி இல்லாத ,

காவி இல்லாத ,

அமைப்பை உருவாக்குவோம் ...!!!













நாற்பத்து மூன்று வருடங்களுக்கு முன் நடந்தது. மதுரை மேற்கு கோபுரத்தெருவில் உள்ள இந்து சாஸ்வத நிதி  அலுவலகத்தின் மாடியில் உள்ள அரங்கில் நடந்தது அந்த கூட்டம். சுமார் 50 அல்லது 60 பேர் அமரலாம். இன்சூரன்ஸ் ஊழியர் சங்க தலைவர் மறைந்த என்.கே.பாலகிருஷ்ணனும் நானும் சென்றிடுந்தோம். ஏற்கனவே அங்கு முக்கிய பிரமுகர்கள் வந்திருந்தனர்'

மிட்டாய் கடை மணி, படக்கடை  வேலாயுதம், எழுத்தாளர் கர்ணன் என்று அறிய முக்கியஸ்தர்களை வந்திருந்தனர்> ஓவியர் புத்தன் வந்த நினைவு .ஆள்கள் வர வர அரங்கம் நிறைந்து விட்டது. தோழர் என்.சங்கரய்யா வருவதற்காக காத்திருந்தோம். அவர் வந்தார். கூட்டம் ஆரம்பமாகியது. கூட்டத்தின் நோக்கம் ஆற்றி சங்கரய்யா அவர்கள்  சொன்னார்கள் .

எழுத்தாளர்களுக்கான அமைப்பு ஒன்றை உருவாக்குவது நோக்கம். வரும் ஜூலை மாதம் மதுரையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின பூர்வாங்க முதல்மாநாடு    நடத்தவேண்டும்.அதற்கான ஏற்பாடுகளை செய்ய  வரவேற்பு குழுவை உருவாக்குவது தான் இந்த கூட்டத்தின் நோக்கம். இது பற்றி கருத்துக்கள்வரவேற்கப்பட்டான. 

பெண்விடுதலை சங்கத்தின் நோக்கங்களில் ஒன்றாக இருக்கவேண்டும் என்கிறார் ஒருவர் .சாதி ஒழிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்று அபிப்பிராயம் வந்தது, மத சார்பினமை முக்கியம் என்றார்கள். மூட  நம்பிக்கை ஒழிப்பு,  சமதர்ம சமுதாயம் அமைக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்தன. 

இறுதியில் தோழர் சங்கரய்யா நிறை உரை ஆற்றினார்.

சங்கத்தின்நோக்கம் பற்றி நாம் சொன்ன  ஆலோசனைகளை மாநாட்டில் தேர்ந்தெடுக்கப்படும் பொறுப்பாளர்களும், சார்பாளர்களும் விவாதித்து மூடி வினை எடுப்பார்கள் . குறைந்த பட்சம் மனிதாபிமானம் கொன்டவர்களிலிருந்து புரட்ச்சிகர எண்ணம் கொண்டவர்களை வரை சங்கத்தில் உறுப்பினர்  ஆகலாம்> விரைவில் சங்கம் தன பத்து அம்சநோக்கம்கொண்ட அறிக்கையை வெளியிடும் அதனை ஏற்றுக்கொள்பவர்களோடு இணைந்து செயல்படுவோம். என்றார் . 

1975ம் ஆண்டு ஜூலை மாதம் 11,12 மத்தேதி முதல் மாநாட்டினை நடத்த முடிவாகி அதற்கான ஏற்பாடுகளை செய்ய ஓர்வரவேற்பு குழுவும் தேர்ந்தெடுக்கப்பட்டது.

அந்த செடி ஆலமரமாக வளர்ந்து வரும் ஜூன்மாத 22,23,24 மதேதிகளில் தன் 14வது  மாநாட்டை பாண்டி சேரியில் நடத்துகிறது. எழுத்தாளர்களும் கலைஞர்களும்  "சாதி இல்லாத,காவி இல்லாத " ஒரு சமூகத்தை உருவாக்கும் திட்டத்தோடு அங்கு கூடுகிறார்கள்.

அவர்கள் வெற்றி பெற வாழ்த்துவோம். 

  

Tuesday, May 08, 2018






எங்களுக்கும் ,

உரிமை உண்டு ...!!!





த.மு.எ .க சங்கத்தின் தஞ்சை மாவட்ட பொறுப்பாளர்களாக ஜீவ பாரதி,விஜயகுமார்,முருக சரவணன் ஆகியோர் வந்துள்ளனர் .ஜீவபாரதி மிகசிறந்த நாடக ஆசிரியர். அவர் எழுதிய "மாப்பிள்ளை கிடைக்கும் " நாடகம் தமிழகத்தையே பிரட்டிப்போட் ட ஒன்றாகும்.

80ம் ஆண்டுகளில் ரதயாத்திரை சமயம். இந்த வலது சாரிகள் போக்கை எதிர்க்க இந்தியா முழுவதும் உள்ள கலைஞர்கள்  நாடக வியலாளர்களை அழைத்து டெல்லியில் ஒரு கூட்டம் நடந்தது . எம்.எஸ்.சத்யு,ஹபிப் தன்விர் ,விவான் சுந்தரம் போன்ற ஆளுமைகளை வந்திருந்தனர் .

தமிழகத்திலிருந்து ஜீவபாரதி,மதுரை டாக்டர் செல்வராஜ்,பிரளயன்,அருணன், அடியேன் ஆகியோர் கலந்து கொண்டோம் . மத்திய குழுவின் சார்பில் தோழர் சீத்தாராம் எச்சூரி வகுப்புகளை எடுத்தார். 

"என்ன ஆளுமை ! என்ன ஞானம் ! சோ வின் "சம்பவாமி யுகே யுகே " நாடகத்திலிருந்து ஆரம்பித்தார் .இது பகவத் கீதையில் வரும் ஒரு சொல். பகவத் கீதை அவர்களுக்கு மட்டும் சொந்தமா?ராமாயணமும்,மகாபாரதமும் நம்முடைய இதிகாசங்களில்லையா? நாம் அதனை பயன்படுத்தக்கூடாதா ? இந்திய தத்துவ அறிவு எல்லோருக்கும் சொந்தம் அல்லவா ?" என்று அவர் பேசினார்>

2008ம் ஆண்டு சென்னையில் த.மு,எ .ச  மாநாடு யெச்சூரி கலந்து கொண்டார்.

பரிணாம வளர்சசியையும் தசாவதாரத்தையும் இணைத்து பேசினார்.

"நீரில் வாழ்வன,நீரிலும் நிலத்திலும் வாழ்வன.மிருகத்திலிருந்து மாறுபட்டபாதிமனிதனான காட்டுமிராண்டி, வேட்டை சமூகத்தின் வில், நாடோடி சமூகத்தின் மாடு மேய்த்தல்,  ஏர் பிடித்து உழுதல் "என்று தசாவதாரத்தை விளக்கினார் .  

அரங்கம் மெய்ம்மறந்து கேட்டுக்கொண்டிருந்தது..

இதிகாசங்களும் ,புராணங்களும்,இந்திய தத்துவ மரபுகளும் நமக்கும் சொந்தமானவை !

அவை எங்களுக்கும் உரிமை உள்ளவைதான் !!








கவிஞர் பச்சை நிலாவும் ,

"நெல்லு பயிரும் "




1984ம் ஆண்டு. சென்னையில் த.மு.எ .ச  நாடக விழாவை  நடத்தியது. காலம் சென்ற கோமல் சுவாமிநாதன் அவர்கள்  தான் முழு பொறுப்பையும் ஏற்று நடத்தி கொடுத்தார்கள் . மாவட்டக்குழுக்கள் போட்டிபோட்டுக்கொண்டு நாடகங்களை அரங்கேற்றின. 

மதுரை பீப்பிள்ஸ் தியேட்டர்காரர்கள் காஸ்யபன் எழுதிய " வண்ணங்கள் வேற்றுமைப்பட்டால் " என்ற நாடகத்தை அரங்கேற்றினார்கள் . இது  வெகுவாக பாராட்டப்பட்ட நாடகங்களில் ஒன்று.

நாடகம் முடிந்ததுமகோமலவர்கள் ஓடிவந்து என்னை கட்டி தழுவிக்கொண்டார்/ "verybold " verybold "என்று குறிப்பிட்டார்கள்.

தென் மாவட்டங்களில் உள்ள தென்னை மரத்தோட்ட தொழிலாளர்களின் பாட்டை விளக்கும் நாடகம். முத்த மரமேறிகள் இஸ்மாயில் பாய், பலவேசம் ஆகிய இருபாத்திரங்கள் முக்கியமானவையாகும். இருவரும் ஒருவர் சொல்வதை மற்றவர் கேட்கமாட்டார்கள். மதவெறி ஏற்பட்டிருந்தது.  அனுபவம்  அவர்களை மாற்றியது. தோட்ட முதலாளியான பிலிப்பு நாடாரும்,சுந்தரம் பிள்ளையும் இவர்கள் சண்டையில் எண்ணை  ஊற்றிவந்தார்கள்> அவர்களுக்கு தோட்ட தொழிலாளி பிரிந்து கிடப்பது தான் முக்கியம்.  

மர த்திலிருந்து வீழ்ந்த தொழிலாளிக்கு நியாயம் கேக்க அவர்கள் ஒன்றுபட்ட வேண்டியதாயிற்று. இது இஸ்மாயில் பாயையும் பலவேசத்தையும் ஒன்றுபடுத்தியது.வண்ணங்கள் வேற்றுமைப்பட்டால் என்ற இந்த நாடகம் தமிழகம் முழுவதும் போடப்பட்டு நல்ல  வரவேற்பை பெற்றது.

இதைவெற்றிக்கு முக்கிய காரணம் இதில் வரும் இரண்டு பாடல்களும், இருகாட்சியும் ஆகும்.கூலி விவசாயிகள் ஒய்வு நேரத்தில் பாடும் பாட்டு "முக்கா முழம் நெல்லு பயிறு என்ற பாடல் .தலைப்பக்கட்டு கோட்டை சாமி பாடுவார். கடசிக்கு எதுவாக தலைப்பாகை இல்லாமல் பாட மறுத்து விட்டார் மைக்  முன்னாள் தலைப்பா இல்லாமல் பாட மாட்டார் ."வெட்டி இல்லாமல் கோமணத்தோட பாடுறேன். தலைப்பா இல்லாமல் பாடமா ட்டேன் " என்பார். இந்த பாடலை எழுதியவர் தோழர் பச்சை நிலா. 

அதேபோல்  ரதயாத்திரை பற்றி கவிஞர் இன்குலாப் எழுதிய பாடல். "மனுசங்கடா நாங்க மனுசங்கடா " இந்த இரண்டு பாடலுக்காகவே இந்த நாடகத்தை பார்க்கவந்தவர்களும், இந்த காட்சி அமைப்புகளை புகழாதவர்களும் இல்லை என்றே சொல்லலாம் .

சமீபத்தில் விஜய் தொலைக்காட்ச்சியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி   நடந்தது. அதில் முக்காமுழம் பாட்டை செந்தில் என்பவர் பாடினர்> எதோ அவரே எழுதி பாடினதாக தோற்றம் கொடுத்தார். 

அதேபோல், "அம்மா உன்  சேலை " என்ற பாடலையும் பாடினர்> இயக்குனர் ஏகாதசி எழுதி திருவுடையான்  மெட்டமைத்தப்பாடல். ஊணும் உருகும் அந்த பாடலை எதோ இவர் எழுதி பாடியதாக தோற்றம் கொடுத்தார்கள் . 

கோட்டு கோபிநாத் வரை பாராட்டினார்கள் . அவர்களுக்கு தெரியாதா ? இந்த பாடலகளை எழுதியவர் மெட்ட அமைத்தவர்கள் யார் என்று ?

தெரியும் !

பின் ?!!



Thursday, May 03, 2018






தோழர் திருமாவளவனும்,

டில்லி பயணமும் .....!!!




விடுதலை சிறுத்தை கடசி தலைவர் திருமாவளவன் டெல்லி சென்றார் . ராகுல் காந்தியை சந்தித்தார். மார்க்சிஸ்ட்கட்ச்சியின் தலைவர் சீத்தாராம் எச்சூரியையும் சந்தித்தார்.

தமிழகத்தில் திராவிட குஞ்சுகள் கச் சேரியை  ஆரம்பித்தன.

எனக்கு பலவருடங்கள் முன்னால் நடந்த சம்பவம் ஒன்று நினைவு தட்டுகிறது.

கலைவாணர் அரங்கில் விழா. தோழர் அருணன் அவர்களின் புத்தக வெளியீட்டுவிழா. முதல்வர் கலைஞர்  வெளியிடுகிறார். அரங்கம் நிறைந்து இருக்கிறது> கலைஞர்  மேடை ஏறிவிட்டார் அப்போது அவரிடம் ஒரு சின்ன துண்டு காகிதம் கொடுக்கப்படுகிறது.மேடையில்பரபரப்பு.

அசர வேலை. முக்கியமான சந்திப்பு. அதனால் கலைஞர் முதலில் பேசவேண்டும் என்று முடிவாகிறது "நான் பெரியாரை சந்திக்காவிட்டால்  ஒரு கம்யூனிஸ்ட்டாக இருப்பேன் " என்று வழக்கம் போல பேசி புத்தகத்தை வெளியிட்டார் .

அவசரமாக வெளியேறினார் . பின்னர் அவர் சந்திக்க வேண்டியவர்களை சந்தித்தார் .

மறுநாள் காலை பத்திரிகைகளில் செய்தி  வந்தது.

பாரதிய ஜனதா காட்ச்சியோடு தி .மு.க உடன்பாடு என்று.

அவர் சந்தித்த அந்த முக்கியமான புள்ளி "துக்ளக் சோ "  !

Tuesday, May 01, 2018





டாக்டர்.அசோக் மித்ராவுக்கு 

அஞ்சலி......!!!









மார்க்சிஸ்ட்கட்ச்சியின் மாநிலக்குழு உறுப்பினரும் மேற்குவங்க நிதி அமைச்சராக இருந்தவரு ம் ஆன  டாக்டர் அசோக் மித்ரா இன்று காலை மரணமடைந்தார் என்ற செய்தி வந்துள்ளது.

1967 ம் ஆண்டுகளில் மத்திய அரசின் பொருளாதார ஆலோசகராக இருந்தவர் டாக்டர் மித்ரா. வங்கிகளை நாட்டுடமையாக்கம் யோசனையவ் முன்மொழிந்து அதனை நடைமுறைப்படுத்தியவர் அவர்.

மதுரையில் மாநில சுயஆட்ச்சி பற்றிய கருத்தரங்கில் கலந்து கொள்ள வந்திருந்தார். அவரை அ ழைத்து வரும் பொறுப்புப்பினை எனக்கும் தீக்கதிர் நாராயணன் அவர்களுக்கும் கொடுத்திருந்தார்கள் .நாங்கள் விருந்தினர் விடுதிக்கு சென்றோம். 

விமானம் வரதமதமானதால் விடுதியில் காத்திருந்தோம். மத்திய நேரம். பசி. நான் கொண்டுவந்திருந்த "பரோட்டாவை "  அந்த அறையில் அமர்ந்து நானும் நாராயணனும் உண்டோம். சிறிது நேரத்தில் ரிசப்ஷன் தாசில்தார் வந்தார்.  நாங்கள் தங்கி இருந்த அறைக்கு அருகில் ஒரே சத்தம். தாசில்தாரிடம் கேட்டேன். அமைசர் கிருஷ்ணசாமி வந்திருப்பதாக சொன்னார். "என்ன சத்தம் ?"

"அதை ஏன் கேக்கறீங்க சார். ! அமைச்சருக்காக விருது நகரிலிருந்து வான்கோழி பிரியாணி கொண்டு வந்திருக்கோம். இருபது பிளேட் ஆர்ட ர் செய்தொம்."  

"அவர் ஒருத்தர்தானே "

"பாக்க கடசிகாரங்க வருவங்கதானே "கூட்டம் கொஞ்ச்ம அதிகம் அதனால தன சத்தம் அதிகமா இருக்கு "

 எஸ்காட் போலீஸோட அமைச்சர் அசோக் மித்ரா வந்தார்.

அறைக்குள் சென்றார் . நாங்கள் வெளியில் நின்று கொண்டோம். சிலநிமிடங்களில் அறைக்கதவு திறந்தது. Hey ! why you stamd in the hot sun ? comeon !come inside " என்றார் அமைசர். தயங்கிய படியே உள்ளே சென்றோம்.

தசிலாதார் இருப்புக்கொள்ளாமல் தவித்தார்." சார் ! உணவுக்கு ஏற்பாடு பண்ணனும். கேட்டு சொல்லுங்க சார்" என்றார்  .

"they gave some thing in the flight ! that is enough ! " for the night you halfcup of  pepper rasam and two bananaas !"



தாசில் தார் என்னையே பார்த்தார் "அவங்க மிளகாப்பழம் சாப்பிட மாட்டாங்க சார்  "என்றேன்.

வங்காளிகள் நல்ல "நீர்மீன்" கேட்பார்கள் ! அதற்காக மேட்டூர் அணையிலிருந்து மீனுக்கு ஏற்பாடு பண்ணியிருந்தார் தாசில்தார்..பாவம்  அவர்முகத்தில் தான் எவ்வளவு ஏமாற்றம் !

உலகம் போற்றும் பொருளாதார நிபுணர்.எவ்வளவு எளிமையான வாழ்க்கை !

"லால் சலாம் ! டாக்டர் மித்ரா !!