(நாடக விழாவை முன் நிறுத்தி )
"செம்மலர்" நாடக குழுவும்,
கவிஞர் வேலுசாமியும் ...."
(த.மு.எ .ச உருவாவதற்கு முன்பே கம்யூனிஸ்ட் இயக்கத்தில் பண்பாட்டுத்துறையில் பலர் செயல்பட்டு வந்தனர் .அவர்கள் பற்றிய தரவுகள் எதுவும் பதிவு செய்யப்படவில்லை. அதனை முத்த தோழர்களா ன உங்களைப்போன்றவர்கள் பதிவு செய்யக்கூடாதா என்று என்னை பலர் கேட்டுவந்தனர் .இருபது ஆண்டுகளுக்கு முன்பாகவே நான் செய்திருக்கலாம் .. இப்போது புலம் பெயர்ந்து வந்து தமிழில் பேசக்கூட ஆளில்லாதநிலையில் எழுத ஆரம்பிக்கிறேன். சம்பவங்கள் உண்மைதான் என்றாலும், பெயர்,காலம் ஆகியவற்றை நினைவுகளின் உதவியால் தான் எழுத்து கிறேன். தவறிழைக்க வாய்ப்பு உண்டு. )
கோவை மாவட்டத்தில் அந்த மாபெரும் தலைவன் கே.ரமணி தலைமையிலொரு சிறு குழு பண்பாட்டு தளத்தில் செயல்பட்டு வந்தது.கம்பராயன்,டாக்டர் பாலகிருஷ்ணன், கவிஞர் வேலுசாமி என்று அவர்களில் பலர் உண்டு.
மறைந்த கவிஞர் வேலுசாமி "செம்மலர் " என்ற நாடக குழுவை நடத்திவந்தார்.
"தானம் " என்ற நாடகம் அதன் முக்கியமான நாடகங்களில் ஒன்று.
தெலுங்கானாவில் விவசசாயிகள் ஆயுதம் தாங்கிய புரட்ச்சியை நட த்தினார்கள் . 1946ம் ஆன்டிவிலிருந்து 1949 ஆண்டுவரை ஜமீன்தார்கள்,நிலச்சுவான்தார்கள், மிட்ட மிராசுகளிடமிருந்து நிலத்தை பிடுங்கி நிலமற்ற விவசாயிகளிடம் பிரித்து கொடுத்தார்கள். மூன்று ஆண்டுஅந்த புரட்ச்சிகர ஆடசிநடந்தது. பின்னர் நேருவின் காங்கிரஸ் ஆடசி புரட்ச்சியாளர்களை ராணுவத்தின் உதவியோடு அழித்து ஒழித்தது.
தெலுங்கானா புரட்ச்சியின் வெற்றி இந்தியாவின் மற்ற பகுதிகளுக்கு பரவி டக்கூடாது என்பதில்மத்திய அரசு எசசரிக்கையாக இருந்தது.இந்திய மக்கள் திரளில் விவசாய கூலிகள் அதிகம் அவர்களுக்கு நிலம் அளிக்க்கப்படவேண்டும். வன்முறை மூலமாக அல்ல . அஹிம்சை முறையில் நிலவுடமையாளர்களிடமிருந்து நிலத்தை தானமாக பெற்று அதனை கூலி விவசாயிகளுக்கு கொடுக்க முடிவு செய்திருக்கிறோம். அதற்காக "பூமிதான் "இயக்கத்தை உருவாக்கினார்கள். அந்த பவுனார் ஆசிரமத்து சாமியார் வினோபா அவர்கள் தான் இதனை தலைமை தாங்கி நடத்தினார். இந்தியா புறாவும் சுற்றி நிலத்தை தனமாக பெற்று விநியோகம் செத்தார் .
அந்த கிராமத்திற்கு வந்த வினோபா பண்ணைகளிடம் தானம் கேட்டார் பண்ணையார்கள் தானம் கொடுத்தனர் அதனை விவசாயி ஒருவனுக்கு வினீபா அளிக்கிறார்.விவசாயி தன்குடுமபத்தோடு சென்று நிலத்தை பார்க்கிறான் சரளை கற்களும்,குண்டும் குழியுமான கட்டாந்தரை. அவற்றிக்கு அடியில் பாறைகள் .தானம் கொடுத்த பண்ணையாரிடம் சொல்ல அவர் அவனுக்கு கடன் உதவி அளிக்க முன் வருகிறார். நிலம் பண்படுத்தப்பகிடுகிறது அடுத்து நீர்வசதிக்காக கிணறு வெட்டுகிறான் . இதற்கே மூன்று நானகு வருடங்கள் ஆகிவிடுகிறது. கடுமையாக உழைத்து பயிரிடுகிறான் . அவனை பார்க்க வந்த பண்ணையார் நிலம் சாகுபடிக்கு தயாராக இருப்பதை பார்த்து மகிழ்ச்சி அடைகிறார். விவசாயியை பாராட்டுகிறார்.
மறுநாள் பண்ணையாரின் கணக்கு பிள்ளை வந்து விவசாயியிடம் அவன் வாங்கிய கடனை திரும்ப கேட்கிறான். அவனிடமிருந்து நிலைமை கையகப்படுத்தப்படுகிறது.விவசாயி கட்டிய குணத்தோடு தெருவுக்கு வருகிறான்
தென்பகுதியில் சுற்றுப்பயணம் செய்த வினோபா திரும்பும் வழியில் அதே கிராமத்திற்கு வருகிறார். சாவடியில் அமர்ந்து மேலும் தானம் கொடுங்கள் என்று கேட்கிறார் கை களை நீட்டி! கூட்டத்தில் நின்று கொண்டிருந்த விவசாயி தான் கட்டி இருந்த கோவணத்தை அவிழ்த்து "இந்தா தானம் " என்று வீசி எறிகிறான் .
நாடகம் முடிகிறது.
கிஷன் சந்தர் எழுதிய இந்த நாடகத்தை கவிஞர் வேலுசாமி நடத்தினார்..
பின் நாளில் தாமு எ ச வுடன் இணைந்து அதன் செயற்குழு உறுப்பினராக பணியாற்றினார். .!
0 comments:
Post a Comment