"அனுபவமே ஆண்டவன் "
கண்ணதாசன் வரிகள்....!!!
இந்திய தத்துவ ஞானத்தில் சமணமும் பௌத்தமும் தெய்வத்தை ஏற்கவில்லை . பின்னாளில் வர்த்தமானரையும்,புத்தனையுமே கடவுளாக்கி விட்டார்கள் .ஆனாலும் நமது முன்னோர்கள் இது பற்றி நிரம்ப விவாதித்துள்ளார்கள் .
"புராணங்களும்,இதிகாசங்களும் அவர்களுக்கு மட்டும் சொந்தமா? நமக்கும் அதில் உரிமை உண்டு " என்கிறார், சீத்தாராம் எச்சூரி.
அறிவு என்றால் என்ன ?
இந்தக்கேள்வியை எழுப்பி விடைகாண முயன்றார்கள். இறுதியில் அறிவு அனுபவத்தின் சாறு என்று கண்டார்கள் . அனுபவம் எப்படி உண்டாகிறது ?
அனுபவம் பெறவேண்டு மென்றால் மூன்று முக்கியமான( factor ) சங்கதிகள் வேண்டும். 1.அனுபவிப்பவன். (experiencer ) 2 அனுபவிக்கப்படுவது.(experienced ) முன்றாவது (experience )
கரும்பை பார்க்கிறோம். சுவைக்கிறோம். இனிப்பை உணர்கிறோம். இங்கு நாம்,கரும்பு, உணர்வு மூன்றும் சேர்கிறது .இப்படி நூற்றுக்கணக்கான முறை இதனையே பார்த்து,சுவைத்ததின் காரணமாக இந்த துண்டு கரும்பு இனிக்கும் என்ற உணர்வு ஏற்படுகிறது .இந்த உணர்வு தேங்கி அறிவாக மாறுகிறது என்று கண்டார்கள்.
இதையே கீதையில் சொல்கிறார்கள்.க்ஷேத்திர,க்ஷேத்த்ரக்யா யோகம் என்கிறார்கள் .
இங்கு இந்த உடம்பு , இது சுவைப்பது தான் அனுபவம் .இதனால் கிடைக்கும் அனுபவம் தான் அறிவு . இதில் உடம்பும் நான்தான் சுவைக்கப்படும் கரும்பும் நான் தான் அதில்கிடைக்குமனுபவ அறிவும் நான் தான் என்று கூறுவதாக வரும் .
இதனையே கண்ணதாசன் குறிப்பிடுகிறார்.
"அனுபவித்தேதான் அறிவது என்றால்
ஆண்டவனே நீ எதற்கு என்றேன் ?
ஆண்டவன் சற்றே அருகில் வந்து .
அந்த அனுபவமே நான் தான் என்றான் !
கண்ணதாசன் அவர்களின் தத்துவார்த்த அறிவு பற்றி சொல்லிக் கொண்டே போகலாம் .
இந்த பாடலை எனக்கு எடுத்துக்கொடுத்தவர் சுவாமி சுஷாந்தா அவர்களால் எனக்கு அறிமுகப்படுத்தப்பட்டவர் அவர் கண்ணதாசனின் அற்புதமான ரசிகர்.அவரிடம் கண்ணதாசன் பற்றி கேட்டால் அருவியாக கொட்டுமளவுக்கு கண்ணதாசனை அறிந்தவர். அவர்பெயர் சரவணன்.
சென்னையில் ராமவாரத்தில் வசிக்கிறார்.36/5,அன்னை சத்யா மெயின் சாலை ராமாபுரம். M .07845488221
(இவர் நடமாடும் இஸ்திரி போடும் சலவை தொழிலாளி )
0 comments:
Post a Comment