(நாடக விழாவை முன் நிறுத்தி )
"நாடகமல்லாதவற்றை ,
நாடகம் என்று ,
நம்பி ......."
70ம் ஆண்டுகளின் முற்பகுதியில் "உதயம் " என்று ஒரு பத்திரிக்கை வந்து கொண்டிருந்தது .அதில் வெங்கட் சுவாமிநாதன் ஒருகட்டுரையில் "நாம நாடகமல்லாதவற்றை நாடகம் என்று நம்பி ஏமாந்து கொண்டிருக்கிறோம் " என்று குறிப்பிட்டிருந்தார்.
நாடகத்தில் எதோ சாதித்திக்கொண்டிருக்கிறோம் என்று கர்வப்பட்ட என் போன்றவர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. இநதிய நாடகம் என்பதுஅந்த பிரிட்டிஷாரை பார்த்து அவர்களின் நாடகபாணியில் "கொச்சையா"க நகலெடுத்த "பார்சி" நாடகபாணிதான் என்ற கருத்தை அவர் சொல்லியிருந்தார்.
குவைத் நாட்டிலிருந்து வந்திருந்த "அல்காஸி " என்ற நாடக வியலார் இந்திய நாடகங்களின் பற்றி சொல்லியுள்ளார்.
" இந்திய நாடகத்தின் தந்தை இரு கருதப்படும் அஸ்வகோஷ் கிரேக்க இந்திய கலப்பினத்தின் வாரிசு ஆவார் . பிரிட்டிஷ் நாடகங்கள் வருவதற்கு முன்பே இங்கு "காளிதாசனின் அபிஞன சாகுந்தலம் " இருந்தது .சம்ஸ்கிருத நாடகத்தில் நாடக மேடையில் எதை காட்டக்கூடாது என்று இலக்கணம் எழுதி இருந்தார்கள்.நாடகத்தில் கதாநாயகன் எட்டு வகைதான்,கதாநாயகி எட்டு வகைதான் என்று நிர்ணயம் செய்து இருந்தார்கள்.
இந்திய நாடகத்தின் மரபு என்பது கேரளத்து கதகளியில், தமிழகத்தின் கூத்துமுறையில்,தெலுங்கு புற்ற கதா வில்,மராட்டியத்தில் லாவணி ,தமாஷாவில் உள்ளது என்பதை சொன்னவர் அல்காஸி.
இந்திய நாடகத்தை மீட்டுருவாக்கம் செய்ய நினைத்த பண்டித ஜவகர்லால் நேரு தேசிய நாடக பள்ளியை ஆரம்பித்தார் .அதன் தலைவராக அல்காஸியை நியமித்தார்.
அப்படி தேசிய நாடக பல்கலையில் படி த்தவர்களில் பேராசிரியர் ராமானுஜம், பிரசன்ன போன்றவர்கள் புதிய நாடகவியலை Dramatics கற்றுக்கொடுக்க ஆரம்பித்தரக்ள்.
தேசிய நடக்க பயிற்சிப்பள்ளி யின் வகுப்பில் தமிழக நாடக செயல்பாட்டாளர்கள் சிலரை படிக்க வைத்தவர் ராமானுஜம் அவர்கள்.
அந்த முதல்பட்டறையில்,ஜெயந்தன், மு.ராமசாமி, ப .ரத்தினம் ஆகியோரோடு காஸ்யபனும் பயிற்சி பெற்றார்.
ஆண்டுதோறும் நடைபெறுமதேசிய நாடக விழாவில் ராமனுஜம் அவர்கள் இந்த மாணவர்களை வைத்து ஒரு நாடகத்தை அரங்கேற்றினார்.
"புறஞ்சேரி" என்ற அந்த சிலப்பதிகார நாடகத்தில் ஜெயந்தன்,மு,ராமசாமி ஆகியோர் நடித்தனர் .எர்ணாகுளத்தில்நடந்தஇந்தநாடகத்தில் காஸ்யபன் கோவலனாக நடித்தார்.
அடுத்து "புறஞ்சேரி " பற்றி எழுதுகிறேன்.
0 comments:
Post a Comment