Friday, July 26, 2019

(நாடக விழாவை முன் நிறுத்தி )




"Real Theatre என்ற 

நிஜ நாடகமும் ,


ஸ்தானிஸ்லாவ்ஸ்கியும்...."

உலகப்புகழ் பெற்ற நாடக வியலாளர் தான் கான்டன்டைன் ஸ்தானிஸ்லாவ்ஸ்கி . 1863ம் ஆண்டில் பிறந்த அவர் புரட்ச்சிக்கு முன்னும்,பின்னும் ரஷ்யாவில் வாழ்ந்தவர்.

செகோவ்,புஷ்கின் ,டால்டாய் ஆகியவர்களை விரும்புபவர். செகாவின் நாடகங்களை இயக்கி நடித்தவர்புகழ் பெற்ற மாஸ்கோ ஆர்ட் தியேட்டரை உருவாக்கியவர்.

அவர் எழுதிய Theaory of Acting என்ற நூல் இன்று உலகம்பூராவிலும் பாடப்புத்தகமாக வைக்கப்பட்டிருக்கிறது. நாடக யுக்திகள் பலவற்றை பரிசோதனை செய்தவர்.

ஒரு நாடகத்தில் பிரும்மாண்டமான கோட்டை ஒன்றை சித்தரிக்க வேண்டியதிருந்தது .பழைய கோட்டை ஒன்றை விலைக்கு வாங்கி,அதன் மதில் சுவரை அப்படியே பெயர்த்தெடுத்து மேடையில் நிறுவினார்> நிஜமான கோட்டையை பயன்படுத்தியதால் அந்த வகை  நாடகங்களுக்கு  RealTheatre என்று பெயர் சூட்டினார்.

பார்வையாளர்களும்,விமர்சகர்களும்,பத்திரிகையாளர்களும் நாடககத்தைப் பார்த்து பிரமித்தனர்.பிரும்மாண்டமான கோட்டையை புகழ்ந்து எழுதினர். பாராட்டினார்.

பாவம் ஸ்தனிஸ்லாவ்ஸ்கியோ நொந்து நூலாகிப்போனார் . அற்புதமான கதை,அருமையான கருத்து,சிறந்த நடிப்புஇவற்றைமறந்து பார்வையாளர்கள் கோட்டைசுவரை  ப்புகந்தது அவருக்கு பிடிக்கவில்லை.அத்துனையும் வீணாகிவிட்டதே என்று நினைத்தார்.

தன அடுத்த நாடகத்தில் இதனை மாற்றினார்.மேடையில் மிகவம் அழகான ,நுணுக்கமான வேலைப்பாடுகள் கொண்ட ஒரு ஜன்னலை வைத்தார்.

"பார்வையாளர்களே ! இந்த ஜன்னல் ஒருகுறியீடு ,இந்த ஜன்னல் இவ்வளவு என்றால் இந்த  அரண்மனை எவ்வளவு அழகாகாயிருக்கும், அது இருக்கும் கோட்டை எப்படியிருக்கும் என்பதை உங்கள்கற்பனைக்கு விட்டு விடுகிறேன் என்று ஆறிவித்ததுவிட்டு நாட கத்தை நடத்தினார் இதற்கு symbolic theatre என்று பெயர்வைத்தார்."

இதனை எனக்கு விள க்கிக் கூறிய ராமானுஜம் அவர்கள் " நான் வகுப்பு எடுக்கும் பொது real thaeatre என்பதை   நிஜ நாடகம் என்று தவறாக குறிப்பிட்டு விட்டேன் அதனால் வந்த குழப்பம் தான் இது.மேடையின் நிஜம் அல்ல முக்கியம்.நாடகம் சொல்லும் பிரச்சினைகளின் நிஜம் தான் முக்கியம்" என்று விளக்கினார்.

எம்.பி ராமசந்திரன் சோசலிஸ்ட் வாலிபர் முன்னணி தோழர்களை இணைத்து மதுரை நகரத்தையே கலக்கிக் கொண்டிருந்தார். ரகமத்,ஜீவா,குமரேசன் என்று ஒரு ஜமா அவரிடம் இருந்தது.மதுரை  தெருக்களில் ஏதாவது ஒன்றில் இவர்நாடகம்நடக்காத நாள்  இல்லை என்று  ஆகியது.

 எம்.பி,ஆர் முழு நீள  நாடகங்களையும் போட்டார்.

அவற்றில் மிகவும் முக்கியமானது SAP அவர்கள் எழுதிய 

"ரத்த பூமி "

என்ற நாடகமாகும் .

  

    

0 comments: