Friday, December 29, 2017
Tuesday, December 19, 2017
சம்ஸ்கிருத இலக்கியத்தில்
"அனிதா " ...!!!
மருத்துவம் படிக்க விரும்பிய மாணவி அனிதா பற்றி எழுதாத ஏடுகள் இல்லை . வடநாட்டில் உள்ள பத்திரிகைகள் கூட அந்தமாணவியின் மரணம் பற்றி எழுதி இருந்தார்கள்.
சிறு வயதிலிருந்து மருத்துவராக வேண்டும் என்ற கனவை நன வாக்க அவர் எடுத்துக்கொண்ட முயற்சிகள் இமாலயம் போன்றது. ஏழ்மையும் குடும்பத்தின் இயலாமையும் அவரை கட்டிப்போட வில்லை . விடாத அவருடைய முயற்சி தேர்வில் அவர் பெற்ற மதிப்பெண்கள் கிட்டத்தட்ட மருத்துவ கல்லூரியின் கதவை தட்டும் நிலைக்கு கொண்டுவந்தன .
அவருடைய பாடுகளைப்பற்றி தமிழ் இலக்கியத்தில்பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பது தெரியவில்லை.
சம்ஸ்கிருத இலக்கியத்தில் அவர் கவிதையாக மலர்ந்திருக்கிறார்.
"அனிதாவா அநித்யாவா "
என்ற கவிதை கோழிக்கோட்டிலிருந்து வரும் "ரசனா " என்ற சம்ஸ்கிருத மொழி பத்திரிகையில் வந்துள்ளது.
கதைகளை கவிதை வடிவிலும், கவிதை களை கதை வடிவிலும் எழுதும் மரபு சம்ஸ்கிருத இலக்கியத்தில் உண்டு.
அனிதாவின் மரணத்திற்கு பிறகு அனிதாவின் தாயும் தந்தையும் படும்வலியையும் வேதனையையும் சித்தரிப்பதாக அந்த கவிதை உள்ளது.
"சில வினாடிகள் "வலி "த்ததும் நீ மரணித்துவிட்டாய் மகளே "நாங்கள் சாகும் வரை வலிக்குமே அம்மா "
என்ற கவிதை வரிகள் அந்த எளிய பெற்றோர்களின் வலி யை மட்டுமல்லாமல் இந்த சமூகத்தின் வலியையும் கூறுவதாக அமைந்துள்ளது.
மொழிபெயர்ப்பாளர் முத்து மீனாட்ச்சி இந்த சம்ஸ்கிருத கவிதையை எழுதியுள்ளார் .
.
Sunday, December 17, 2017
"கீழ் வெண்மணி "
50 ஆண்டுகளுக்கு முன் ...!!!
" எங்க ஆண்டை நல்லவர் . தினம் அடிக்கமாட்டார் "
பண்ணையில் வேலை செய்யும் ஒருவர் 60 து 70 ஆண்டுகளுக்கு முன் சொன்னது .
நித்தம் நித்தம் சவுக்கடியும் சாணிப்பாலும் குடித்த பண்ணையம் செய்ப்பவனுக்கு நிலைமை அப்படித்தானே புரியும். இந்தநிலைமையை மாற்ற யாராவது வரமாட்டார்களா என்று ஏங்கி இருந்த அவனுக்கு செங்கொடியை ஏந்திக்கொண்டு கன்னடத்து பாப்பான் பி.சீனிவாசராவ் என்ற உருவில் வந்து சேர்ந்தார்.
"உன்னை அடித்தால் திருப்பி அடி "
"வாடா என்றால் போடா என்று சொல் "
என்ற மந்திர வார்த்தையை அந்த அடிமைகளுக்கு சொல்லிக்கொடுத்து, அவர்களிடையே மின்சாரத்தை பாய்ச்சினார். செங்கொடி சங்கத்தின் பால் அந்த ஏழை எளிய அப்பாவி தொழிலாளிகள் சங்கமித்தனர் . சங்கத்தின் சார்பில் அவர்களுக்கு சிலம்பம் போனற வீர பயிற்சிகளை மணலி கந்த சாமி போன்றவர்கள் சொல்லிக்கொடுத்தனர்.
தஞ்சசையில் குறிப்பாக கீழைத்தஞ்சையில் செங்கொடி சங்கம் பலம் பொருந்தியதாக மாறியது.
இது பற்றி பத்திரிக்கை குறிப்பில் மைதிலி சிவராமன் " எங்கள் வீட்டின் புழக்கடையில் நின்று "சாமி ! சாமி !" கூப்பிடும் அடிமை இப்போதெல்லாம் காலில்சேருப்பும் மேலே சட்டையும் போட்டுக்கொண்டு எங்கல்வெட்டு வாசலில் நின்ற் ஐயா இன்று எங்கள் தலைவர் பேசுகிறார். நான் ஐந்து மணிக்கு போகணும் "என்கிறான் என்று ஆதங்கப்பட்டதை "விவரிக்கிறார் .
"அரைப்படி நெல் கொடுப்பது பெரிசில்லை ! இவர்கள் உத்திரவு போட்டு நாங்கள் கொடுப்பதா? " என்ற எஜமானத்திமிர் எதிர் வினா ஆற்றியது .
5000 லிருந்து 6000 ஏக்கர் நிலம் வைத்திருக்கும் குன்னியூர் சாம்பசிவ அய்யர்,வலிவலம் தேசிகர்,பூண்டி வாண்டையார்கபிஸ்தலம் மூப்பனார் ஆகியோர் காங்கிரஸ்காரர்கள். வடபாதி மங்களம்,நெடும்பலம் ஆகிய பகுதி பண்ணையார்கள் திராவிடஇயக்கத்தினர் , அரசியல் வேறுதான்ஆனால் எல்லோரும் நிலவடைமையாளர்கள் தானே. செங்கொடி இயக்கத்தின் வளர்சசி தங்கள் அஸ்திவாரத்தையே குலை த்துவிடும் என்று புரிந்து கொண்டனர். கூடிப்பேசி மாற்று யோசனையை கொண்டுவந்தனர் .
"நாங்கள் உங்கள் விரோதிகள் அல்ல.காலம் காலமாய் ஒரேதண்ணிய குடித்து வாழ்பவர்கள். நமக்குள் தகராறு எதற்கு. சமாதான மாக்வாழ்வோம் நாங்களும் நெல் தான் பயிரிடுகிறோம்.நீங்களும் நெல் தான் பயிரிடுகிறீர்கள். " நெல் பயிரிடுவோர் சங்கம் ஆரம்பிப்போம். நீங்களும் நாங்களுமாக சேர்ந்து எதுவானாலும் சங்கத்திற்குள் பேசி முடித்துகொள்வோம் ' என்று பசப்பினார்கள்.
அவர்கள் செங்கொடி சங்கத்தை பலவீனமாக்க இதனை சொன்னார்கள். பல கிராமங்களில் நெல் பயிரிடுவர் சங்கம் வளர்ந்தது .இதன் தலைவராக கோபாலகிருஷ்ண நாயுடு வந்தார் சாம தான பேத ,தண்டம் பயன்படுத்தப்பட்டது .வெண்மணியை சுற்றி உள்ள கிராமங்களில் நெல் பயிரிடும் சங்கம் வளர்ந்தது ஆனால் கீழ்வெண்மணியில் முடியவில்லை..
" சாட்டை அடிக்கும் சாணிப்பாலுக்கும் முடிவுகட்டியது செங்கொடி.! பண்ணையடிமை ஒழிந்தது செங்கொடியால் !செருப்பு போடும் உரிமையை தந்தது செங்கொடி.எங்கள் பெண்கள் முழங்கால் சேலையை கணுக்கால்வரை இறக்கியது செங்கொடி !உயிரே போனாலும் செங்கொடியை விட்டு உங்கள் மஞ்சள் கொடிய தொடமாட்டோம்!" என்றார்கள் வெண்மணிமக்கள்.
இது தான் வெண்மணியின் மையபுள்ளி யாக மாறியது. கோ பாலகிருஷ்ணா நாயுடுவின் சேல்வாக்கில்போலீஸார் செங்கொடி சங்கத்தை சேர்ந்த சின்னையன் மற்றுமொருவரை பிடித்து பண்ணையாரிடம் ஒப்படைத்தனர்.இதனை அறிந்த மக்களொன்று திரண்டு பண்ணையார் வீட்டை முற்றுகை இட்டு அவர்களை விடுவித்தனர்.
அன்று இரவு நாயுடு நுறு அடியாட்கள் ஆயுதங்கள் துப்பாக்கிகைகளோடு அந்த சின்னஞ்சிறுகிராமத்தைமுற்றுகை இட்டான் .
அங்குள்ள குடிசைகள் பண்ணைகளுக்கு சொந்தம். ஆகையால் பெண்களும் குழந்தைகளும் மற்றவர்களும் ராமையாவின் சொந்த குடிசையில் புகுந்து தப்பிக்க முற்பட்டனர் .
ராமையாவின் குடிசைக்கு தீ வைத்தான்நாயுடு .
மருத்துவ மனையில் இருந்த இ .வெ .ரா வுக்கு சொல்லப்பட்டது .
"இந்தியர்கள் ஆடசியில் மனுநீதிதான் நடக்கும்" என்று பெரியார் கட்டுரை எழுதினார்.
Wednesday, December 13, 2017
சாதி காதலுக்கு தடையா ?
அல்லது
காதல் சாதிக்கு தடையா ?
காதல் ஊற்றெடுக்கும் பொது அது சாதியை உடைத்தெறிகிறது . சாதியை காதல் நிச்சயமாக மறுதளிக்கிறது . ஆகவே காதல் சாதியை தடை செய்கிறது என்பது தான் உண்மை .
இந்த உண்மையை புரிந்து கொண்டு சாதியை தக்கவைக்க முயல்பவர்கள் கொடூரமான தாக்குதலில் ஈடுபடுகிறார்கள்.
உண்மையில் எனக்கு தனிப்பட்ட முறையில் "காதல் " என்பதைப்பற்றி பெரியாரின் சீடனாகவே இருக்க விரும்புகிறேன். மகிழ்ச்ச்சி ,துக்கம், வலி போன்ற உணர்வு தான் காதலும். தேவை இல்லாமல் புனிதமான முக்கியத்துவம் கொடுத்து அதனை வாழ்க்கையின் மிக முக்கியமான ஒன்றாக கருத்தும்படி செய்து விட்டோம்.இதற்க்கு காரணம் கலை இலக்கியக்காரார்கள் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து .
அதேசமயம் சில நன்மைகளும் அதனால் ஏற்படுகிறது என்றால் அது ஒரு மூலையில் இருந்துவிட்டு போகட்டும் .
உடுமலை சங்கர் ஆணவக்கொலை வழக்கின் தீர்ப்பு வந்த பின் விளைவாக விவாதங்கள் நடை பெறுகின்றன .
கவுசல்யா என்ற அந்த சின்னஞ்சிறு பெண் கண்ணெதிரே சங்கர் வெட்டி கொலைசெய்ப்பட்டதை பார்த்தவர். அந்த அதிர்சசியில் இருந்து அவரை மீட்டெடுத்து அவரை ஒரு தீரமிக்க பெண்ணாக ஆக்கியவர்கள் வணக்கத்திற்கு உரியவர்கள். இத்தகைய கொடூரமான நிகழ்வுகள் நடை பெறாமல் தடுக்க இந்த வழக்கில் வெற்றி பெறவேண்டும் என்ற உணர்வை அவருக்கு ஊட்டியவர்கள் பாராட்டப்படவேண்டியவர்கள்.
எந்த அளவுக்கு அந்த பெண் தெளிவூட்டப்பட்டிருந்தால் விடுதலை செய்யப்பட்ட தன தாயையும்,மாமனையும் மேல் முறையிட்டு தண்டனை வாங்கித்தருவேன் என்று அறிவிக்க முடியும் .
கவுசல்யாவுக்கு அறிவார்ந்த சிந்தனையை ஊட்டிய மாதர் சங்க தோழர்களின் பாடுகள் இதில் மிகவும் முக்கியமானதாகவே எனக்கு படுகிறது.
அவர்களுக்கு என் வாழ்த்துக்கள் !!!
Friday, December 08, 2017
ஜலகண்ட புரம் .ர.சுந்தரெசன
1952 ம் ஆண்டு வாக்கில் குமுதம் பத்திரிகை மாதம் ஒன்றாகவந்து கொண்டிருந்தது. அப்பொதே ஜலகண்டபுரம் ர.சுந்தரெசன் குமுதத்தில் எழுதி வந்தார் .பின்னர் குமுதம் மாதம் இரண்டாக வந்தது> அதன் பின்னர் மாதம் மூன்றாக வந்தது .இறுதிய்ல் வாரம் தோரும் வியாழக்கிழமை வர ஆரம்பித்தது குமுதத்தை பிரும்மாண்டமாக வளத்தவர்கள் எஸ்.ஏ.பி.அண்ணாமலை ,ரா.கி.ரங்கராஜன்.,ஜ.ரா சுந்தரேசன் ஆகியோர் ஆகும். மூவரும் எழுதி வந்த "அரசு" பதில்கள் பிரபலம் .
வேசி ஒருவளுக்கு மறுவாழ்வு கொடுக்கிறான் இளைஞன் ஒருவன் அதனால் அவன் படும்துன்பத்தையும்,அவமானத்தையும் சகிக்காமல் அந்தபெண் அவனை விட்டு தலமறைவாகி விடுகிறாள். .அந்த இளைஞன் ,அந்த பெண் ஆகியோர் பார்வையில் இந்த கதைய சுந்தரெசன் 50 களில் எழுதி இருந்தார் .மிகவும் அதிகமாக பாராட்டப்பட்ட ,விமரிசிகப்பட்ட கதையாகும் இது.
மிகவும் அழுத்த்மான கதைகளை எழுதியவர் "அப்புசாமி -சீதாபாட்டீ " கதையையும் எழுதியது அவ்ருடைய craft manship எவ்வளவு உயர்ந்த தரத்தில் இருந்தது என்பத்ற்கான சான்றாகும் .
ஆரம்ப காலத்தில் குமுதம் பத்திரிகையை எக்மோர் ரயில் நிலயத்தில் பார்சலில் ஏற்ற அவ்ரும் ரங்கராஜனும் வருவதை பார்த்த நினைவு வருகிறது .அப்பொது குடுமி வைத்திருந்ததாக நினவு தட்டுகிறது.
கற்பனை வளம்,எழுத்து வன்மை, நிர்வாகம் மூன்றிலும் சிறந்து விளங்கியவர் ஜ .ர.சு !
அன்னாருக்கு அஞ்சலிகள்
Monday, December 04, 2017
"com . N .S "
"com N S ! வாழ்த்துக்கள் !"
"வாங்க ! comrade ! 12 th இல்லையா இந்தவருடம் ! எப்படி தயாரிப்பு இருக்கு"
வாழ்த்து சொன்னவர் மாணவர் அமைப்பை சேர்ந்த 12th மாணவர் .18 வயது இருக்கலாம்.
96 வயது ! கல்லூரியில் படிக்கும் பொது பிரிட்டிஷ் பொலிஸாரால் கைது செய்யப்பட சுதந்திர போராட்ட வீரர் . பல ஆண்டுகள் சிறை வாசம்> பல ஆண்டுகள் தலைமறைவு வாழ்க்கை ! மாவட்ட செயலாளர் 1 மாநில செயலாளர் ! மூன்று முறை சட்டமன்ற உறுப்பினர் . ஓய்வாக இருக்கிறார். அவருடைய பிறந்த நாளுக்கு வாழ்த்து சொல்கிறான் அந்த சிறுவன் ! அல்லது மாணவன் ! அதனை ஏற்று அவனோடு பரிவான விசாரிப்புகளை தருகிறார் தோழர் சங்கரய்யா !
ஒரு கம்யூனிஸ்டு கடசி உறுப்பினர்களிடையே தவிர வேறு எங்கும் இத்தகைய விசாரிப்புகள் கேட்கவோ காணாவோ முடியாது.
மதுரைக்கு வரும் போதெல்லாம் தீக்கதிர் அலுவலக மாடியில் தான் தங்குவார். அவரோடு பல சந்தர்ப்பங்களில் பேசவும் விவாதிக்கவும் வாய்ப்பு கிடைத்துள்ளது . கூட்டம் முடிந்ததும் "எப்படி இருந்தது ? சரியாக பேசினேனா ?" என்று என்போன்றவர்களிடம் கூட அபிப்பிராயம் கேட்பார்
மிகசிறந்த ரசிகர்> கலை இலக்கியத்துறையில் கரைகண்டவர் .பலசந்தர்ப்பங்களில் இலக்கியம் பற்றி அவர் ஆசிரியர் குழுவில் பேசி இருக்கிறார் .
செம்மலர் கதைகளை பற்றி விமரிசிபார் . "செம்மலருக்கு மற்ற வெகுஜன பத்திரிகைகளுக்கு எழுதும் எழுத்தாளர்கள் தங்கள் படைப்பை அனுப்புவது பற்றியும் விமரிசிப்பார். அவர்கள் குமுதத்திற்கும் எழுதுவார்கள். கல்கி கும் எழுதுவார்கள் செம்மலரு க்கும் எழுதுவார்கள். அந்ததந்த பத்திரிகையின் எடிட்டோரியல் பாலிசிக்கு தகுந்த மாதிரி தங்கள் எழுத்தை சரிசெய்து கொள்வார்கள்."
".நாம் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும் . தொழிலாளர்கள்,சாதாரண மக்கள், உழைப்பாளிகள் ஆகியோரை சித்தரித்து அவர்கள் பாடுகளை விவரிக்கிறோம் ! ஏழை எளிய மக்களின் சிரமத்தை,கஷ்டங்களை எழுது கிறோம். அந்த மக்கள் வாழ்க்கையிலும் மகிழ்ச்ச்சி , கொண்டாட்டம் இருக்கும் என்பதை சொல்ல மறுக்கிறோம். தை மாதம் மினாடசி அம்மன் கோவிலில் நடக்கும் திருமணத்தை பார்த்திருக்க்ற்றீர்களா ? சாதாரண மக்கள், அத்தக்கூலிகள் . ரிக்ஷ தொழிலாளிகள் திருமணம் நடக்கும்> மலிவான பட்டு வேட்டி சட்டை அணிந்து மணமகனாகவும், பட்டு சேலையில் அவளும் முகம் மலர வருவார்களே ! அதனை ஏன் சித்தரிக்க மறுக்கிறீர்கள்,, ! அவர்களை சைக்கிளில் வைத்து அவன் சேக்காளிகள் இழுத்து வருவார்களே ! அவன் நண்பர்களின் கிண்டலையும்,கேலீயையும் தலையை குனிந்து கொண்டு நமட்டு சிரிப்போடு அந்த மணமகள் ரசிப்பாள் ! அதனை எழுதுங்களேன் ! "
விருந்துக்காக கோவில் எதிரிலிருக்கும் ஷண்முக விலாசம் சாப்பாட்டு டிக்கெட்டுக்காக உறவினர்கள் மொய்ப்பார்களே ? எவ்வளவு சுவாரசியமான நிகழ்வு ! அதனை சித்தரியுங்களேன் !"
N S வெறும் அரசியல் தலைவர் மட்டுமல்ல !
எழுத்தாளர் சங்கத்தின் உருவாக்கத்தில் முக்கிய பங்கெடுத்தவரும் கூட !!!
Wednesday, November 29, 2017
காதல் திருமணமும் ,
மத மாற்றமும்......!!!
அகிலா என்ற இந்து மதத்தை சார்ந்த பெண் முஸ்லிமாக மாறியது உச்சநீதி மன்றம் வரை சென்றது .
ஒரு இந்துவும் முஸ்லிமும், நணபர்களாக இருக்கலாம் என்றால் திருமணம் ஆனபிறகும் அப்படியே ஏன் இருக்க முடியாது என்ற கேள்வி முகநூலில் எழுப்பப்பட்டு விவாத பொருளாகிவிட்டது. இதற்கு காரணம் இந்துக்கள் அல்ல. கிறிஸ்துவ,இஸ்லாமிய மதத்தினரே என்று ஒருவர் பதிலும் எழுதி இருக்கிறார் .
நாட்டில் நடப்பில் நடக்கும் நிலைமை பற்றி சரியான கவனம் இல்லாததே இதற்கு காரணம்.
பல மாநிலங்களில் வெவவேறு மதத்தை சார்ந்தவர்கள் ஓரே குடும்பத்தில் மிகவும் சகஜமாக வாழ்ந்து வருகிறார்கள் என்ற உண்மை யை அறியாமல் இருக்கிறார்களே என்ற வருத்தம் தான் அதிகமாக இருக்கிறது. கிராமப்புற மக்களிடையே இருக்கிற புரிதல் இந்த intelectuals களிடையே இருப்பதில்லை .
நெல்லை மாவட்டத்தில் அண்ணன் இந்து வாகவும் தங்கை கிறிஸ்துவராகவும் இருப்பதை சர்வ சாதாரணமாக பார்க்கலாம் . எனது நண்பர் கிரிஸ்துவர் . வெகுகாலம் குழந்தை இல்லை . ஒருமுறை சங்கரன் கோவில் சென்றிருக்கிறார் .அங்கு ஒருவர் ஆலோசனையை கேட்டு குழ்ந்தை பிறந்தால் சங்கர நாராயணன் என்று பெயர் வைப்பதாக நேர்ந்திருக்கிறார் .அவருக்கு முதல் குழந்தையாக பெண் பிறந்ததும். அந்த குழந்தைக்கு கோமதி என்று பெயர் வைத்தார் .அதன்பிறகு அவருக்கு ஒரு ஆணும் பெண்ணும் குழந்தையாக பிறந்தது.
கோமதி தன அத்தைமகன் சலமனை திருமணம் செய்து கொண்டார். கோமதியாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறார்> அவரது முதல் மகன் சங்கர நாராயணன் , இளையவன் பிரிட்டோ ! மூத்தவன் இந்துவாகவும் இளையவன் கிறிஸ்துவாகவும் வாழ்கிறார்கள்.
பஞ்சாபில் இத்தகைய நல்லிணக்கத்தை அதிகம் பார்க்கலாம் . அண்ணண் காளி பக்தனாக இருப்பான். தம்பி தாடியோடு சீக்கியராக வலம் வருவார்.
பஞ்சாபி இலக்கியத்தில் சாகித்திய அகாதமி விருது பெற்றவர் நானக் சிங். லாகூரில் பிறந்தவர் .அவர் ஒரு இந்து .பின்னாளில் சிக்கியராக மாறினார். ஹன்ஸ் ராஜ் என்ற தன பெயரை மாற்றிக்கொண்டு நானக் சிங் என்று ஆனார்.
அக்பரின் மனைவி ஜோதிபா ! அவர் மதம் மாறவில்லை .அரண்மனைக்குள் கிருஷ்ணன் கோவில் கட்டிக்கொடுத்தார் அக் பர்கிருஷ்ணன் பிறந்தநாள்விழாவில் அக்பரும் கலந்து கொள்வார் என்பது வரலாறு.
நீதிமான்கள்,மத தலைவர்கள் கூட இதனை மறந்து நிற்கிறார்களே !!!
.
Monday, November 20, 2017
"அறம் " என்ற
திரைப்படத்தை ,
முன்வைத்து .... 2
1988 ஆண்டு . தூர்தர்ஷன் தவிர தனியார் தொலைக்காட்ச்சி அலைவரிசை அதிகம் இல்லை. மிகவும் ஆரோக்கியமான தொடர்கள் வந்து கொண்டிருந்தன .அப்படி வந்த தொடர் தான் "தமஸ் " (இருட்டு ) இந்தியில் வந்தது.
பால்ராஜ் சஹா னியின் சகோதரர் பீஷ்ம சஹானி .பஞ்சாப் பல்கலையில் ஆங்கிலப்பேராசிரியராக இருந்தார்> அவர் எழுதிய நாவல்தான் "தமஸ் ". இந்த நாவலுக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றார் .
இந்திய வரலாற்றின் இருண்ட பகுதியான பிரிவினையை சித்தரிக்கும் நாவல் .மனிதத்தை இழந்து இந்து,முஸ்லீம்,சீக்கியன் கொன்று குவித்துக் கொண்டிருந்த காலத்தை விவரிக்கும் நாவல்.
இந்த வேளையில் கம்யூனிஸ்டுகள்,காங்கிரஸ் காரர்கள் முஸ்லீம் லீக் ,இந்து மகாசபை ஆகிய அரசியல் இயக்கங்கள் ஆற்றிய பணியை சொல்லும்நாவல்.
" நாத்து செருப்பு தைக்கும் தொழிலாளி. லாகூர் அருகில் ஒருகிராமத்தில் வசிக்கிறான் . கிராமத்து பெரியவர் அவனிடம் கால்நடை மருத்துவர் ஒருவருக்காக ஒரு பன்றியை வெட்டி தரும்படி கேட்கிறார் .பன்றியை வெட்டி பழக்கமில்லாத அவன் .தயக்கத்தோடு வெட்டித்தருகிறான் ."
காங்கிரஸ் காரர்கள் உள்ளூர் பிரமுகர்களோடு பேச வந்திருக்கிறார்கள். திடீரென்று முஸ்லிம்கள் கூட்டமாக ஆவேசத்தோடு வருகிறார்கள். அவர்கள் வசிக்கும் பகுதியிலுள்ள மசூதியின் முன் பன்றி யின் சடலம் கிடப்பதாக சொல்லி கலகம்.
நாதுவுக்கு பயம்.ஒடிசென்று அந்த பன்றியை பார்க்கிறான் .கால்நடை மருத்துவருக்காக அவன் வெட்டிய பன்றிதான் அது .வீட்டிற்கு வந்து கர்ப்பமாக இருக்கும் தன மனைவியிடம் சொல்லி நாம் இந்தக்கிராமத்தை விட்டு இந்துக்களத்திகமாக இருக்கும் கிராமத்திற்கு செல்ல லாம் என்று புறப்படுகிறான்"
தூதர்ஷனில் ஒவ்வொரு சனிக்கிழமை 10 மணிக்கு வெளியான இந்த தொடர் மொத்தம் ஆறு வாரங்கள் ஒளிபரப்பாயிற்று .இந்து,முஸ்லீம்,சீக்கியர்கள் பட்ட பாட்டினை நெஞ்ச்ம கரைய சொன்ன தொடர் இது. இதனை ஒளிபரப்பும் பொது பல தடை களை சந்திக்க நேர்ந்தது.
இந்தியாவின் தலை சிறந்த நடிகர்கள் நடித்தார்கள். ஓம் பூரி,அம்ரிஷ் பூரி , ஸாக்ஸேனா, சிக்ரி அம்மையார், பாதக் , என்று நடித்தார்கள்.
வனராஜ் பாட்டியா இசை அமைக்க, கோவிந்த் நிஹிலாணி இயக்கினார் .
2013 ஆண்டு மிகுந்த பிரயாசைக்கு பின் திரைப்படமாகவும் வந்தது .கிட்டத்தட்ட நாலரை மணி நேரம் ஓடும் படமாகும் .
அரசியல் படத்தை விரும்புபவர்கள் கூகுளில் tamas என்று கிளிக் செய்தால் கிடைக்கும்.
கண்டிப்பாக பார்க்கவேண்டிய ஒன்று !!!
Saturday, November 18, 2017
"அறம் " என்ற
திரைப்படத்தை
முன்வைத்து ....!!!
"அறம் " திரைப்படத்தை முன்வைத்து சில படங்களை பற்றி எழுதலாம் என்று நினைத்தேன். திருநெல்வேலி டவுனில் பாப்புலர் டாக்கீஸ் இருந்தது .அதில் தான் "பராசக்தி படம் வந்தது .அப்போது நான் v து form படித்துக்கொண்டு இருந்தேன்.
"கோட்டையிலே இருவண்ணக்கொடி பறக்க வேண்டாமா ? வி.சி கணேசனை பாருங்கள். காட்ச்சியை காணுமுன் கழகத்திற்கு காணிக்கை தாருங்கள் "என்று தோளிலே இருவண்ணக்கொடியோடு உண்டியல் குலுக்கியவன் நான் . தமிழ் ஆசிரியர் தாஸ் என்ன மட்டும் லேட்டாக வந்தால் கண்டு கொள்ளமாட்டார். அப்போது நான் இயக்கத்தில் இரு ந்தவன் .அதாவது dravidan progressive front என்ற இயக்கம் அது .
இந்த படத்திற்கு எதிராக தினமணி வார எட்டில் அட்டைப்பட விமரிசனம் வந்தது ."பரப்பிரம்மம் " என்ற படம் போட்டு விமரிசனம் எழுதி இருந்தார்கள். "கல்யாணியின் கற்பை கடவுள் தான் அந்த மணியடிக்கும்பையன் மூலம் பூசாரியிடம் இருந்து காப்பாற்றினார் " என்றெல்லாம் எழுதி இருந்தார்கள் .
இதற்கு அடுத்து வந்த மற்றோரு அரசியல் படம் " ரத்தக்கண்ணீர் " ! பராசக்தி அளவுக்கு எடுபடவில்லை .காரணம் அந்த படத்தின் கதை உண்மையில் திருவாரூர் தங்கராசு அவர்களால் எழுதப்பட்டது என்பதும் திக காரர்கள் கருணாநிதியை அதற்காக விமரிசித்தம் ஆகும்.
1975 ம் ஆண்டு சர்வதேச திரைப்பட விழா பெங்களுருவில் நடந்தது . அப்போது அந்தவிழாவில் மிகசிறந்த அரசியல் படம் என்று கூறி தெலுங்கு படமான "மா பூமி " என்ற படத்திற்கு விருது கொடுத்தார்கள்.
"மா பூமி "
நிஜாமின் கொடுங்கோல் ஆடசியில் கிராமப்புறத்து விவசாயிகள் சித்திரவதை அனுபவித்து வந்தார்கள். ராமுவும் அவன் தந்தையும் அந்த கிராமத்தில் வாழாமல் வாழ்ந்து வந்தார்கள். ஜமீன்களின் அராஜகம் தாங்கமுடியாது பெண்கள் ஜமீனுக்கு தான் முதல் சொந்தம் .இந்த வாழ்க்கை பிடிக்காமல் ராமு ஹைதிராபாத் செல்கிறான் அங்கு மண்பானை செய்யு ஆலையில்பணியாற்றுகிறான். அந்த ஆ லையிலிருக்கும் தொழிற்சங்கத்தோடு அறிமுகமாகிறான், எழுத்தபடிக்க தெரியாதவனுக்கு தொழிங்க தோழர்கள் கற்பிக்கிறார்கள் . முதன் முதலாக மார்க்ஸ் படத்தை பார்க்கிறான்.கொஞ்சம் கொஞ்ச்மாக கம்யூனிஸ்ட் ஆகிறான். கம்யூனிச கடசியின் தலைமையில் கிராமப்புற விவசாயிகள் ஜமீன்களை எதிர்த்து ஆயுதம் தாங்கிய போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். ராமு ஒரு கட்டத்தில் நகரத்து தலைவர்களுக்கும்,கிராமத்து போராளிகளுக்கும் இடையே கூரியர் ஆக பணியாற்று கிறான். போராளியாக மாறுகிறான் .அந்த விவசாயிகளின் புரட்ச்சியில் ஆயுதபாணியாக கலக்கிறான்.
தெலுங்கானா விவசாயிகள் தங்கள் நிலத்தை மீட் க்க நடந்த இந்த ஆயுதம் தாங்கிய புர ட்சசியைத்தான் "மா பூமி " (என் நிலம் ) என்ற படம் சித்தரித்தது.
எத்தனை முறை பார்த்திருப்பேன் . கணக்கு என்னிடம் இல்லை !!!
கவுதம் கோஷ் என்ற வாங்க இயக்குனர் இயக்கிய தெலுங்கு படமிது.
Friday, November 10, 2017
"லட்சுமி " என்ற
குறும்படத்தை ,
முன்வைத்து...!!!
வெண்புறாவின் விமரிசனத்தை படித்ததும் "லட்சுமி " குறும்படத்தை பார்க்க மிகவும் விரும்பினேன்.
படத்தை பார்த்தேன். பார்த்ததும் உடனடியாக மறைந்த தோழர் மேலாண்மை தான் நினைவுக்கு வந்தார். நிறைய இளம் எழுத்தாளர்களை ஊக்கிவித்தவர் .காரணம் அப்போது அவர் செம்மலர் ஆசிரியர் குழவிலயும் பணியாறிவந்தார்> வரும் கதைகள் படித்து பரிசீலித்து பிரசுரம் செய்யும் பணியில் இருந்தார் .ஒய்வு நேரங்களில் பேசிக்கொண்டிருப்போம் .
"வே செம்மலருக்கு எழுதற இளம் எழுத்தாளரை கூப்பிட்டு கூட்டம் போடவேண்டும் வே ! அருமையான கற்பனை ! எப்படியெல்லாம் சிந்திக்கானுவ ! அதை கதை யாக்கும் பொது சிரமப்படறானுவ ! அதுமட்டும் சொல்லிப்புட்டம்னா நம்ம பயலுகள மிஞ்ச ஆளுகிடையாது" என்பார்.
"லட்சுமி " படம் கூறுவதை discriminate பண்ணி பார்க்கும் விமரிசகனால் ரசிக்கமுடிகிறது.சம்பவங்களின் அழுத்தம் ,சில takings ,ஆகியவை ஒரு நல்ல கருத்தை சொல்லவந்ததை சிதற விடுகிறது .
தினசரி வாழ்க்கை , அதன் சலிப்பு ,ஆகியவற்றை சித்தரிக்க அந்த இரவு காட்சி அந்தவடிவத்தில் தேவையா ? கணவனுக்கு வந்த தொலைபேசி அவனுடைய "சோர" த்தை சித்தரிப்பதாக ஏன் பார்வையாளன் எடுத்துக்கொள்ள வேண்டும்?
சிநேகிதி வீட்டில தங்கி விடுகிறேன் எனும் பொது காலை உணவு பற்றிக்கவலைப்படும் கணவன் - மீண்டும் பஸ் நிறுத்தம் வந்து "எனக்கு பசிக்கிறது " என்று கூறும் மனைவி - திறமையிருந்தும் சரியாக covey செய் யாத இயக்குனர் என்றே படுகிறது.
கருணா ! குறும்பட இளம் இயக்குனர்களை வைத்து ஒரு பயிற்சி முகாம் ஏற்பாடு பண்ணும் வே !
Wednesday, November 08, 2017
"நிஹால் காஸ்யப்"
தேசிய இசைப்போட்டிக்கு
தேர்வு ...!!!
இந்திய பல்கலைக்கழகங்களுக்கிடையே இசைப்போட்டி நடைபெற்று வருகிறது .இந்த போட்டி கல்லூரிகளுக்கு இடையே நடக்கும். பின்னர் இதிலிருந்து பல்கலைக்கழகங்களுக்கு தேர்வு செய்வார்கள் . தேர்வானவர்கள், அந்தந்த பல்கலைக்கழகங்களை சார்ந்த பிரதிநிதிகளாக மண்டல அளவில் நடக்கும் போட்டிக்கு செல்வார்கள்.
பேரன் நிஹால் காஸ்யப் இசை யில் நாட்டமுள்ளவன். சிறுவயதில் கர்நாடக இசை சில ஆண்டுகள் பயின்றான் . கிடார், கீ போர்டு இரண்டும் பழகி இருக்கிறான். அவன் கல்லூரியில் இசை குழுவின் பொறுப்பாளனாகவும் இருக்கிறான் .
நாகபுரி பல்கலைக்கழகம் மண்டல அளவிலான மேற்கத்தியஇசைபோ ட்டிக்கு பலகலையின் சார்பில் இவர்கள் குழுவை தேர்வு செய்து அனுப்பியது. இந்த மாந்தம் 4,5,6 ம் தேதி போபாலில் நடந்த போட்டியில் கலந்து கொண்டான்.
இன்று பல்கலையிலிருந்து தேசிய அளவில் ராஞ்சி யில் நடக்க விருக்கும் போட்டியில் நாகபுரி பல்கலையின் சார்பில் மேற்கத்திய இசை பிரிவுக்கு இவர்களுடைய குழு தேர்வு செய்யப்பட்டிருப்பதாக செய்தியினை பல்கலைக்கழகம் அனுப்பி யுள்ளது .
1918ம் ஆண்டு பிப்ரவரியில் நடக்க விருக்கும் தேசிய போட்டியிலும் வெற்றி பெற நிஹால் மற்றும் அவனுடைய குழுவை வாழ்த்தும்படி தோழர்களையும் பதிவர்களைக்கேட்டுக் கொள்கிறேன் .
Sunday, November 05, 2017
"Taping the rich and
Patting the poor "
5-11-17 அன்று விஜய் தொலைக்காட்ச்சியின் "நீயா ? நானா ? " நிகழ்ச்ச்சியில் மறந்த முதலவர் அண்ணாதுரை பற்றி பேசினார்கள். இளம் மாணவர்கள்,கருத்தாளர்கள் ஒருபக்கமும் ,நீயாநானாவில் அடிக்கடி வரும் பழைய முகங்கள் ஒரு பக்கமுமாக பேசினார்கள்.
ஜவஹர்லாலபலகலிக்கழகத்தில்வரலாறு பற்றி ஆராயும் மாணவரிலிருந்து உள்ளூரில் வரலாறு படிப்பவர்கள் வரை ஒருபக்கம் இருந்தது மன நிறைவைத்தந்தது . அண்ணாவின் ஆட்ச்சியை, மாட்ச்சியை விமர்சிக்காமல் முழுக்க முழுக்க புகழ் பாடும் தொகுப்பாகவே இருந்தது.
1967ம் ஆண்டு தி.மு.க பதிவு ஏற்ற பொது அதன் ரத்த சாடசியாக வாழ்ந்தவர்கள் யாரும் பங்கேற்காதது ஒரு குறைதான் .
நெறியாளர் அண்ணாவின் மிகசிறந்த சொல் எது என்று கேட்டார் . பலரும் பலசந்தர்ப்பத்தில் அவர் பேசியதை சுட்டி காட்டினார்கள் .
1967ம் ஆண்டு தி.மு.க உள்ளிட்ட ஏழு கடசி கூட்டணிக்காக தேர்தல் பணியாற்றிய லட்சோபலட்சம் பேரில் ஒருவனாக இரவு கண்விழித்து தேர்தல்முடிவுகளை ஆர்வத்தோடு கேட்டுக் கொண்டிருந்தவன் நான் .
பதவி ஏற்பு விழா நடந்த பொது, காங்கிரசை வீழ்த்தி அண்ணா அவர்கள் முதலமைசறானதை தானே பதவி ஏற்றதாக நினைத்து கோடானு கோடி தமிழர்கள் மகிழ்ந்த பொது அதில் நானும் ஒருவனாக இருந்தேன்.
பதவி ஏற்ற பிறகு அண்ணா அவர்கள் தலைமைசெயலகத்தில் உள்ள அதிகாரிகள்,மற்றும் ஊழியர்களை அழைத்து பேசினார் .
எனக்கு தெரிந்து அண்ணா பேசியது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது . தி.மு.க வின் வரி கொள்கை பற்றி அண்ணா
"பணக்காரர்களின் தொந்தியிலிருந்து வரியை உறிஞ்ச்சுவோம் .ஏழைகளிடம் தட்டிக்கொடுத்து வாங்குவோம் "
"taping the Rich and Pating the poor " என்றார் .
வார்த்தை ஜாலத்தில் அண்ணாவை மிஞ்ச யாருமில்லை.
TAP என்ற ஆங்கில வார்த்தையின் மாற்று PAT !"
அவர் பெயரை வைத்துக்கொண்டு ஆடுபவர்கள் இன்று
"taping the poor and pating the rich " என்று மாறிவிட்டார்கள்.
என்ன செய்ய ?
மழையும்,
ஊடகங்களும் ...!!!
வடநாட்டில் இருக்கும் என்போன்றவர்களுக்கு தமிழ்நாட்டு செய்திகளை தொலைக்காட்ச்சி மூலமே தெரிந்து கொள்ள முடிகிறது .குறிப்பாக இயற்கை இடர்பாடுகளான ,மழை,வெள்ளம் போன்றவைகளால் தமிழக்த்திலுறவினர்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதை உடனறிய இந்த ஊடகங்களுதவுகின்றன.
2015ம்ஆண்டு என்பேரனின் ன்திருமணத்திற்குபோக முடியாமல்போயிற்று.உறவினர்கள்என் வயதையும்,உடல்நிலையையும் கணக்கில் கொண்டு தயவு செய்து வராதீர்கள் என்று ஆலோசனை கூறினார்கள். நான் பயணத்தை ரத்து செய்தேன் மீறி சென்ற உறவினர்கள் விஜயவாடா, நெல்லூர் வரை சென்று பின்னர் சென்னையை சரியா நேரத்தில் அடைய முடியாமல் போனது பற்றி கதை கதையாக சொன்னார்கள்.
நேற்று சனிக்கிழமை அன்று தமிழகத்தின் பிரபலமான தொலைக்காட்ச்சி செய்தியில், வேளசேரி, மேடவாக்கம், பகுதியில் தேங்கி நிற்கும் நீர் பற்றிய காட்ச்சிகளை பார்த்து பதறி விட்டேன் .
உடனடியாக அங்கு தங்கி இருக்கும் என் மைத்துனரை பற்றிய கவலையில் அவரை தொடர்பு கொண்டேன் .
"dont beleive E media ! biased and exagerated என்று தகவல் அனுப்பி நாங்கள் சவுகரியமாக இருக்கிறோம் என்று மின் செய்தி அனுப்பி இருந்தார்.
திருசியில் வழக்குறை ஞராக இருக்கும் என் மகள் நீதிமன்ற விஷயமாக அடிக்கடி சென்னை வருவார் .அங்கே தங்குவதற்காக வீ டும் வாங்கியுள்ளார் . அவரை தொடர்பு கொன்டேன். எந்த பிரசினையும் இல்லை என்று குறிப்பிட்டார் . காலையில் சென்று வாடிக்கையாளர்களை பார்த்ததாக கூறினார்.
வலசர வாக்கத்தில் இருக்கும் மகனும் ஒரு பிரசசினையும இல்லை என்றார்.
மழை யினால் சென்னையில் மக்கள் தவிப்பது ஒருபக்கம். ஆனால் 2015 ம் ஆண்டு போல் இல்லை என்பது தெரிகிறது .
தொலைக்காட்ச்சி ஊடகங்கள் இன்னும் பொறுப்போடு நடந்து கொள்வது அவசியம் !!!
Friday, November 03, 2017
மனித குலம் கண்டெடுத்த
அற்புத பூமி
தமிழகம் ...!!!
மனிதகுலம் தோன்றியது ஆப்பிரிக்காவில் என்பது உறுதி செய்யப்பட ஒன்று . ஆப்பிரிக்க கிழக்கு கடற்கரை வழியாக ஆதி மனிதன் வசிப்பிடம் தேடி அலைந்தான் .60000 ஆண்டுகளுக்கு முன்பாக புறப்பட்ட அவன் மத்திய தரைக்கடல் வழியாக வடக்கே சென்றான்.
ஒரு குழு கிழக்கே சென்றது.மத்திய ஆசியா,சீனம் என்று புலம் தேடி புறப்பட்டது ஒரு சிறு குழு கிழக்கே சென்று இந்தியா -தென்னிந்தியா என்று சென்றது .
தென்னிந்தியா வந்த குழு இங்கு ள்ள பூமி அதன் வெட்ப தட்ப நிலை ஆகியவற்றை உணர்ந்து இங்கேயே தங்கி விட்டது.
உலகத்தில் வேறெங்கும் இல்லாத வகையில் இங்கு இரண்டு முறை சூரியன் தலைக்கு மேலே வருகிறான். அதனால் இரண்டு கோடை வருகிறது> இரண்டு கோடை என்பதால் அதன் வெப்ப சலனத்தால் இரண்டு பருவமழை கிடைக்கிறது . மிதமான கோடை ,பருவ மழை,மிதமான குளிர், என்பதால் எளிமையான உடுப்புகள் போதும். ஜீவ ஆறுகள், காடுகள் கனி மரங்கள், மலைப்பகுதி, கடற்கரை , வெப்பக்காடுகளின்மரங்கள், கனிமரங்கள் என்று செழிப்பான பூமி ! பசிக்கு இதமான மா,பலா,வாழை மரங்கள், மூன்றும் கிடைக்கும் பூமி .
விவசாய பூமி . வேறெங்கும் எதற்கும் செல்லவேண்டிய தில்லை என்று வளம் கொழிக்கும் இந்த பூமியை தேர்ந்தெடுத்த நமது பாட்டன்கள் தங்கள் அனுபவத்தை அறிவாக்கி நிரந்தரமாக இங்கேயே தங்கினான் .
இந்த பூமியை நாம் சென்னையாக,கடலூராக, நெல்லையாக மழை கால த்தில் வெள்ளமாகவும் ,கோடைகாலத்தில்குடி நீர் இல்லாமலும் மாற்றி இருக்கிறோம்.
நமக்கு மன்னிப்பே கிடையாது !!!
Monday, October 30, 2017
"மேலாண் மறை" நாட்டிலிருந்து
வந்த "அற்புதன் ".....!!!
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மாநில மாநாடு நெல்லையில் நடந்தது . கேரளம்,மே .வங்கம், புது டில்லி என்று எழுத்தாளர்கள் வந்திருந்தனர்> அவர்களை கவனித்துக் கொள்ளும் பொறுப்பும் எனக்கு வந்தது .
உருது இந்தி எழுத்தாளர் சங்கத்திலிருந்து தோழர் சஞ்ச்சல் சௌஹான் வந்திருந்தார். புது டில்லி பல்கலையில் ஆங்கில பேராசிரியராக பணியாற்றி வருபவர் . வங்கம்,இந்தி எழுத்தாளர்களிடையே தமிழ் எழு த்தாளர் களைப்பற்றி பேச்சு வந்தது> நானும் என்பங்கிற்கு இளம் எழு த்தாளர்களை பற்றி கூறினேன்.
"பூக்காத மாலை " என்ற மேலாண்மையின் கதை பற்றி விலாவாரியாக சொன்னேன். "தண்ணீர் எடுக்க குடத்துடன் குள த்திற்கு செல்லும் முப்பது வயது பெண் அவள். திருமணமாக வில்லை.. குளக்கரையில் ரௌடி ஒருவன் உட்கார்ந்து இருக்கிறான் .பயந்து கொன்டே அவள் நீறெடுக்க செல்கிறாள் . வரும் பொது கால் தடுக்க........." அந்த ரௌடி அவளை தாங்கி கொள்கிறான் . அவளை மறைவிடத்திற்குதூக்கி சென்று கெடுத்துவிடுகிறான். ஊர் பஞ்சாயத்தில் அவர்களுக்கு திருமணம் நடக்கிறது ........ " அவள் மெதுவாக வீடு செல்கிறாள்
கால்தடுக்கும் வரை நிஜம் . அதன் பிறகு நடந்ததாக அவள் நினை க்கிறாள்.நினைவோடை யுக்தியில் .எதுவும் நடக்க வில்லை. அப்படியாவது -ஒரு ரௌடியுடனாவது -தன திருமணம் நடக்காதா ? என்றார் அ ந்த கிராமத்து அபலையின் ஏக்கத்தை சித்தரித்த இந்த கதையை சொன்னதும் அந்த அகில் இந்திய எழுத்தாளர்கள் பேச்சு மூச்சின்றி நின்றனர். அந்த எழுத்தாளர் வந்திருக்கிறாரா ?நாங்கள் பார்க்க வேண்டுமே என்று ஒரே குரலில் கூவினர் .
மேலாண்மைக்கு அடிக்கடி தலைவலி வரும். மேடைக்கு பின்னல் இருக்கும் திரை மறைவில் துண்டை விரித்து படுத்திருப்பார் . உணவு இடை வேளை யின் பொது வந்த அந்த சின்னஞ்சிறு உருவத்தை காட்டி இவர் தான் அந்த "பூக்காத மாலை " கதையை எழு த்திய வர் என்றேன். சஞ்சல் சவுகான் ஓடிச்சென்று அவரைத்தூக்கி எடுத்து முத்தமழை போழிந்தார் . அருகில் இருந்து இந்திவங்காளி,மலையாள ஏன் இந்தியாவே அவரை மெசசி கொஞ்சியது .
கல்கத்தாவில் இந்தி உருது எழுத்தாளர் அமைப்பின் மாநாடு. சங்கம் மேலாண்மையும் நானும் செல்ல வேண்டும் என்று பணித்தது .
மேலாண்மையின் கதைகள்,குறுநாவல்கள் பற்றி அவர்களோடு பேசினேன். பாவம் ! மேலாண்மை மொழி தெரியாதலால் " வே இத சொன்னேறா ! அதுசோன்னி ரா ! " என்று கேட்டுக்கோ ண்டிருந்தார் . போபால்,குஜராத், ராஜஸ்தான்,டில்லி பிஹார் என்று இந்திய இடது சாரி எழுத்தாளர்கள் முன் மேலாண்மை ஜொலித்து நின்ற காட்ச்சியை இன்றும் நினைத்துப்பார்க்கிறேன்.
செம்மலர் ஆசிரியர் குழுவில் அவர் பணியாற்றிய பொது அவரோடு நானும் பணியாற்றினேன் என்பது என் பாக்கியம்.
சாகும் வயதில்லையே ! பொன்னுசாமி !
என்ன அவசரம் !
அஞ்சலிகள் !!! !
Thursday, October 26, 2017
காஸ்யபனின் சிறுகதையும் ,
பேராசிரியர் சுப. வீரபாண்டியன் அவர்களும் ...!!!
சென்னை "கலைஞர் நியூஸ் " தொலைக்காட்ச்சியில் பணியாற்றும் உமா அவர்கள்பத்து நாட்களுக்குமுன்பு நாகபுரி வந்திருந்தார்கள். அண்ணல் அம்பெத்கார் தீட்சை பெற்ற இடத்தை பார்த்து அதுபற்றிய செய்திகளை சேகரிக்க வந்திடிருந்தார்கள். பது டில்லியில் இருக்கும் "வட க்கு வாசல் " பத்திரிக்கை ஆசிரியர் பென்னேஸ்வரன் நாகபுரியில்வசிக்கும் சத்தியமூர்த்தி (என் மகன்) பெயரை குறிப்பிட்டு உதவி ஏதாவது தேவைப்பட்டால் அணுகும்படி கூறி உள்ளார்.
உமா அவர்கள் கைபேசிமூலம் சத்யமூர்த்தியை நாகபுரி வந்ததும் தொடர்பு கொண்டார்.அருகில் இருந்த என்னிடமும் பேசினார் . அம்பேத்கார் பற்றி "பேராசிரியர் சுப.வீ "ஒரு நூல் எழுதவிருப்பதாகவும் அதற்கு தான் கூ ட இருந்து ஒத்துழைப்பதாகவும் கூறினார். ஒய்வு நேரம் இருந்தால் வீட்டிற்கு வரமுடியுமா என்று அழைத்தேன் .அவரும் அவருடைய நண்பர் தேவேந்திரன் அவர்களும் வந்தனர்.
மிகவும் உற்சாகமான உமா அவர்களோடு பேசிக்கொண்டிருந்தேன். பேராசிரியர் பற்றி மிகவும் பெருமையாக பேசினார் . "திராவிட இயக்கத்தின் அறிவார்ந்த மனிதர் . மிகசிறந்த படிப்பாளி. தேடல்மிகுந்த சிந்தனையாளர் .அவர் திறமைக்கும், நேர்மைக்கும் இன்னும் உயரத்திற்கு போக வேண்டியவர் , " என்று என் பங்குக்கு நான் கூறினேன்.
நான் எழுதிய சில நூல்களை உமா அவர்களிடம் கொடுத்தேன் . வெகுநேரம் பேசிக்கொண்டிருந்து விட்டு புறப்பட்டார்.மறுநாள் மதியம் கைபேசி மூலம் தொடர்பு கொண்டார் . என் "கருகமணி " தொகுப்பை பிடித்ததாகவும் அதில் உள்ள "அவளும் அந்த அவளும் " கதையைப்பற்றி மிகவும் உயர்வாக புகழ்ந்து பேசினார் .இந்த புத்தகங்களை பேராசிரியர் "சுப.வீ " அவர்களிடம் கொடுக்க விருப்பதாகவும் குறிப்பிட்டார்.
சென்ற வாரம் யூ டியூபில் தமிழ் அலைவரிசைகளில் வரும் சர்ச்சை களை பார்த்துக்கொண்டிருந்தேன். "சுப.வீ " அவர்களின் நிகழ்ச்சி . கை பேசி அழைத்தது . நம்பமுடியவில்லை. "சுப.வீ " அவர்களே அழைத்தார்கள். "கருகமணி " தொகுப்பை படிதேன் . ஐந்து ஆறுகதைகளை படித்தேன். சிறப்பாக உள்ளது குறிப்பாக "அவளும் அந்த அவளும் " கதை மிகவும் நன்றாக வந்துள்ளது . "கலைஞர் டிவி யில் அதுபற்றி பேசலாம் என்றிருக்கிறேன். என்றார் .
அறிவார்ந்த அந்த மனிதரின் பாராட்டை விட அவரின் பெருந்தன்மை என்னை வியந்து போற்றவைத்தது..
இன்று காலை எனக்கு மின் செய்தி வந்தது .
"காலம் தாழ்ந்து விடை அனுப்புவதற்கு மன்னிக்கவும்.நவமபர் 3 வெள்ளிக்கிழமை காலை 8.30 மணிக்கு,கலைஞர் தொலைக்காட்ச்சியில் உங்கள் சிறுகதை குறித்து பேசியுள்ளேன். பார்த்துவிட்டு உங்கள் கருத்தை கூறிட வேண்டுகிறேன் "
பேராசிரியர் சுப.வீ அனுப்பிய செய்தி அது .
தோழர்களுக்கும், பதிவர்களுக்கும் ஒரு வேண்டு கோள் ! நீங்களும் பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை கூறுங்களேன் .
"ராஜாஜி- பெரியார் "
நட்பும் ,அதன் உன்னதமும் ...!!!
"பெரியாரை காங்கிரஸ் கட்சியில் சேர்த்து அவரை பொது வாழ்க்கைக்கு கொண்டுவந்தவர் ராஜாஜி " என்று பேராசிரியர் சுப.வீர பாண்டியன் ஒரு நிகழ்ச்சியில் குறிப்பீட்டார். முற்றிலும் உண்மை .
பெரியாரின் மனைவியார் நாகம்மை அவர்கள் இறந்துவிட்டார். பிறப்பும் இறப்பும் யதார்த்தமானது. என்ற பெரியார் அழக்கூட இல்லையாம். ராஜாஜி இறந்து கண்ணம்மா பேட்டை இடுகாட்டில் எரியூட்டப்படும் பொது விக்கி விக்கி அந்த தொண்ணுறுவயது தொண்டு கிழம் அழுத்தத்தைப்பார்த்து தலைவர்களே அதிர்ந்து போனார்களாம் .
பெரியார் நாத்திகர் ! ராஜாஜி நம்பிக்கை உள்ளவர் . ஆனால் "பத்தாம்பசலித்தனமான் " நம்பிக்கை கொண்டவர் இல்லை .1930 ஆண்டுகளிலேயே தன மகளுக்கு பிராமனர் அல்லாதவரோடு சாதி மறுப்பு திருமணம் செய்வித்தவர் .
அண்ணல் காந்தி அடிகளின் நம்பிக்கைக்கு பாத்திரமானவர் ராஜாஜி. அவருடைய அரசியல் ஆலோசகரும் கூட . வட்டமேஜை மாநாட்டிற்கு தன்னோடு லண்டன் வரவேண்டும் என்று அண்ணல் ராஜாஜியை வற்புறுத்தினார் ,ராஜாஜியோ மறுத்து விட்டார் . "பாப்பான் கடல் கடந்து செல்லமாட்டான் " என்று பலர் ஏகாதிடியம் பேசினர் . பின்னாளில் 1963 வாக்கில் உலக சாமான இயக்கத்தின் தலைவர் பேட்ரண்ட் ரசல் உடன் இணைந்து அமேரிக்கா சென்று ஜான் கென்னடியை சந்தித்து அணு சோதனைகளை தடுக்க உதவும்படி கேட்டுக்கொண்டார்.
"raajaaji is a bundle of contradiction and a mixer of confusion " என்பார்கள்..
1942ம் ஆண்டு காங்கிரஸ் கடசியிலிருந்து வெளியேறினார். இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்துவிடும் என்று தலைவர்களிடையே நம்பிக்கை துளிர் விட்டுக்கொண்டிருந்த நேரம். பாகிஸ்தான் பிரிவினை ஏற்றுக்கொண்டால் கிடைக்கும் .காங்கிரஸ் ஏற்கவில்லை. காங்கிரஸ் மாநாட்டில் பாகிஸ்தான் பிரிவினையை ஏற்றுக்கொண்டு , இந்திய சுதந்திரத்தை உடனடியாக பெறவேண்டு என்று ராஜாஜி தீர்மானம் கொண்டுவந்தார்தீர்மானம் தோற்றது .காங்கிரசை விட்டு வெளியேறினார் .
1945ம் ஆண்டு மீண்டு காங்கிரசில் சேர்ந்தார் . மவுண்ட் - பாட்டனுக்கு பிறகு இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக ஆனார்.
ராஜாஜியின் பிராமண அடிவருடிகள் அவர் ஒரு சாணக்கியர் என்று பெருமை பேசுவார்கள். பெரியாரின் நாத்திக கடசியின் பெருமையை உடைக்க அவருக்கு இரண்டாவது திருமண ஆசையை வளர்த்து சிதறடித்தவர் ராஜாஜிதான் என்று வக்கனை பேசுவார்கள்.
உண்மை இதற்கு நேர்ர்மாறானது . பெரியார்- மணியம்மை திருமணம் நடந்த பொது ராஜாஜி கவினர் ஜெனரலாக இருந்தார். கவர்னர் ஜெனரல் தனிநபர் விஷயங்களில் தலையிடக்கூடாது என்பது பிரிட்டிஷ் மரபு.
ஆப்த நண்பர் பெரியாரின் இரண்டாவது திருமணம் அவருடைய பெருமையையும், கடசியின் மதிப்பையும் குலைத்துவிடும் என்று ராஜாஜி கருதினார். நண்பரை காப்பாற்ற முடியாமல் " தடுக்கிறதே மரபு " என்று மாய்ந்தார் .மரபா ? நண்பனா? என்ற நிலையில் நன்பன் என்று முடிவெடுத்தார் . "இரண்டாம் திருமணம் வேண்டாம் " என்று குறிப்பிட்டு அதற்காரணங்களையும் சொல்லி ரகசியமாக கடிதம் எழுதினார்.
பெரியார் என்ன காரணத்தாலோ அதனை ஏற்கவில்லை . திருமணம் நடந்ததும், திராவிடர் கழகம் உடைந்தும் வரலாறாயிற்று.
தி ..க , திமுக வினரில் பலர் ராஜாஜியின் சதிதான் என்று மனதார நமபினார்கள். ராஜாஜியும் மவுனம் சாதித்தார்.
பெரியாரும் இதற்கு ராஜாஜி காரணமல்ல என்று தெரிந்துமவுனம் சாதித்தார் .
ஒரு இந்தியன் தன் ஆப்த நன்பன் பெருமைக்கு உரிய பதவியை அலங்கரித்தவன் "மரபை " மீறினான் என்ற அவப்பெயர் வரக்கூடாது என்பதற்காக பெரியார் ரகசியம் காத்தார்.
இந்த ஒப்பற்ற இரண்டு தலைவர்களிடையே மலர்ந்த நட்பு உன்னதமானதாகும் .
Sunday, October 22, 2017
இஸ்லாமியர்கள் உருவாக்கிய ,
பஜனை பாடல்கள் ...!!!
1952ம் ஆண்டு " பாய்ஜூ பாவ்ரா " என்ற இந்தி திரைப்படம் வந்தது . அஃபரின் தர்பாரில் தான் சென் கொலோசிக்கொண்டிருந்த காலம் அது. மிகசிறந்த பாடகர் ஒருவர் இறந்து விடுகிறார் தான்சேன் தான் தனக்கு போட்டியாக வருவார் என்று நினைத்து அவரை கொன்றுவிட்டதாக அவரிடைய பதின்ம வயது மகன் கருதுகிறான் .அக்பரின் தர்பாரிலேயே தான் சன் நை வென்று காட்ட சபதம் கொள்கிறான். வென்றும் காட்டுகிறான்.
அந்த இளைஞன் தான் பாய்ஜூ .அவனை கவுரி என்ற பெண் காதலிக்கிறாள்.
பரத் பூஷன் மீனா குமாரி நடித்த இந்த படம் மிகசிறப்பாக பேசப்பட்ட ஒன்றாகும்.
பாய்ஜூ பாடும் பாடல்கள் போன்று இன்றுவரை எவரும் எழுதவில்லை .எவரும் பாடவில்லை.எவரும் இசை அமைக்க வில்லை.
"கங்கா கி மௌஸிமே "என்ற அந்தப்பாடலை எத்தனை லட்சம் தடவை கேட்டாலும் திகைக்காது
அதே போன்று தான் "பகவான்-பகவான்- பகவான் -! துனியா கே ரகவாலே " என்ற பாடல். .
"ஹரிதர்ஷன் கோ " என்ற பஜனை பாடல் ஊனை உருக்கிவிடும்.
இந்த பாடல்களின் மகத்துவம் என்ன தெரியுமா ?
இதற்கான பாடலை எழுதியவர் ஷகீல் பாதயுனி !
இந்த பாடலை பாடியவர் முகம்மது ரஃபி !
இதற்கு இசை அமைத்தவர் நவுஷாத் !!!
மூவரும் பத்திரிகையாளர்களிடம் பின்னாளில் "ஆண்டவன் கருணையால் தான் எங்களால் இப்படி அமரத்துவம் வாய்ந்த பாடல்களை கொடுக்க முடிந்தது . " என்று கூறினார் .
திரைத்துறை ஆரம்பகாலத்திலிருந்தே இணக்கமாக செயல்பட்டுக்கு கொண்டுதான் இருக்கிறது .
"ஜோசப் விஜய்" என்று கிறுக்குத்தனமாக கூறியதால் ஒன்றும் ஆகிவிட போவதில்லை.!!!
Friday, October 20, 2017
மக்களவை தேர்தலும் ,
நாட்டு நடப்பும் ...!!!
மக்களவை தேர்தல் வர இரண்டு ஆண்டுகள் உள்ளன .ஆளும் பாஜக அதற்கான காய்களை இப்போழுதே நகர்த்த ஆரம்பித்து விட்டது . குஜராத் தேர்தல் அதன் அடிவயிற்றில் பயத்தை கிளப்பியுள்ளது.
வளர்சசி வளர்சசி என்று முழம் போடும் பிரதமர் அங்கு வளர்ச்சி பற்றி பேசவில்லைஇதுவரைஎந்தபிரதமரும்பேசாதஇனமோதல்களை தேர்ந்தெடுத்து பேசுகிறார் . "காங்கிரஸ் கடசி குஜராத்திகளுக்கு விரோதமானது.சர்தார் படேல், மொரார்ஜி தேசாய் ஆகிய குஜராத்திகளை அகிலஇந்தி அளவில் வரவிடாமல் தவிர்த்தவர்கள் நேருவும் இந்திராகாந்தியும்" என்று வக்கணை பேசுகிறார்.
குஜராத் மக்கள் குறிப்பாக ,படேல் வகுப்பினர், தலித்துகள், மற்றும் சிறு பான்மையினர் பா.ஜ .க வின் மோசடியான பேச்சினை நம்பத்தயாராகயில்லை . 20 ஆண்டு பா.ஜ.க ஆடசி யில் 2லட்சம் கோடி கடன் என்று ஆனது தவிர மக்கள்நல திட்டங்கள் எதுவும் வரவில்லை என்பதை அவர்கள் உணர்ந்துள்ளனர் .சமீபத்திய வரி ஏற்றம் , பணமதிப்பு , ஆகியவை சிறு குறு தொழில்களை பாதித்து சாதாரண மக்களை ஓட்டாண்டியாக்கி உள்ளது . இந்த சந்தர்ப்பத்தில் வளர்ச்சி பற்றி பேசுவது எடுக்காது என்பதை மோடி அவர்கள் உணர்ந்தே இருக்கிறார் . அதனால் தான் குஜராத்மாக்களின் இன உணர்வை தூண்டும் வகையில் பேச ஆரம்பித்துள்ளார்.
பொது வாக குஜராத் தேர்தல் முடிவுகள் 2019ம் ஆண்டு மக்களவை தேர்தலின் முன்னோடி என்றே அரசியல் பார்வை யார்கள் கருதுகிறார்கள்.
வட கிழக்குமாநிலங்களில் கவர்னரின் உதவியோடு ஆட்சியை பிடித்த பா.ஜ.க காங்கிரஸ் எம் எல் ஏ க்களை விழு ங்கியது செரிமானம் ஆகாமல் வயிறு பொருமி தவித்துக்கொண்டு இருக்கிறது .
பஞ்சாப், கையை விட்டு போய்விட்டது . பசு வட்டம் என்ற பகுதியில் ராஜஸ்தான்.ம பி , உபி ன் நிலைமை எங்கு சாயும் என்று தெரியாமல் "வியாபம் " ஊழல் தலை விரித்து பேயாட்டம் ஆடிக்கொண்டிருக்கிறது.
அமித் பாய் ஷா பா.ஜ.கவின் தலைவராக்கினதை ஏற்க முடியாதவர்கள் "அமித் பாய் இந்து அல்ல " ."அவரை ஏன் தலைவராக்கினாய் " என்று முணுமுணுக்க ஆரம்பித்துள்ளனர் .அவர்மகன் ஜெய் ஷாவின் ஊழலை வெளிக்கொண்டு வந்ததே இவர்கள் தான்.
இந்த லட்சணத்தில் மக்களவை தேர்தலுக்கு முன்பு ஏடாகூடமாக எதுவுமாகிவிடக்கூடாது என்பது மோடி-ஷா இருவரின் பொது கவலை .
அவர்கள் கடசிக்குள் எந்தவித சமரசத்திற்கு தயாராகி விட்டனர். மோடி ஷாவை கைகழுவ தயார் .ஆர்.எஸ்.எஸ் தலைமை ஜெய் பற்றி விசாரணை வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது இதன் எதிரொலி தான் .
இவ்வளவு சோதனைகள் இருந்தும் எதிர்க்கட்ச்சிகளால் மோடியையோ,பா.ஜ.க வையோ 2019 ஆண்டு மக்களவைதேர்தலில் சந்திக்க முடியுமா என்ற கேள்வி இருக்கிறது.
"முடியாது " என்றுதான் நடு நிலையாளர்கள் கருது கிறார்கள்.
எதிர்க்கட்ச்சிகளுக்கு அகில இந்திய அளவில் மோடிபோன்று அறிமுகமான தலைமை இல்லை ! அவர்களிடையே அப்படி ஒரு தலைமையை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் இல்லை . முலாயமும் அகிலேஷும், லல்லுவும், சரத்தும் , என்று ஒன்றாக சிந்திப்பது என்று ஒருசக்தியாக மாறுவது என்று திகைக்கிறார்கள்.
எதிர்க்கட்ச்சிகளின் பலவீனம் தான் மோடிக்கு உள்ள வாய்ப்பு !!!
Monday, October 16, 2017
நாடாளுமன்ற ,
சட்டமன்ற ,
தேர்தல்கள் ...!!!
இந்தியா சுதந்திரமடைந்ததும் 1952ம் ஆண்டு நாடாளுமன்றத்திற்கு ,சட்டமனறத்திற்கும் ஒரேசமயத்தில் தேர்தல் நடந்தது. 1967மாண்டுவரை இதேமுறையில் நடந்துவந்தது . ஆனால் 1971ம் ஆண்டு இதனை மாற்ற யோசனைகளை வந்தன . நாடாளுமன்ற தேர்தலின் பொது தேசிய அளவில் விவாதங்கள் உருவாக்கிமுடிவுகள் எடுக்கப்படவேண்டும் அதனால் அதன் சட்டமன்ற தேர்தல்களோடு சேர்க்கவேண்டியதில்லை என்று சொல்லப்பட்டது. இதனை விவாதத்திற்கு கொண்டுவந்த காங்கிரஸ் கடசியின் நிலயை திமுக ஆதரித்தது. ஆனால் இதற்குப்பின்னால் இரண்டு கடசிகளின் சுய நலனே முன் நின்றது .
1977ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் பொது காங்கிரசை எதிர்த்து காங் (ஓ )லோக்தளம்,சோஷலிஸ்டுகள்,ஜெகஜீவன்ராம் கட்சி என்று பலகட்சிகள் நின்றன. இந்திரா அம்மையார் தலைமையில் இருந்த காங்கிரஸ் தோற்றது. மொரார்ஜி யும் சரண்சிங்கும் 9 மாநிலங்களில் இருந்த இ.காங் அரசுகளை நீக்கும்படி ஜனாதிபதியை கேட்டுக் கொண்டனர். அவசரநிலைக்காலத்தில் செய்த குற்றங்களுக்கு இந்த மாநில அரசுகளும் தண்டிக்கப்படவேண்டும் என்பது அவர்களுடைய வாதம். அதனால் 9 மாநிலங்களுக்கு 1978ம் ஆண்டு தேர்தல் நடத்தவேண்டுய நிலை ஏற்பட்டது.
இதன் பிறகு நடந்த தேர்தல் எப்போது எப்படி நடக்குமென்று சொல்லமுடியாதநிலை தோன்றியது . பல்வேறு மாநிலங்களில் பலவகையான கட்சிகள் உருவாகின .அவை இன்றிமையாதவை யாகவும் தோன்றின. மத்தியில் பலம் குறைந்த ஆட்சி ( கூட்டணி ) வரலாயிற்று.
2014ம் ஆண்டு தேர்தலில் இந்தநிலையை மக்கள்மாற்றினர். பா.ஜ.க தனி பெரும்பான்மையுடன் ஆட்ச்சியை கைப்பற்றியது. மாநிலங்களில் வேறு கட்சிகள் ஆட்ச்சியை பிடித்தன .
நாடாளுமன்ற தேர்தல் நடந்தால் எதிர்க்கட்ச்சிகள் இணைந்து பா.ஜ.கவை சந்திக்கும் நிலை ஏற்படலாம் . அதன் "பத்தாம்பசலி " கொள்கையை அனுபவித்த மக்கள் எதிரகடசிகளை ஆதரிக்கும் வாய்ப்பு அதிகமாகிக்கொண்டு வருகிறது.இதனை கண்டு கொண்ட பா.ஜ.க, ஆர் எஸ் எஸ் தலைமை நாடாளுமன்ற தேர்தலோடு சட்டமன்ற தேர்தலையும் நடத்த வேண்டும் என்று ககூ வ ஆரம்பித்து விட்டது .அவர்கள் ஆதரவு தேர்தல் கமிஷனும் நாங்கள் தயார் என்கிறது.
சட்டமன்ற தேர்தலில் உள்ளூர் சண்டியர்களை மோதவிட்டு நாடாளுமன்றம் பற்றிய விவாதத்தில் தான் தப்பி விடவேண்டும் என்று கருது கிறார்கள்.
பாஜ.க வின் இந்த திட்டத்தை மார்க்சிஸ்ட் கடசி எதிர்க்கிறது.திரிணமுல் காங்கிரஸ்,மற்றும்சில கடசிகள் எதிர்க்கின்றன. திமுக,தெலுங்கு தேசம், இன்னும் சில கடசிகள் ஆதரிக்கலாம் என்று கூறப்படுகிறது.
பாஜக.வின் கூட்டணியில் உள்ள சிலகாட்சிகள் எதிர்ப்பதால் மோடியும், அமிடன் ஷாவும் பம்முகிறார்கள்.
நாடாளுமனற ,சட்டமன்ற தேர்தலை ஒரே சமயத்தில் நடத்துவதில் மூலம்,எதிர்க்கட்ச்சிகள் ஒன்றுபடாமல் செய்யவும்,அவர்களுக்குள் அடித்துக்கொண்டு அந்த அமளியில் தன வெற்றியை சாதிக்கவும் பா.ஜ .க திட்டமிடுகிறது .
Thursday, October 12, 2017
வேலை இன்மை ,ஆக்ரமிப்பு ,
இந்த இரண்டு வார்த்தைகளும் ,
ஐ. நா வால் வரையறைக்கப்படவில்லை !!!
இரண்டாம் உலக யுத்தம் முடிந்ததும் ,1945ம் ஆண்டு வாக்கில் ஐக்கிய நாடுகள் சபை உருவாக்கியது .இன்றுவரை வேலையின்மை என்றால் என்ன ? ஆக்ரமிப்பு என்றால் என்ன ? என்ற இந்த இரண்டு வார்த்தைகளும் இந்த சபையால் வரையறுக்கப்படவில்லை.
பொதுவாக ஒருநாட்டின் சகல மானவர்களுக்கும் வேலை இருந்தால் அந்த நாடு நூறுசதம் வேலை வாய்ப்பு பெற்றதாக கருதப்படவேண்டும் என்று சோவியதோண்றியம் உட்பட பெரும்பான்மையான நாடுகள்றகூறி . ன.இதனை அமேரிக்கா மற்றும் அதனை ஆதரவு நாடுகள் ஏற்றுக்கொள்ள மறுத்தன . 70 % லிருந்து 800 % சத்தமிருந்தாலே அது முழுமையாக வேலை வாய்ப்பு அடைந்த நாடாக கருதப்பட்ட வேண்டும் என்று அவை கூறின .அப்போது தான் முதலாளி மார்களுக்கு , பேரம் பேச வாய்ப்புஉண்டு. இல்லையென்றால் தொழிலாளர்கள் கை ஓங்கி விடும் என்பது அவர்கள் நிலையாக இருந்தது. இன்றும் விவாதிக்கப்பட்டு வரும் இந்த வேலையின்மை அப்படியே தொங்கி கொண்டிருக்கிறது .
அதே போன்று ஆக்ரமிப்பு என்பதும் வரையாரைக்கப்படவில்லை.
தென் அமெரிக்க நாடுகளில் தலையிட்டு அமெரிக்க செய்த அட்டூஷியம் உலகமறிந்த ஒன்று . தென் அமெரிக்க நாடுகளுக்கான ஒரு சங்கத்தை வைத்துக் கொண்டு அமேரிக்கா அதன் வேண்டுகோளுக்கு இயங்க ஒருநாட்டில் நான் தலையிடுவேன். அது ஆக்ரமிப்பு அல்ல என்று கூறுகிறது. இதனை "மன்றோ வழிகாட்டுதல் " என்று கூ றி மார்தட்டுகிறது.
சோஷலிசநாட்டின் ஸ்திரத்தன்மையை குலைக்க எந்த சக்தி முயற்சித்தாலும் அதில் தலையிட மற்ற சோஷலிச நாடுகளுக்கு உரிமை உண்டு என்று சோவியத் ஒன்றியம் உறுதியான நிலை எடுத்தது . இதனை "பிரஸ்னோவ் வழிகாட்டுதல் " என்றும் அறிவித்து அன்று "டப்செக் " எதிர் புரட்சியை அடக்கியது செஞ்செனை !
ஆக "ஆக்ரமிப்பு " என்ற வார்த்தையும் வரையறுக்கப்படாமல் தொங்கி கொண்டிருக்கிறது.
Monday, October 09, 2017
பா . ஜ . க -
குறுக்கு ஒடிந்த
விஷ பாம்பு ...!!!
கோடை விடுமுறையில் நாங்கள் எங்கள் கிராமத்திற்கு செல்வோம். கிராமத்திலிருந்து ஒன்று அல்லது ஒன்றரை மைல் துரத்தில் தாமிரவருணி ஆறு ஓடிக்கொண்டிருக்கும் . சிறுவர்களாகிய எங்களை ஆற்றில் சென்று குளித்துவர சொல்வார்கள்.
வெள்ளி,செவ்வாய், அமாவாசை,மாசப்பிறப்பு என்றால் விடிவதற்கு முன்பே எழுப்பி ஆற்றுக்கு போக எழுப்பி விடுவார்கள்.நாங்களும் கப்பி சாலையில் புழுதி பறக்க விளையாடிக்கொண்டே செல்வோம் . பாரவண்டிகள் சென்று நொண்டும் நொடியுமாக சாலை இருக்கும்.
இருபுறமும் வயல் வெளி. சாலையின் பக்கமாக இரண்டு புறமும் தென்னைமரங்களிருக்கும்.அருப்புமுடிந்த வயல்கள் வெரிச்சோடி இருக்கும் .
விடிவதற்கு முன்பே கிளம்பிவிட்டால் தாத்தா எச்சரிப்பார் ! " ஏல ! பாத்து போங்கல ! ரோட்ல குறுக்கு ஒடிஞ்ச பாம்பு கிடக்கும் ! சாக்கிரதை !" என்பார்.
காய்ந்த வயக்காட்டில் இறை கிடைக்காதபாம்புகள்ரோட்டைத்தாண்டி வந்து தவளை,எலியை விழுங்கும் . வேகமாக ஊர்ந்து செல்லமுடியாமல் சாலையின் குறுக்கே கிடக்கும் . பாரவண்டிகளின் சக்கரத்தில் அடிபட்டு குறுக்கு ஒடிந்து ரோட்டில் ஒட்டிக்கொண்டு இருக்கும் ,இதில் விஷ பாம்புகள் என்றால் அதிர்வுகளை உணர்ந்து சீரிக்கொண்டிருக்கும் .அருகில் சென்றால் கொத்திவிடும்.
எங்கள் செட்டில் "சுப்பா " பெரியவன் . "ஏல !சுப்பா ! கைல ஒரு குச்சி வச்சுக்க ! பாம்பு சீ ரித்துநா குச்சியால தூக்கி " வாருகால்ல " போட்டுடூ " என்பார் .
குறுக்கொடிந்த விஷ பாமபை வாருகாலில் தூக்கி எறியும் நேரம் வந்துவிட்டது .!!!
Sunday, October 01, 2017
"காலந்தோறும் ,
தர்ம நியாயங்கள் ....!!! "
மனிதன் தோன்றிய போதே சமூகமனிதனாக உருவாகவில்லை. தாங்கள் மனிதர்கள் என்ற பிரக்ஞை கூட இல்லாமல் இருந்தார்கள். சிறுத்தை போல ஒருவருக்கொருவர் சிறுவதும்,நாய்களைப்போல கடித்துக் குதறுவதுமாகவே இருந்திருக்கிறாரகள் . எந்தவித கட்டுப்பாடு,நியா தர்மங்கள் பற்றிய புரிதல் இல்லாமல் வாழ்ந்திருக்கிறார்கள்.
அப்போது தான் அவர்களிடையே ஒரு மகான் தோன்றினார்.நாம் காட்டுமிராண்டிகளல்ல.நாம் கடவுளின் குழந்தைகள்.நமக்கு என்று வகுத்த வழியில் வாழ்வோம் என்று உபதேசித்தார்
அந்தமகான் தான் ஆபுறகாம் .
உபதேசங்களை பலர் ஏற்றனர். கொஞ்சம் கொஞ்சமாக இவர்கள் வளர்ந்தனர். ஒருகட்டத்தில் இவர்கள் பேரவாரியாகவுக் நம்பிக்கையாளராகினர் .நம்பிக்கையற்று ஆப்றக்காமை ஏற்காதவர்கள் காட்டுமிராண்டிகளாக திரிந்தனர்.
அவர் காலத்திற்கு பிறகு நம்பிக்கையாளர்கள் தங்களை மேம்பட்டவர்களாக கருதிக் கொண்டு மற்றவர்களை அழித்து தாக்க ஆரம்பித்தனர்.இது அன்றய தர்மமாக கருதப்பட்டது.
இந்த நிலையை போக்க ஒருமகான் தோன்றினார். இனகு ழு க்களாகஇருந்த மக்கள் ஒருவருக்கு ஒருவர் கூட்டம் கூட்டமாக அடித்து சாவதை தடுக்க விரும்பினார்.ஒரு குழு வை சேர்ந்தவன் செய்த தவறுக்காக அந்தக்வைகுழுவையே கொன்று குவிப்பது தவறு என்று போதித்தார் ."ஒருவன் உன் கண்ணை காயப்படுத்தினால் அவன் கண்ணை சேதப்படுத்து. ஒருகண்ணுக்கு ஒருகண்.ஒருக்காலுக்கு ஒருகால் " என்று உபதேசித்தார் . அவர்தான் "மோசஸ் ". சில நூற்ராண்டுகல் கடந்தன.
மீண்டும் ஒருமகான் தோன்றினார். "உன் எதிரியையும் நேசி>ஒருகன்னத்தில் அடித்தால் மறுகன்னத்தை காட்டு.அமைதிவழி அகிம்சை வழியில் செல் " என்றார். அவர்தான் ஏசுபிரான்.
மனித வாழ்க்கையின் உன்னதமான வழிமுறையை மனிதகுலம் கண்டெடுத்தது. ஆனால் வாழ்க்கையில் கடைப்பிடிக்க கடினமாக இருந்தது. அதில் ஒரு சிறு மாறுதலை கொண்டுவந்து அமைதி மார்க்கத்தை கொடுத்தார் மகான் நபிகள்நாயகம்.
ஆயிரம் ஆண்டுகளாகி விட்டது.இந்தமாற்றங்கள் ஏற்பட்டு
அமெரிக்காவிலிருந்து ஜோன் என்ற தத்துவமேதை இந்தியாவந்தார்> இங்கேயே ஆசிரமம் கட்டி வாழ்ந்தார் .காந்தி அடிகளின் உபதேசங்களைக்கேட்டார்> ஆசிரமம் அமைத்து இங்கேயே தங்கினார்
காந்தியோடு விவாததித்தார் " காந்தியிடம் "ஐயா 1 உங்கள் அஹிம்ஸை வழியில் புதியதாக என்ன இருக்கிறது . இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஏசுபிரான் உன் எதிரியையும் நேசி "என்று கூறிவிட்டார் ! அதைவிட நீங்கள் என சொல்லப்போகிறீர்கள். " என்று கேட்டார்.
அண்ணல் கைராட்டையை சுற்றிக்கொண்டு இருந்தார்>மெதுவாக நிமிர்ந்து ஜோன் அவர்களை பார்த்தார் .தூரத்து அடிவானத்தை பார்த்துக்கொன்டே கூறினார் '
"எங்கண்ணுக்கு எதிரி யாருமே தெரியவில்லையே ! நான் என்ன செய்ய ? !"என்றார் அண்ணால்காந்தி அடிகள்
Thursday, September 28, 2017
சரசுவதி பூஜையும் ,
முற்போக்கு இலக்கியமும் ...!!!
நான்வசிக்கும் அடுக்ககத்தில் நாற்பது குடும்பங்கள் உள்ளன . வங்காளிகள், பிஹாரி, எம்.பி ,உபி ,மராட்டி,தெலுங்கு,கன்னடம்,மலையாளம்.என்று இந்தியாவின் சகலப்பகுதி மக்களும் உள்ளனர்.இங்கு வசிக்கும் பெண் களில் முத்துமீனாட்ச்சி முக்கியமானவர்.
காரணம் வயது 75 + ! அது தவிரஅவர்இந்தி,தமிழ்,ஆங்கிலம்,சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் எழுத படிக்க சரளமாகப்பேச முடிந்தவரும்கூட. மேலும் வங்காளி,மராட்டி மொழிகளில் பேசி சமாளிக்கும் அளவுக்கு தெரிந்தவர். அதனால் அவர் இந்த குடும்பங்களின் "டார்லிங் " எனலாம்.
இந்த பெண்கள் நன்றாக படித்த நல்ல பணியில் இருப்பவர்கள் ! இருந்தவர்கள். என் வீட்டிற்கு எதிராக இருக்கும் அம்மையார் பொறியியற் கல்லூரியில் முனைவர் பட்டம் பெற்ற பேராசிரியர். காலையில் முத்துமீனாடசியைப்பார்த்ததும் காலை தொட்டு வணங்குவார். அப்படி ஒரு sentiment உள்ள வர்கள் இவர்கள்.
இவர்கள் கூட்டு வழிபாட்டில் ஈடுபாடு உள்ளவர்கள். எந்த பண் டிக்கையானாலும் குறிப்பாக விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி, என்று வந்தால் ஆட்டம் பாட்டம் தான்.
முது மினாடசியை ஒவ்வொரு வீட்டிலும் அழைத்து ஆர்த்தி குங்குமம் அளிப்பார்கள். அதோடு ஏதாவது பரிசுப்பொருளும் கொடுப்பார்கள். கடந்த 15 வருடமாக இது நடந்து வருகிறது. எங்கள் வீட்டில் நீத்தார் நினைவு நாள்கூட கிடையாது .
முத்து மீனாட்ச்சிக்கு இப்போதெல்லாம் ஒவ்வொருவீட்டுக்கும் செல்வது ஆயாசமாக இருக்கிறது.முதுமையும்,இயலாமையும் காரணம்.இந்த ஆண்டு மற்றவர்களை வரவழைத்து ஆர்த்தி குங்குமம் கொடுக்கலாமென்று ஆசைப்பட்டார். அதனை சரசுவதி பூஜை அன்று நடத்தலாம் என்று அபிப்பிராயப்பட்டார். கொலுவைப்பதில்லை அதனால் சரசுவதி பூஜையை எப்படி கொண்டாடுவது என்று யோசித்தோம்.
சரசுவதி பட்த்தினை மாட்டி கொண்டாடலாம் என்று முடிவாகியது.பரிசுப்பொருள் என்ன வாங்குவது என்று இரவு முழுவதுமயோசித்தோம்.
"ஏனுங்க ! செம்மலரில் வந்த கதைகளை இந்தி,ஆங்கிலம், சம்ஸ்கிருதம் ஆகிய மொழிகளில் மொழிபெயர்த்து செய்த புத்தகங்கள்கொடுத்தால் என்ன ?"என்றார் முத்துமீனாட்ச்சி .
"இது தவிர வங்க மொழியில் ஐந்து,மராத்தியில் நான்கு ,தெலுங்கி பத்துக்கதைகள் பிரசுரமாகியுள்ளன அவற்றின் ஜெராக்ஸ் நகலை எடுத்து ஒருவடிவமாக்கி கொடுக்கலாம் 'என்றும் கூறினார்.
இந்த யோசனை சரியாக தெரிந்தது. காரியங்கள் வேகமாக நடந்தன.
இந்த ஆண்டு செம்மலர் தமிழ்கதைகள் அவரவர் தாய் மொழியில் சரசுவதி அம்மனின் பிரசாதமாக கிடைக்கும் .
"ஏன் மாமா ! சரசுவதி அம்மனை முற்போக்கு எழுத்தாளர் சங்க உறு ப்பினராக்கிவிடுவீர்கள் போல் இருக்கு" என்று என் மைத்துனர் கேட்டார்.
"அதுவும் நடக்கலாம் " என்றேன் நான் !
Wednesday, September 27, 2017
(மீள் பதிவு )
மதியம் தான் கட்டுரைகளை படிப்பது வழக்கம் . ஒருநாள் அப்படி படித்துக்கொண்டிருந்தேன்.இந்தமனுஷன் எட்டி பார்த்தார் . " வாருங்கள்"என்றேன் அமர்ந்தார்.
" புளுகுணிகள் "
நான் வசிக்கும் அடுக்ககத்தில் ஐந்து மாடிகள் உள்ளன> அந்த மனிதர் ஐந்தாவதுமாடியில் இருந்தார். ஜிப்பா,பைஜாமாபோட்டிருப்பார். சிலசமயம் வடநாட்டு பஞ்ச்கசம் அணிந்திருப்பார். நெற்றியில் சந்தனகோடு நடுவில் குங்குமம்.சுத்தமான சுயம் சேவக். இவரைப் பொறுத்தவரை தான் சுயம் சேவக் என்பதை காட்டிக்கொள்வதில் பிரியம் கொண்டவர்.
எங்கள் யார்ட்டிவீ ட்டி லாவது பூஜைமணி அடிக்கும் சத்தம் கேட்டால் அந்த வீட்டின் பூஜை அறைக்குள் புகுந்து விடுவார்அவருக்கு தெரிந்த பாடல்கள்,ஸ்லோகங்கள் என்று பாட ஆரம்பித்து விடுவார்.சில சமயம்பிரவசனங்கள்செய்ய ஆரம்பித்து விடுவார்.பாதி தப்பாக இருக்கும். இங்கு விநாயக சதுர்த்தி, விஜய தசமி என்று கூட்டு வழிபாடு நடக்கும்.பந்தலில் அமர்ந்தால் லேசில் எழந்திரிக்க மாட்டார்.
நான் காலையில் "இந்து" பத்திரிக்கை படிப்பவன். ஹைதிராபாத் பதிப்பு. நேற்றைய பதிப்பு நாளை வரும். தலையங்கம், நடுப்பக்க கட்டுரை, சிறப்பு கட்டுரை ஆகியவற்றுக்காக வாங்குவேன். சிலசமயம் வரவில்லை என்றால் கீழே சென்று செக்க்யுரிட்டியிடம் இருந்து பெற்றுக்கொள்வேன்.
ஒருநாள் அப்படி வாங்கி வரும்போது இந்தமனிதர் எதிர்ப்பட்டு விட்டார். "இந்து" பத்திரிகையா? என்று விசாரித்தார்.
"ஆம்" "
"நானும் வாங்க வேண்டும் "
"வாங்குங்களேன் "
"இந்து" தர்மம் பற்றியும் இந்து மதம் பற்றியும் நிறைய கட்டுரைகள் வரும் .அதனால்தான்"
இந்த கிறுக்கன் என்ன சொல்கிறான் என்று யோசித்தேன்..பத்திரிகையின் பெயர் " இந்து"ஆகவே அப்படித்தான் இருக்குமென்று நினைத்து விட்டான்.நின்றால் ஆபத்து என்று கருதி லிப்டுக்குள் புகுந்து விட்டேன்.
மதியம் தான் கட்டுரைகளை படிப்பது வழக்கம் . ஒருநாள் அப்படி படித்துக்கொண்டிருந்தேன்.இந்தமனுஷன் எட்டி பார்த்தார் . " வாருங்கள்"என்றேன் அமர்ந்தார்.
"நான் சிறு வயதிலேயே "இந்து" ஆசிரியர் சொற்பொழிவை "ரஷிம்பாக்கில்" கேட்டிருக்கிறேன்.அருமையாக பேசுவார் : "
"யாரு ? அவர் N .ராம் .அவருக்கு வயது 60 அல்லது 61 தானே இருக்கும் !"
ரஷீம் பாக் பாக் எனபது ஆர்.எஸ்.எஸ். தலைமையகம் இருக்கும் இடத்திலுள்ள மைதானம்.
"ஆமாம் இல்ல ! அவருடைய தந்தை நாராயண் !'
"அவர் பெயர் நரசிம்மன்."
"ஆமாம் .அவர்தான். மைதானத்தில் பெரும் கூட்டம். அவர் அற்புதமாக பேசினார்.அருகில் அவர்மகன் சின்ன பையன் ராம் பூணுல் போட்டு நின்று கொண்டு சுலோகம் சொன்னான் "
என்முகத்தில் எள்ளும்கொள்ளும் வெடிக்கஆரம்பித்து விட்டது. "இந்தாங்க ! போன் " என்று கூறி முத்து மினாடசி கை பேசிய நீட்டினாள். எடுத்துக்கொண்டுவெளியேறினேன். போன் சத்தமேயில்லை ." அந்த ரூம்ல போய் இருங்க .இந்த ஆளு போனப்புரேம் வாருங்க " .என்று சமாளித்தார் .
மறை ந்த தலைவர் ஏ.பாலசுப்பிரமணியம் கூறுவார் ." ஒரு கூடை செங்கல்லும் "பிடாரி"னா என்ன செய்யமுடியும்டா சாமா ? "என்பார்
"ஒரு அரசன் இருந்தான். தனக்கே தனக்கு என்று அரண்மனை கட்டினான் .அவன் குடிபுகுமுன் அங்கு பேய் குடிபுகுந்து விட்டது. மலையாள தேசத்திலிருந்து மந்திரவாதியா அழைத்து பேய் ஓட்ட ஏற்பாடு செய்தான்.மந்திரவாதி என்ன செய்தும் பேயை ஓட்டமுடியவில்லை.
"மகாராஜா ! நீங்கள் அரண்மனை சுவருக்கு செங்கல் வாங்கினீர்கள் இல்லையா ? அவை அத்தனையிலும் பேய் புகுந்துவிட்டதுஇதனை ஓட்டமுடியாது " என்றான் மந்திர வாதி..
நரேந்திர மோடி வடகிழக்கு மாநிலம் போனார் "அங்கு உங்கள்நாட்டு இளவரசி ருக்மனியை எங்கள் கிருஷ்ணன் மணந்தான் " என்றார் நாகபுரியில் உள்ள 8ம் வகுப்பு சிறுவன் " விதர்ப்ப தேசத்து இளவரசி ருக்மணி அது நாகபுரியை சுற்றி உள்ள தேசம்."என்று பிரதமருக்கு பதிலளித்தான்.
பிரதமராகுமுன் மோடி திருசி வந்தார்." வ.உ.சி தலைமையில்நடந்த உப்புசத்த்யாக்கிரகம் "என்று கூறி புதிய சரித்திரமெழுதினார் ..
கூடை செங்கல்லும் பிடாரி என்றால் என்ன செய்ய முடியும்.!!!
அறியாமை வேறு .!
புளுகுவது வேறு !!
இவர்கள் புளுகுணிகள்.!!!
Monday, September 25, 2017
"காவேரி மேலாண்மை வாரியம் "
பா.ஜ .க. வின் இரட்டை நாக்கு...!!!
காவேரி வாரியம் அமைக்க நீதிமன்றம் >உத்திரவிட்டது . அதனை காங்கிரஸ் அரசு நிறைவேற்றவில்லை. இதனை வெகுவாக விமரிசித்த அன்றைய பா..ஜ .க.
நதிநீர் தாவா வந்தால் என்ன செய்ய வேண்டும் என்பது என்பது பற்றி நமது அரசியல் சட்டம் குறிப்பிட்டுள்ளது.மத்திய அரசு ஒரு திட்டத்தை வகுத்து சம்மந்தப்பட்ட மாநிலங்களோடு விவாதித்து அதனை நாடாளுமனறத்தில் வைக்க வேண்டும் .நாடாளுமனறம் முடிவு செய்யும் .
மத்திய அரசு இதுவரை வழிகாட்டுதலை பிணைப்பற்றவில்லை. நர்மதா திட்டத்தை 70 ஆண்டுகள் இழுத்தடித்து இரண்டு நாள் முன்பு நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் .இது பற்றி நாடாளுமனறத்தில் வாயை திறக்க வில்லை> ஆளும்கட்ச்சியும்சரி ,ஆண்ட காட்ச்சியும் சரி !
கோதாவரி பிரச்சினையிலும் நாடாளுமன்றம் செல்லவில்லை .
காவேரி பிரச்சினையில் மட்டும் பா.ஜ.க பல்டி அடிக்கிறது. மாநிலங்கள் அவை உறுப்பினர் சிவா இதனை எழுப்பினார். அமைசசர் "இதனை உச்ச நீதிமன்றம் தான் முடிவு செய்ய வேண்டும் " என்று எழுத்து மூலம் பதில் அளித்தார் .
இரண்டு நாள் முன்பு உச்சநீதிமன்றம் மேலாண்மை வாரியம் ஏன் அமைக்கவில்லை என்று கேட்டது . "நீதிமன்றம் தலையிட முடியாது.இது நாடாளு மன்றத்தின் உரிமை " என்று மத்திய அரசு" கூறியுள்ளது
கர்நாடகாவில் தேர்தல் வருகிறது .!
மேலாண்மை வாரியம் வராது !!!
Thursday, September 21, 2017
உலக யுத்தம் வந்தால் ,
அடுத்து கற்காலம் தான் ...!!!
"அடுத்த உலக யுத்தம் என்பது அணுயுத்தமாக தான் இருக்கும். அதன் பிறகு கற்காலம் தான் மிஞ்சும் " என்று விஞ்ஞனி ஒருவர் கூறினார் .
ராணுவப்பலத்தில் இன்று உலகத்தில் முதல் இடத்தில் இருப்பது அமேரிக்கா . அணு ஆயுதம்,அதனை செலுத்தும் ஏவுகணைகள் அணுசக்தி நீர்முழ்கி, என்று ஏராளமான ஆயுத பலம் கொண்டுள்ளது.அடுத்து இருப்பது ரஷ்யா ! இரண்டாவது இடத்திற்கு போட்டி போடும் நிலையில் சீன தேசம் வளர்ந்துள்ளது.
சீனாவிடமும் அணுகுண்டு, ஏவுகணை என்று உள்ளது. சீனாவை எதிர்த்து இன்று இந்தியா நிற்கிறது .அணு ஆயுதம்,அதனை கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் இந்தியாவிடம் உள்ளன .இன்று ஒரு ஏவுகணை மூலம் 104 சட்டலைட்களை ஏவும் சக்தி இந்தியாவிற்கு உள்ளது என்பதைக் கண்டு உலகம் வியந்து நிற்கிறது . எந்த நாட்டின் எந்த பகுதியிலும் என்ன நடக்கிறது என்பதை செயற்கை கோல்கள் மூலம் அறிந்து . கொள்ள முடியும். இறுதி போரின் பொது புலிகளின் நடமாட்டத்தைஇலங்கை ராணுவத்திற்கு புகைப்படமாக கொடுத்ததே இந்தியாதான் என்று பேச்சு அடிபட்டது நினைவிருக்கலாம் .
இந்திய சீன எல்லைத்தகராறு அடிக்கடி சீறி எழும் பொது இந்துத்வா காரர்கள் வெறி கொண்டு கத்துவது வழக்கம்.
இப்போது வடமேற்கே லே பகுதியில் இந்திய சீனா ராணுவம் முட்டிக்கொண்டு நிற்கிறது .நேருக்கு நேர் ,(eye to eye ) நிற்கிறது. தவறான சிறு நடவடிக்கையும் படு பயங்கரமான யுத்தத்தில் கொண்டு நிறுத்தி விடலாம் . துப்பாக்கி. என்றால் துப்பாக்கி ! பீரங்கி என்றால் பீரங்கி ! அணுகுண்டு என்றால் அணுகுண்டு !
இரண்டு ராணுவமும் மாற்று ஆயுதத்தை உபயோகிக்க ஆரம்பித்துள்ளன . இருவருக்கும் அழிவு எப்படி என்பது தெரிந்தே உள்ளது
சீன ராணுவம் இந்திய வீரர்களை நோக்கி 2" 3" சரளைக்கற்களை வீசுகிறார்கள்.பதிலுக்கு இந்திய வீரர்கள் சீன வீரர்களை நோக்கி 4" சரளைக்கற்களை வீசுகிறார்கள்.
"காயம்" தான் ஏற்படுகிறது.உயிர் சேதமோ,அழிவோ இல்லை.
"அணுகுண்டு வைத்திருப்பதால் ஒருவன் பலசாலியாக முடியாது. அவன் வெறும் காகிதப்புலி " என்றார் மாவோ !
சரிதானே !!!
Saturday, September 16, 2017
மதமாற்றம் முடியும் !
சாதி மாற்றமும் முடியும் !!
ஒரு இந்து கிறிஸ்துவராக முடியும். இஸ்லாமியராக முடியும். ஆனால் ஒரு தேவர் அய்யராக முடியுமா ?
நம் பொதுப்புத்தியில் முடியாது என்றே பதிந்துதுள்ளது.ஆனால் நிதர்சன வாழ்க்கையில் இது நடந்தே வருகிறது.
நான் வசிக்கும் பகுதியில் எனக்கு தெரிந்த கர்நாடக மாநில குடும்பம் வாழ்ந்து வருகிறது. தீவிரமான கிருஷ்ன பக்தர் ! காலையில் good morning என்று சொல்ல மாட்டார். "அரே கிருஷ்ணா " என்பார் . ஒருநாள் என்னிடம் வந்து நான் பிரமணனாகப்போகிறேன் என்றார். அவர் பிராமணர் அல்ல என்பது கூட அவர் சொல்லித்தான் இப்பொது தான் தெரியும். இப்படி அவர் பலதடவை,பல மாதங்களாக சொல்லியிருக்கிறார்.
திடீரென்று ஒருநாள் அவருடைய நடை உடை பாவனையில் மாற்றம் . இடையில் பஞ்ச்கச்சம். ஜிப்பா தலையில் பின் பகுதியில் நீளமாக உச் சிக்குடுமி ! என்னிடம் "நான்பிராமணனாகதீட்சை பெற்றுக்கொண்டேன்" என்று கூறினார் .அவர் மனைவியும் மாறியிருந்தார் எனக்கு ச்சரியமாக இருந்தது.
பிரபு பாதர் என்று ஒரு மகான் இருந்தார்.அவர் தீவிரமான கிருஷ்ண பாக்தர். கிருஷ்ணர் ஒருவர் தன தெய்வம் வேறு தெய்வம் இல்லை என்று நம்பும் ஒரு மதத்தை நிறுவினார். அமெரிக்காவிலும்,ஐரோப்பாவிலும், ஆஸ்திரேலியாவிலும் பரப்பினார் ஏராளமான வெள்ளைக்காரர்கள் இதில் இணைந்தனர்.
இந்த மதத்திற்கு INternaational society for Krishna conciusness (இஸ்கான் ) என்று பெயர். வெள்ளைக்கார கிருஷ்ண பக்தர்கள் பூணுல்.உச் சிக்குடுமி ,பஞ்ச்கச்சம் கட்டிக்கொண்டு வாழ்ந்தனர்> பிரபு பாதர் இவர்களுக்கு தீ ட் சை அளித்தார்.
வெள்ளைக்கார ஹென்றி பிராமணனாக லாம் என்றால் இந்தியர்கள் என் முடியாது?
நமதுகர்நாடக நண்பர் குடும்பமும் தீட்சை பெற்றது .
எனக்கு ஒரு யோசனை !
டாக்டர்கிருஷ்ணசாமி பேசாமல் தீட்சைபெற்று பிராமாணராகிவிட்டால்..!!
இடஒதுக்கீடு பிரச்சினையே வராதே !!!
மதமாற்றம் முடியும் !
சாதி மாற்றமும் முடியும் !!
ஒரு இந்து கிறிஸ்துவராக முடியும். இஸ்லாமியராக முடியும். ஆனால் ஒரு தேவர் அய்யராக முடியுமா ?
நம் பொதுப்புத்தியில் முடியாது என்றே பதிந்துதுள்ளது.ஆனால் நிதர்சன வாழ்க்கையில் இது நடந்தே வருகிறது.
நான் வசிக்கும் பகுதியில் எனக்கு தெரிந்த கர்நாடக மாநில குடும்பம் வாழ்ந்து வருகிறது. தீவிரமான கிருஷ்ன பக்தர் ! காலையில் good morning என்று சொல்ல மாட்டார். "அரே கிருஷ்ணா " என்பார் . ஒருநாள் என்னிடம் வந்து நான் பிரமணனாகப்போகிறேன் என்றார். அவர் பிராமணர் அல்ல என்பது கூட அவர் சொல்லித்தான் இப்பொது தான் தெரியும். இப்படி அவர் பலதடவை,பல மாதங்களாக சொல்லியிருக்கிறார்.
திடீரென்று ஒருநாள் அவருடைய நடை உடை பாவனையில் மாற்றம் . இடையில் பஞ்ச்கச்சம். ஜிப்பா தலையில் பின் பகுதியில் நீளமாக உச் சிக்குடுமி ! என்னிடம் "நான்பிராமணனாகதீட்சை பெற்றுக்கொண்டேன்" என்று கூறினார் .அவர் மனைவியும் மாறியிருந்தார் எனக்கு ச்சரியமாக இருந்தது.
பிரபு பாதர் என்று ஒரு மகான் இருந்தார்.அவர் தீவிரமான கிருஷ்ண பாக்தர். கிருஷ்ணர் ஒருவர் தன தெய்வம் வேறு தெய்வம் இல்லை என்று நம்பும் ஒரு மதத்தை நிறுவினார். அமெரிக்காவிலும்,ஐரோப்பாவிலும், ஆஸ்திரேலியாவிலும் பரப்பினார் ஏராளமான வெள்ளைக்காரர்கள் இதில் இணைந்தனர்.
இந்த மதத்திற்கு INternaational society for Krishna conciusness (இஸ்கான் ) என்று பெயர். வெள்ளைக்கார கிருஷ்ண பக்தர்கள் பூணுல்.உச் சிக்குடுமி ,பஞ்ச்கச்சம் கட்டிக்கொண்டு வாழ்ந்தனர்> பிரபு பாதர் இவர்களுக்கு தீ ட் சை அளித்தார்.
வெள்ளைக்கார ஹென்றி பிராமணனாக லாம் என்றால் இந்தியர்கள் என் முடியாது?
நமதுகர்நாடக நண்பர் குடும்பமும் தீட்சை பெற்றது .
எனக்கு ஒரு யோசனை !
டாக்டர்கிருஷ்ணசாமி பேசாமல் தீட்சைபெற்று பிராமாணராகிவிட்டால்..!! !
இடஒதுக்கீடு பிரச்சினையே வராதே !!!
Thursday, September 07, 2017
லிங்காயத்துகள் ,
"இந்துக்கள் அல்ல "
கௌரி லங்கேஷ் அறிவித்தார் .
பத்திரிகையாளரும்,சமூக செயல் பாட்டாளருமான கௌரி லங்கேஷ் அடையாளம் தெரியாதவர்களால் ( ! ) சுட்டு கொல்லப்பட்டார் .
எந்த சமரசமுமில்லாமல் கம்பிரமான வாழ்க்கையை வாழ்ந்தவர் கௌரி.
பெருமாள் முருகன் எழுதிய "மாதொரு பாகன்" நாவலை ஆதரித்ததால் கர்நாடக பிராமண சங்கத்தினரால் வசைபாடப்பட்டார்.
எழுத்தாளர் பைரப்பா "பர்வா" என்ற நாவலை எழுகினார் அந்த நாவல் மாகாபாரதத்தின் மறு வாசிப்பாகும் . கணவனால் சந்ததி பெற முடியாத பெண்கள் வேறொரு ஆணோடு கூடி வாரிசு பெற்றுக்கொள்ளலாம்.இதனை இந்து சாஸ்திரம் அனுமதிக்கிறது. இதனை "நியோகி தர்மம் " என்று வர்ணிக்கிறார்கள். தன்னுடைய நாவலில் பைரப்பா இதனை எழுதியுள்ளார்.
அவரை கண்டிக்காத பிராமணர்களும் இந்துத்வா வாதிகளும் பெருமாள் முருகனை எதிர்ப்பது என் ? என்று கேள்வியாய் எழுப்பினார் . பைரப்பாபிராமணன்.பெருமாள் முருகன் பிராமணன் அல்ல .அப்படித்தானே என்கிறார்.
லிங்காயத்துகள் இந்து மதத்தை சார்ந்தவர்கள் அல்ல .அவர்களுக்கு சிறுபான்மையினர் அந்தஸ்து கொடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுப்பியுள்ளார்.
கர்நாடகமாநிலத்தில் "நக்சலைட்" கள் மறுவாழ்வுக்கான குழு வில் பணியாற்றிவந்தார்.
சமரசமற்ற அந்த போராளியை கொன்றுவிட்டார்கள் !
Monday, September 04, 2017
"காவிரிப்படுகையும்
சு.வெங்கடெசனும்"
காவிரிபடுகையில் கம்யூனிஸ்டுகள் பொருளாதார நிலையை மாற்ற எடுத்தனடவடிக்கைகளின் பயன் தான் அங்கு தலித் மக்களுக்கு எதிரான கொடுமைகள் மற்ற பகுதிகளில் இருப்பதை விட குறைந்துள்ளது என்று பொருள்பட சு.வெங்கடெசன் கூறியுள்ளார் ( தடம் பத்திரிகை தபாலில் இன்னும் வரவில்லை )
வாசுமுருகவேல் என்பவர் அதற்கு எதிர்வினை ஆற்றீயுள்ளார் .அயோத்தி தாசரையும்,இரட்டைமலை சிணிவாசன், பெரியார் என்று குறிப்பிட்டுள்ளார். கம்யுணீஸ்டுகள் காலம்கடந்து சாதியை தொட்டுள்ளனர் என்று குற்றம்சாட்டியுள்ளார். இதில்மிகவும் வேதனயான ஒன்று சில இடது சாரி அறிவு ஜீவிகள் (?)கூட தங்களை அறியாமயால் இதன ஒத்துக்கொள்ளும் மனப்பாங்கு கொண்டவர்களாக இருக்கிறார்கள்.
கம்யூனிஸ்டுகளி ன் செல்வாக்கை குறைக்க "பறையன் கட்சி " என்று வர்ணித்தது காலத்தால் பிந்தய ஒன்றாகும் .
"அடித்தால் திருப்பி அடி " என்று போர்க்குணமிக்க மக்களுக்கு கற்றுக்கொடுத்தது கம்யூனிஸ்டு இயக்கம்.
"வாடி !" என்றால் "வாடா" என்று திருப்பி சொல் என்று குறிப்பிட்டது கம்யூணீஸ்ட இயக்கம் .
சினிவாச ராவையும்,, ஏ.பால்சுப்பிரமணியத்தயும் தவிர்க்க முடியுமா?
தொல்பதனிடும் தொழிலாளர்கள் வீட்டில் தங்கி உண்டு உறங்கிய வர் ஏ.பி.
ராமாயணத்தை மறுவாசிப்பு செய்து பெரியாருக்கு எடுத்துக் கொடுத்தவ்ர்கள் ஏ.பி யின் தந்தை அமிர்தலிங்கம் அய்யரும்,அவருடைய தமயனார் நிதிபதி பரமேசுவர அய்யரூம் தான்..
கவிரிபடுகை மக்களின் விடுதலக்கா சினிவாச ராவின் தீரமிக்க பாடுகளை மறப்பவர்களும் .மறுப்பவர்களும் இருக்கிறார்களே என்று எண்ணூம் பொது வேதனிதன்மிஞ்சுகிறது.
இருவரும் பிரமணராக பிறந்தது அவர்கள் தவறல்ல என்பதை மட்டும் குறிப்பிடுகிறேன்.
Friday, September 01, 2017
திரைப்பட இயக்குனர் ,
"ராம் " சாமியாரின் ,
உபதேசங்கள் ....!!!
" நான் அடிமை . எப்போது அடிமையானேன் தெரியுமா ? முதலாளித்துவத்தின் மோசமான வடிவமான ஜனநாயகத்தை இடது சாரிகள் என்று ஆதரிக்க ஆரம்பித்தார்களோ அன்றிலிருந்து " என்று திரைப்பட இயக்குனர் "ராம் "சாமியார் உபதேசித்துள்ளார்.
கிட்டத்தட்ட பத்து நாட்களாக யு டியூப் நிகழ்ச்ச்சியை திருப்பினால் ராம் அவர்களின் பேச்சு தான். அவர் எடுத்து சமீபத்தில் வெளிவந்த "தரமணி "என்ற படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. வடநாட்டில் இருக்கும் நான் அந்தப்படத்தை பார்க்கவில்லை>யு டியூபில் அது பற்றி மிகசிறப்பாகச்சொல்கிறார்கள்.
உண்மையில் அவர்கள் விவரிப்பது போல் இருந்தால் மிகவும் பாராட்டப்பட வேண்டிய படைப்பாகத்தான் இருக்கும்.
ராம் அவர்களின் "தங்க மீன்கள் ", "கற்றது தமிழ் " பார்த்திருக்கிறேன்.மிகவும் வித்தியாசமான படைப்புகள் தான் அவை இரண்டும். தற்போது "தரமணி " பற்றி மிகசிறப்பாக விமர்சிக்கப்படுகிறது> மிகவும் dicriminate பண்ணி பார்க்கும் விமரிசகர்கள் கூட நல்லவிதமாக குறிப்பிடுகிறார்கள்.
ராம் சிறந்த படிப்பாளி. அதனாலேயே சிறந்த படைப்பாளியாகவும் இருக்கிறார். பொலன்ஸ்கி பற்றி அவருக்கு தெரியும். அந்த நாட்டில் ஒருவர் திரைப்பட இயக்குனராக வேண்டுமானால் குறைந்தது 18 ஆண்டுகள் படிப்பும்பயிற்சியும் வேண்டும். அதன் பிறகு தான் இயக்குனராக முடியும்.
கோலிவுட்டில் அப்படி இல்லை..
ஊடகங்கள் ராமின் வெற்றியை தங்களுக்கு காசாக்கப்பார்க்கின்றன.அவரை நேர்காணல் என்ற பெயரில் சலிக்கசெய்கின்றன. பாவம் ! அவரும் பதில் சொல்லி விளக்கம் சொல்லி, அலுத்து விட்டார் இப்பொது பல்கலை களி ல் மாணவர்களிடையே பேசஆரம்பித்துள்ளார் .மனோன்மணியம் சுந்தரனார் பலகலை மாணவர்களிடயே பேசும் பொது தான் இந்தஇடுகையின் முதல் வரியில் சொன்ன உபதேசத்தை செய்துள்ளார் .
"ஊருக்கு இளைச்சவன் பிள்ளையார் கோவில் ஆண்டி " என்று ஒரு சொலவடை உண்டு.இடது சரியை யார் வேண்டுமானாலும் ......
கம்யுனிஸம் செத்து விட்டது என்று அந்த ஊசிப்போன ராசா கத்துவான்.
நீங்களுமா ? ராம் ! வேண்டாமே !!!
"காலமும் ,கடவுளும் ...!!! "
"காலம் என்றால் என்ன ? "என்று அறிவியல்ரீதியாக தெரிந்து கொள்ள முயன்றே.ன் ! அந்த முட்டு சந்தில் கடவுளைப்பற்றியும் புலப்பட்டது.
"காலம் என்றால் என்ன ? what is Time ? It is an intervel between two phenamena "என்கிறது அறிவியல்.
"காலம் என்பது இரண்டு சம்பவங்களுக்கான இடைவெளி "
கட்டியாரத்தின் சின்ன முள் 1 லயிருக்கிறது .இது ஒரு சம்பவம் . சின்ன முள் 2 ல் இருக்கிறது இதுவுமொருசம்பவம். இரண்டுக்குமான இடைவெளி ஒருமணி நேரம்.
நான் இங்கே எழுதிக்கொண்டிருக்கிறேன்.நீங்கள்பார்க்கிறீர்கள் .இது ஒரு சம்பவம். நான் இந்த பூமியில் பிறந்தேன் .அதுவுமொரு சம்பவம் இரண்டுக்கும் .இடைவெளி 82 ஆண்டுகள்.
காலம் எப்போது ஆரம்பமாகியது.? நான் பிறந்த போதா ? அதற்கு முன் என்தந்தை பிறந்தார் !அப்போதா ? என்பாட்டான் பிறந்த போதா ? அதற்குமுன் ...! நாயக்கர் காலமா? பிரிட்டிஷார் வந்தப்போதா? சேர சோழ பாண்டியர் காலமா? அசோகன் ஆண்டபோதா ? அலெக்ஸ்சாண்டர் வந்தப்போதா? காலம் எப்போது ஆரம்பமாகியது ?
தொடுவானம் போல் நீண்டு கொண்டே இருக்கிறதே !எதை ஆரம்பம் என்று நினைக்கிறோமோ அது அதற்கு முந்தய சம்பவத்தின் முடிவாக இருக்கிறது எது ஆரம்பம் ? எது first ?
ஆங்கிலத்தில் காலத்தை மேலிருந்து கீழாக சொல்லும் பொது century என்று ஆரம்பிப்பார்கள். பின்னர் year ! அதன் பிறகு month ,week ,day என்று குறைந்து கொன்டே வரும் . ஒருநாளை 24 மணிநேரமாக சொன்னார்கள்.அதனை hour என்றார்கள். ஒருமணிக்கு 60 நிமிடம்- மிகக்குறைந்த கால அலகாக ஒரு நிமிடத்திற்கு 60 second என்கிறார்கள்.
60 first என்று வைக்கவில்லை. ஏனென்றால் எது first என்று நிர்ணயிக்க முடியவில்லை. அதனால் second என்று வைத்தார்கள்.
காலத்தின் ஆரம்பம் தெரியவில்லை . முடிவு எப்போது?எது முடிவான சம்பவம் என்று நினைக்கிறோமோ அது முடிய போகும் சமபவத்தின் ஆரம்பமாக இருக்கிறது.
ஆரம்பமும் முடிவும் தெரியாததாகஇருக்கிறது. ஆதியும் அந்தமும் இல்லாமலிருக்கிறது.
நமது ஆன்மிக வாதிகள் ஆதியுமந்தமுமில்லாத அருள் ஜோதி என்கிறார்களே !
அறிவியலும் ஆன்மிகமும் சந்திக்குமிடமா இது ?
கோடி ரூபாய் கொட்டிக்கொடுத்தாலும் பதில் கிடைக்காத கேள்வி !!!
Wednesday, August 23, 2017
"Resque Operation "
"பா.ஜ.க பாணி "
அந்த நகரத்தில் கலவரம் நடந்து கொண்டிருந்தது . தொண்டர் ஒருவர் சாலையில் நின்று கொண்டிருந்தார் .
தூரத்தில் பெண் ஒருவர் ஒடி வந்து கொண்டிருந்தார்.ஆடைகள் கலந்திருந்தது..அவரை நான்கு முரடர்கள் துரத்திக்கொண்டு வருகிறார்கள்
"அண்ணா ! என்னை காப்பாற்று ! இந்த காமுகர்களிடமிருந்து ! "என்று அந்த பெண் அலறிக்கொன்டே வந்தாள் !
தொண்டர் திகைத்தார் .அவளை காப்பாற்ற முடிவு செய்தார் . துரத்தி வருபவர்கள் நான்கு பேர். இவர் ஒருவர் .
ஒருகணம் யோசித்தார். அவரிடம் கை துப்பாக்கியிருந்தது .அதில் ஒரே ஒரு குண்டு தான் பாக்கி இருந்தது.
ஆத்திரம் தாங்க முடியவில்லை !
இந்த பெண்ணின கற்பைகாக்க வேண்டும் !
அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்ய தயார் ?
என்ன செய்யலாம் !
துப்பாக்கியை எடுத்தார் !
சுட்டார் !
யாரை ?
அந்த பெண்ணை !!
அவள் கற்பு காப்பாற்றப்பட்டது !!!
Monday, August 21, 2017
"துர் சொப்ன நகரே "
( city of nightmare )
வங்கதேசம் உருவானது 1971 ம் ஆண்டு. அதன் வெற்றி மேற்கு வங்கத்தில் சித்தார்த்த சங்கர் ரே தலைமையில் ஒரு அரை பாசிச ஆடிசியை கொண்டு வந்தது.அப்போது நடந்த தேர்தலில் மார்க்சிஸ்டுகள் கொல்லப்பட்டனர். வாக்கு சாவடிகள் சூறையாடப்பட்டன . ஜோதி பாசு அவர்கள் தொகுதியில் வாக்காளர்கள் வாக்கு சாவடிக்குள் போகவிடவில்லை .அவர்களே வாக்குகளை போட்டுக்கொண்டார்கள். காங்கிரஸ் கடசியின் மாணவர் இயக்கமான சத்ரபரிஷத் குண்டர்கள் இதனை அரசின்பாதுகாப்போடு செய்தனர்.
அப்போதுமாணவர் அமைப்பின் தலைவர்களாக இருந்தவர்கள், மம்தா பானர்ஜி,சுபத்ரோ முகர்ஜி,பிரியறஞ்சன் தாஸ் முன்ஷி ஆவார்கள்.
தேர்தலமோசடியை கண்டித்த ஜோதி பாசு, அரசு அவர்தோறறார் என்று அறிவிக்கும் முன்பே conceded defeat . 280 தொகுதியில் 14 தொகுதியில் மார்க்சிஸ்டுகள் வென்றதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலைமையை சட்ட பூர்வமாக சமாளித்து மார்க்சிஸ்க்கட்சி.
சட்டமன்றம் an assembly of fraud என்று ஜோதிபாசு அறிவித்தார். ஐந்து ஆண்டுகள் சட்டமன்றத்தை மார்க்சிஸ்ட் கடசி புறக்கணித்தது.
14 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்படும் வரை காத்திருந்த 14 பெரும் தேர்தல் அதிகாரியிடமிருந்த அந்த அறிவிப்பை வாங்க மறுத்தனர் .இதன் காரணமாக தேர்தல் முறைமை முடிவானதாக கொள்ள முடியாதுசட்டமன்றத்திற்கு வராத உறுப்பினர்கள் பெயரை நீக்கவும் முடியாது> சித்தார்த்த சங்கர் ரே மறு தேர்தலும் நடத்தமுடியாது .
தெருவில்,விதிகளில்,வீடுகளில், சாலைகளில் ,அராஜகம் கட்டவிழ்த்து விடப்பட்டது. இதனை எதிர்த்து எழுத்தாளர்களும் கலைஞர்களும் விஸ்வரூபமாக எழுந்தனர் .
70ம் ஆண்டுகளிலிருந்தே சிறையில் இருந்த நாடக கலைஞர் உத்பல் தத் விறு கொண்டு எழுந்தார். baricade ,city of nightmare , now the kings turn ,என்ற மூன்று நாடகங்களை எழுதினர் . மூன்று நாடகங்களும் தடை செயப்பட்டன.
தடையை மீறி நாடகங்கள் நடந்தன .பார்க்க வரும் பார்வை யாளர்களை சத்ரபரிஷத் குண்டர்கள் தாக்கினர் . ஒரு கையால் தடிஅடியை தங்கி கொண்டு மறுகையால் டிக்கட்டை வாங்கிக்கொண்டு மக்கள் கூட்டம் கூட்டமாக நாடகத்தை பார்த்தனர் .
city of nightma
அரங்கத்தின் பின் பகுதியி ஒரு சாலை. சாலையின் மையத்தில் போக்குவரத்து மேடை அதன் அருகில் ஒருகுப்பைத்தொட்டி. முன் மேடையின் இடது புறம் "டீ " கடை . வலது முன்மேடையில் முதலாளிமார் அமர்ந்து விவாதிக்கும் அறை .
டீக்கடையில் கவலையோடு தொழிலாளர்கள் விவாதித்து கொண்டிருக்கிறார்கள் முதலாளிகளின் வன்முறை, டதொழிற்சங்க ஊழியர்கள் கொலை செய்யப்படுவதுஎன்றுபேசிக்கொண்டிருக்கிறார்கள்.
முதலாளி மார்கள் வலது மேடையில் எப்படி தொழிலாளர்களை அடக்குவது என்பது பற்றி ஆலோசித்து கொண்டிருக்கிறார்கள்.. அவர்களளோடு டீக்கடையில் இருந்த ஒருவன் இருக்கிறான் . அவன் அவர்களின் கையாள் . பல கொலைகளை செய்தவன்.குப்பி சாராயத்திற்காகவும் கோழிக்கறிக்காகவும் எதையும்செய்பவன் .
ஒருகட்டத்தில் அவன் ஒரு கொலையை செய்ய மறுக்கிறான்.
முதலாளிகள் உஷாராகிறார்கள்.இவனை விட்டு வைத்தால் தங்கள் சதிவேலைகள் அமபலமாகிவிடும் என்று அஞ்சுகிறார்கள்.அடியாள் வைத்து கொலை செய்ய திட்டமிடுகிறார்கள் .
அவன் ஓடுகிறார்ன். ஒருபக்கம் அடியாட்கள். பின் மேடையிலிருக்கும் சாலையில் ஓடுகிறான்> எதிரே துப்பாக்கயுடன் போலீசார் . வேறு வழியின்றி அவன் மேடையில் ஏறி தான் செய்த கொலைகளை கூறுகிறான், உண்மையில் நடந்த கொலைகளையும் யார் தூண்டுதலில் நடந்தது என்பதையும் அவன் அறிவிக்கிறான் போலீசார் சுடுகிறார்கள் அவன் பிணமாகி .
குப்பை தொட்டியில் வீழ்கிறான்.
அரங்கம் முழுவதும் செய்தித்தாள் பிரம்மாண்டமாக விரிகிறது .
IN AN ENCOUNTER A TERRIST WAS KILLED
நாடகம் முடிகிறது .
மார்க்சிஸ்ட் கடசியின் உறுப்பினரான உத்பல் தத் ,மும்மை கப்பல் படை எழுச் சியை தன துரோகத்தால் வீழ்த்திய காங்கிரஸ் பற்றி எழுதிய நாடகம் தான் :"கல்லோல் " (துரோகம் ) என்ற நாடகம்., அதற்காகத்தான் அவர் சிறையில் அடைக்கப்பட்டார் .அது பற்றி தனியாக எழுத வேண்டும்.
உத்பல்தத் நாடகக் குழுவின் பெயர் Liitle Peoples Theatre
1972ம் ஆண்டு மதுரையில்மார்க்சிஸ்ட் கடசியின் காங்கிரஸ் நடந்தது . அதில் தமிழ் நாடகம் போட கடசி பணித்தது. எல்.ஐ சி,வ ங்கி ஊழியர்கள்,மில் தொழிலாளர்கள் ,பொது தொழிலாளர்கள் கொண்ட நாடக குழு உருவாக்கியது .
அந்தக்குழு தான் peoples theatre !
அதன் முதல் நாடகத்தை கடசி காங்கிரசில் மேடை ஏற்றியது .
மதுரை முதுபெரும் எழுத்தாளர் ப.ரத்தனம் நெஞ்ச்சுக்குள் ஒரு கனல்"என்ற நாடகத்தை எழுதினார் .
அதனை இயக்கம் பணியினை அடியேனுக்கு கடசி அளித்தது.
Thursday, August 17, 2017
அற்புதம், அற்புதம், அற்புதம் !!!
வாழ்த்துக்கள் ராமகிருஷ்ணன் அவர்களே !!!
1948அல்லது 49 ஆக இருக்கலாம். நெல்லை டவுனில்நான் எட்டாம் வகுப்புப்படித்துக்கொண்டிருந்தேன். ஓவிய ஆசிரியர் அழகேசன் சிறு புத்தகங்கள்படிக்கக்கொடுப்பார். கரிபால்டி, ஆலிவர் க்ராம்வெல், வால்டேர் ஆகியோரின் வாழ்க்கை பற்றி வே சுவாமினாத சர்மா எழுதிய புத்தகங்கள் அவை. கனமான நீல அட்டை போட்டு 20 அல்லது 30 பக்கங்கள் இருக்கும். ஒருமுறை ஒருபுத்தகத்தை கொடுத்து, இங்கேயே படி.வீட்டுக்கு கொண்டு போகாதே என்று கூ றி ஒரு புத்தகத்தை கொடுத்தார். அட்டையில் கார்ல் மார்க்ஸ் என்று இருந்தது.
அதன் பிறகு மார்க்ஸ் பற்றியும்,அவருடைய தத்துவம்யுபற்றியும் நிறைய படித்து வருகிறேன்.
இன்று காலை U டியூபில் மார்க்ஸ் பற்றிய எஸ்.ராமகிருஷ்ணனின் உரையை கேட்டேன் .
" எல்லோருக்கும் வணக்கம் ! திருப்பூரில் ...." என்று ஆரம்பித்து தங்கு தடை இல்லாத பேசசு .ஆற்றோட்டம் போன்ற சொற் பிரயோகம் எங்கும் பிசிறுதட்டாத உசசரிப்பு.
மார்க்ஸ் சின் வாழ்கையில் அருகில் இருந்து அனுபவித்தவர்களால் கூ ட இப்படி சித்தரிக்க முடியுமா ?
மார்க்ஸ் ஒரு சிந்தனையாளன் தான். அவணுக்குள்ளும் ஒரு காதல் நெஞ்சம் உள்ளதே. அவன் காதலி ஜென்னி அவனை வீட நான்கு வயது மூத்தவள்.
"மார்க்ஸ் ! நீ சின்ன குழந்தையாக இருந்த போதே உன்னை பார்த்தவள் நான் " எத்தனை குறும்புகலந்த காதல் மனம். ராமகிருஷ்ணன் ஜென்னியை பற்றியும் மார்க்ஸ்பற்றியும் பேசும் பொது உணர்ச்சி வசப்பட்டார். பார்வையாளர்களும் கூ ட . காரணம் அவர்கள் இருவரும் வாழ்ந்த வாழ்க்கை. .
மார்கஸ்,ஹெகல், ஏங்கல்ஸ் , எப்பேர்ப்பட்ட வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறார்கள்..
தன்னை நாடற்றவராக மார்க்ஸ் அறிவித்தார் என்று கூறியபோது அவர் குரல் தழுதழுத்தது. .கேட்டுக் கொண்டிருந்த என்கண்களிலுமஈரம் கசிந்தது.
மார்க்ஸ் வாழ்க்கை வரலாற்றை படித்திருக்கிறேன்.
ஆனால் ராமகிருஷ்ணன் மூலம் கிடைத்த அனுபவம் என் ஆயுளுக்கும் மறக்க முடியாதது .
வாழ்த்துக்கள் ராமகிருஷ்ணன் .!!!
Wednesday, August 16, 2017
"இந்தி " இலக்கியத்தின் அடித்தளம் ,
"உருது " மொழியே ....!!!
மேலை நாட்டினர் குறிப்பாக அரேபிய ,பாரசீக மக்கள் இந்தியாவோடு பரிவர்த்தனை செய்த காலம் உண்டு . அவர்கள் சிந்து நதியை தாண்டிய மக்கள் பேசும் மொழியை "சிந்துஸ்தானி " என்று அழை த்தார்கள்.பின்னாளில் அது இந்துஸ்தானி யாக மருவியது
சிந்து நதிக்கு கிழக்கேயும் தென்கிழக்கேயும் பறந்து பட்டபகுதியில் (slang )வட்டார மொழியே புழக்கத்திலிருந்தது.கொடுக்கல் வாங்கலில் வர்த்தக ரீதியாக மொழியிலும் கொடுக்கல் வாங்கல் ஏற்பட்டது .
பிரிஜ் பாஷா, அவைத்த பாஷா ,கரி போல் , என்று பேசிவந்த வட்டாரங்களில் ,அரபியும்,,பாரசீகமும் கலந்து ஒருபுதிய மொழி உருவாகி யது. இதனை அன்று "உருது" என்று அழைத்தர்கள் "உருது "என்ற அரேபிய வார்த்தைக்கு "சந்தை என்று பொருள் என்று கூறுகிறார்கள்.
இதுவே தெற்கேயும், தென்கிழக்கேயும் பரவிய பொது அங்கு இருந்த வட்டார மொழி சம்ஸ்கிருத வார்த்தைகளை அதிகமாக பயன்படுத்திக்கொண்டது .இதனை "இந்துஸ்தானி "அழைத்துக்கொண்டார்கள்.
தமிழ் இலக்கியம் போல் இந்திக்கு என்று ஒரு தொன்மையான பாரம்பரியம் இல்லை அதுவே ஒரு நவீன மொழி. ஒரு தொல் காப்பியரையோ, வள்ளுவரையோ கொண்ட பார ம்பரியம் அதற்கு இல்லை. பண்டைய தமிழை நவீனப்படுத்தியவர்களாக,நாம் கருதும்,பாரதி, , வ,வே சு, புதுமைப்பித்தன் ஜெயயகாந்தன் போன்று இந்தி மொழியில் அவர்கள் இலக்கிய கர்த்தாவாக கருதுவது "தன பத் ராய் " என்ற படைப்பாளியை இவர்தான் இந்தி இலக்கியத்தின் பிதாமகர் என்று கருதப்படும் "பிரேம்சந்த் " .
பத்து நாவல்கள்,250 சிறுகதைகள் ,ஏராளமான கட்டுரைகள் எழுதியுள்ள இவர் வாரணாசி அருகில் ஒரு கிராமத்தில் 1880 ஆண்டு வாக்கில் பிறந்தவர்.
அங்குள்ள இஸ்லாமிய மதராசாவில் அரபியும்,பாரசிகமும் படித்தவர்அப்போதெ ல்லாம் ஆங்கிலப்படிப்பு இல்லை.
ஆரம்பகாலத்தில் இந்தி இலக்கியத்தின் பிதாமகர் என்று கருதப்பட்டமுன் ஷி பிரேம் சந்த் தன படைப்புகளை "உருது""மொழியிலேயே படைத்தார்.
காந்தி அடிகளின் வேண்டு கோளுக்கு இணங்க தன அரசு பணியை விட்டு வெளியேறினார். "ஹன்ஸ்" என்ற பத்திரிகையை நடத்தினார் .
ஐரோப்பாவில் பாசிசம் உருவாக்கிக் கொண்டிருந்த நேரம். எழு த்தாளர்கள் கலைஞர்கள் அதனை எதிர்த்து குரல் கொடுக்க ஆரம்பித்தனர் அதன் எதிரொலியாக, பண்டித ஜவஹர்லால் நேரு ,நம்பூதிரிபாடு ஆகியோர் இந்தியாவிலும் எழுத்தாளர்களை ஒன்றிணைத்து இந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்கம் என்ற ஒரு அமைப்பை "லக்னோ "வில் 1936ம் ஆண்டு உருவாக்கினார் அதன் முதல் தலைவராக பிரேம்சந்த் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
Sunday, August 13, 2017
-----------------------------------------
Do not impose Hindi
Down with Hindi Imperialism
-----------------------------------------