Wednesday, July 24, 2019


(நாடக விழாவை முன் நிறுத்தி )



"பேராசிரியர் ராமானுஜம் அவர்களின் ,

"புறஞ்சேரி " 


நாடகம் ......!!"



நெல்லைமாவட்டம் நான்குனேரியை சேர்ந்தவர் ராமானுஜம் அவர்கள்.தேசிய இயக்கத்தில் ஈடுபட்ட குடும்பம்.இடதுசாரியான  "ஆராய்ச்சி " வானமாமலையின் உறவினர். சென்னையில் பிரபலவக்கீ லான என்.டி . வானமாமலையின் நெருங்கிய உறவினர். காந்திய கொள்கையில் ஈடுபாடு கொண்டு கதர் இயக்கத்தின் முன் நின்றவர்.காரல் மார்க்ஸை நேசிப்பவர்.

கேரளத்தின் வாலிபர் சங்கம்,மாணவர் இயக்கம் ஆகியவற்றிற்கு நாடக பயிற்சி அளித்தவர். தமிழ் நடக ஆர்வலர்களை நவீன நாடகவியல் பால் ஈர்த்தவர்.எஸ்.பி.சீனிவாசன் அவர்களோடு இணைந்து காந்தி பல்கலைக்கழகத்தில் நாடகத்துறையில் செயல்பட்டவர்.

"புறஞ்சேரி"  சிலப்பதிகாரத்தின் ஒரு சிறு துண்டை கதைக்களமாகக் கொண்டது.மாதவியிடமிருந்த வந்த கோவலனை அழைத்துக்கொண்டு கண்ணகி புதிய வாழவை தேடி மதுரை வருகிறாள்.கவுந்தி அடிகளின் உதவியோடு மதுரையின் வடபகுதியில் உள்ள இடையர் சேரியில் தங்குகிறாள்.

சேரிப்பெண்களுக்கு கண்ணகியும், கோவலனும் ரதியும் மன்மதனுமாக தென்படுகிறார்கள்.அங்கு வசிக்கும் நிமித்தக கிழவனுக்கோ அவர்களின் வருகை நல்லசகுனமாக படவில்லை. பாண்டிய நாட்டிற்கு இவர்களால் தீங்கு வரும் என்று கணிக்கிறான் . 

புதிய வாழ்வை தேடிவந்த கண்ணகியை ஊழ் புரட்டிப்போடுகிறது. இந்தப்பகுதியை மட்டும் ராமானுஜம் நாடகமாக்கி இருந்தார். 

நாடகம் ஆரம்பமாகும் பொது கட்டியங்காரன் வந்து அறிமுகப் படுத்துவான். நாடகம் முடியும் பொது கட்டியங்காரன் மங்கள வாழ்த்து பாடாமல்  திரையினை   மூடாமல் நாடகம் முடிந்தது என்று அறிவிப்பான்.

அவசர நிலைக்காலத்தில் நடத்தப்பட்ட நாடகம். வாழும் உரிமை கூட  மறுக்கப்பட்ட நிலையில் நான் மங்கள ஆரத்தி பாடலை பாடமாட்டேன் . என்று இந்தநிலை மாறுமோ அன்றுதான் நான் வாழ்த்து    பாடுவேன் என்று கட்டியங்காரன் கூறுவதோடு நாடகம் முடியும்.

கட்டியங்காரனாக ஜெயந்தன்  நடித்தார். சேரி மனிதராக மு.ராமசாமி மிக சிறப்பக நடித்தார்.காஸ்யபன் கோவலனாகவும் ,காந்தி பல்கலை ஆசிரியர் கண்ணகியாகவும் நடித்தனர்

பேராசிரியை டாக்டர் குருவம்மாள் கவுந்தி அடிகளாக நடித்தார்.

கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுங்களுக்கு முன் எர்ணாகுளத்தில் நடந்த தேசிய நாடக விழாவில் நடிக்கப்பட்டது "புறஞ்சேரி" .

       


0 comments: