skip to main |
skip to sidebar
கர்நாடகமும் ,
வட மாநில பா.ஜ.க,
ஆதரவு பத்திரிகைகளும் ...!!!
"எடியூரப்பாவின் தோல்வி அது. பாஜக வின் தோல்வி அல்ல "என்று கட்டமைக்கும் முயற்சி நடக்கிறது .குமாரசாமியை எடியூரப்பா ஏமாற்றினார்> இப்போது குமாரசாமி பழிவாங்கி விட்டார் .என்று விளக்கம் கொடுக்கிறார்கள்.
"பா.ஜே.கவின் பெரியண்ணன் மனோபாவம் தான் காரணம் "என்று சிலர் கூறுகிறார்கள் .தேர்தலுக்கு முன்பே கூட்டணி அமைத்திருக்க வேணர்டும் என்றும் அபிப்பிராயம் சொல்கிறார்கள்.
பாஜக கூட்டணி கலகலத்திருக்கிறது என்பது உண்மை. ஆந்திராவின் சந்திரபாபு நாயுடு ஒதுங்கி விட்டார் .சுத்தமான சுயநலக்கறார் என்றாலும் அவர் மோடியை பிரதமராக்க முயன்ற வர்களில் முக்கியமானவர் . தெலுங்கானா ராவ் பற்றி கேட்கவே வேண்டாம் . இப்போது மூன்றாவது அணிக்கு வக்காலத்து வாங்குகிறார்.
பாஜகவுக்கு நாடாளுமன்றத்தில் இரண்டு இடங்கள் இருந்தபோதும் அவர்களோடு நெருங்கிய உறவின கொண்டிருந்தார் பால்தாக்கறே. தவிர சிவ சேனைக்கும், பாஜவுக்கும் தத்துவார்த்தநிலையில் பங்கும் பாசமும் உண்டு. ஆனால் இன்று மகாராஷ்டிராவில் இருவரும் மோதிக்கொள்ளும் நிலை.
மோதி நிதிஷ்குமாரை என்றும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை.
தமிழகத்தில் நிழலாட்டம் ஆடுகிறார்கள். அண்ணாதிமுகவின் எந்த அணியும் உருப்படியாக இல்லை தமிழக மக்களின் மனநிலை அதிமுக என்ற பெயரையே உச்சரிக்க மறுக்கிறது. அவர்களோடு சேர்ந்தால் அண்ணல் காந்தியடிகள் நின்றாலும் டெபாசிட் கிடைக்காது என்பது உறுதி.
திமுகவில் பாஜக ஆதரவு ஸ்லீப்பர் செல்கள் கரடுமையாக வினையாற்றுகின்றன. மத்திய தஞ்சசையில் சாராய ஆலை வைத்துள்ள முன்னாலமைசர் தலைமையில் காரியங்கள் நடப்பதாக தெரிகிறது .அதன் வெளிப்பாடுதான் எடியூரப்பாவுக்கு ஸ்டாலின் அனுப்பிய கடிதம் .
இந்த கடிதம் காங்கிரஸ் கடசிக்கு கொடுக்கப்பட்ட எச்சரிக்கை என்றும்கூறப்படுகிறது.
திருமாவளவன் ராகுல்ஜி பார்த்தது திமுகவை பொறுத்தவரை பெரிசல்ல. அந்த கையோடு சீதாராம் எச்சூரியை பார்த்தது தான் சிக்கல்.
அகிலஇந்திய அளவிலும்,மாநில அளவிலும் மாற்றங்கள் எதிர்பார்க்க காலம் கனிந்து வருகிறது
0 comments:
Post a Comment