Friday, May 25, 2018





A .S .K . ஐயங்காரும் ,

"தீக்கதிர்"  கட்டிடமும்...!!!







60 ம்    ஆண்டுகளின் முற்பகுதி ! கம்யூனிஸ்ட்கட்ச்சியின் தமிழ் நாளேடான "ஜனசக்தி "பத்திரிகையை விரிவாக்க ஏற்பாடுகள்  நடந்தன . பத்திரிகைக்கான நிலம்,கட்டிடம்அச்சகம்  ஆகியவற்றை உருவாக்கி தமிழகத்தின் மையப்பகுதியான மதுரையில் இருந்து வெளியிடுவது எனமுடிவாகியது .இதற்காக ஜனசக்தி என்ற கம்பெனி ஆரம்பிக்கப்பட்டு பங்குகள் விற் கவும் முடிவு செய்யப்பட்டது.

அப்போதைய எல்.ஐ.சி ஊழியர்கள்  நிறைய பங்குகளை வாங்கினர்.ஒருபங்கு 250 ரூ . மறந்த தோழர் என்.கே பாலகிருஷ்ணன் அதிகமான பங்குகளை விற்றார். அப்போது தான் மதுரை பைபாஸ் சாலைக்கான காமராஜர் பாலம் கட்ட திட்டமிடப்பட்டிருந்தது. கொண்ணவாயன் சாலையின் பின்புறம் பைபாஸ் சாலையை ஒட்டி நிலம் வாங்கப்பட்டது.

காட்டிட வேலைகளும் ஆரம்பமாகி முதல் தளம் முடிவுறும் தருவாயில் சிக்கல் வந்தது .

கடசிக்குள் இருந்த தத்தவார்த்த விவாதம் பெரியதாகி கடசி வலது இடது என்று பிரிந்தது .மதுரை கடசி இடதுகளின் ஆதிக்கத்தில் வந்தது . ஜனசக்தி அறக்கட்டளையில் வலது சாரிகள் அதிகம்.அதனால் கட்டட வேலை நின்றது 

தத்துவார்த்த நிலையில் இடதுசாரிகளை ஆதரித்தாலும் பாரம்பரியமிக்க கம்யூனிஸ்ட கட்சி  பிளவு படுவதை பலர் விரும்பவில்லை. அவர்களில் ஒருவர்தான் எ.எஸ்,கே அய்யங்கார்.  அவரும் அறக்கட்டளையின் உறுப்பினராக இருந்தார்.

தமிழகத்தில் இடது  சாரிகள்  மார்க்சிஸ்ட் கடசியாக பரிமணித்தார்கள். வலது சாரிகள் பலவீனமடைந்தார்கள். நிதி பற்றாக்குறை காரணமாக ஜனசக்திக்காக வாங்கிய நிலம் ஆகியவற்றை விற்று சமாளிக்க அறக்கட்டளையை நாடினார்கள் .அங்கே இடது சாரிகள் அதனை கடுமையாக எதிர்த்தனர் . சமரசம் ஏற்பட்டது. 

அதன்படி ஏ.எஸ்கே அய்யங்காருக்கு முழு அதிகாரமும் கொடுக்கப்பட்டு அவர் முடிவுக்கு விடப்பட்டது.

மதுரையி அப்போது மில் அதிபரான கருமுத்து தியராஜன் செட்டியார் தமிழ் நாடு என்ற நாளிதழை நடத்தி வந்தார் .முதலமைச்சராக வந்த சி என் அண்ணாதுரை சென்னை மாகாணத்தை தமிழ்நாடு என்று ஆறிவித்தை காரணம் காட்டி செட்டியார் பத்திரியை மூடினார் .அதன் அச் சகம்  ஆகியவற்றை அப்போதைய அமைசர் மாதவன் வாங்கி தமிழ் முரசு என்ற பாத்திரிகையை நடத்தி வந்தார் /அவருக்கு ஜனசக்தியின் நிலம் தேவை பட்டது. அதேபோல் குமாரி மாவட்ட பத்திரிக்கை அதிபர் ஒருவரும் நல்லவிலைகொடுப்பதாக நிலத்தை கேட்டார்.

ஏழை எளிய மக்களுக்காகபத்திரிகைநடத்த தொழிலாளர்கள் சேமித்தாபணத்தில் வாங்கிய நிலத்தை முதலாளிங்களுக்கு கொடுக்கும்  நிலை  ஏற்பட்டதை நினைத்து அய்யங்கார் மனஉளைசலுக்கு ஆரானார்.

சென்னயில்கடசி உறுப்பினர் ஒருவர் திருமண  விழாவுக்கு சென்றிருந்தவர் அங்கு வந்திருந்த பி.ராமமூர்த்தி அவர்களிடம்  சொல்லி வருந்தியுள்ளார் . 

பி ஆர்    >செயல்பட்டார். சிலநணபர்களை சந்தித்து சில லட்சங்களை கடனாக பெற்று அய்யங்காரிடம் கொடுத்தார்.காதும்காதும் வைத்தது போல் ஜனசக்தி கட்டிடம் தீக்கதிரவசம் வந்தது.

மதுரை தேனி சாலையிலிருந்துபை பாஸிசாலையில் வைகை ஆற்றை பார்த்தால் வை கையின் மறுக்கரையில"தீக்கதிர்" கட்டிடமும் அதன் மீது பறக்கும் செங்கொடியும், பி.ஆர்-அய்யங்கார் ஆற்றிய பணியின் பெருமையைகாலம் காலத்திற்கும்  சொல்லிக்கொண்டேஇருக்கும்.


0 comments: