Tuesday, May 08, 2018






கவிஞர் பச்சை நிலாவும் ,

"நெல்லு பயிரும் "




1984ம் ஆண்டு. சென்னையில் த.மு.எ .ச  நாடக விழாவை  நடத்தியது. காலம் சென்ற கோமல் சுவாமிநாதன் அவர்கள்  தான் முழு பொறுப்பையும் ஏற்று நடத்தி கொடுத்தார்கள் . மாவட்டக்குழுக்கள் போட்டிபோட்டுக்கொண்டு நாடகங்களை அரங்கேற்றின. 

மதுரை பீப்பிள்ஸ் தியேட்டர்காரர்கள் காஸ்யபன் எழுதிய " வண்ணங்கள் வேற்றுமைப்பட்டால் " என்ற நாடகத்தை அரங்கேற்றினார்கள் . இது  வெகுவாக பாராட்டப்பட்ட நாடகங்களில் ஒன்று.

நாடகம் முடிந்ததுமகோமலவர்கள் ஓடிவந்து என்னை கட்டி தழுவிக்கொண்டார்/ "verybold " verybold "என்று குறிப்பிட்டார்கள்.

தென் மாவட்டங்களில் உள்ள தென்னை மரத்தோட்ட தொழிலாளர்களின் பாட்டை விளக்கும் நாடகம். முத்த மரமேறிகள் இஸ்மாயில் பாய், பலவேசம் ஆகிய இருபாத்திரங்கள் முக்கியமானவையாகும். இருவரும் ஒருவர் சொல்வதை மற்றவர் கேட்கமாட்டார்கள். மதவெறி ஏற்பட்டிருந்தது.  அனுபவம்  அவர்களை மாற்றியது. தோட்ட முதலாளியான பிலிப்பு நாடாரும்,சுந்தரம் பிள்ளையும் இவர்கள் சண்டையில் எண்ணை  ஊற்றிவந்தார்கள்> அவர்களுக்கு தோட்ட தொழிலாளி பிரிந்து கிடப்பது தான் முக்கியம்.  

மர த்திலிருந்து வீழ்ந்த தொழிலாளிக்கு நியாயம் கேக்க அவர்கள் ஒன்றுபட்ட வேண்டியதாயிற்று. இது இஸ்மாயில் பாயையும் பலவேசத்தையும் ஒன்றுபடுத்தியது.வண்ணங்கள் வேற்றுமைப்பட்டால் என்ற இந்த நாடகம் தமிழகம் முழுவதும் போடப்பட்டு நல்ல  வரவேற்பை பெற்றது.

இதைவெற்றிக்கு முக்கிய காரணம் இதில் வரும் இரண்டு பாடல்களும், இருகாட்சியும் ஆகும்.கூலி விவசாயிகள் ஒய்வு நேரத்தில் பாடும் பாட்டு "முக்கா முழம் நெல்லு பயிறு என்ற பாடல் .தலைப்பக்கட்டு கோட்டை சாமி பாடுவார். கடசிக்கு எதுவாக தலைப்பாகை இல்லாமல் பாட மறுத்து விட்டார் மைக்  முன்னாள் தலைப்பா இல்லாமல் பாட மாட்டார் ."வெட்டி இல்லாமல் கோமணத்தோட பாடுறேன். தலைப்பா இல்லாமல் பாடமா ட்டேன் " என்பார். இந்த பாடலை எழுதியவர் தோழர் பச்சை நிலா. 

அதேபோல்  ரதயாத்திரை பற்றி கவிஞர் இன்குலாப் எழுதிய பாடல். "மனுசங்கடா நாங்க மனுசங்கடா " இந்த இரண்டு பாடலுக்காகவே இந்த நாடகத்தை பார்க்கவந்தவர்களும், இந்த காட்சி அமைப்புகளை புகழாதவர்களும் இல்லை என்றே சொல்லலாம் .

சமீபத்தில் விஜய் தொலைக்காட்ச்சியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி   நடந்தது. அதில் முக்காமுழம் பாட்டை செந்தில் என்பவர் பாடினர்> எதோ அவரே எழுதி பாடினதாக தோற்றம் கொடுத்தார். 

அதேபோல், "அம்மா உன்  சேலை " என்ற பாடலையும் பாடினர்> இயக்குனர் ஏகாதசி எழுதி திருவுடையான்  மெட்டமைத்தப்பாடல். ஊணும் உருகும் அந்த பாடலை எதோ இவர் எழுதி பாடியதாக தோற்றம் கொடுத்தார்கள் . 

கோட்டு கோபிநாத் வரை பாராட்டினார்கள் . அவர்களுக்கு தெரியாதா ? இந்த பாடலகளை எழுதியவர் மெட்ட அமைத்தவர்கள் யார் என்று ?

தெரியும் !

பின் ?!!



0 comments: