ஃபாசிசம்
என்றால்
என்ன ?
19 ம் நூற்றாண்டின் முற்பகுதியில் மத்திய ஐரோப்பாவில் வடிகட்டிய வலது சாரிகளின் சிந்தனை தொகுப்புதான் அரசியல் வடிவம் பெற்றது .1919 ம் ஆண்டிலிருந்து 1945 ம் ஆண்டுவரை தொடர்ந்தது . முதல் உலகப்போரின் இறுதியில் ஆரம்பித்து இரண்டாம் உலகப்போரின் இறுதியில் இற்று விழுந்தது.
முதல் உலகப்போரின் வெற்றியில் தான் இரண்டாம் உலகப்போர் ஒளிந்து கொண்டிருந்தது என்றும் வரலாற்றாளர்கள் வர்ணிப்பார்கள். முதலுலகப்போர் முடிந்ததும் வெற்றி பெற்ற முதலாளித்துவ நாடுகள் தோல்விகண்ட ஜெர்மனியை அதன் இறையாண்மையை மரியாததையை படு கேவலமாக மதித்தன..
ஜேர்மனிய மக்கள் அடக்கி ஒடுக்கப்பட்டனர். காயப்பட்ட ஜேர்மனிய ஆவேசம் பழிவாங்க காத்திருந்தது. அடால்ப் ஹிட்லர் தொன்றினான்.
அருகில் இத்தாலி நாட்டில் முசோலினி வளர்ந்தான் பாசிசம் என்ற சிந்தனைக்கு அரசியல் வடிவம் தந்தவன் முசோலினி. Faces என்ற லத்தின் வார்த்தைக்கு சுள்ளிகளின் கட்டு என்று அர்த்தம் .சுள்ளிகளை காட்டிலிருந்து கொண்டுவர கோடாலி வேண்டும். அந்த கோடாலியை குறியீடாக ஆக்கினான் முசோலினி . அவன் வகுத்த சித்தாந்திற்கு பாசிசம் என்று பெயரிட்டான் .
ஹிட்டலர் அதனை நாஜியிசம் என்று சொன்னான் .
இத்தாலி,ஜெர்மனி, தவிர ஸ்பெயினின் பிராங்கோ,போர்ச்சுக்கலின் சலாசர், ஆஸ்திரியா, வடக்கே நார்வே ,தெற்கே கிரேக்கம் என்று பாசிசம் வளர்ந்தது ..கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் இருந்தது.கிழக்கே ஜப்பானிலும் இதனை காணமுடிந்தது.
கடைந்தெடுத்த அதீதமான தேசபக்தி !
அதன் காரணமாக யதேச்சாதிகாரம் !
மாற்று கருத்தை கடுமையாக தடை செய்வது!
ஜனநாயகத்தை அடியோடு வெறுப்பது !
அத்தகைய நிறுவனங்களை சீர்குலைப்பது !
தேசத்தை ராணுவமயமாக்குவது !
மக்களை தேசத்தின் அடிமைகளாக கருதுவது !
கடுமையான கம்யூனிச எதிர்ப்பு !
இவைதான் பாசிசத்தின் முக்கியமான கோட்பாடுகள் .
1945ம் ஆண்டு இரண்டாம் உலகப்போரில் ஸ்டாலினின் தலைமையில் தன்னந்தனியாக செஞ்செனை பெர்லீனின் நாடாளுமன்றத்தில் செங்கொடியை ஏற்றிய அந்த அற்புதமான தருணத்தில் பாசிசம் வீழ்ந்தது .
ஆனாலும் அதன் மிச்சங்கள் அவ்வப்போது அரை பாசிசமாகவும், வலது சாரிகளின் அரசியல் தத்துவமாகவும் தலைதூக்கத்தான் செய்கின்றன !!!
..
1 comments:
1919 - 1945 என்ற கால கட்டம் இருபதாம் நுற்றாண்டு என்று தானே அழைப்போம் ?
Post a Comment