Monday, September 05, 2016Dr .ராதாகிருஷ்ணன் செய்த 

தவறு ........!!!5-9-16 அன்று விநாயகர் சதுர்த்தி. அன்று முக நூலில் விநாயகரை விட ஆசிரியர்கள்தினம் பற்றிய நிலைத்தகவல்கள் அதிகம் இருந்ததும் நிறைவாக இருந்தது.மாணவர்களும்,ஆசிரியர்களும் பரஸ்பரம் வாழ்த்துக்களை    கூ றிக்கொண்டதும்,தங்கள் பால்ய கால நினைவுகளை  பகிர்ந்து கொண்டதும் சிறப்பாக இருக்கத்தான் செய்தது.

இதில் டைம்ஸ்.காம்  நந்தினி என்பவர் எழுதி இருந்தது வித்தியாசமாக இருந்தது.

ஆசிரியர் என்ற முறையில் ஜோதிபா புலே அவர்களின் பணி  வரலாற்றுசிறப்புள்ளது.அதனை குறிப்பிட்டிருந்த அவர் ஆசிரியர் தினமாக புலே அவர்களின் நினைவு கொண்டாடப்பட்டிருக்க வேண்டும் என்று கூறி இருந்தார் . சாவித்திரி புலே தான் இந்தியாவின் முதல் ஆசிரியை என்றார் . அத்தனையும் மிகசரியான ஒன்று .    

அதே சமயம் ஆசிரியர் தினமாக சர்வபள்ளி டாக்டர் ராதாகிருஷ்ணன் நினைவை போற்ற வேண்டுமா என்ற கேள்வியையும் எழுப்பி இருந்தார்.ராதாகிருஷ்ணன் மூன்று ஆண்டுகள் தான் ஆசிரியராக இருந்தார். தத்துவ பேராசிரியரான அவர் "இந்துத்வ " வாதிகளுக்கு தத்துவ அடித்தளத்தை கொடுத்தவர் என்ற எண்ணம் ஏற்படும் வகையிலும் கூறி இருந்தார்.

உண்மைதான். ஆசிரியராக ராதாகிருஷ்ணன் மூன்று ஆண்டுகள் இருந்தார். மிக இளம் வயதிலேயே அவரின் திறமையை கண்டு பேராசிரியறாக்கப்பட்டார். 1939 ஆண்டிலிருந்து 1948 ஆண்டுவரை துணை வேந்தராக பணியாற்றினார். 

40 ஆண்டுகளில் சுதந்திர போராட்டம் கோழுந்து  விட்டு எரிந்து கொண்டிருந்தது. வடநாட்டில்குறிப்பாக உத்தர பிரதேசம் ,பிஹார் பகுதிகளில் மாணவர்கள்,இளைஞர்கள் ,தொழிலாளர்கள் போராட்டத்தில் முன் நின்றனர்.பிரிட்டிஷ் அரசு அடக்கு முறையை ஏவி விட்டதுபனாரஸ் இந்து பல்கலைக்கழகம்  வடமாநில மாணவர்களின் கேந்திரமாக செயல் பட்டது.பிரிட்டிஷ் போலீசார் பல்கலைக்கழ க  விடுதியை சுற்றி வளைத்தார்கள். துணை வேந்தர் போலீசாரை உள்ளே விடவில்லை. அவர்களை பத்திரமாக கங்கை நதிமூலம் படகுகளில் கிராமங்களுக்கு அனுப்பி பாதுகாத்தார். என் நாட்டு விடுதலைக்காக போராடும் என் மாணவர்களை பிரிட்டிஷ் போலீசாரிடம் கொடுக்கமாட்டேன் என்று கர்ஜித்தார். அந்த துணை வேந்தர் பெயர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன். 

இந்திய தத்துவ பேராசிரியரான ராதாகிருஷ்ணன் வேதத்தை,கடவுளை மறுத்த சமண ,பௌத்த மத தத்துவங்களில் அதிக மான ஈடுபாடு கொண்டவர். பண்டைய தத்துவங்கள் மட்டுமல்லாமல் நவீன ஜெர்மனிய ஆசிரியர்களான ஹெகல்,மார்க்ஸ் ஆகியோர்களையும் புரிந்து கொண்டவர். அவரை நேரு சோவியத்தின் ஒன்றியத்திற்கு தூதுவராக அனுப்பினார். கிட்டத்தட்ட அதே சமயத்தில் இந்தியாவில் தெலுங்கானா விவசாயிகள் எழுசசி நடந்தது. பிரிட்டிஷ் ராணுவமும், பின்னர் இந்திய ராணுவமும் இதனை அடக்கி நொறுக்கியது. இந்திய கம்யூனிஸ்டு இயக்கத்திலித்து தத்துவார்த்த விவாதத்தை கிளப்பியது. சோவியத் ஒன்றியத்தின் ஆலோசனைகளை பெற இந்திய காம்யுனிஸ்ட் தலைவர்கள்விரும்பினர்.

எந்த தூதுரையும் சந்திக்காத ஸ்டாலின்  ராதாகிருஷ்ணனை மட்டும்  நான்கு முறை சந்தித்து, தர்க்கவியல்,மற்றும் பொருள்முதல் வாதம் பற்றி விவாதித்துள்ளார்.

இந்தியாவின் முதல்குடியரசு தலைவராக பாபு ராஜேந்திர பிரசாத் வந்தார். துணை தலைவராக ராதாகிருஷ்ணன் வந்தார் .அப்போது தான் சோமநாதர் ஆலயம் திறக்கப்பட்டது. அதில்  இந்துத்வாவாதியான ராஜேந்திர பிரசாத் கலந்து கொண்டார். ராதாகிருஷ்ணன் இதனை எதிர்த்தார். 

இந்திய சீன  எல்லை  பிரசினை சம்மந்தமாக 57 களில் சின்ன பிரதமர் சு- என்- லாய் இந்திய வந்த பொது அவருக்கு அரசு மரியாதைகொடுக்கக்கூடாது என்று ராஜேந்திர பிரசாத் உறுமினார் வேறு வழியின்றி நேரு ஏற்றுக்கொண்டார் .

ராஜ்ய சிக்கல் ஏற்படாமல் இருக்க ராதாகிருஷ்ணன் வெளிப்படையாக இல்லாமல் பிரசாத்தை எதிர்த்தார்.

1962 ம் ஆண்டு அவர் குடி   அரசுத்தலைவரானார். உலகப்புகழ்  பெற்ற மதுரை  மினாடசி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்நடந்தது.ராதாகிருஷ்ணன கலந்து கொள்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது. தேவை அற்ற சர்சசை வெடிக்காமல் இருக்க மவுனமாக இருந்த ராதாகிருஷ்ணன் கடைசி நிமிடத்தில் குமபாபிஷேகத்தில்கலந்து கொள்ளாமல் இருந்து விட்டார். 

இந்த கட்டுரை எழுத்துவது  ராதாகிருஷ்ணன் புகழ்  பாட அல்ல அவரும் விமரிசனத்திற்கு உட்பட்டவரே.

அவர் செய்த மிகப்பெரிய தவறு சர்வபள்ளி கிராமத்தில் பார்ப்பன குடும்பத்தில் பிறந்ததுதான் ..
1 comments:

சிவகுமாரன் said...

அரிய தகவல்களை , அறியாத தகவல்கள் நன்றி