Tuesday, July 30, 2019

(நாடக விழாவை முன் நிறுத்தி )



மின் வாரிய சுந்தரம் எழுதிய 


"பிதாவே என்னை மன்னியும் "


நாடகம்...!!!



மின்சார வாரியத்தில் தொழிலாளியாக சேர்ந்தவர் தோழர் சுந்தரம் அவர்கள். அவர் எழுதிய நாடகம்  தான் "பிதாவே என்னை மன்னியும் "என்ற நாடகமாகும். மதுரை பீப்பிள்ஸ் தியேட்டர்ஸார் அரங்கேற்றிய நாடகங்களில் பாராட்டப்பட்ட நாடகங்களில் ஒன்றாகும்.

கர்த்தரின் மீது ஆழ்ந்த நமபிக்கையும்,திருசபையின் மீது அர்ப்பணிப்பும் கொண்டவர் அந்த பாதிரியார். தன பங்கு மாக்களை தினம் சந்தித்து அவர்களை ஜெபக்கூட்டங்களுக்கு வரும்படி செய்வார் . அந்த கிராமத்து மக்களும் பாதிரியாரிடம் மிகவும் பணிவோடும் மரியாதையோடும் நடந்து கொள்வார்கள்.

பாதிரியாரை உறவுப்பையன் அவரிடம் ஏதாவது விமரிசனமாக சொல்லுவான்.'பாவ மன்னிப்பு என்பது சரியல்ல. குற்றம் செய்தவன் தண்டனையைஅனுபவித்தே ஆகவேண்டும். அவனை மன்னிப்பது தவறு" என்று வாதிடுவான்.

"தவறு செய்யாதவர் மனிதர் எவர் உள்ளார். எல்லாருமே தவறு செய்தவர்கள் தான். பாவம் செய்தவர்கள்  தான். ஒரு பாவம் செய்தவன் மற்றோரு பாவியை எப்படி தண்டிக்க முடியும். அவனை மன்னிப்பதே சரி" என்று பாதிரியார் விளக்கமளிப்பார்.

அந்த கிராமத்தது பண்ணையார் ஜெபக்கூட்டத்திற்கு தவாறா மல் வருபவர். பாதிரியார் அவர் வருவதை பாராட்டி சொல்வார். பண்ணையார் சகலவிதமான குற்றங்களையும் செய்ப்பவர் .ஒவ்வொரு ஞயிரும் கூட்டம் முடிந்ததும் கூண்டிலேறி தன் பாவங்களை "ஒப்புவித்து " மன்னிப்பு கோறுவார்.கள்ளமின்றி மன்னி ப்பு கோரும் பண்ணையாரை பாதிரியாருக்கு நிரம்ப பிடிக்கும்.

அந்தவாலிபனோ    இதனை எதிர்ப்பான்.

பாதிரியாரின் தங்கை சீரழிக்கப்பட்டு இறந்து விட்டாள் . திருசபை கூட்டம் முடிந்ததும், பண்ணையார்,  கூண்டிலேறி அந்த பெண்ணை கற்பழித்ததையும்,கொலைசெய்ததையும் "ஒப்புவித்து " மன்னிப்பு கோருகிறான்.

திருசபையின் இருக்கும் சிலுவையின் முன்னால்  சென்ற பாதிரியாரை தன அங்கியை கழற்றி பீடத்தில் வைத்துவிட்டு "பிதாவே என்னை மன்னியும் "என்று கூறி கோவிலை விட்டு வெளியேறுகிறார். நாடகம் முடிவடைகிறது.

வெகுவாக விமரிசிக்கப்பட்ட பாராட்டப்பட்ட நாடகம் இது.சுமார் 40 ஆண்டுகளுக்கு முன் நடத்தப்பட்ட நாடகம்.

ராஜ குண  சேகர் பாதிரியாராக நடிப்பார். பாதிரியாருக்கே உள்ள கம்பிரமும்,நெகிழ்ச்ச்சியும் பார்வையாளனை கட்டி போட்டுவிடும்.

இந்த நாடகத்தை அவரேதான் இயக்கவும் செய்தார் .

தமிழகம் முழுவதும் இந்த நாடகம்போடப்பட்டது. திண்டுக்கல்லில் பேகம்பூரில் போட்டபோது அந்த மக்களாராவரம் செய்து வரவேற்றனர்.

கோவையில் அந்த மக்கள் தலைவன் தோழர் ரமணி வெகுவாக புகழ்ந்தார் .

"சாமா ! உலகத்தின் முதல் புரட்ச்சியாளன் ஏசு பிரான் தான் " என்று    கூறி விளக்கினார்.

இந்தநாடகத்தை எழுதிய சுந்தரம் ஒய்வு பெற்று மதுரை அனுப்பானடியில் வசித்து  வருகிறார்.

சுந்தரம் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள். 





 .




0 comments: