Tuesday, May 22, 2018





தூத்துக்குடி 

துப்பாக்கி சூடு !!!


பதினோரு பேர் இறந்துவிட்டார்கள் என்று  செய்தி. இல்லை 16 பேர் என்கிறது  செய்தி. இல்லை 9  தான் என்கிறது.அரசு. !

இறந்தவர்களில்- இல்லை-  சுட்டு கொல்லப்பட்டவர்களில் 7பேர் இந்த மக்களை திரட்டி  முன்கை எடுத்தவர்கள். மிகவும் உயர்ரக துப்பாக்கியால்  பதட்டம் இல்லாமல்  சுட்டிருக்கிறார்கள் . வீடியோவில் " ஓத்தனாவது சாகனும் " என்ற பின்னணி இசை காதில்  விழுகிறது .

மஞ்சள்   மேல் சட்டை அணிந்த  இந்த நபர்கள் சிறப்பு பயிற்சி பெற்றவர்கள்>  தூரத்தில் இருந்தும் குறி தவறாமல் சுடும்  பயிற்சி பெற்றவர்கள் இவர்கள் என்று செய்திகள் சொல்கின்றன .  

20 வருடமாவது இருக்கும்.  ஆலையின் அதிகாரி ஒருவரோடு ரயில் பயணத்தில் சந்திக்கநேர்ந்தது .பொதுவான பேச்சு முடிந்து பரஸ்பரம் பேசஆரம்பித்தோம். அப்போது ஆலை   நடந்துகொண்டிருந்தது. "என்ன  ! செய்ய சார் !  அம்பிட்டு பேருக்கும் காசு  கொடுத்தாச்சு ! சும்மானாட்டியும்  நடடத்தறானுக" "முக்கியத்தலைவருக்கும் கொடுத்திங்களா ?" ! 

"நேர்ல கொடுப்பார்களா ? "  

"பின்ன ?"

"உறவுக்காரர்முலமா போயிட்டு !"

"ஒரே ஒரு குரூப் தான் வங்கல !

"யாரு ?! "

"சி.ஐ.டி யு சங்கம் "

"இப்ப மக்கள் தங்கள் அனுபவத்துல போராடறாங்க !"

தூத்துக்குடி நகரமே அழிஞ்ச்சுடும் . அத சொல்லி ஜனங்களை திறட்டி ன 7 பேரை சிட்டுசுட்டு கொன்னுப்புட்டாங்க .

போராட்டம் தொடருமா ?

 தொடரும் ! தொடரவேண்டும்.!!!


0 comments: