Thursday, May 03, 2018






தோழர் திருமாவளவனும்,

டில்லி பயணமும் .....!!!




விடுதலை சிறுத்தை கடசி தலைவர் திருமாவளவன் டெல்லி சென்றார் . ராகுல் காந்தியை சந்தித்தார். மார்க்சிஸ்ட்கட்ச்சியின் தலைவர் சீத்தாராம் எச்சூரியையும் சந்தித்தார்.

தமிழகத்தில் திராவிட குஞ்சுகள் கச் சேரியை  ஆரம்பித்தன.

எனக்கு பலவருடங்கள் முன்னால் நடந்த சம்பவம் ஒன்று நினைவு தட்டுகிறது.

கலைவாணர் அரங்கில் விழா. தோழர் அருணன் அவர்களின் புத்தக வெளியீட்டுவிழா. முதல்வர் கலைஞர்  வெளியிடுகிறார். அரங்கம் நிறைந்து இருக்கிறது> கலைஞர்  மேடை ஏறிவிட்டார் அப்போது அவரிடம் ஒரு சின்ன துண்டு காகிதம் கொடுக்கப்படுகிறது.மேடையில்பரபரப்பு.

அசர வேலை. முக்கியமான சந்திப்பு. அதனால் கலைஞர் முதலில் பேசவேண்டும் என்று முடிவாகிறது "நான் பெரியாரை சந்திக்காவிட்டால்  ஒரு கம்யூனிஸ்ட்டாக இருப்பேன் " என்று வழக்கம் போல பேசி புத்தகத்தை வெளியிட்டார் .

அவசரமாக வெளியேறினார் . பின்னர் அவர் சந்திக்க வேண்டியவர்களை சந்தித்தார் .

மறுநாள் காலை பத்திரிகைகளில் செய்தி  வந்தது.

பாரதிய ஜனதா காட்ச்சியோடு தி .மு.க உடன்பாடு என்று.

அவர் சந்தித்த அந்த முக்கியமான புள்ளி "துக்ளக் சோ "  !

0 comments: