Tuesday, May 08, 2018






எங்களுக்கும் ,

உரிமை உண்டு ...!!!





த.மு.எ .க சங்கத்தின் தஞ்சை மாவட்ட பொறுப்பாளர்களாக ஜீவ பாரதி,விஜயகுமார்,முருக சரவணன் ஆகியோர் வந்துள்ளனர் .ஜீவபாரதி மிகசிறந்த நாடக ஆசிரியர். அவர் எழுதிய "மாப்பிள்ளை கிடைக்கும் " நாடகம் தமிழகத்தையே பிரட்டிப்போட் ட ஒன்றாகும்.

80ம் ஆண்டுகளில் ரதயாத்திரை சமயம். இந்த வலது சாரிகள் போக்கை எதிர்க்க இந்தியா முழுவதும் உள்ள கலைஞர்கள்  நாடக வியலாளர்களை அழைத்து டெல்லியில் ஒரு கூட்டம் நடந்தது . எம்.எஸ்.சத்யு,ஹபிப் தன்விர் ,விவான் சுந்தரம் போன்ற ஆளுமைகளை வந்திருந்தனர் .

தமிழகத்திலிருந்து ஜீவபாரதி,மதுரை டாக்டர் செல்வராஜ்,பிரளயன்,அருணன், அடியேன் ஆகியோர் கலந்து கொண்டோம் . மத்திய குழுவின் சார்பில் தோழர் சீத்தாராம் எச்சூரி வகுப்புகளை எடுத்தார். 

"என்ன ஆளுமை ! என்ன ஞானம் ! சோ வின் "சம்பவாமி யுகே யுகே " நாடகத்திலிருந்து ஆரம்பித்தார் .இது பகவத் கீதையில் வரும் ஒரு சொல். பகவத் கீதை அவர்களுக்கு மட்டும் சொந்தமா?ராமாயணமும்,மகாபாரதமும் நம்முடைய இதிகாசங்களில்லையா? நாம் அதனை பயன்படுத்தக்கூடாதா ? இந்திய தத்துவ அறிவு எல்லோருக்கும் சொந்தம் அல்லவா ?" என்று அவர் பேசினார்>

2008ம் ஆண்டு சென்னையில் த.மு,எ .ச  மாநாடு யெச்சூரி கலந்து கொண்டார்.

பரிணாம வளர்சசியையும் தசாவதாரத்தையும் இணைத்து பேசினார்.

"நீரில் வாழ்வன,நீரிலும் நிலத்திலும் வாழ்வன.மிருகத்திலிருந்து மாறுபட்டபாதிமனிதனான காட்டுமிராண்டி, வேட்டை சமூகத்தின் வில், நாடோடி சமூகத்தின் மாடு மேய்த்தல்,  ஏர் பிடித்து உழுதல் "என்று தசாவதாரத்தை விளக்கினார் .  

அரங்கம் மெய்ம்மறந்து கேட்டுக்கொண்டிருந்தது..

இதிகாசங்களும் ,புராணங்களும்,இந்திய தத்துவ மரபுகளும் நமக்கும் சொந்தமானவை !

அவை எங்களுக்கும் உரிமை உள்ளவைதான் !!



0 comments: