சம்ஸ்கிருதத்தை,
பா.ஜ .கவால் ,
நட்டமாக நிறுத்தமுடியாது !!!........ 2.
காளிதாசனின் "சாகுந்தலமும் " ஹர்ஷனின் "ரத்னாவளியும் " சம்ஸ்கிருத மொழியின் இலக்கியத்தரத்தை உயர்த்தியது என்றால் மிகையில்லை.
அதேசமயம் இதிகாசங்களான வால்மீகியின் "ராமாயணமும்" வியாசனி ன் "மகாபாரதமும்" அந்த மொழிக்கு ஒரு சர்வதேச அந்தஸ்தை அளித்தன .
இதில் முக்கியமாக கவனிக்கப்படவேண்டியது,இந்த நான்கையும் பிராமணர்கள் (பாப்பான்கள் ) படைக்கவில்லை என்பதுதான்.
இலக்கியம் தவிர தத்துவார்த்த துறையிலும் சிறப்பாகவே செயல்பட்டது. தத்துவத்தையும் ,அறிவியலையும் வளர்த்தெடுப்பதில் முக்கிய பங்காற்றியது. "உயிர் என்றால் என்ன ? " ; "காலம் என்றால் என்ன ?" ; "மறு பிறவி உண்டா ?" ; என்று பல கேள்விகளை எழுப்பி அதற்கு அறிவியல் ரீதியான பதில்களை தர முனைந்தது.
நசிகேதன் என்ற சிறுவன் யமனை சந்தித்து இறந்தபின் என்ன ஆகிறது என்பதை கற்பனையாக சித்தரிக்கும் "கடோப நிஷத்" முக்கியமான ஒன்றாகும். சிகாகோவில் வசிக்கும் தமிழர் அப்பாதுரை என்பவர் கடோபநிஷத்தை "நசிகேத வெண்பா " என்று வெண்பாவாக பாடி முக நூலில் பதிந்திருந்தார் அதற்கு பின்னுட்டமாக கிட்டத்தட்ட 1000 பக்கங்கள்மட்டும் வந்திருந்தன. அமிரிக்காவில் உள்ள மனித வளமேமைப்பாட்டுத்துறை.நிர்வாகவியல்துறை ஆகியவையே இவற்றை பயன்படுத்துவதாக கேள்விப்படுகிறேன் .
அறிவியல் ரீதியாக சம்ஸ்கிருதம் அணுகுவதை சொல்ல உதாரணம் நிறைய உள்ளது. "உயிர் என்றால் என்ன? "என்ற கேள்வியை எழுப்பி பதில் எழுதி உள்ளார்கள் .
"எந்த ஒரு பொருள் தனக்கு வேண்டியதை தனக்கு வெளியிலிருந்து எடுத்துக்கொள்கிறதோ , எந்த ஒரு பொருள் தனக்கு வேண்டாததை தனக்குள் இருந்து வெளியேற்றுகிறதோ அந்த பொருள் உயிருள்ள பொருளாகும் ". (katabolism & metabolism )
இது அறிவியலின் பொதுவான கோட்பாடு நாம் பிராணவாயுவை வெளியிலிருந்து எடுக்கிறோம். கரியமில வாயுவை உள்ளிருந்து வெளியேற்றுகிறோம். நீரை அறுந்து கிறோம்.சிறு நீரை வெளியேற்றுகிறோம். உண்கிறோம். கழிவை வெளியேற்றுகிறோம்.இதில் எது நின்றாலும் உயிரற்ற நிலை தோன்றி விடும்.
நீத்தார் நினைவு நாளில் சடங்கு செய்ய வரும் பூசாரி சம்ஸ்கிருதத்தில் செய்யுளை சொல்கிறார்.
பிரணோவா அன்னம் : உணவுதான் உயிர்
தத் வ்ரதம் : அது வரையறுக்கப்பட்டது.இன்னும் இன்னுமென்று கேட்கும்
மனிதன் போதும் என்று சொல்வது உணவை மட்டுமே ,
அன்னம் ந நிந்தஏத்: உணவை வெறுக்காதே
அன்னமேவ பிராணன் : அன்னம் தவிர உ யிர் என்பது இல்லை .
பல நூற்ண்டுறாண்டு களுக்கு முன்பு சொன்ன இந்த வாக்கியத்திற்கு, நவீன அறிவியலுக்கும் அதிக வித்தியாசமிருப்பதாக தெரியவில்லை.
இதன் பொருள் plastic saurgery யும் rocketory யம் அறிந்தவர்கள் என்பதல்ல .
சம்ஸ்கிருத மொழியில் scientific temper இருந்தது என்பதை சுட்டிக் காட்டவே !
பின் அது தன அறிவியல் தனமையை இழந்தது ஏன் ?
யாரால் ?\
பின்னாளில் மிகவும் போற்றப்பட்ட "ஆதி சங்கர பகவத் பாதர் " அவர்களால் என்பது .......
(தொடரும் )
3 comments:
பெரியதொரு கருப்பொருளை எடுத்துக் கொண்டு, எளிமையாக விளக்குகிறீர்கள் காஷ்யபன்! இன்னும் சமூகவியல் பார்வையோடு அடுத்தடுத்த அத்தியாயங்களை எதிர்பார்க்கிறேன். ஒன்றறிவதுவே உற்றறிவதுவே என்று ஓரறிவுமுதல் தொடங்கி ஆறறிவதுவே அவற்றொடு மனனே என்று ஆறறிவுவரை வகைப்படுத்திய தொல்காப்பியன் போன்றவற்றையும் மேற்கோள்களாகச் சொன்னால் இன்னும் நன்றாக இருக்குமல்லவா? தொடருங்கள். நன்றி.
மாதம் 7 /- ரூ சம்பளம் கட்ட முடியாமல் இருந்தேன். சம்ஸ்கிருத்ம் படித்தால் பாதி சம்பளம் கட்டுவதாகபுதூர் ஜமீந்தார் சொன்னதின் பேரில் படித்தேன் அதுவும் இரண்டுவருடங்கள் தான். சம்ஸ்கிருதமும் படிக்காமல்,தமிழும் படிக்காமல் ... விடுமய்யா ! 1946 லிருந்து 52 வரை பாடத்திட்டங்களை மாற்றி மாற்றி ---ப்ரிட்டிஷ் ஆட்சி- இடைக்கால அரசு(அவினாசலிங்கம் செட்டியார் ) சுதந்திர இந்தியாவின் அரசு என்று படித்து முடித்ததே பெரும்பாடு ---காஸ்யபன்.
அருமை ஐயா...
தொடர்கிறேன்...
Post a Comment