Friday, May 11, 2018


சாதி இல்லாத ,

காவி இல்லாத ,

அமைப்பை உருவாக்குவோம் ...!!!













நாற்பத்து மூன்று வருடங்களுக்கு முன் நடந்தது. மதுரை மேற்கு கோபுரத்தெருவில் உள்ள இந்து சாஸ்வத நிதி  அலுவலகத்தின் மாடியில் உள்ள அரங்கில் நடந்தது அந்த கூட்டம். சுமார் 50 அல்லது 60 பேர் அமரலாம். இன்சூரன்ஸ் ஊழியர் சங்க தலைவர் மறைந்த என்.கே.பாலகிருஷ்ணனும் நானும் சென்றிடுந்தோம். ஏற்கனவே அங்கு முக்கிய பிரமுகர்கள் வந்திருந்தனர்'

மிட்டாய் கடை மணி, படக்கடை  வேலாயுதம், எழுத்தாளர் கர்ணன் என்று அறிய முக்கியஸ்தர்களை வந்திருந்தனர்> ஓவியர் புத்தன் வந்த நினைவு .ஆள்கள் வர வர அரங்கம் நிறைந்து விட்டது. தோழர் என்.சங்கரய்யா வருவதற்காக காத்திருந்தோம். அவர் வந்தார். கூட்டம் ஆரம்பமாகியது. கூட்டத்தின் நோக்கம் ஆற்றி சங்கரய்யா அவர்கள்  சொன்னார்கள் .

எழுத்தாளர்களுக்கான அமைப்பு ஒன்றை உருவாக்குவது நோக்கம். வரும் ஜூலை மாதம் மதுரையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின பூர்வாங்க முதல்மாநாடு    நடத்தவேண்டும்.அதற்கான ஏற்பாடுகளை செய்ய  வரவேற்பு குழுவை உருவாக்குவது தான் இந்த கூட்டத்தின் நோக்கம். இது பற்றி கருத்துக்கள்வரவேற்கப்பட்டான. 

பெண்விடுதலை சங்கத்தின் நோக்கங்களில் ஒன்றாக இருக்கவேண்டும் என்கிறார் ஒருவர் .சாதி ஒழிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்று அபிப்பிராயம் வந்தது, மத சார்பினமை முக்கியம் என்றார்கள். மூட  நம்பிக்கை ஒழிப்பு,  சமதர்ம சமுதாயம் அமைக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்தன. 

இறுதியில் தோழர் சங்கரய்யா நிறை உரை ஆற்றினார்.

சங்கத்தின்நோக்கம் பற்றி நாம் சொன்ன  ஆலோசனைகளை மாநாட்டில் தேர்ந்தெடுக்கப்படும் பொறுப்பாளர்களும், சார்பாளர்களும் விவாதித்து மூடி வினை எடுப்பார்கள் . குறைந்த பட்சம் மனிதாபிமானம் கொன்டவர்களிலிருந்து புரட்ச்சிகர எண்ணம் கொண்டவர்களை வரை சங்கத்தில் உறுப்பினர்  ஆகலாம்> விரைவில் சங்கம் தன பத்து அம்சநோக்கம்கொண்ட அறிக்கையை வெளியிடும் அதனை ஏற்றுக்கொள்பவர்களோடு இணைந்து செயல்படுவோம். என்றார் . 

1975ம் ஆண்டு ஜூலை மாதம் 11,12 மத்தேதி முதல் மாநாட்டினை நடத்த முடிவாகி அதற்கான ஏற்பாடுகளை செய்ய ஓர்வரவேற்பு குழுவும் தேர்ந்தெடுக்கப்பட்டது.

அந்த செடி ஆலமரமாக வளர்ந்து வரும் ஜூன்மாத 22,23,24 மதேதிகளில் தன் 14வது  மாநாட்டை பாண்டி சேரியில் நடத்துகிறது. எழுத்தாளர்களும் கலைஞர்களும்  "சாதி இல்லாத,காவி இல்லாத " ஒரு சமூகத்தை உருவாக்கும் திட்டத்தோடு அங்கு கூடுகிறார்கள்.

அவர்கள் வெற்றி பெற வாழ்த்துவோம். 

  

0 comments: