(நாடக விழாவை முன் நிறுத்தி )
"பொன் மலை "
என்ற அந்த
புண்ணிய பூமியில்....."
தென் இந்திய ரயில்வே ,எம்எஸ் எம் ,பி என் ஆர் ரயில்வே என்று இந்தியாமுழுவதும் பிரிட்டிஷ் காம்ப்பெனிகள் வசம் இருந் ரயில்வே துறையை நாட்டுடைமையாக்க வேண்டும் என்று ரயில்வே தொழைலாளர்கள் போராடினர்.அமைச்சர் கோபாலசாமி அய்யங்கார் உலகமே வியக்க இந்திய ரயில்வே துறையை உருவாக்கி நாட்டுடைமை ஆக்கினார்.
இதற்கான வீரம் செறிந்த போராட்டத்தை நடத்தியவர்களில் முக்கியமானவர்கள் தென் இந்திய ரயில்வே தொழைலாளர்கள் சங்கமாகும். அதன் கேந்திரமான தலைமை இருந்த இடம் தான் அந்த புண்ணிய பூ மியான பொன்மலை .
பி.ராமமூர்த்தி, அனந்தன் நமபியார்,பரமசிவம், உமாநாத் ஆகியோரின் பாதங்கள் பட்ட புழுதிமண்ணைக்கொண்டது அந்த நகரம். தொண்ணுற்று ஆறு வயதில் கம்பத்தில் ஒய்வு எடுத்துக்கொண்டிருக்கும் அப்துல் வஹாப் (அத்தா ) அலுவலக செயலாளராக பணியாற்றிய சங்கம் அங்குதான் இருக்கிறது.
அந்த தென்னிந்திய ரயில்வே தொழிலாளர் சங்கத்தின் ஆண்டுவிழாவில் கலை நிகழ்சசிகளை நடக்கும் அதில் போட்ட நாடகம் ஆயிரக்கணக்கான மக்களை ஈர்த்தது.
அது "முன்மேடை" நாடகம் . நாடகம் ஆரம்பிக்கும் பொது முன் மேடையில் ஒரு பெண் அமர்ந்து பூக்களை தொடுத்துக் கொண்டே பாடுவார். பின் மேடையில் நாடகம் ஆரம்பமாகும். நாடகம் முடியும்போது பாட்டும் முடியும்.
"பாட்டு முடியும்முன்னே " என்ற இந்த நாடகத்தை எழுதியவர் அன்றைய மாணவர் இயக்கத்தை சேர்ந்த டி .செல்வராஜ்.
நெல்லை மதிதா கல்லூறியில் பட்டம் பெற்று பின்னர் சட்டம்பயின்றவர் .
பின்னாளில் தா.மு,எ .சாவை ஆரம்பித்த முன்னோடி. சாகித்திய விருது பெற்ற முத்த எழுத்தாளர் .
இந்த நாடகத்திலகதாநாயகனாக நடித்தவர் அன்றைய பிரபல நடிகர் என்.என்.கன்னப்பா.
"சிட்டுக்குருவி சிட்டுக்குருவி " என்ற பிரபலமான பாட்டை பாடியபடி ஆடும் அஞ்சலி தேவி யோடு கதாநாயகனாக நடித்த"டவுண் பஸ் "படத்தில் கதாநாயகனாக் நடித்தவர் .அன்றைய வசூல் சக்ரவர்த்தி.அவரை ஒரு கம்யூனிச களோடு நாடகம் போடுகிறார் என்ற காரணத்தினாலே ஓரம் கட்டப்பட்டவர்..
பின்னாளில் தோழி ல் முறை நாடகத்தில் பணியாற்றினார்.கோவையில் மார்க்சிஸ்ட் கடசி நடத்திய அரசியல் மாநாட்டில் அவர் அரிச்சந்திர மயான காண்டத்தை ஒருமணிநேரம் நடத்திக்காட்டினார் .ஒரே நடிகர் அந்த ஒருமணிநேரம் பார்வை யாளர் களை கட்டிப்போட்டது நினைவை விட்டு அகலாது.
இந்த நாடகத்தில் நடித்த இன்னொரு திரைப்பட நடிக்கர் டி .கே .பாலசந்தர் .
இ வரும் ஓரம் கட்டப்பட்டார்.
இந்த நாடகத்தில் கதாநாயகியாக நடித்தவர் தர்மாம்பாள் என்பவர்.
ஆம் !மறைந்த முதல்வர் முகருணாநிதி அவர்கள் "எனது மகள் கனிமொழியின் தாயார் தர்மாம்பாள் " என்று சட்டமனறத்தில் அறிவித்தாரே அதே தர்மாம்பாள் தான்.
தூத்துக்குடியிலிருந்து தேர்வாகி திமு.க வின் நாடாளுமனற உறுப்பினராக உள்ள கனிமொழி அவர்களின் தாயார் ராசாத்தி அம்மாள் தான அந்த நடிகர் .
ராசாத்தி அம்மையாரின் பூர்வாசிரம பெயர் தர்மாம்பாள்.
0 comments:
Post a Comment