Friday, May 25, 2018





வட சென்னையின் ,


மற்றோருபக்கம் ... !!!




"வெள்ளையனே வெளியேறு " போராட்ட காலம் அது .காங்கிரஸ் சோஷலிஸ்ட்டா கடசிக்குள் கம்யூனிஸ்டுகளும் இணைந்து போராட்டங்கள் நடந்து கொண்டிருந்த காலம். அவர்களுக்கு தலைமை தாங்கியவர் ஜெயபிரகாஷ் நாராயணன்,எம்.ஆர்.மாசாணி போன்றவர்கள்.

பிரி ட்டிஷாரின் தகவல் தொடர்பு சாதன ங்களை குறிவைத்து தாக்கிக் கொண்டிருந்தார்கள் .சென்னையில் போராட்டக்காரர்களுக்கு தலைமறைவு இடமாக அடைக்கலம் கொடுத்தது  வட சென்னை . சுதந்திரவேடகை கொண்ட இளைஞர்கள் தங்கள் உயிரை திருணமாகாமத்தித்து போராடிவந்தார்கள் . துறைமுக தொழிலாளர்கள், ஆலை  தொழிலாளர்கள் மற்றும் அன்றாடம் கூலி  வாங்கும் தொழிலாளர்கள் நிறைந்த பகுதி அது.

அப்படி இருந்த குழுவினரில் ஒரு இளைஞருக்கு கடுமையான விஷக்காய்ச்சல் . கடுமையான நிலைமையிலவருக்கு  மருத்துவ வசதி செய்யவேண்டும் தோழர்கள் செய்வது அறியாமல் தவித்தார்கள்.

மறுநாள் காலை எட்டுமணி இருக்கும். தலையில் முண்டாசுக்கட்டி கொண்டு ஒருவன்சை க்கிளில் சென்றான், அவன் தொளி ல் விறகு வெட்டும் கோடாலி . "விறகு வாங்கலையோ விறகு "என்று கூவிக்கொண்டு சென்றான்> அவனுக்கு பின்னால் ஒரு மூன்று சக்கர சைக்கிளில் விறகுஇருக்க ஒருவன் ஒட்டிக்கொண்டு வந்தான் அந்த மூன்று சக்கர வண்டியில் வேறொரு இளை ஞன் அமர்ந்திருந்தான்>அவர்கள் ஒரு டாக்டர் வீட்டில் விறகை இறக்கினார்கள்   பின்னர் பணம் பெற்றுக்கொண்டு வெளியேறினார்கள் .

தோளில் கோடாலியை போட்டுக்கொண்டு முதலில் சென்றவர் எம் .ஆர்.வெங்கடராமன் .  மூன்று சக்கர சைக்கிளை ஓட்டிச்சென்றவர் பி.சுந்தரய்யா .விறகோடு வந்த  இளைஞர்  சி.சுப்பிரமணியம்-விஷ காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர். பின்னாளில் காமராஜர் அமைச்சரவையில் கல்வி அமைச்சர்,மற்றும் நிதி அமைச்சராக இருந்தவர் .காங்கிரஸ்கட்ச்சியின் தலைவராகவும் சி.சுப்பிரமணியம் பணியாற்றினார் 

0 comments: