Monday, July 22, 2019

(நாடக விழாவை முன் நிறுத்தி )





ஓவியர் புத்தன் ,

இயக்கிய ,

" செவ்வானம் "நாடகம்....!!! 



மதுரை மேலமாசி வீதியில் நாங்கள் இளந்தாரிகள் கூடி வம்பளப்போம். அப்போது மதுரையயில் கர்ணன்  என்ற எழுத்தாளரிருந்தார் அவரும் கலந்து கொள்வார் . வம்பளப்பு என்றால் எம்.ஜி.ஆர்   ,சிவாஜி,ஜெமினி ,ரஜினி,கமல் என்று அல்ல !

ஓ ஹென்றியையும், மாப்பாசானயும் விவாதிப்போம். சாமர்செட்மாம் அவர்களையும் அலெக்ஸ்சாண்டர் டுமாசையும் விமரிசிப்போம். செகோவையும் தி.ஜ.ரா வையும் ஒப்பு நோக்குவோ.ம். அண்ணாவின் நாடகங்களையும், தோப்பில் பாசியின் "நிங்கள் என்னை கம்யூனிஸ்ட்டாக்கி " நாடகத்தையும் அலசுவோம்.புத்தனும் மற்றவர்களும் கலந்து கொள்வார்கள் .

மதுரை குதிரை வண்டிக்காரர்கள் சங்கம் என்று இருந்தது அதன் தலைவர் "பூச்சி" என்ற தோழர்> அவர கட்சியின் மாவட்டக்குழுவிலிருக்கிறார். பி ராமமூர்த்தியின் மணிவிழா வருகிறது.அதனை சிறப்பாக கொண்டாட கடசி முடிவு செய்திருக்கிறது என்று கூறினார்>

எங்களுக்கு உற்சாகம் பீறிட்டது> அந்தவிழாவில் நாடகம் போடுவது என்று முடிவுசெய்தொம். புத்தன் இயக்கம். கே.முத்தையாவின் "செவ்வானம் "நாடகம்.

நடிகர்களிருக்கட்டும் . அதற்கான நிதி ஆதாரம். ?

மதுரையில் அப்போது "கருடா சிட பண்டு " கம்பெனி இருந்தது. அதன் தலைவர் ராதாகிருஷ்னான் . இளைஞர்.கலைஇலக்கியம், முற்பாயோக்கு என்று ஆசைப்படுபவர். புத்தனுக்கும் தெரிந்தவர் .அவர்  கதாநாயகனாக நடிக்க சம்மதித்தார்> ஒத்திகை ஆரம்பமானது>

இந்த நாடகத்தில் ஒரு சர்க்கிள் இன்ஸ்பெக்ட்டர் பாத்திரம் உண்டுகளையான முகத்தோடு வாட்ட சட்டமான நபரை தேடினோம். எல்.ஐ.சி ஊழியர் சங்க தலைவர்  தனபால் பாண்டியன் நல்ல களையான முகமும் உயரமும் கொண்டவர். முடியாது என்று அவர் "கதற  கதற" அவரை நடிக்க வைத்தோம்..

கீழ் வானில் செம்பருதிக் கோளம்  - இது 
          கிழக்கெல்லாம் சிவப்பாகும் காலம் !
தாழ்வான மனிதகுலம் வெல்லும் _ மக்கள் 
           தர்மத்தின் கை  ஓங்கி நில்லும் 

என்ற புகழ் பெற்ற பாட்டோடு அந்த நாடகம் அரங்கேறியது .

இதே நாடகத்தை மதுரை பீப்பிள்ஸ் தியேட்டர்ஸார் தமிழக மெங்கும் நடத்தினர்.தனபால் பாண்டியனின் தமபி எல்.ஐ.சி ராஜ குண சேகர் கதாநாயகனாக நடித்தார்> பின்னாளில் மதுரை  அமெரிக்கன் கல்லூரி மாணவர் குமரேசன் நடித்தார்> பட்டப்படிப்பு முடிந்தபின், குமரேசன் சென்னையில் திரைப்படக்கல்லூரியில் சேர்ந்து பயிற்சி பெற்றார்> சக்கரவர்த்தி என்று பெயரை மாற்றிக்கொண்டு நடித்தார். இயக்குனர் செல்வராஜ் அவர்களின் "பொண்ணு ஊருக்கு புதுசு "என்ற படத்தில கதாநாயனாக நடித்தார்.


 

0 comments: